• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
84
78. கோவிலில் இருந்து செம்மொழி பூங்காவிற்கு செல்லும் இளையவர்கள்....

கடத்தப்படும் மிதுனா....

தங்களை சுற்றி ஏதோ ஒரு மர்மம் நடப்பது போல் தோன்ற வீரா, முத்தாயி, சரோஜா அத்தை மூவரும் வீட்டிற்கு செல்கிறோம் என்று சொல்லவும்.. சனாதனும் தன் நண்பன் ஒருவரை அழைத்து அவர்களுக்கு பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

பிறகு மறுபடியும் அனைவரும் ஒன்றாக பஸ்ஸில் ஏறி செம்மொழிப் பூங்காவிற்கு சென்றார்கள்....

அனைவரும் பூங்காவிற்குள் சென்றவுடன் சனாதன் அனைவரையும் பார்த்து யாரும் தனித்தனியாக எங்கும் சென்று விட வேண்டாம்.... நாம் அனைவரும் ஒன்றாக தான் இருக்க வேண்டும்... யாருக்காவது தனியா ஜோடியா போகணும்னு ஆசை இருந்தாலும் இந்த பயணத்தில் அதை தவிர்த்து விடுங்கள் தயவுசெய்து சொல்கிறேன் நாம் அனைவரும் ஒன்றாக சென்று பார்த்துவிட்டு ஒன்றாகத்தான் வெளியே செல்ல வேண்டும் யாரும் பிரிந்து போய்விடக்கூடாது என்று சொல்ல...

சஞ்சனாவோ ஏன் அப்படி சொல்கிறாய் சனு... ஏதாவது ப்ராப்ளமா நீ கோவிலுக்கு வந்ததில் இருந்தே உன் முகம் சரியில்லை... அம்மா, அப்பாயி, தாத்தா அனைவரும் வீட்டிற்கு செல்கிறேன் என்று சொல்ல அடுத்த நொடி அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தாய்... நீ யாருடன் அனுப்பி வைத்தாயோ அவரை பார்ப்பதற்கு உன் நண்பன் போல் தோன்றினாலும், அவர் ஏதோ உயர் பதவியில் இருக்கும் ஒரு டெரரான போலீஸ் போல் தோன்றியது உண்மையை சொல் ஏதேனும் பிரச்சனையா... ?..

அப்படி ஏதேனும் பிரச்சனை இருந்தால் சொல், நாம் அனைவரும் வீட்டிற்கு சென்று அழகாக ஜாலியா என்ஜாய் பண்ணலாமே தவிர, இப்படி வெளியில் வந்து பிரச்சினையை அதுவும் நமக்குத் தெரிந்து இழுத்து விட்டுக்க கூடாது... பிறகு ஏதேனும் பிரச்சினை என்றால் ஐயோ இதை முன்னமே செய்திருக்கலாமோ என்று வருந்துவதும் தவறு. பிரச்சனை அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று சமாளிக்கவும் பார்க்காதே நாம் அனைவரும் ஏதோ போன வாரம் பிறந்து நேற்று தவழ்ந்து இன்று இங்கு வந்த சிறு குழந்தைகள் போல் அனைவரையும் நீ ஒன்றாக இருங்கள் என்று சொல்லும் போது நெருடலாக இருக்கிறது. அதனால் கேட்கிறேன் உண்மையை சொல் சனு என்று சஞ்சனா கேட்டாள்.

இப்போது அழகியும் சனாதனிடம் அருகில் வந்தவள் .. தனா மாமா சொல்லுங்கள் ஏதேனும் பிரச்சனையா?.. எனக்கும் மனதிற்குள் பல சஞ்சலங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

நான் இங்கு காலையில் கிளம்பி கோவிலுக்கு வருவதற்கு முன்பே நான் சரோஜா அம்மாவிடம் கூட சொன்னேன்... என் மனதிற்கும் இன்று ஏதோ தவறுதலாக நடக்கப் போகிறது போல் தோன்றுகிறது என்று.. ஆனால் இதோ உங்கள் தம்பி தான் அது எல்லாம் ஒன்றும் இல்லை என்று என்னை டைவர்ட் செய்து கிளம்பி வர செய்தார்.

ப்ளீஸ் சொல்லுங்க மாமா அப்படி ஏதாவது இருந்தால் நம் உடனடியாக வீட்டிற்கு சென்று விடுவோம் என அழகியும் பயப்பட...

மற்றவர்கள் அனைவரும் ஹே என்னப்பா ஜாலியா இருக்கலாம் என்று கூட்டிட்டு வந்துட்டு... இப்படி பயம் காட்டுகிறீர்கள் என்று கேட்க... அதுவும் ருத்ராவின் கை அணைப்பில் இருந்த கவிக்கு வியர்த்துக் கொட்டவே ஆரம்பித்துவிட்டது இவர்களின் பேச்சு...

அய்யய்யோ என்னப்பா இது... ஏய் சனா சிறிது நேரம் சும்மா இருக்க மாட்ட... இங்க பாரு எல்லோர் முகங்களிலும் எவ்வளவு பயம் என்று... இந்த இரண்டு பெண்களும் சொல்வது போல் எந்த பிரச்சனையும் இல்லை வாருங்கள் ஜாலியாக இருக்கலாம் என்று சொல்லி...

அங்கு இருந்து ஒவ்வொரு இடங்களிலும் அழகாக போட்டோ எடுத்துக் கொண்டு... ஜாலியாக சுற்றி வந்தார்கள். ஆனாலும் ஏனோ சனாதன் சொல்லியதில் ஏதோ ஒரு விஷயம் இருப்பதாக உணர்ந்து, அனைவரும் ஒன்றாகவே சென்றனரே தவிர யாரும் பிரிந்து போகவில்லை.

சிறிது நேரத்தில் அனைவருக்கும் பசி எடுக்க சாப்பிட போகலாமா என்று கேட்டதும் பூங்காவை விட்டு வெளியில் வந்தவர்கள்... ஏதேனும் ஒரு நல்ல ஹோட்டலாக பார்த்து போக வேண்டும் என்று பேசிக்கொண்டே... வெளியில் வந்தவர்கள் ஒரு நல்ல சைவ ஹோட்டலில் இடம் இருந்து சாப்பிட்டு விட்டு... அடுத்து மெரினா கடற்கரைக்கு செல்லலாமா என்று பேசிக் கொண்டு இருக்கும் பொழுது...

வேண்டாம்பா எல்லோரும் வீட்டிற்க்கே செல்வோம் அங்கு சென்று நம் தோட்டத்தில் அமர்ந்து விளையாடலாம் இப்பொழுது சென்றால் வெயில் நேரமாக இருக்கும் என்று மிதுனா சொல்ல... சரி அனைவரும் சாப்பிட்டுவிட்டு பஸ்சுக்கு போங்க பில் பண்ணிட்டு வருகிறேன் என்று சனாதனும் கர்ணாவும் பில் கவுண்டருக்கு செல்ல.. மற்றவர்கள் பஸ்ஸுக்கு சென்றார்கள்...

கர்ணாவும், சனாதனும் வந்த பிறகு பஸ்ஸை எடுக்கப் போகும் சமயம் இன்னும் மிதுனா வரவில்லை என்றும் மிதுன் சத்தம் போட்டான்.

ஏன் மிதுனா எங்கே போனாள் என்று கேட்க...

அவ ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்னு போனா... ஆனால் இன்னும் வர காணோமே என்று தவிப்போடு சஞ்சனா, புவனா இருவரும் பஸ்ஸில் இருந்து இறங்க...

சனாதன் இருவரையும் பஸ்ஸில் இருங்கள் என்று சொல்லி விட்டு, உள்ளே சென்று அங்கு பணிபுரிந்த ஒரு பெண்ணிடம் சொல்லி ரெஸ்ட் ரூமில் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்து வர சொன்னான்.

அந்தப் பெண்ணும் வந்து அங்கு யாரும் இல்லை. ரெஸ்ட் ரூம் எல்லாம் ஃப்ரீயாக தான் இருக்கிறது என்று சொல்ல...

ஐயோ கடவுளே என்ற தலையில் அடித்துக் கொண்டவன்...

ஹோட்டல் முழுவதும் சுற்றி பார்த்தான்... சனாதன் சென்று சில நிமிடங்கள் கழித்தும் வராமல் இருக்க இப்போது மிதுன், சஞ்சனா இருவரும் நாங்கள் சென்று பார்த்து வருகிறோம் தயவுசெய்து யாரும் வண்டியை விட்டு கீழே இறங்காதீர்கள் என்று சொல்லிவிட்டு இவர்களும் உள்ளே செல்ல அங்கு சனாதனோ ஒவ்வொரு இடமாக தேடிப் பார்த்து விட்டு வெளியில் வர என்ன ஆச்சு டா என்று கேட்டான் மிதுன்.

சஞ்சனாவும் பதட்டத்தோடு சனாதன் என்ன சொல்ல போகிறான் என்று காத்து இருக்க...

மிதுனா மிஸ்ஸிங் டா என்று சொல்ல...

என்ன டா சொல்ற... மிஸ்ஸிங் அப்படின்னா?.. புரியல எனக்கு என்று குழப்பத்தோடு கேட்க...

இங்க ஹோட்டல்ல எங்கே தேடியும் மிதுனா இல்லை என்று சொன்னவன் சரி வா இங்கே ஹோட்டல் எங்க சிசிடிவி கேமரா இருக்கு என்று பார்ப்போம் என்று அவர்களை அழைத்துக் கொண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் ரூமுக்கு சென்றான்.

அங்கு சென்று விவரங்களை சொல்லி கேட்க அவர்களும் சிசிடிவி அறைக்கு கூட்டி சென்று காண்பித்தார்கள்.

அங்கே மிதுன ரெஸ்ட் ரூம் சென்ற நேரத்திற்கு சரியான பதிவை பார்க்க அதை ரெஸ்டின் செல்வதற்காக உள்ளே செல்லும் வரை வீடியோ ரெக்கார்டு ஆகி இருந்ததே தவிர அதன் பிறகு அந்த கேமரா வேலை செய்யவில்லை.

அதனால் அவள் உள்ளே இருந்து வெளியில் வந்தாளா... இல்லை வெளியில் வரவே இல்லையா... என்பது தெரியாதவாறு குழம்பி போனார்கள்.

சரி இந்த விஷயத்தை இதற்கு மேல் இப்படியே நாம் கையாள முடியாது போலீஸ்க்கு தகவல் கொடுப்போம் என்று மிதுன் சொல்ல... சஞ்சனா சனாதனும் சரி என்று சொன்னாலும் சஞ்சனாவிற்கு அழுகை வர ஆரம்பித்தது.

சஞ்சனா அழுகுவதை பார்த்து விட்டு மிதுன் சனாதனிடம் கண் காட்ட..

சனு.... சனும்மா... சரி நீயே இப்படி தைரியத்தை இழந்தால் மற்றவர்களுக்கு யார் தைரியம் சொல்வது... ப்ளீஸ் டா இது அழகும் நேரம் இல்லை.. வா மற்றவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு கமிஷனர் அலுவலகத்துக்கு செல்வோம் என்று சொன்னான் சனாதன்.

அதேபோல் வெளியில் வந்து பஸ்ஸில் இருந்த அனைவரிடமும் விஷயத்தை சொல்லிவிட்டு ருத்ரா கர்ணா லிவிங் நீங்கள் மூன்று பேரும் தான் மற்றவர்கள் அனைவரையும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு சனாதன் யாருக்கும் போன் செய்ய அந்த பஸ்ஸிற்குள் மொத்தம் ஆறு பேர் வந்து ஏறினார்கள்...

ஓகே இவர்கள் உங்களுடன் தான் வருவார்கள் இவர்கள் அனைவரும் பாதுகாப்பிற்காக தான் வருகிறார்கள் பயப்படாமல் இவர்களோடு செல்லுங்கள் வண்டியை வீட்டிற்கு தான் நேராக செலுத்த வேண்டும் இடையில் எங்கும் நிறுத்த வேண்டாம் என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டு ருத்ராவிடம் மறுபடியும் கவனம் என்று சொல்லிவிட்டு கீழே இறங்கினார்கள் மூன்று பேரும்...

மூவரும் கீழே இறங்க அங்கே ஒரு பொலிரோ கார் வந்து நின்றது அதில் மூன்று பேரும் ஏறி கொள்ள...

பஸ் அந்த இடத்தை விட்டு நகரும் வரை அமைதியாக இருந்தவர்கள் பஸ் நகர்ந்த பின்பு....

அந்த காரை ஓட்டிக்கொண்டு வந்த எட்வின் என்பவனை பார்த்து எட்வின் நேரா நம்ம இடத்திற்கு போ என்று சொன்னான் சனாதன்.

அடுத்த நொடி அந்த அந்த வாகனம் சிட்டிக்குள் மெதுவாக சென்ற கார்... பைபாஸ் கடந்து செல்ல புயலென வேகமாக சென்றது. சிட்டியை தாண்டி அவுட்டரில் போய்க்கொண்டு இருந்த கார் சட்டென்று பாதை மாறி ஒரு காட்டு வழியில் செல்ல...

காருக்குள் இருந்த மிதுன் சஞ்சனா இருவருக்கும் தான் ஒன்றுமே புரிபடாமல் இருந்தது..

காட்டுக்குள் சில மயில்கள் தூரம் செல்ல அங்கு ஒரு பெரிய வீடு ஒன்று இருந்தது... இந்த காட்டிற்குள் இவ்வளவு பெரிய வீடா என்று நினைப்பது போல் இருந்தது மிதுன் சஞ்சனா இருவருக்கும்.. ஆனாலும் இதுவும் கேட்டுக் கொள்ளாமல் அமைதியாக வந்தனர்.

உள்ளே இறங்கி செல்ல வழிநெடுக இருந்த சில மனிதர்களைப் பார்க்க அவர்களோ சனாதனுக்கு சல்யூட் வைத்து நின்றார்கள். அவர்களை பார்ப்பதற்கு மிகப்பெரிய போலீஸ் ஆபீஸர்ஸ் போல் இருந்தது.

உள்ளே செல்ல வரவேற்பு அறை போல் இருந்த இடத்தில் காவல்துறை மினிஸ்டரும், இன்னும் சில ஆபிஸர்ஸும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

சனாதனம் உள்ளே சென்ற மினிஸ்டருக்கு சல்யூட் வைத்து விட்டு மற்ற ஆபீசர்களையும் பார்த்து ஹாய் ஹலோ சொல்லி விட்டு அவர்களோடு அமர்ந்தான்.

மிதுன் சஞ்சனாவையும் அவர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்திவிட்டு அவர்களையும் அமர சொல்ல..

இதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாத சஞ்சனா சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ் என்று சொல்லி விட்டு மிஸ்டர் சனாதன் ப்ளீஸ் இங்கே என்ன நடக்கிறது மிதுனா எங்கே இருக்கிறாள்..

உங்களுக்கு தெரியுமா தயவு செய்து மிதுனா எங்கே இருக்கிறாள் என்று சொல்லுங்கள் என்று அழுகும் நிலைக்கு சென்று விட்டாள் சஞ்சனா.

மிதுனும்.. தனா ப்ளீஸ் இங்கே என்ன நடக்கிறது ... எங்கே அழைத்து வந்து இருக்கிறாய் ...? மிதுனா எங்கே இருக்கிறாள்.. அவளுக்கு எதுவும் ஆபத்தா, எதுவும் சொல்லாமல் இப்படி இவ்வளவு தூரம் சிட்டியை தாண்டி கூட்டிட்டு வந்து இருக்கிற ப்ளீஸ் இங்கே என்ன.. டா.. நடக்குது சொல் என்று மிதுனும் பரிதவிப்போடு கேட்டான்.

இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top