• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
99
77. குடும்பமாக கோவிலுக்கு செல்ல...

அங்கு நடக்கப் போகும் விபரீதம் என்ன?...


மாடியில் இருந்து வந்த அனைவரையும் இழுத்து புத்தாடை உடுத்தி வர சொல்ல... அனைவரும் அறைக்கு செல்ல, அழகி மட்டும் வந்து சரோஜாவிடம் அம்மா எனக்கு எதுவோ மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. அதாவது ஏதோ என்று தவறுதலாக நடக்கப் போகிறது போல் உள் உணர்வு சொல்கிறது என்று கவலைப்பட....

சரோஜா, அவகியிடம் அனைவரும் உன் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதை தடுக்காதே. அதே சமயம் வரும் ஆபத்தை அனைவரும் சேர்ந்து எதிர்கொள்வோம்... இவர்கள் யார் மீதாவது உனக்கு சந்தேகம் இருக்கிறதா என்று கேட்க...

ஐயோ அம்மா என்ன இப்படி எல்லாம் கேட்கிறீர்கள்... இங்குள்ள யாருக்கும் தொந்தரவு வந்துவிடக்கூடாது என்று தான் சொல்கிறேன். அதுவும் இல்லாமல் ஏதோ இங்கு நடக்கப் போகும் அசம்பாவிதத்துக்கும் எனக்கும் தொடர்பு இருக்குமோ என்று வேறு என் உள் மனதில் சொல்லிக் கொண்டே இருக்கிறது எனக்கு சொல்ல தெரியவில்லை பல வருடங்களுக்குப் பிறகு இந்த படபடப்பு இருக்கிறது என்று அவளின் பதட்டத்தை சொல்ல...

அதுவரை அவள் பேசிய அனைத்தையும் அவளுக்கு பின் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த கர்ணா...

மெய் என்ன இன்னும் இங்கேயே என்ன பண்ணிட்டு இருக்க... சீக்கிரம் போய் குளிச்சிட்டு கிளம்பி வா, உனக்காக தான் அனைவரும் கோவிலுக்கே செல்கிறோம் என்று சொல்ல....

இதுவரை தனக்குள் இருந்த மன குழப்பங்கள் அனைத்தும் இருந்த தடம் தெரியாமல் காணாமல் போக...

இதோ அத்தான் நான் போய் குளித்து விட்டு வருகிறேன் என்று வேகமாக சென்றவள் அவள் அறை வரைக்கும் சென்று திரும்பி வந்து....

அத்தான்... ஒரு நிமிடம் நில்லுங்கள் இப்போ நீங்கள் என்னை மெய் என்று தானே அழைத்தீர்கள் என்று கேட்டாள்....

இல்லை என்று சொல்ல தான் நினைத்தன், ஆனால் அவளின் ஆசையாக எதிர்பார்ப்போடு இருந்த முகம் பார்க்க... மனதிற்குள் ஏதோ ஒரு வலி வர ... ஆமாம் என்று சொல்லி விட்டு, சரி போய் குளிச்சிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

கர்ணா, அழகி இருவரின் உரையாடலையும் கேட்டுக் கொண்டு இருந்த வீரா, முத்தாயி, சரோஜா மூவரும் கர்ணாவிடம் ஏன் கண்ணு உன்னையும் கஷ்டப்படுத்தி அவளையும் கஷ்டப்படுத்துற என்று கேட்க...

நான் என்ன பண்ணட்டுமுங்க அம்மாச்சி... அவள் மனதில் இருக்கும் வலிகளை கடந்து... உழைப்பாளி என் மீது இருக்கும் பாசத்தை உணர்ந்து அவளாகவே அவள் வாயால் என்னிடம் காதலை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் ... அதுவும் அவளுக்காக தானே அம்மாச்சி என்று முத்தாயிடம் அவரின் காலுக்கு அருகில் அமர்ந்து கொண்டு கேட்க...

கண்ணு நீ சொல்றது புத்திக்கு தெரிகிறது, மனசுக்கு தான் தெரிய மாட்டேங்குது... எங்க புள்ளைங்க நீங்க ரெண்டு பேருமே கஷ்டப்படும் போது மனசு கஷ்டமா இருக்கு சரி கண்ணு நீ சொல்றது ஒரு விதத்துல நியாயம் தான்...

சரி கண்ணு நீயும் போய் ரெடி ஆகி வா... நாங்க எல்லாம் கோவிலுக்கு ரெடியா இருக்கோம் நீங்க போய் கிளம்பி வாருங்கள் என்று சொல்ல...

கர்ணாவும் கோவிலுக்கு கிளம்பி வருவதற்காக சென்றான்.

சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக கிளம்பி வந்தனர்....

அனைவரும் சரி இப்போது அனைவரும் எந்த கோவிலுக்கு செல்ல போகிறோம் என்று கேட்டனர் இளையவர்கள்...

அனைவரும் கிளம்பி வெளியில் வர, அங்கே ஒரு பெரிய பஸ் இவர்களுக்காக காத்திருந்தது அனைவருமே அட நம்ம எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போகப் போகிறோமா என்று கத்த...

ஏய்... என்ன... இப்போது ஏன் இப்படி கத்துகிறீர்கள் சரி சரி எல்லோரும் காரில் ஏறுங்கள் என்று சொல்ல...‌ கவிக்கு இப்போது கால் சிறிது ஊன்றுவதற்கு லேசாக வலி கொடுத்தாலும் மற்றவர்களோடு சேர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே தன் வலியை மறைத்து மெதுவாக நடந்து வண்டியில் ஏறினாள்.

ஆனால் சரியாக வெளியே வந்த மிதுனம் அங்கு இருந்த படியில் இடித்துக் கொள்ள.. அவளின் காலில் வலி ஏற்பட ஐயோ அம்மா என்று கத்தி கொண்டே அப்படியே அமர்ந்து விட்டாள்.

மிதுன் ஏற்கனவே வண்டியில் ஏறி விட்டதால், பின்னாடி வந்த ருத்ரா ஐயோ என்னோட குட்டி அண்ணி பார்த்து வரக்கூடாதா என்று சொல்லி அவளை தூக்கி விட கை கொடுக்க,...

மிதுனாவோ உக்காந்து கொண்டு ஐயோ சின்ன மச்சான்.. கொஞ்சம் கீழே குனிந்து என்னிடம் வாருங்களேன் என்று கூப்பிட்டாள்.

என்ன குட்டி அண்ணி என்று அவளின் கிட்டே சென்று கேட்க...

சரியாக அந்த நேரம் அவர்களுக்கு அருகில் இருந்த வாத மரத்தின் மேல் இருந்து ஒருவன் இருவரையும் புகைப்படம் எடுத்து தன்னுடைய ஆட்களுக்கு தன்னுடைய செல் போன் மூலம் அனுப்பி வைத்தான்.

சின்ன மச்சான் என்னோட ஹீல்ஸ் உடைந்து போச்சு.. அதில் என் காலிலும் சுளுக்கு என்று நினைக்கிறேன். ப்ளீஸ் நிர்வாக தூக்கி எண்ணை பஸ் படியல் மற்றும் ஏற்றி விட்டு விடுங்கள். பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னவுடன்...

ருத்ராவும் சிரித்துக் கொண்டே வாங்க அண்ணி என்று சொல்லி அவளை தூக்கி படிகளில் ஏறி உள்ளே சென்று இறக்கி விட்டான். அப்போது தான் மிதுன் பார்த்து விட்டு, என்ன ஆச்சு என்று பதறி வர..

ஐயோ எல்லோரும் பேனிக் ஆகாதீர்கள் .. வீட்டிற்கு விட்டு வெளியில் வரும் பொழுது ஹில்ஸ் உடைந்து கீழே விழுந்து விட்டார் வேற ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டு அவளுடைய உடைந்த ஹீல்ஸை காட்ட அனைவருமே சிரித்து விட்டு...

ஓகே மிதுனா அடி ஏதும் பலமாக காட்டி இருக்கிறதா என்று கவலையாக கேட்க...

ஆமாம் எல்லாம் சேர்த்து முடித்து கிண்டல் பண்ணிவிட்டு இப்பொழுது எல்லோரும் அக்கறை இருப்பது போல் கேட்கிறீர்களா என்று அனைவரிடமும் செல்லமாக கோபித்துக் கொண்டு.. இந்த பஸ் ஓட கண்டக்டர் யாரு அய்யய்யோ இந்த பஸ்ல கண்டக்டர் இருக்க மாட்டாங்களோ.. சரி சரி நான் டிரைவர் கிட்ட போய் உக்காந்து பேசி கொண்டு வருகிறேன் என்று, தான் கோபமாக இருப்பது போல் காட்டி, வேகமாக திரும்பி நடக்க கால் மறுபடியும் லேசாக நொடித்து விழுக போனவளை... தன்னோடு சேர்த்து அணைத்து அருகில் இருந்த சீட்டில் அப்படியே அமர வைத்துக் கொண்டான் மிதுன்.

இப்போது அனைவருமே பஸ்ஸில் ஏறி விட, கடைசியாக படிக்கட்டுகளை அப்படியே சறுக்காக மாற்றி அதில் சரோஜா அத்தையின் வீல் சேரை தள்ள..

உள்ளே இருந்து சனாதன் தூக்கி விட்டான்... இப்போது அனைவரும் பஸ்ஸில் ஏறி விட...

வீரா அனைவரையும் பார்த்து பிள்ளைகளா முருகனுக்கு அரோகரா சொல்லுங்கள் என்று சொல்ல...

அனைவருமே அரோகரா என்று கத்தினார்கள்...

பிறகு அனைத்து டயர்களுக்கும் அடியில் இருக்கும் எலுமிச்சம் பழங்களை நசுக்கிக் கொண்டு... பஸ் வடபழனி முருகன் கோயிலை நோக்கி சென்றது.

பல கலாட்டா பேச்சுகளுடன் அனைவரும் கோவிலுக்கு வந்து சேர... அனைவரையும் இறங்கி விட்டு... பஸ் ஓரமாக சென்று போய் நின்றது.

அப்போது டிரைவர் தனாவை மட்டும் அழைத்து ஏதோ அவன் காதில் சொல்ல தனாவும் ஒரு நொடி அதிர்ச்சியாகி பிறகு சரி எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் கவனமாக இருங்கள் என்று டிரைவரிடம் சொல்லி விட்டு, சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டவன் பிறகு தன் குடும்பத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு இயல்பாக அவர்களோடு சேர்ந்து கொண்டான். அதற்குள் பெண்களும் அங்கு இருந்த பிரசாத கடைகளில் அர்ச்சனைக்கு தேவையான அர்ச்சனை தட்டுகள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு அனைவரும் முருகனை தரிசிக்க சென்றனர்.

கோவிலில் ஒவ்வொரு சன்னதியாக சாமியை கும்பிட்டு விட்டு... இறுதியாக சண்முக நாதனையும் வள்ளி தெய்வானையும் வணங்கி விட்டு.. கோவில் குளத்தில் வந்து அனைவரும் அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தனர்...

அடுத்து எங்கே போகலாம் என்று ஆலோசிக்க ஒருவர் வள்ளுவர் கோட்டம், ஒருவர் செம்மொழி பூங்கா, ஒருத்தர் மெரினா பீச் என்று ஆளுக்கு மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டு இருக்க... சரோஜா அத்தையோ முதலில் என்னை, வீரா அப்பா, முத்தாயி அம்மா மூன்று பேரையும் நல்லபடியாக வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுங்கள். பிறகு நீங்கள் எல்லாம் எங்கு வேண்டும் ஆனாலும் ஊரை சுற்றி விட்டு வீட்டிற்கு வந்து சேருங்கள் என்று சொன்னார்.

சனாதன் சிறிது நேரம் யோசித்து விட்டு அதுவும் சரிதான் என்று சொல்லி, யாருக்கோ போன் செய்ய... அடுத்த 15 நிமிடத்தில் ஒருவன் வந்து ஹாய் சனாதன் என்று கூப்பிட்டான்... பார்ப்பதற்கு அர்னால்டுக்கு தம்பி போல் இருந்தான்...

ஹலோ மிஸ்டர் முகேஷ். வணக்கம். நல்லா இருக்கீங்களா?. என்று கேட்டுக்கொண்டே தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

பிறகு அனைவரிடமும் இவர் பெயர் முகேஷ் மும்பையில் இருந்து இங்கு வந்து இருக்கிறார்.

காலையில் தான் போன் செய்து தகவல் சொன்னார் நம் வீட்டிற்கு வரவேண்டும் என்று, அது தான் அவரிடம் விசாரித்தேன். அவரும் இங்கு பக்கத்தில் இருப்பதாக சொல்லவும் தான் அவருக்கே போன் செய்து கேட்டேன் இது மாதிரி எங்கள் அத்தை தாத்தா அம்மாச்சி வீட்டில் சென்று விட முடியுமா என்று கேட்டேன் அவர் ஒத்துக் கொண்டார். இவரோடு நீங்களும் தாத்தா அம்மாச்சி மூன்று பேரும் போய் சேர்ந்து விடுங்கள் வீட்டிற்கு.. என்று சொன்னான் சனாதன்.

ஏன் கண்ணு உன் ஃப்ரெண்டுன்னு சொல்ற எங்களை கூட்டிட்டு போயி அங்க அவர் தனியா என்ன பண்ணுவாரு என்று கேட்டார் வீரா.

தாத்தா இவனுக்கு நம்மளுடைய தோட்டத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்று தான் ஆசை. அதோ அவனுடைய குழந்தைகளோடு வந்து இருக்கிறான். அங்கு வைத்து அவர்கள் ஏதோ டாக்குமென்டரி எடுக்க போகிறார்களாம் அவர்கள் எடுத்து முடிக்கட்டும், அதற்குள் நாங்கள் அனைவரும் ஒரு சுற்று சுற்றி விட்டு வந்து விடுவோம் என்று சொன்னான்.

சரிப்பா என்று சொல்லிவிட்டு வீரா முத்தாயி சரோஜா மூவரும் முகேஷின் காரில் அவர்கள் குடும்பத்தோடு... சென்றார்கள்.

முகேஷ் சரோஜா அத்தையை தூக்கி அழகாக அமர வைத்து காரை ஓட்டி சென்றான். போகும் போது தனாவிடம் கட்டை விரலை தூக்கி உயர்த்தி காட்டி சொல்லி விட்டு செல்ல,...

தனாவின் அருகில் வந்த சஞ்சனா என்ன சனு அவர் உன்னுடைய பிரண்டு மட்டும் தானா?.. நீ சொல்வது உண்மையா.. எதற்கு உனக்கு கையில் சிக்னல் காமிச்சு விட்டு போகிறார் என்று கேட்டாள்.

இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top