Member
- Joined
- Mar 17, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
சுந்தரம் வீட்டில் இருந்து முக்கியமான சில உறவுகளும், நக்கீரன் வீட்டில் இருந்து, நக்கீரன் மாமனார் மாமியார் மற்றும் நக்கீரன் குடும்பமும் சேர்ந்து முகூர்த்தற்கு புடவை எடுக்க சங்கரநயினார் புரத்தில் உள்ள பிரபலமான ஜவுளிக்கடைக்கு சென்றார்கள்.
அங்கே போய், முதலில் முகூர்த்த புடவை எடுத்து விட்டு, அடுத்து பூங்குன்றனுக்கு பட்டு வேட்டி சட்டை எடுத்தபின், நக்கீரன், சுசீலா மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு புதிய ஆடை எடுத்தார்கள். நக்கீரன் - பூங்குன்றனின் ஒரே தாய் மாமா, இன்று வரமுடியாத, தடை வீடானதால்
(தடை வீடு, என்பது அவர் மனைவி வீட்டில் முக்கிய உறவினர் இறப்பு)
திருமணத்திற்கு அவர் குடும்பம் வரும் என்று அவர் குடும்பத்திற்கும் சேர்த்து ஆடை எடுத்தார்.
அடுத்து சுந்தரம் வீட்டில், சுந்தரத்தின் மனைவியின் அண்ணன் குடும்பம், அவர் வெளியூரில் இருந்ததால், இன்று வரமுடியவில்லை. இருப்பினும் குழலிக்கு தாய் மாமா என்பதால், சுந்தரம் அவர்கள் வீட்டுக்கும் மற்றும் தன் உடன் பிறந்தவர்களின் வீட்டுக்கும் புதிய ஆடைகள் எடுத்தார்.
கோமதியாள் புரம்,
பூங்குன்றன் - குழலி திருமணம் ,
அங்குள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைத்து நடைபெற இருந்ததால், திருக்கோவில் அலுவலகத்தில், திருமணத்தை பதிவு செய்ய, பூங்குன்றனின் ஆதாரங்களை நக்கீரன் சமர்ப்பித்தார்.
அடுத்து குழலியின் ஆதாரங்களை
சுந்தரம் சமர்ப்பித்தார்.
திருக்கோவில் அலுவலக நிர்வாகி அதைப் பார்த்து விட்டு, முதலில் பூங்குன்றனை கையெழுத்து போடச் சொன்னார். அடுத்து குழலியை கையெழுத்து போடச் சொன்னார்.
இருவரும் கையெழுத்து போட்டு விட்டு, மூலவர் முன்பாக திருமணம் செய்ய போகும் போது,
அன்று நல்ல முகூர்த்த நாள் என்பதால், திருமண ஜோடிகள் அதிகளவில் இருந்தார்கள்.
கோவிலில் திருமணம் செய்ய இருக்கும் வேறு வேறு ஜோடிகளில் மணப்பெண் கையில் கூசாவும் சினுக்கோலியும் இருப்பதை பார்த்து விட்டு,
குழலியின் சித்தி ஏதோ ஒரு நினைவு வந்தவராக, அங்கே இருந்த ஒருவரிடம் " வீட்டுக்கு போய் சீக்கிரமாக புது கூசாவும் ஒரு சினுக்கோலியும் எடுத்துட்டு வா " என்று சொல்லி அனுப்பினார்.
இதைப் பார்த்த குழலி அம்மா மற்றும் அங்கே இருந்த அவர்கள் உறவினர்கள்" என்ன?" என்று கேட்க,
குழலி யின் சித்தி" கூசாவையும் சினுக்கோலியையும் மறந்து வீட்டில் வைத்து விட்டோம் " அதான் என்றார்.
எல்லோரும் " ம்ம் " என்று சொல்ல,
ஒரு சில பெண்கள்," அட அது இரண்டும் முக்கியமாச்சே, அதை எப்படி மறந்தார்கள் " என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
மூலவர் முன்பாக பூங்குன்றன் - குழலி திருமணம் செய்ய தயாராக இருக்க, ஒரு பெரியவர், " பூங்குன்றன் தாய் மாமன் உருமா கட்டின பிறகு தான் திருமண மாப்பிள்ளை தாலி கட்ட வேண்டும் " என்று சொல்ல,
அப்போது பூங்குன்றனின் தாய் மாமாவைத் தேட, அவர் சாமி கும்பிட நிற்கும் வரிசையில் மாட்டிக் கொண்டு
உருமா கட்ட வரமுடியாத சூழ்நிலை.
திருமணம் நடக்க நல்ல நேரம் குறைவாக இருப்பதாலும், அடுத்த அடுத்த திருமண ஜோடிகள் காத்துக் கொண்டு நிற்பதால்,
பூங்குன்றனின் அண்ணன் மாமனார் " கூட்டம் அதிகமாக இருப்பதால், முதலில் மாப்பிள்ளையை தாலி கட்ட சொல்லுங்க. வெளியே பிரகாரத்தில் வைத்து ஜமுக்காளம் போட்டு பொன்னு மாப்பிள்ளையை நிற்க வைத்து, அங்கே பூங்குன்றன் தாய் மாமா உருமா கட்டலாம்" என்று சொல்ல, சிலர் " அதுவும் நல்ல யோசனை தான். அப்படியும் செய்யலாம்" என்று சொல்ல,
சிலர் " அது எப்படி? தாய் மாமன் உருமா கட்டாமல், மாப்பிள்ளை தாலிக் கட்டுவான்?" என்று கேட்க,
பூங்குன்றனின் தாய் மாமா மனைவி,
கோவிலில் கூட்ட நெரிசலை புரிந்து கொண்டு, "பரவாயில்லை, முதலில் திருமணம் முடிந்து வெளியே பிரகாரத்தில் வைத்து என் கணவர் பூங்குன்றனுக்கு உருமா கட்டட்டும்" என்று சொல்லி விட்டு, பின்னாடியே வாங்க என்று சொன்னால் எங்காவது போனால் இப்படித் தான் ஆகும் என்று தன் கணவரை பார்த்து புலம்பினார்.
அங்கே இருந்த உறவினர்களிடம் அர்ச்சதயை கொடுத்து விட்டு, பூங்குன்றனை குழலி கழுத்தில் தாலியைக் கட்ட சொல்ல, பூங்குன்றனும், குழலி கழுத்தில் தாலியைக் கட்டி முடிச்சு போட்ட பிறகு, பூங்குன்றனின் அப்பா வழியில் உள்ள ஒரு தங்கச்சியை மற்ற முடிச்சு
போடச் சொன்னார்கள்.
பூங்குன்றன் - குழலி கழுத்தில் தாலிக் கட்டியதை புகைப்பட கலைஞர், விதவிதமாக போட்டோ எடுத்தார்.
பூங்குன்றன் - குழலி திருமணம் முடிந்ததும், அவர்களுக்கு அடுத்து திருமணம் செய்ய காத்திருந்த மணமக்களின் திருமணத்திற்காக,
பூங்குன்றன் - குழலி தம்பதியரை
பூங்குன்றன் கையை வளவன் பிடித்துக் கொண்டு,மூலவர் சன்னிதியை விட்டு நகர,
பூங்குன்றன் அண்ணி சுசீலா, "ஒரு நிமிடம்" என்று சொல்ல, அங்கே இருந்த சிலர் என்ன என்று யோசிக்கும் போது, சுசீலா " புதுசா திருமணம் செஞ்சவங்க, ஜோடியாக மறுதிருமணம் பார்த்தால் நல்லது, அதான், இப்போது ஒரு திருமணம் நடக்கப் போகிறது "என்று சொல்ல,
" அட ஆமாம் " என்று சிலர் சொன்னவுடன், மூலவர் சன்னதியில் ஒரு ஓரமாக நின்று அடுத்து நடைபெற திருமணத்தைப் பார்க்க
பூங்குன்றன் குழலி தம்பதியர் தயாராகினார்கள்.
பூங்குன்றன் குழலி தம்பதியர் மறு திருமணம் நடப்பதைப் பார்த்து விட்டு, மூலவர் சன்னிதியை விட்டு வெளியே வந்தார்கள்.
அங்கே பிரகாரத்தில் ஒரு ஓரத்தில்
புது ஜமுக்காளம் விரித்து அதில் புதுமணத் தம்பதியினரை நிற்க வைத்தார்கள்.
முதலில் பூங்குன்றன் தாய் மாமாவை அழைத்து, பூங்குன்றனுக்கு உருமா கட்டி விட்டு ஆசிர்வாதம் செய்ய சொன்னார்கள்.
அவரும் உருமா கட்டியதை புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்தார்.
பூங்குன்றன் தாய் மாமா உருமா கட்டியதும், பூங்குன்றனும் குழலியும் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
அடுத்து பூங்குன்றன், அப்பா ஸ்தானத்தில் இருக்கும் அண்ணனை
அழைத்து அண்ணன் - அண்ணியிடம்
பூங்குன்றன் - குழலி இருவரும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
அடுத்து குழலி பெற்றோரை அழைத்து, அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டார்கள்.
அடுத்து சுசீலாவின் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டார்கள்.
அடுத்து அங்கு இருந்த ஊர் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டார்கள் .
குழலி சித்தி " நேரம் ஆச்சு, இனி மீதி பேரிடம், மண்டபத்தில் போய் வாங்கிக்கலாம்" என்று சொல்ல,
அதன் படி அனைவரும் மண்டபத்திற்கு சென்றார்கள்.
மண்டபத்தில் பொன்னு மாப்பிள்ளை அமர சிறப்பான மேடை அமைத்து இருந்தது. அதில் போய் இருவரும் அமர்ந்தார்கள்.
இது குழலி ஊர் என்பதால், அவள் ஊர் மக்கள் தான் அதிக அளவில் இருந்தார்கள். பூங்குன்றன் பக்கத்தில் இருந்து, முக்கியமான உறவுகள் மற்றும், கருடப் பார்வை நாளிதழ் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பூங்குன்றன் அழைப்பு விடுத்து இருந்தான்.
பூங்குன்றன் திருமணத்தை
கருடப்பார்வை நாளிதழில் முதல் பக்கத்தில் போட்டு சிறப்பித்தது இருந்தார்கள்.
அங்கே திருமண மண்டபத்திலும்
அன்றைய நாளிதழை இலவசமாக அங்கே வந்த மக்களுக்கு கொடுக்கவும் நிறுவனர் ஏற்பாடு செய்து இருந்தார்.
பூங்குன்றன் மேடையில் இருக்கும் போது அங்கே வந்த, கோமதியாள் புரம் அரசு மேல்நிலைப்பள்ளி துணை தலைமை ஆசிரியர் நாகராஜன், பார்த்து விட்டு, ' இவன் தான் மாப்பிள்ளையா?' நமக்கு பணியினை நீக்கம் செய்ய வைத்தது இவன் தான் என்று தவறாக நினைத்து கொண்டு, இவனுக்கு பதிலடி கொடுக்க வேண்டும், என்ன செய்யலாம்?' என்று யோசிக்கும் போது, அங்கே
சுந்தரம் வந்து நாகராஜனை " வாங்க வாங்க" என்று வரவேற்க, நாகராஜனும் " ம்ம்"; சிரித்து கொண்டே உட்கார சென்றார். நாகராஜனுக்கு பூங்குன்றனை பழி வாங்க ஒரு புதிய யோசனை தோன்றியது. அதன் படி சுந்தரத்தை அழைத்து " அன்னிக்கு உன் பெட்டி கடையில் போதை மருந்து இருக்கிறது என்று ஒரு பத்திரிகை நிருபர் தான் இன்பார்ம் செய்ததாக இன்ஸ்பெக்டர் சொன்னாரே, அது யார் என்று தெரியுமா?" என்று கேட்க,
சுந்தரம் " நல்ல விஷயம் நடக்கும் போது, அவனை ஏன் நியாயப்படுத்தின, எனக்கு இருக்கிற கோபத்தில் அவன் கையில் கிடைத்தால் அவனை உண்டு இல்லை என்று பண்ணிடுவேன்" என்று கோபமாக சொன்னார்.
நாகராஜன் " அவன் யாரா இருந்தாலும்..." என்று இழுத்தார்.
சுந்தரம் " யாரா இருந்தால் என்ன, என்னை அவமானப் பட வைத்த அவனை ஒரு வழி பண்ணினால் தான் என் மனசு ஆறும்" என்று சொல்ல,
அப்போ " அது உன் மகளின் கணவராக இருந்தால்?" என்று நாகராஜன் கேட்க,
அதைக் கேட்ட சுந்தரம், அதிர்ச்சியில்
"என்னது அந்த பத்திரிக்கை நிருபர் என் மாப்பிள்ளையா...!" என்று அதிர்ச்சியாக கேட்டார்.
நாகராஜன்" ஆம் உன் மாப்பிள்ளை தான், அன்று நடந்த சம்பவத்தை நினைத்து பார் " என்று சொல்லி விட்டு, " இன்று நல்ல முகூர்த்த நாள் என்பதால், நான் வேறு ஒரு சுபநிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் " என்று சொல்லி விட்டு அங்கிருந்து நாகராஜன் சென்றதும், சுந்தரம் தான் அவமானப் பட்ட நினைவுக்குள் சென்றார்.
அவர் நினைத்து பார்க்கும் போது , பூங்குன்றன் மீது தவறு இருக்கும் என்று அவர் மனசு சொல்லியது.
'பெண் பார்க்க வரும் போது தான் மன்னிப்பு கேட்கும் போது அதை வேண்டும் என்றே கவனிக்காமல்
இருந்திருக்கலாம் என்றும், அச்சகத்தில் திருமண பத்திரிக்கை அடிக்கும் இடத்தில் , தன்னைக் குத்திக் காட்டுவது போல் போனில் பேசியதையும், பந்த்க்கால் ஊன்றும் வைபவத்தில் புதிய ஆடை கலர் பிடிக்க வில்லை என்று திருப்பி கொடுத்த அத்தனையும் நினைத்து பார்த்தார் '
பூங்குன்றன் பற்றிய கெட்டதே நினைவில் வந்ததால், பூங்குன்றன் வரதட்சனை வேண்டாம் என்றதும் , சுந்தரம் வீட்டில் வைத்து திருமணம் செய்ய கேட்டதும், சுசீலா மறுத்தும் பூங்குன்றன் சம்மதம் சொன்னதும், திருமண அழைப்பிதழ் தன் மகள் படிப்பு குறைவு என்பதற்காக யாருடைய படிப்பு தகுதியையும் போட வேண்டாம் என்று சொன்ன நல்ல மனம் அவருக்கு தெரியவில்லை.
சுந்தரம் முகம் வாடிப் போய் இருந்ததைப் பார்த்த அவர் மனைவி "
ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க" என்று கேட்க,
சுந்தரம் " நாம் ஏமாந்து விட்டோமோ?" என்று சொல்ல,
அவர் மனைவி " என்ன ஏமாந்து போய் விட்டோம்...!" என்று அதிர்ச்சியாக கேட்க,
சுந்தரம் சூழ்நிலையை புரிந்து கொண்டு " மனைவியிடம், இல்லை இன்று நல்ல முகூர்த்த நாளாம். அதனால் இன்று நிறைய சுப நிகழ்ச்சிகள் இருப்பதால், நம் வீ
ட்டு சுப நிகழ்ச்சிக்கு உறவினர்கள் குறைவாக தான் வருவார்கள், அதான் ஏமாந்து போய் விட்டோமோ? என்று பயந்தேன்" என்றார்.
தொடரும்,