Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 489
- Thread Author
- #1
சோழனூர்:
அவனுக்கு பின்னாடியே வந்தவர்கள் என்னாச்சு செழியா என்று கதவை திறந்து உள்ளே வர,அங்கே மயக்கத்தில் ஷமீ படுத்திருக்க,வரிசையாக மூன்று தொட்டில்களில் மூன்று குழந்தைகள் இருந்தனர்..செழியனுக்கு மட்டுமில்லாமல் அங்கிருந்தவர்களுக்கும் சந்தோஷத்தில் அழுகையே வந்து விட்டது...
ஆளுக்கு ஒரு குழந்தையை தூக்கி முத்தமிட்டவர்கள் என்ன குழந்தை என்று பார்க்க இரண்டு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையென தெரிந்தது..
ஆரம்பத்திலிருந்து இவள் கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தேன் மருமக வயிறு ரொம்ப பெருசா இருக்கு டி. ரெட்டை புள்ளையாக தான் இருக்கும்னு.
எங்க குடும்பத்துல தொடர்ந்து நாலு தலைமுறையாக இப்படி ரெட்டை பிள்ளை பிறக்குது.எங்க அண்ணனுக்கு பிறகு நெடுஞ்செழியனுக்கு இல்லன்னா செழியனுக்கு தான் பிறக்கும்னு தெரியும்.
என் பேச்சை எங்க காதுல வாங்கினாய் என்று செல்லதுரை மனைவியை முறைத்தார்.
அப்போது கதவை தட்டி விட்டு உள்ளே வந்த டாக்டர் சாந்தி,மிஸ்டர் செழியன் கங்கிராஜுலேசன் என்கவும் தேங்க்யூ டாக்டர் என்றான்.
கடந்த 30 வருட அனுபவத்தில் ஒரே தாய் வயிற்றில் மூன்று குழந்தைகள் ஒரே நேரத்தில் பிரசவமானது இதுதான் முதல் முறையாக என்றவர் இரட்டை குழந்தைகளுக்கு சில நேரத்தில் உடல் எடை இல்லை மற்ற ஏதாவது பிரச்சினை வரும்.ஆனால் உங்கள் மூன்று குழந்தையும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் ரொம்ப ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
குழந்தை பிறந்த 24 மணி நேரத்துக்குள் தோல் இன்ஜெக்ஷன் போடணும். ஈவ்னிங் நர்ஸ் வந்து சொன்னதும் குழந்தையை தூக்கிட்டு வாங்க.
கண்டிப்பா ஃபீவர் வரும் சரியாயிடும் என்றவர் பேஷன்ட் மயக்கத்தில் தான் இருக்கிறார்கள்.அவர்களுக்கு மயக்கம் தெளிய கொஞ்ச நேரம் ஆகுமென்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
நேரமும் கடந்து செல்ல அதேபோல் மூன்று பேரும் குழந்தையை தூக்கிக்கொண்டு போய் இன்ஜெக்ஷன் போட்டு வர அவர்களோ வழியில் கத்தினர்.
மூன்று குழந்தைகளும் ஒரே நேரத்தில் அழுக,ஆளுக்கு ஒரு குழந்தையின் அழுகை நிறுத்துவதற்குள் போதும் போதுமென்றானது..
நேரமும் கடந்து செல்ல முதல்ல குழந்தைகளுக்கான டிரஸ்களை வாங்கிட்டு வரலாமென்று செழியனும் மகியும் அங்கிருந்து சென்றனர்.
ஒரு மணி நேரம் சென்றிருக்க, மற்றவர்களுக்கு காலை டிபனோடு 3 குழந்தைகளுக்கு தேவையானவைகளை வாங்கிக் கொண்டு இருவரும் வந்தனர்.
அப்பொழுது செல்லதுரையின் நம்பருக்கு கால் வரும் சத்தம் கேட்க, பாக்கெட்டிலிருந்த போனை எடுத்துப் பார்த்தவர் அத்தை தான் என்றவாறு அட்டென்ட் பண்ணியவர் மருமகளுக்கு நல்லபடியா பிரசவம் ஆகிவிட்டது...
அதைக் கேட்டு மலையாத்தானு சந்தோஷப்பட்டவர் என்ன குழந்தை பிறந்துருக்கு தொரை என்கவும்,என்ன குழந்தைகள் என்று கேளுத்தையென சிரித்தார்.
சுமதி பாட்டியோ அப்படியானு ஆர்வமாக கேட்க ஆமா ஆமாம் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கிறதுனு சொல்லவும் சந்தோஷத்தில் கண்கள் கலங்க சிரித்து விட்டார்.
ஒரு வழியாக காலை 11 மணிக்கெலாம் ஷமீராவுக்கு மயக்கம் தெளிய தொடங்கியது.ஒருமுறை கண்களை மூடி சுழற்றியவாறு திறக்க அங்கே மூன்று தொட்டில்கள் இருப்பதை பார்த்து சிரித்தவள் அம்மா என்க,குழந்தைகள் தூங்கட்டுமென்று வெளியே உட்கார்ந்திருந்தவளுக்கு ஷமீரா கூப்பிடுவது காதில் விழவில்லை.
யாருமே காணுமென்று தலையை மட்டும் திருப்பி பார்க்க அங்கே கதவு சாத்தியிருக்க,இளா என்கவும் ஏதோ ஒரு உந்துதலில் வேகமாக எழுந்து உள்ளே வந்த செழியன் சண்டிராணி என்றவாறு மனைவி படுத்திருக்கும் பெட்டின் முன்பு மண்டியிட்டவன் அவள் உதட்டோடு தனது முரட்டிதழை புதைத்தான். .
நீண்ட முத்தத்தை மனைவிக்கு பரிசாக கொடுக்கும் போதே சந்தோஷத்தில் அவன் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தோடியது..
மனமேயின்றி மனைவியின் உதட்டிலிருந்து பிரிந்தவன் கள்ளி...மூணு குட்டினு ஏண்டி சொல்லவே இல்லை என்கவும்,எப்படி இருக்கு என்னோட சர்ப்ரைஸ் என்று கண்ணடித்தபடி ஷமீரா கேட்க,அடி தூள் டி.
அடுத்த முறையும் இதேபோல மூணு குட்டியான்களை ஏற்பாடு பண்ணலாமா என்று மீசையை முறுக்கிக் கொண்டு செழியன் கேட்க,என்னாஆஆ என்று அவள் அதிர ஹாஹா என்று சிரித்தான்.
வெளியே இருந்த வீட்டினரும் உள்ளே வந்து ஷமீராவிடம் நலம் விசாரிக்க, அவளும் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தாள். ஷமீராவிற்கு டெலிவரியானது கேள்விப்பட்டு ஊரில் இருக்கும் சொந்தக்காரர்களும் வந்து பார்த்து சென்றனர்.
நார்மல் டெலிவரி தான் என்பதால் மூன்றாவது நாள் டிஸ்சார்ஜ் பண்ணிடலாமென்று டாக்டர் சொல்லியிருக்க,அன்று மாலை வனிச்சூருக்கு கிளம்பியவர்கள் குழந்தைகளுக்கு பதினாறு படைக்கும் போது வருவதாக சொல்ல,எங்களுக்கு அந்த பழக்கம் இல்லையே என்று மகி சொல்லவும்,எங்களுக்கு உண்டுங்க என்றனர்.
உங்க பேரபிள்ளைகள் உங்களுடைய விருப்பம் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
அதேபோல மூன்றாம் நாள் மனைவி குழந்தைகளோடு மாமியார் வீட்டுக்கு வந்தவன்,மறுநாள் காலையில் அவர்களிடம் சொல்லிக் கொண்டு வனிச்சூருக்கு புறப்பட்டான். புவனா மட்டும் குழந்தைகளோடு இங்கே தங்கி விட எஸ்தருக்கும் அது பேருதவியாக இருந்தது..
பகலில் பிறந்ததால் இரவெல்லாம் மூன்று பேரும் அழுது கொண்டே இருந்தனர்.போன் பண்ணும் போதெல்லாம் உன் பிள்ளைகள் பண்ணும் அக்கப்போரை வந்து நீயே பாரு செழியானு புவனா சிரித்துக் கொண்டே சொல்லவும்,செழியன் பிள்ளைங்க என்றால் பின்ன சும்மாவா. நல்லா அனுபவியுங்கள் என்று அவனும் சிரிப்பான்..
பிரசவமாகிய விஷயத்தை மகனுக்கு போன் பண்ணி அந்தோணி சொல்ல, ஷமீராவிடம் பேசுவதற்காக எஸ்தருக்கு கால் பண்ணியவன் அவரிடம் நலம் விசாரித்து விட்டு ஷமீ கிட்ட போனை குடுங்க அத்தை என்க..
அப்பொழுது தான் ஷமீராவும் குளித்துவிட்டு வெயிலில் முடியை காய வைத்துக் கொண்டிருக்க,அங்கு வந்தவர் பாபு தான் லைன்ல இருக்கிறான் என்கவும்,அப்படி எனக்கு யாருமே தெரியாது என்றவாறு உள்ளே போய்விட்டாள்.
இது பாபுவிற்கும் நன்கு கேட்டது.
பாபு என்று சங்கடமாக எஸ்தர் கூப்பிட, நான் பண்ணியதுக்காக இவள் பழி வாங்குறாள்.நேர்ல வந்து அவள் கைல கால்ல விழுந்து கெஞ்சி சமாதானப்படுத்துகிறேன்னு சிரித்தவாறு போன வைத்தவனுக்கு, தனது பாப்பாவின் நிராகரிப்பு உள்ளுக்குள் பெரும் வலியை கொடுத்தது.
ஹாஸ்பிடலுக்கு வந்து பார்க்க முடியாது சொந்தங்கள் வீட்டில் வந்து பார்த்துவிட்டு சென்றனர்..
இரண்டு வாரம் கடந்திருக்க குழந்தைகளுக்கு பதினாறு படைக்க வேண்டும் என்பதால்,என்னென்ன பொருள்கள் வேண்டுமென்று முதல் நாள் இரவே புவனா சொல்லியிருக்க, மகியும் வாங்கிட்டு வந்து கொடுத்து விட்டார்..
மறுநாள் விடியலும் ஆரம்பமாக ஊரில் இருந்து கிளம்பியவர்கள் காலை எட்டு மணிக்கெல்லாம் சோழனூருக்கு வந்து சேர்ந்தனர்.பின்னர் ஆளுக்கொரு வேலையாக சமையலை செய்து முடிக்கவே மதியம் மூன்று மணி ஆனது.
பின்னர் செழியன் வீட்டின் வழக்கப்படி சுமதி பாட்டியும் வீராயி பாட்டியும் தங்கள் பேரப்பிள்ளைகளுக்கான சடங்குகளை செய்து முடிக்க,மகியும் எஸ்தரும் பிள்ளைகளுக்கு ஜெபம் பண்ணி விட்டு வாங்கி வைத்திருந்த நகைகளை மூன்று பேரப்பிள்ளைகளுக்கும் போட்டு விட்டனர். .
அவர்களை உட்கார வைத்து உணவை பரிமாற,பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்களும் சொல்லிக் கொண்டு ஊருக்கு புறப்பட்டனர்.செழியன் இரண்டு நாள் தங்கி வருவதாகவே முன்பே சொல்லி விட்டான்.
மாலை போய் இரவு வந்தது..
செழியனின் பிள்ளைகள் மூவரும் தூங்காமல் கை,கால்களை உதைத்துக் கொண்டு ஏதேதோ சத்தம் போட்டவாறு இருக்க தனது வாரிசுகளை பார்த்து பூரித்துப் போனான்.
நேரமும் கடந்து செல்ல இரவு 10 ம் தாண்ட குழந்தைகள் மூவரும் தூங்காததால் மனைவியை பாவமாக பார்க்க,அவளோ கணவனை முறைத்து விட்டு உன் பிள்ளைங்க டெய்லி இப்படித்தான் பண்றாங்க.
ஒழுங்கு மரியாதையாக நீங்க தான் தூங்க வைக்கணும் என்றவள் பெட்டின் ஓரமாக படுத்துக்கொள்ள,அடியேய் இருக்கிறது இரண்டு கை டி.
மூணு தொட்டிலை எப்படி ஆட்ட?
ஒரு குட்டியானை நீ ஆட்டு டி என்கவும் இன்னைக்கு ஒரு நாள் நீங்க பாருக்களென அமைதியாக படுத்தாள்.
அடிப்பாவி பழிவாங்குற நேரமா டி என்று கெஞ்சி கதறியவன் மனைவிக்கு சில பல முத்தங்களை பரிசாக கொடுத்து எழுப்பி விட்டு,இருவரும் குழந்தைகளின் தொட்டிலை ஆட்டி விட மூவரும் தூங்க இரவு 12 மணிக்கு மேலானது..
"யாத்தேஏஏஏ"
நல்லா பழிவாங்குற டி என்றவாறு தரையில் படுத்தவன்,மனைவியை நோக்கி கையை நீட்ட ஷமீராவோ இரவு விளக்கை மட்டும் போட்டுவிட்டு கணவனின் கரத்திற்குள் போய் அடைக்கலமானவள் என்னவாம் என்றவாறு நிமிர்த்து பார்க்க,இந்த பார்வை தாண்டி என்னை மொத்தமா உன்கிட்ட வீழ்த்தியது.
திரும்ப அதே போல பார்க்காதடி அப்புறம் அடுத்த குட்டியானுக்கு ரெடியாகிடுவேன் உன் பாடு திண்டாட்டம் தான் என்கவும் ஐயோ என்று ஷமீரா அதிர,அதே தான் என்று மனைவியின் தலையை வளைத்து தன்னை நோக்கி இழுத்தவன், ஏற்கனவே என் பொண்டாட்டி அழகு.
அதுவும் இப்ப குழந்தை பிறந்ததும் ரொம்ப அழகா இருக்க டி என்றவாறு மனைவியின் இதழ்களை சிறை பிடித்தான்...
நாட்களும் ஓடியது...குழந்தைகள் பிறந்து இரண்டு மாதங்கள் முடிந்து மூன்றாவது மாதமும் தொடங்கியது.அந்த மாதத்தில் ஓர் முகூர்த்த நாளில் மருமகளையும் மூன்று பேரப்புள்ளையும் அழைத்துக் கொண்டு செல்லதுரை தம்பதிகள் வனிச்சூருக்கு வந்து சேர்ந்தனர்.
செழியனோ கம்பெனி விஷயமாக பூனாவுக்கு போயிருந்ததால் அவனால் மனைவியையும் குழந்தைகளையும் அழைக்க வர முடியவில்லை.
நம்மளை விட உங்க அப்பனுக்கு வேலை தான் முக்கியம்.வரட்டும் அந்த மனுஷன் என்று மூவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஷமீரா குழந்தைகளோடு வந்த விஷயத்தை கேள்விப்பட்டு மற்றவர்களெல்லாம் வந்து பார்த்து சென்றனர்.
இரண்டு நாட்கள் சென்று வீட்டிற்கு வந்து செழியனோ மனைவியிடம் கெஞ்சி கதறி காலில் விழாத குறையாக சமாதானப்படுத்தினான்..
குழந்தைகள் பிறந்து மூன்று மாதங்கள் முடியப்போகிறது இன்னும் பெயர் வைக்கவில்லையே என்று எல்லாரும் கேட்க,அதற்கான நாளையும் குறித்திருந்தனர்.
குழந்தைகள் பெயர் வைக்கும் பங்ஷனுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, கண்ணன்-மலரின் கல்யாணத்திற்கு நாள் குறிக்க,அந்த நாளும் வர அவர்கள் குலதெய்வம் மலையம்மனோடு
சொந்த பந்தங்கள் ஆசிர்வாதத்துடன் மலரின் கழுத்தில் தாலியைக் கட்டி மனைவியாக ஏற்றுக் கொண்டான்..
ஒரு வாரம் விருந்தென அலைந்த பொண்ணு மாப்பிள்ளை இருவரும் வீட்டிற்கு வர,அன்று இரவு இருவருக்கும் சாந்தி முகத்திற்கான ஏற்படும் செய்திருந்தனர்.
மதிய விருந்தை சொந்தங்களுக்கு பரிமாறும் போது ஏய் மாப்பி நீ 3 நான் 4 பெத்து காட்டுறேன் டா இது என் அப்புச்சி மேல சத்தியமென்கும் போது விளக்கமாறு ஒன்று வந்து கண்ணனின் தலையில் விழ,அய்யோ என்றவாறு திரும்ப,அங்கு தம்புசாமி தாத்தா நிற்கவும்,எஸ்கேப் என்றவாறு உள்ளே ஓட மற்றவர்கள் சிரித்து விட்டனர்.
நேரமும் கடக்க மற்ற சம்பிரதாயங்கள் முடிந்து மலரை அனுப்பி வைக்க, தயங்கியபடியே கதவை திறந்து உள்ளே வந்தவளை பார்த்தவன்,புருவத்தை தூக்கி என்ன என்க...
அதில் தடுமாறியவள் கதவை தாழ்ப்பாள் போடும் போது இரண்டு வலிமையான கரங்கள் அவளை இறுக்கி அணைத்தது..
ஒருவாரம் சென்றிருக்க குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நாளும் வரவும்,சோழனூரிலிருந்து அந்தோணி தம்பதியினர் சாரதா பாட்டி மகி எஸ்தரெல்லாம் காலையிலே வந்து விட்டனர்..
பங்ஷனும் காலை 10 மணிக்கு ஆரம்பிக்க,தனது கணவரோடு வந்த காஞ்சனா,டேய் திருட்டு போலீசென்க, சித்தி என்றவாறு கட்டி பிடித்தான்.