- Thread Author
- #1
86. சனாதன் சஞ்சனா இருவர் பற்றிய உண்மையை சொல்ல மறுக்கும் ஜேம்ஸ்...
CP - யார் என்று கேட்கும் மிதுன் தேவ்.....
பாண்டவர் இல்லம்...
அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக அழகியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
சரிம்மா நேரம் ஆகிவிட்டது இப்போது கிளம்பினால் தான் நான் வீட்டிற்கு நேரத்தில் செல்ல முடியும் என்று லட்சுமி சொல்ல... லீனா, சரண் இருவரும் கூட நாங்களும் கிளம்புகிறோம் என்று கிளம்பினார்கள்.
புவனா, ரிஸ்வந்த் இருவரும் கூட சரி நாங்கள் அனைவருமே கிளம்புகிறோம்.. ஏனென்றால் நாளை இருந்து ஃபுல்லா ப்ராஜெக்ட் வொர்க் பார்க்க வேண்டும். நாள் மிகவும் கம்மியாக இருக்கிறது, அதனால் நாங்கள் அனைவருமே கிளம்புகிறோம் என்று சொல்லிக் கொண்டு... மிதுனாவை பார்க்க மிதுனவோ மிதுனை பார்த்துக்கொண்டே அமைதியாக இருந்தாள்.
சரோஜாமாவும் சரி நீங்கள் அனைவரும் கிளம்புங்கள்.... ஆனால் இன்று இரவு சாப்பாடு இங்கு இருந்து அங்க வரும். லட்சுமி நீ போய் வீணாக எதுவும் சிரமப்பட வேண்டாம் என்று சொன்னார் சரோஜா.
சரிங்கக்கா என்று சொல்லி விட்டு லட்சுமியும், அனைவரும் ரிஷ்வந்த் காரில் ஏறினார்கள்... மிதுனா மட்டும் மிதுனை பார்த்துக் கொண்டே இருந்தாள்...
அதை கவனித்த முத்தாயி தன் கணவன் வீராவிடம் சொல்ல..
ஏனக கண்ணு மிதுனா பொண்ணு வேணா இங்கேயே இருக்கட்டும்... நைட் சாப்பாடு எடுத்துட்டு போகும் போது காரிலேயே போகட்டும்... நம்ம பையனுக்கும் சாப்பாடு எடுத்துட்டு போவதில் சிரமம் இருக்காது அல்லவா என்று சொன்னார்.
தன்னுடைய சித்தப்பா எதனால் சொல்கிறார் என்று புரிந்து கொண்ட சரோஜாவும் சரிங்கப்பா என்று சொல்லி விட்டு, மற்றவர்களை பார்த்து கிளம்புங்கள் என்று சொல்லி அனைவருக்கும் விடை கொடுத்தார்.
அனைவரும் கிளம்பி சென்ற பிறகு வேகமாக வந்த மிதுனா வீராவை இறுக்கி கட்டி பிடித்துக் கொண்டு... தேங்க்யூ தாத்தா என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.
கண்ணு முத்தத்தை நீ மாற்றி கொடுக்கிறாய்.. எனக்கு உன்னை பற்றி சொல்லி உனக்காக இந்த திட்டத்தை எனக்கு சொல்லி கொடுத்ததே என்னுடைய இல்லாள் தான்.. என்று சொன்னார்.
ஐயோ வீரா எனக்கு அதுவும் தெரியும்... அதையும் நான் கவனித்தேன். அவருக்கு கொடுக்காமல் உனக்கு கொடுத்தால் அங்கு என்ன ரியாக்ஷன் என்று பார்க்கலாம் என்று கொடுத்தால்.. அந்த பக்கம் ரியாக்ஷன் எதுவும் சரி இல்லையே என்ற கேள்வி பேசிக்கொண்டு முத்தாயி கன்னத்திலும் முத்தம் கொடுத்தவள்... யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சரோஜா அம்மாவிற்கும் இறுக்கி கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
இதுவரை எத்தனையோ பிள்ளைகளை அவர் தூக்கி வளர்த்து இருந்தாலும், இதுவரை ஒரு பிள்ளை கூட இப்படி தன்னை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தது இல்லை என்பதால், தனக்கு கிடைத்த முதல் முத்தம் அதை நினைத்து கண்கலங்கினார் சரோஜா.
அதை புரிந்து கொண்ட மெய்யழகி ... இதுவரை தான் செய்யாமல் விட்டதை மிதுனாக செய்து அழும் அதில் பொறாமைப்படாமல் தன் மீது மட்டுமே தவறு இருப்பதை உணர்ந்து தன் மீது வருத்தம் வந்தாலும் நானும் உங்களுக்கு இருக்கிறேன் என்று சொல்வது போல் வேகமாக சென்று அவரை கட்டிபிடித்து அவளும் மற்றொரு கன்னத்தில் முத்தமிட இரண்டு பெண்களையும் கட்டிப்பிடித்து அழுக ஆரம்பித்து விட்டார் சரோஜா.
இதைப் பார்த்துக் கொண்டு இருந்த மற் அனைவருக்கும் கண்கள் கலங்கினாலும் ருத்ரா வேகமாக சென்று... சூழ்நிலையை மாற்றும் பொருட்டு, ஏன் கவி இந்த மகள்கள் இருவரும் கன்னத்தில் கொடுத்து விட்டார்கள் நீ இப்போது எங்கே கொடுக்கப் போகிறாய் என்று கேட்க....
அவளுக்கும் ஆசை தான் ... ஆனால் நேற்று அறிமுகமான தான் வந்து எப்படி உரிமையோடு கொடுப்பது என்று சங்கடப்பட்டு கொண்டு நின்று இருந்தவளை ருத்ராவின் பேச்சு தைரியம் கொடுக்க, தனது கால் வலியையும் பொறுத்துக் கொண்டு மெதுவாக நடந்து வந்து சரோஜா அம்மாவின் நெற்றியில் முத்தமிட்டாள்.
நல்லவேளை சஞ்சனா இங்கு இல்லை இங்கு இருந்திருந்தால் இந்நேரம் பெரிய ஆர்ப்பாட்டமே பண்ணி இருப்பாள் நான் கொடுப்பதற்கு முன்பு நீங்கள் ஏன் கொடுத்தீர்கள் என்று சொல்லி மிதுனா சிரிக்க.. அனைவருமே மனம் விட்டு சிரித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது கர்ணா தான் சஞ்சனாவும் தனாவும் எங்கே சென்றார்கள்... எனக்கு தெரிந்து அவர்கள் இருவரும் வெளியே செல்லும் அளவிற்கு இன்று சூழ்நிலை இல்லை என்று தெரியும் ஏனென்றால் இங்கு அழகி பங்க்ஷன் அதை கண்டிப்பாக அவர்கள் மிஸ் செய்ய மாட்டார்கள். அதே சமயம் ஏதோ ஒன்று நெருடலாக இருக்கிறது ஏதாவது தவறுதலாக நடக்க இருக்குதா ... காலையில் கூட மிதுனாவை என்று கர்ணா புலம்ப ஆரம்பிக்க...
மிதுனாவும் பதறிப் போனாள். ஆனால் மிதுனோ பெரியவர்களை பார்த்து விட்டு சட்டென்று கர்ணாவிடம்... சஞ்சனாவும் சனாதனும் ஆபீஸ் தான் போயிருக்காங்க. நீ கொஞ்சம் அமைதியா இரு அவன் என்னிடம் இடையில் போன் பண்ணி சொன்னான். நான் தான் மறந்து விட்டேன். சரி வா நாமும் சென்று ஆபீஸ் போயிட்டு வந்துருவோம். மிதுனா நீ சமையல் ரெடி ஆனதற்கு பிறகு எனக்கு கால் செய் நானே உன்னை வந்து அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு, வேறு யாரும் எதுவும் பேசுவதற்கு முன்பு கர்ணா, லிபின் இருவரையும் கூட்டிக்கொண்டு சென்றான் மிதுன்.
வெளியில் வந்த பிறகு தான் கர்ணாவிடம் சத்தம் போட்டான் கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா உள்ளே அத்தை, தாத்தா, அம்மாச்சி எல்லோரும் இருக்கிறார்கள்... அவர்களுக்கு காலையில் நடந்த விஷயங்களை சொன்னால், என்னமோ ஏதோ என்று பயம் வந்துவிட மாட்டார்கள் என்று சொல்லிக் கொண்டே வந்தவன்,
அச்சச்சோ அழகியும் கவியும் உள்ளே இருக்கிறார்கள் அவர்கள் எதுவும் காலையில் நடந்த விஷயங்களையும் அவர்களிடம் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பதட்டப்பட்டான் ருத்ரா.
நான் ஏற்கனவே அழகி இடம் சொல்லிவிட்டேன். அதனால் ஒன்றும் பயமில்லை. அவர்களிடம் எதையும் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று... அதே போல் கவி அண்ணியும் இன்னும் அத்தையோடும், தாத்தா, அம்மாச்சியோடும் நெருங்கி பழகவில்லை அதனால் அவர்களும் சொல்ல வாய்ப்பில்லை பயப்பட தேவையில்லை சொல்லிக் கொண்டே வர..
ருத்ரா தன் காரை எடுக்கப் போனான்.
அப்போது மிதுன்- ருத்ராவை தடுத்து கருணா நீ உன் வண்டியை எடுத்துக் கொண்டு வா என்று சொன்னான்.
ஏன் என் காரிலே செல்லலாமே என்று கேட்க நினைத்து ருத்ரா... மிதுன் முகத்தை பார்க்க, அங்கே அவன் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் என்று சொல்வது போல் முகத்தை இறுக்கமாக வைத்து இருக்க வேற எதுவும் கேட்காமல் அமைதியாகிவிட்டான் ருத்ரா. கர்ணாவும் மறுபேச்சு பேசாமல் சென்று காரை எடுத்து வந்தான்.
பிறகு மூவரும் காரில் செல்ல... எங்கு செல்லட்டும் என்று கேட்க வந்த கர்ணா மிதுன் முகத்தில் ஏதோ தீவிரமாக யோசனையோடு இருப்பதை கண்டு விட்டு, சரி சனாதன் ஆபீஸ் என்று தானே சொன்னார் அங்கேயே செல்வோம் என்று அந்த பாதையில் காரை ஓட்டிக்கொண்டு சென்றான்.
மெயின் ரோட்டிற்கு வந்து சிறிது தூரம் செல்லும் பொழுது அங்கு இடது பக்கத்தில் இருந்த ஒரு காபி ஷாப்பை காட்டி அங்கே செல் என்று சொன்னான் மிதுன்.
கர்ணாவும் காபி ஷாப் வந்து நிறுத்த, காரை பார்க்கிங்கில் வண்டியை விட்டு விட சொல்லி மிதுன் சாவியை வாங்கி... அங்கு இருந்த செக்யூரிட்டியிடம் கொடுத்தான்.
பிறகு நான்கு பேருமே உள்ளே சென்று அங்கு இருந்த ஒரு கார்னர் டேபிளில் அமர்ந்து கொண்டார்கள்.
மிதுன் எதற்காக இங்கே அழைத்து வந்தான் என்று மற்ற மூவருக்கும் தெரியவில்லை என்றாலும், அவனே பேசட்டும் என்பதற்காக அமைதியாக காத்திருந்தார்கள்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த மிதுன்.. அங்கு வந்த பேரரிடம் நான்கு கோல்ட் காபி ஆர்டர் செய்து விட்டு... லிபின் இதோ இந்த பக்கம் ஒரு வழி தெரிகிறது பார், அது வழியாக போய் வலது பக்கம் திரும்பினால் கார் பார்க்கிங் வரும்.. அங்கே சென்று மறைவாக நின்று நம் காரை பார் என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
லிபினும் தன் அண்ணன் சொன்னதை கேட்டு, வேறு பேச்சு எதுவும் பேசாமல் அமைதியாக சென்று போய் பார்க்க சரியாக அந்த நேரம் தங்களது காருக்கு அடியில் இருந்து ஒருவன் வெளியேறினான்... அதை பார்த்து விட்டு சட்டென்று மறைந்து நின்று கொண்டு அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தான்.
வெளியில் வந்தவனும் தன் கையில் இருந்து கிளவுஸ் கழட்டி தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு... யாருக்கோ போன் செய்து விட்டு, ஏதேதோ சிறிது நேரம் தலையை ஆட்டிப் பேசிக் கொண்டு இருந்தவன் அங்கு இருந்து சென்றான்.
லிபின் அவன் என்ன செய்தான் என்று பார்ப்பதற்காக வேகமாக செல்ல நினைத்து, பிறகு இல்லை அண்ணா வந்து பார்த்து விட்டு மட்டும் தான் வர சொன்னார். அதனால் இங்கு என்ன நடந்தது என்று போய் முதலில் சொல்லுவோம் என்று, வேகமாக தாங்கள் இருந்த டேபிளை நோக்கி வந்தான்.
வேகமாக வந்தவன் அங்கு நடந்த அனைத்தையும் அப்படியே சொல்ல..
மிதுன் ஆர்டர் பண்ணி இருந்த நான்கு கோல்ட் காபிகளையும் பார்சல் செய்து வாங்கி கொண்டு அதே பின் பக்கமாகவே நடந்து அடுத்த சாலையில் வந்து நின்றான். பொதுஅங்க எதிரில் கூடாரம் இட்டு தங்கி இருந்த பகுதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்ததை பார்த்து, அதில் ஒரு பையனை அழைத்து தாங்கள் வாங்கி வந்த காபி அவர்களிடம் கொடுத்து குடிக்க சொல்லி விட்டு சிறிது நேரம் வெயிட் செய்தான்.
அப்போது அங்கு ஒரு கார் வந்து நிற்க அதில் நான்கு பேரும் ஏறிக் கொண்டார்கள்.
இது வரை பொறுமையாக இருந்த,... கர்ணா பொறுமை இழந்து அண்ணா இப்போது நாம் எங்கே செல்கிறோம் என்று கேட்டான்.
தன் தம்பிகள் மூவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு... இப்போது வண்டி ஓட்டிக் கொண்டு இருந்த டிரைவரை பார்த்து ஜேம்ஸ் என்று கூப்பிட்டான்... மிதுன்.
டிரைவரும் திரும்பி பார்க்காமலேயே விதி வலியது சார் என்று சொன்னான்.
ஓகே தேங்க் யூ ஜேம்ஸ் என்று சொல்லி விட்டு.. தன் தம்பிகளை பார்த்து மிதுனாவை கடத்தி சென்றது... அங்கு வைத்து நடந்த அனைத்து விஷயங்களையும் பொறுமையாக எடுத்துச் சொன்னான் மிதுன்.
அதே போல் திரும்பி வரும் போது சஞ்சனாவை ஒரு கார் இடிக்க வந்ததையும் சொல்லி முடித்து விட்டு...
இப்போது டிரைவர் ஜேம்சை பார்த்து...
ஜேம்ஸ் சனாதனும், சஞ்சனாவும் நலமாக தான் இருக்கிறார்கள்?.. இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று கேட்டான் மிதுன்...?.
ஜேம்ஸ் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு....
மன்னித்துக் கொள்ளுங்கள் சார்.... CP எனக்கு உங்களிடம் சொல்ல அனுமதி தரவில்லை என்று சொன்னான்.
ருத்ரா, கர்ணா, லிபின் மூவருக்கும் என்ன நடக்கிறது என்று சரியாக புரியவில்லை என்றாலும் அந்த டிரைவர் சொன்ன பதில் கோபம் வந்தது.
அதைவிட அதிகமாக மிதுனுக்கு கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு உங்கள் CP யார் என்று கேட்டான்.( CP - commissioner of police in Singapore.)
(கமிஷனர் ஆப் போலீஸ் இன் சிங்கப்பூர்)...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...