- Thread Author
- #1
8. காதல் சொல்லும் புவனா!
புவனாவிற்கு அழுகை தாங்காமல் அழுது முடித்து விட்டு தங்களைப் பற்றி ரிஷ்வந்த் கிட்ட சொல்ல ஆரம்பித்தாள்...
எந்த அளவுக்கு பிரச்சினை என்றாலும் பயந்து ஒதுங்கி போய் அதை அமைதியாக சரி செய்ய வேண்டும் என்று நினைப்பாள். ஆனால் அதே சமயம் எங்கள் இருவரில் ஒருவருக்கு ஏதேனும் ஒரு பிரச்சினை என்றாலும் அதற்கு காரணமானவர்களை சும்மா விட மாட்டாள்.. அது மாதிரி தான் இன்று அவள் நடந்து கொண்டது என்று சொல்லிக் கொண்டு இருந்தவளிடம்..
அப்போ நீங்கள் அனைவரும் காலேஜ் பிரண்ட்ஸ் கிடையாதா... சைல்டு ஃகூட் பிரண்ட்ஸா என்று கேட்டான் ரிஷ்வந்த்.
ம்ம் ஆமாம் டா, நானும் மிதுனாவும் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சி மலைக்கோட்டையில் தான். ஆனால் சஞ்சனா அவர்களுடைய சொந்த ஊர் லால்குடி. அங்கு இருந்து எங்கள் மலைக்கோட்டையில் எங்கள் வீட்டுக்கு அருகில் அவர்களுக்கு வீடு இருக்க உதயா அண்ணாவுக்காக அப்பா அனைவரையும் அழைத்துக் கொண்டு சிறு வயதில் இங்கே வந்துவிட்டார்.
சஞ்சனா அப்பா இங்கே வரும் பொழுது சஞ்சனா பிறக்கவில்லை. ஏன் நாங்களும் பிறக்கவில்லை.
சஞ்சனாவோட அப்பா லிங்கம், அம்மா ஜெயஸ்ரீ, அவர்களின் மூத்த பையன் உதயா மூவரும் மலைக்கோட்டைக்கு வரும் பொழுது...
என் வீட்டில் என் அப்பா விஜயன், அம்மா கவிதா, அக்கா லீலா, அண்ணன் சரண்... நால்வரும் தான்.
அதே போல் மிதுனா வீட்டில் மிதுனா அப்பா சங்கர்.. அம்மா மீனாட்சி... அவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.
ஜெயஸ்ரீ பெரியம்மா இங்கு வந்த கொஞ்ச நாளில் எங்கள் இரு குடும்பத்தோடு நன்றாக பழகிவிட்டார்கள்.
அதோடு ஜெ மா நிறைய கைவைத்தியம் பார்த்து மிதுனா அம்மாவுக்கும் முதல் முறையாக கரு தங்கி இருந்தது.
அதே போல் ஒரு நாள் விஜயன் அப்பா தன் நண்பர்களோடு பேசிக்கொண்டே தன் வண்டியில் பின் பக்கம் சீட்டை பிடித்து விளையாடிக் கொண்டு இருந்த சரண் அண்ணாவை கவனிக்காமல்.. சரண் அண்ணா நான்கு வயது பையன் தான் வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பி விட..
சரண் அண்ணா டூவீலர் பின்னாடியே இழுத்து கொண்டு செல்ல.. அதை கவனித்த லிங்கம் பெரியப்பா தான் ஓடி வந்து சரண் அண்ணாவை தூக்கி கொண்டு சென்று முதலுதவி செய்து அவன் அழுகையை நிறுத்தி விட்டு வந்து விஜயன் அப்பாவை ஓங்கி ஒரு அறை வைத்தாராம்.
அன்று அடித்த அடி தான் அதாவது தன் பிள்ளைக்காக தன்னையே அடித்த அந்த நல்ல மனதிற்கு அன்று முதல் இன்று வரை அனைவரும் சொந்த அண்ணன் தம்பி போல் பழகி வருகிறார்கள்.
மிதுனா கருத்தரித்த இரண்டாவது மாதம் சஞ்சனா நானும் ஒரே நேரத்தில் எங்கள் அம்மா வயிற்றில் கருத்தரித்தோம். மிதுனா அக்டோபர் ஏழு பிறந்தாள்..
சஞ்சனா டிசம்பர் ஏழு பிறந்தாள். நான் டிசம்பர் 14 பிறந்தேன்.
அவ்வளவு தான் எங்களுக்குள்ள இடைவெளி.
அதே போல் எனக்கு நினைவு தெரிந்து நாங்கள் பிறந்ததில் இருந்து இன்று வரை ஒன்றாக தான் இருக்கிறோம். ஒன்றாக தான் படித்தோம் .. ஒன்றாக தான் காலேஜில் கலாட்டா செய்தோம்... அதே போல் ஒன்றாகத் தான் வேலையிலும் சேர்ந்தோம். இது தான் நினைவு தெரிந்து நாங்கள் பிரிய போகும் தருணமாக இருக்கிறது என்று கண் கலங்கினாள் புவனா. பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டு..
அவர்கள் இருவரும் அமைதியாக இருப்பது போல் உனக்கு தோன்றும்... வீட்டிற்கு வா இந்நேரம் அவர்கள் இருவரும் அங்கே என்ன செய்கிறார்கள் பார் என்று சொல்லி விட்டு காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்லுமாறு சொன்னாள்.
அப்படி என்னடி செய்து வைத்து இருப்பார்கள் என்று சொல்ல வருகிறாய் என்று கேட்டுக் கொண்டே வண்டியை ஓட்டினான் ரிஷ்வந்த்.
நீயே போய் பாரு.. இப்பவே நான் சொல்லிவிட்டால் உனக்கு சப்புன்னு ஆயிடும். நீ கார் பார்க் பண்ணும் போதே தெரிந்து விடும். உனக்கு அங்கே என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே வந்தவள் கார் கரெக்டா வீட்டின் அருகில் வரவும்...
அவர்கள் வீட்டில் இருந்து குக்குரல்கள் சத்தமாக கேட்டது... சிரிப்பு சத்தம்.. பல பேச்சுக் குரல்கள் என்று அந்த வீடே சத்தமாக இருந்தது..
என்ன டி இது உங்க வீடு இவ்வளவு சத்தமாக இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே பார்க்கிங்கில் காரை நிறுத்தினான்.
டேய் நீ சரியான டியூப் லைட் மண்டை டா... இப்ப தானே எங்க வீட்டு பேமிலி மெம்பர்ஸ் அனைவரையும் சொல்லிக் கொண்டே வந்தேன்.. அவர்கள் அனைவரும் தான் இப்போது உள்ளே இருக்கிறார்கள்.. என்று சொல்லி கொண்டே காரை விட்டு இறங்குவதற்கு முன்பு... ரிஷு என்று அழைத்தாள்...
தன்னை டியூப் லைட் என்று சொன்னதில் கடுப்பானவன்.. அவள் கூப்பிட்டதை காதில் வாங்காமல் இறங்கப் போக.. அவன் எதிர்பார்க்காத நேரம் அவனை வேகமாக காருக்குள் இழுத்து தள்ளியவள்...
இந்த ஜென்மத்தில் இல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும்.. நீ இப்படியே தான் இருப்ப.. சரியான டியூப் லைட் மண்டையா.. உன் மண்டைக்குள்ள பல்பு எரிந்து அது என் மனதுக்குள்ள அலாரம் அடிக்கும் வரை எனக்கு பொறுமை இருக்காது என்று சொல்லிக் கொண்டே இருந்தவள்...
அவள் சொல்வது என்ன என்று புரிந்து கொள்ள முடியாமல், என்ன சொல்கிறாள் என்று யோசித்துக் கொண்டு இருந்தவனின் இதழில் நச்சுனு ஒரு உம்மா கொடுத்து விட்டு.. இங்க பாரு டா தயிர் சாதம் இவ்வளவு நாளும்.. எல்லாரும் ஒரே இடத்தில் வேலை பார்த்தோம்... அதனால ஒரு பிரச்சனையும் இல்ல ஆனா இப்ப நான் தனியா போகிறேன் ஆனதுக்கு அப்புறம்..
நான் இல்லாத கேப்பில் அங்கு ஏற்கனவே மாலாவும் அமுதாவும் உன்னை சுத்தி சுத்தி வராளுங்க.. உன் மரமண்டைக்கு அது புரியல அது வேற விஷயம் அதே சமயம் நான் இருப்பதால் தான் அவர்கள் இருவரும் வந்து உன்னிடம் இது பற்றி எதுவும் பேசவில்லை நான் இல்லாத நேரத்தில் வந்து ஏதாவது சொல்லி நீ ஏதாவது லூசு மாதிரி அவர்களிடம் உளறி வைத்து விட்டால் என்ன பண்ணுவது அதனால் தான் இப்போ சொல்றேன்.
நாங்க இல்லை என்ற உடன் அவர்கள் இருவரும் உன்னிடம் வந்து ஏதாவது அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு பேசினார்கள் என்று.. தெரிய வந்தாலே உன்னை எங்கு இருந்தாலும் தேடி வந்து அடிப்பேன். அதையும் மீறி நீ அவர்களிடம் பேசினாய் என்று தெரிந்தது மகனே நீ காலி.. என்று சொன்னவள் மறுபடியும் அவனை இழுத்து அவன் இதழில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
ரிஸ்வந்த் இந்த முறை அவளை அப்படியே தன் மடியில் அமர்த்தி கொண்டு அவள் ஆரம்பித்த இதழ் முத்தத்தை அவன் தனதாக்கிக் கொண்டான்.
சிறிது நேரத்தில் வீட்டின் உள்ளே ஆஆஆ என்ற அலறல் சத்தம் கேட்டு இருவரும் தன்னிலை மீண்டவர்கள்...
இருவருக்குமே ஒருவர் முகத்தை ஒருவர் எப்படி பார்ப்பது என்று சங்கடப்பட்டு கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தனர்.
நாளையில் இருந்து அவனை அலுவலகத்தில் பார்க்க முடியாது என்ற தவிப்பில் தன் காதலையும் சொல்லி.. ஒரு வேகத்தில் முத்தமும் கொடுத்து விட்டாள்... ஆனால் இப்போது அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து அமர்ந்து இருந்தாள்.
ரிஷ்வந்த் மனநிலையும் அப்படித்தான் இதுவரை அவர்கள் மூவரையும் தோழிகளாக மட்டுமே பார்த்து வந்தான். அவன் மனதில் காதல் என்ற உணர்வு சிறிது கூட வந்தது இல்லை... அப்படி இருக்க திடீரென்று புவனா தன் காதலை சொன்னதோடு... அவளின் முத்தம் அவனுக்குள் ஏதோ ஒன்று செய்ய.. அவனும் ஒரு வேகத்தில் முத்தமிட்டு விட்டான்.
ஆனால் அவனை பொறுத்தவரை இன்னமும் அவளிடம் தன் காதலை சொல்லவும் இல்லை... முதலில் தன் காதலை அவனே உணர்ந்தது அந்த நொடி தான் எனும் பொழுது அவளிடம் சொல்லாமல் அவளை முத்தமிட்டது தவறு என்று மனதிற்கு பட...
முதன்முறையாக புவனாவிடம் சாரி டி... என்று சொல்லி விட்டு அமைதியாக இருந்தான்.
அவளும் அமைதியாகவே இருக்க பயத்தில்.. சாரி டி புவி ... தெரியாமல் நானும் முத்தம் கொடுத்து விட்டேன்.
என்ன இருந்தாலும் நீ என்னை லவ் பண்ணுகிறாய்.. என் மேல் உனக்கு விருப்பம் இருப்பதால் நீ என்னை முத்தமிட்டாய்...
நான் உன்னை காதலிக்கிறேனா என்ன என்று நான் உணர்வதற்கு முன்பே... நான் உனக்கு முத்தம் கொடுத்தது மிகவும் தவறு.. என் மீது உள்ள நம்பிக்கையில் நீ அப்படி செய்த.. ஆனால் நான் உன்னிடம் அப்படி நடந்து கொண்டது மிகவும் தவறு. சாரி டா மறுபடியும் சொல்றேன் என் காதலை உன்னிடம் சொல்லாமல் நான் அப்படி நடந்து கொண்டது மிகவும் தப்பு என்று சொல்லி கொண்டே போனவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தவள்...
அவனுக்கு அவன் மனதை புரிய வைக்க முயற்சியில்... சரி டா இப்ப உன் கிட்ட நான் ப்ரொபோஸ் பண்ணி முத்தம் கொடுத்ததற்கு பதிலாக இந்த இடத்தில் மிதுனாவோ சஞ்சனாவோ இருந்தால் நீ என்ன பண்ணி இருப்பாய் என்று கேட்டாள் புவனா.
ஐயோ ச்சே... சஞ்சு என்னுடைய குட் பிரண்ட் மிது என்னுடைய செல்ல குட்டி அதாவது தங்கச்சி மாதிரி... அவர்கள் அப்படி செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்று சொன்னான்.
சரி... நீ சொல்வது ஓகே. ஆனால் அப்படி செய்து இருந்தாள் நீ என்ன செய்வாய் என்று மறுபடியும் பிடிவாதமாக கேட்டாள்.
ப்ளீஸ் டி.. சாரி.. கண்டிப்பா அவர்களிடம் அவர்கள் மனம் கோணாதவாறு எடுத்து சொல்லி இருப்பேன் அவர்களை நான் எந்த இடத்தில் வைத்திருக்கிறேன் என்று தெளிவாக சொன்னான் ரிஷ்வந்த்.
ம்ம்.. ஓகே அதே மாதிரி உனக்கு நான் யார்?.. சஞ்சு குட் பிரண்ட் .. மிது தங்கை.. அப்ப நான் யார்? சொல் டா.. நான் யார்?.. உனக்கு நான் யார் சொல்லுடா என்று கேட்டாள் புவனா.
சாரி டி.. சத்தியமா நீயும் என்னோட குட் ஃப்ரெண்ட் அப்படித் தான் ரொம்ப நாள் நினைத்து இருந்தேன்... ஆனால் ஏனோ சில நாட்களாக உன்னை பார்க்கும் போது எனக்குள் ஏதேனும் மாற்றங்கள் ஆனால் அதை நான் சரியாக உணரும் முன்பே... நீயே அதற்கான விடையை எனக்கு சொல்லிவிட்டாய்.
அதனால் தான் நானும் உனக்கு முத்தம் கொடுத்தேன். ஆனாலும் உன்னிடம் சொல்லாமல் கொடுத்தது தவறு என்று மனதிற்குப் பட்டது அதனால் தான் நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டேன் என்று சொன்னான்.
அதே நேரம் வீட்டிற்குள்....
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று ஒரு அலறல்...
அந்த குரல் யாருடையது...
இணைந்திருங்கள்
சொல்லவா ... வேண்டாமா...