- Thread Author
- #1
79. மிதுனாவை காப்பாற்ற உதவும் உதயா...
மிதுனா காணாமல் போக... அவளை தேடுவதற்கு கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்கலாம் என்று மிதுன் சஞ்சனா இருவரையும் சனாதன் கூட்டிட்டு போறேன் என்று சொல்லி விட்டு, கமிஷனர் அலுவலகம் கூட்டிட்டு போகாமல் .. சிட்டி அவுட்டரையும் தாண்டி வெகு தூரம் சென்று ஒரு காட்டு பங்களாவிற்குள் அழைத்துச் செல்ல... அங்கே ஹோம் மினிஸ்டரில் இருந்து இன்னும் சில உயர் அதிகாரிகள் என்று நிறைய பேர் அங்கு இருக்க அங்கு சனாதனுக்கு கிடைத்த மரியாதை பார்த்து... சஞ்சனா ஒருவித பயம் கலந்த மரியாதையோடு அங்கு அனைவரையும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
மிதுன் சஞ்சனாவையும் அவர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி விட்டு அவர்களையும் அமர சொல்ல..
இதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாத சஞ்சனா சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ் என்று சொல்லி விட்டு மிஸ்டர் சனாதன் ப்ளீஸ் இங்கே என்ன நடக்கிறது மிதுனா எங்கே இருக்கிறாள்..
உங்களுக்கு தெரியுமா தயவு செய்து மிதுனா எங்கே இருக்கிறாள் என்று சொல்லுங்கள் என்று அழுகும் நிலைக்கு சென்று விட்டாள் சஞ்சனா... அங்கு இருந்த உயர் அதிகாரிகள் மற்றும் மினிஸ்டர் காரணமாக தன்னையும் அறியாமல் சனாதனை மரியாதையாக அழைத்து பேசினாள்.
மிதுனும்.. தனா ப்ளீஸ் இங்கே என்ன நடக்கிறது ... எங்கே அழைத்து வந்து இருக்கிறாய் ...? மிதுனா எங்கே இருக்கிறாள்.. அவளுக்கு எதுவும் ஆபத்தா, எதுவும் சொல்லாமல் இப்படி இவ்வளவு தூரம் சிட்டியை தாண்டி கூட்டிட்டு வந்து இருக்கிற ப்ளீஸ் இங்கே என்ன.. டா.. நடக்குது சொல் என்று மிதுனும் பரிதவிப்போடு கேட்டான்.
அதற்குள் வேகமாக உள்ளே வந்த இருவர்...
அங்கு இருந்து அனைவருக்கும் பொதுவாக சல்யூட் வைத்து விட்டு சனாதனை பார்த்து..
சார் நீங்க வீட்ல இருந்து ஃபேமிலியோட கிளம்பும் போதே... உங்க தம்பி ருத்ராவும் கடத்தப்பட்ட மிதுனவையும் போட்டோ எடுத்து அனுப்பி இருக்கிறார்கள் அந்த லொகேஷன் உங்கள் வீட்டு வாசலில் இருந்து தான் இருக்கு.. என்று சொல்லிக் கொண்டு அந்த போட்டோவை எடுத்து போட்டோவை காட்ட...
அதை வாங்கி பார்த்தனர்... மிதுனா கீழே விழுகவும் ருத்ரா அவளை தூக்கி விட்டு, பஸ்ல ஏற்று விடும் சில போட்டோக்கள் இருந்தது...
பிறகு நீங்கள் அனைவரும் கிளம்பிய பின் உங்கள் பஸ்ஸை ஒரு கார் இரண்டு பைக் என்று மூன்று வாகனங்கள் பின் தொடர்ந்து வந்துள்ளது.
மிதுனா மேடம் ரெஸ்ட் ரூம் செல்லும் போது ... ரெஸ்ட் ரூம் பின் பக்க வழியாகவே வந்து மிதுனா மேடமை கடத்தி இருக்கிறார்கள்.
இதுல எதிர்பாராத ஒரு விஷயம் என்னவென்றால் அவர்கள் கடத்த வேண்டும் என்ற திட்டமிட்டது உங்கள் வீட்டில் இருக்கும் கவிப்பிரியா என்ற பெண்ணை... அவருக்கு தான் காலில் அடிபட்டு இருக்கிறது. அதை தான் ஐடிபிகேஷன் ஆக இவர்களுக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. நான் வெளியில் வரும்போது இவர்களுக்கு காலில் அடிப்பட, அதற்கு ருத்ரா உதவி செய்து அவர்களை பஸ்ஸில் ஏற்று விடப்போக இவர் தான் கவிபிரியா என்று நினைத்து மிதுனா மேடமை கடத்தி இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது...
அங்கு மற்றும் ஒரு ஆபீசர் வந்து...
சார் நம்ம டீம் ஆட்கள் மிதுனா மேடை ஃபாலோ செய்து போனதில்... அவர்கள் சிறிது நேரத்தில் ஆட்களை மாற்றி தூக்கி விட்டது தெரிந்த பிறகு அவர்களை அங்கேயே விட்டு விட்டு செல்ல முடிவு செய்யும் பொழுது...
ஏதோ ஒரு போன் கால் வந்தது உடனே மிதுனா மேடம் கண்களைக் கட்டி அவரை வேறு ஒரு வேனிற்கு மாற்றியவர்கள் எந்த பக்கம் சென்றார்கள் என்று தெரியாதவாறு ஒரு சிக்னலில் தவற விட்டு விட்டார்களாம் நம் ஆட்கள் என்று சொல்லி முடிக்கும் போது...
இதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த சனாதன் ஓ... ஷிட் என்று வேகமாக எழுந்து நின்றான்.
இப்போது அவனைப் பார்ப்பதற்கு அங்கிருந்து அனைவருக்குமே அவ்வளவு பயமாக இருந்தது ஆனால் அவ்வளவு கோபத்தோடு நின்று கொண்டு இருந்தான். அவன் கண்களில் தெரிந்த கடுமையை கண்டு அங்கு இருந்த அனைவருமே ... ஏன் ஹோம் மினிஸ்டர் கூட ஒரு நிமிடம் ஆடி தான் போனார்...
அப்பொழுது சஞ்சனாவின் மொபைலில் போன் வர...
அவளிடம் அனுமதி கேட்காமலேயே அந்த போனை சனாதன் வாங்கி அட்டென்ட் செய்தான்...
அதில் உதயாவின் குரல் கேட்க சற்று கோபத்தை தனித்தவன்... சொல்லு மச்சான் என்ன இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்க... என்ன விஷயம் என்று இயல்பாக கேட்டான்.
ஓ மாமா நீங்களா... அப்ப சஞ்சு மா உங்கள் கூட தான் இருக்காளா.... ஓகே மாமா... என்று சொல்லி விட்டு சரி நான் போன் வைக்கிறேன் என்று சொல்ல...
மச்சான் ஒரு நிமிடம் இரு டா... சரி இப்ப எதுக்கு சனாவுக்கு போன் பண்ண என்று கேட்டான் சனாதன்.
அது... அதுவா மாமா பாப்பா மூன்று பேரும் தனியா அங்கே இருப்பதால் அவர்கள் அடைந்திருக்கும் செயினில் நான் லொகேஷன் ஷேர் பண்ற மாதிரி ஒரு டிவைஸ் அதில் வச்சு இருக்கேன்.. அது பாப்பா மூணு பேருக்குமே தெரியாது.
அது நான் போட்ட செயின் என்பதால் அவர்கள் அதை கழட்டவும் மாட்டார்கள் இன்று தான் சஞ்சனா உடையதும் மிதுனா உடையதும் வேறு வேறு அதுவும் சிட்டி பகுதி தாண்டி... அவுட்டர் இல் காட்டவும் ஒரு பயம் வந்து விட்டது. அதற்கு தான் போன் செய்தேன் மாமா என்று தயங்கிக் கொண்டே உதயா சொல்ல..
ஓஹோ என்று சொல்லி விட்டு... சரி உதயா நான் உன்கிட்ட ஒரு சில விஷயங்களை சொல்கிறேன் பேனிக்காக வேண்டாம்.. . அதே சமயம் வீட்டில் இருப்பவர்களுக்கு எல்லாம் தெரிய வேண்டாம் என்று சொல்லி விட்டு நடந்ததை சுருக்கமாக சொல்ல...
உதயா சிறுது தடுமாறினாலும் மிதுனாவின் செயின் காட்டும் லொகேஷனை சஞ்சனா மொபைலுக்கு அனுப்பி வைத்தான்.
லொகேஷன் ஷேர் செய்து வைத்து மாமா ப்ளீஸ் சஞ்சனா அவள் கொஞ்சம் தைரியசாலி தான், ஆனால் மிதுனா .... ப்ளீஸ் மாமா... அவள் பார்ப்பதற்கு தான் தைரியசாலி போல் இருப்பாள். ஆனால் மிகவும் பயந்தாங்கோலி... இந்த விஷயம் மட்டும் இங்கே அப்பாவிற்கு தெரிந்தால் அய்யோ அவர்களை சமாளிப்பது என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை ப்ளீஸ் மாமா எனக்கு எது நடந்தாலும் உடனே தகவல் தெரிவிக்கவும் என்று சொல்லி விட்டு... சரி மாமா உங்க வேலையை பாருங்கள் நான் தொந்தரவு செய்யவில்லை என்று சனாதன் பதில் சொல்வதற்கு முன்பே போனை கட் செய்து விட்டான் உதயா.
உதயாவின் செயலை நினைத்து ஒரு நிமிடம் பெருமையாக நினைத்தவன்... உடனே தன்னுடைய ஆட்களை பார்த்து, மிதுன இருக்கும் இடம் தெரிந்து விட்டது, என்று சொல்லி கொண்டே...
அங்கு வந்த மற்றொரு போலீஸ் இடம் இருந்து இரண்டு கன்களை வாங்கிக் கொண்டவன்... அதை தனது முதுகுக்கு பின்பு வைத்துக்கொண்டு சஞ்சனாவையும் மிதுனையும் பார்த்து நீங்கள் இருவரும் இங்கேயே இருங்கள் என்று சொல்லி விட்டு, சஞ்சனாவின் மொபைலில் மட்டும் எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே சென்றான்.
சஞ்சனா, மிதுன் இருவருமே அவன் சொல்லி சென்றதை கவனிக்காமல் அவன் பின்னே செல்ல...
தன்னுடைய வண்டியில் ஏறப்போகும் சமயம் அவர்களை பார்த்துவிட்டு ப்ளீஸ் இங்கே இருங்க அதுதான் சேஃப்டி என்று சொல்ல... இருவருமே அவன் சொல்வதைக் நாங்கள் கேட்க மாட்டோம் என்பது போல் நிற்க, தலையில் அடித்துக் கொண்டவன் சரி வாருங்கள் என்று தங்களுடைய வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மிதுன், சஞ்சனா இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றான் சனாதன்.
இதே இந்த இடத்தில் இருந்து மெயின் ரோட்டுக்கு வந்த பிறகு ரோட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் தான் மிதுனாவை வைத்து இருக்கும் லொகேஷன் காட்டுகிறது என்று சொல்லி விட்டு, ...
தன்னுடைய ஆட்கள் அனைவருக்கும் லொகேஷன் ஷேர் செய்து விட்டு... அனைவரும் ப்ளூடூத் மூலம் கனெக்ஷனில் இருந்தார்கள்.
லொகேஷனை சுற்றிலும் சுற்றி வளைப்பதற்காக ஏற்கனவே திட்டம் போட்டுக் கொடுத்து இருந்ததால் அதன்படி.. மொத்தம் ஐந்து வண்டிகள் வேறு வேறு திசையில் சென்று மிதுனா இருக்கும் இடத்தை சுற்றி வளைப்பதற்காக விரைந்து சென்றது...
அதே நேரம் மிதுனா ஒரு நாற்காலியில் கை கால்கள் கட்டப்பட்டு அமர்ந்து இருந்தாள்...
நாற்காலியில் அமர்ந்து இருந்தவள்... இந்த அறவேக்காடுகள் எதற்கு நம்மளை கடத்திக் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டு இருந்தவள்... தன்னை சுற்றி அமர்ந்து இருந்த தடியன்களை பார்த்துக்கொண்டே இருந்தாள் மிதுனா.
தாங்கள் கடத்தியதிலிருந்து எந்தவித மறுப்பும் சொல்லாமல் அதே நேரம் எந்தவித பயமும் இல்லாமல் ஜாதியாக ஏதோ பிக்னிக் வந்தது போல் இயல்பாகவும் மிகவும் அமைதியாகவும் இருக்கும் மிதுனாவை அங்கு கடத்திக் கொண்டு வந்து வைத்து இருந்த சில தடியர்கள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு... உடலுக்கு மிகவும் சத்தான ஆகாரமான சிகரெட்டை ஊதி தள்ளிக் கொண்டு வேடிக்கை பார்த்தனர்...
ரொம்ப நேரமாக அமைதியாகவே இருந்த மிதுனா... அங்கு இருந்த ஒருவனை பார்த்து.. டேய் மாங்கா.. என்று கூப்பிட்டாள்.
இவ்வளவு நேரமும் அவள் அமைதியாக இருந்ததால் அவள் மாங்கா என்று அழைத்தது வெறும் பிரம்மை என்று நினைத்து... அமைதியாக இருந்தனர்.
அவர்களின் அமைதியை பார்த்து விட்டு, இவனுங்க சரிப்பட்டு வர மாட்டாங்க என்று சற்றே தன்னுடைய குரலை உயர்த்தி டேய் மாங்கா மடையர்களே...
நான் சாப்பிட்டதும் எனக்காக ஜிகர்தண்டா ஆர்டர் பண்ணி வைத்திருந்தேன் அதை குடிப்பதற்குள் என்னை கடத்திட்டு வந்துட்டீங்க... எனக்கு ரொம்ப தாகமாக இருக்கிறது எனக்கு ஒரு ஜிகர்தண்டா பார்சல் ஆன்லைனில் ஆர்டர் பண்ணுங்க டா என்று சொன்னாள் மிதுனா.
மிதுனாவின் பேச்சை கேட்டு அங்கு ஊருந்து தடியர்கள்... பார் டா..
சுண்டைக்காய் சைஸ்ல இருந்து கிட்டு, நம்மை மாங்கா மடையர்கள் என்று சொல்கிறாள்..
ஏய் போந்தா கோழி கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இரு.. உன்னால் எங்களுக்கு டபுள் ட்ரீட் அதனால் மட்டும் தான் அமைதியாக இருக்கிறோம்.
இல்லை பெண்ணை மாற்றிக் கடத்தியதற்கு இந்நேரம் நாங்கள் அனைவரும் பரலோகம் சென்று இருப்போம்... நீ எந்த சிவப்பு விளக்கு பகுதியில் இருந்து இருப்பாயோ சிறிது நேரம் அமைதியாக இரு என்று சொல்லி விட்டு,.. தன்னுடைய பாசுக்கு போன் செய்தான்...
ட்ரிங்... ட்ரிங்... முதல் அழைப்பிலேயே அந்த பக்கம் போனை எடுத்தவன் என்ன.. டா என்று கேட்க...
பாஸ் இந்த பொண்ணு கொஞ்சம் ஓவரா வாய் பேசுகிறது என்று சொன்னான் போன் செய்த தடியன்.
டேய் அவ பேசாம இருந்தா தான் டா ஆச்சரியம் ... அது மூன்றும் மூன்று பிசாசுகள் அதிலும் இது சரியான குள்ள பிசாசு.... சரி சரி இன்னும் 20 நிமிடத்தில் நான் அங்கு வந்து விடுவேன் அது வரை கவனம் என்று சொல்லி விட்டு போனை கட் செய்தான்...
அதே நேரம் அந்த இடத்தை சனாதன் தன் ஆட்கள் மூலமாக சுற்றி வளைத்து இருந்தான்.
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...