• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 17, 2025
Messages
42
நக்கீரன், சுந்தரத்திற்கு போன் செய்து,"மாமா எங்கள் வீட்டில் வைத்து பந்தக்கால் ஊனனும் அதற்கு நான் நேரில் வந்து சொல்லனுமா இல்ல போன்ல சொன்னாலே போதுமா?" என்று கேட்க,

அதற்கு சுந்தரம் "பரவாயில்லை மாப்ள நீங்க போன்ல சொன்னதே போதும் நாங்க வந்துடறோம்," என்று சொல்லி விட்டு, "எத்தனை மணிக்கு பந்தக்கால் ஊன போறீங்க "என்று சுந்தரம் கேட்டார்.
அதற்கு நக்கீரன்" காலை 6 லிருந்து 7:40 க்குள்"என்று சொன்னார் .

சுந்தரம் "சரி என்று சொல்லிட்டு எங்கள் வீட்டில் எல்லாரையும் அழைத்துக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தார்.

பூங்குன்றனிடம் நக்கீரன் "திருமணத்துக்கு பந்தக்கால் ஊனும் விஷயத்தை பற்றி சொன்னார்.

அதனால அன்று நீ லீவு போடு என்று" சொன்னார்.

பூஙங்குன்றன்" பந்தக்கால் ஊனும் நேரத்தை கேட்டு விட்டு நான் அலுவலகத்திற்கு தாமதமாக செல்கிறேன் "என்று சொன்னான்.

நக்கீரன் "சரி போ உன் விருப்பம் நான் சொன்னா கேக்கவா "போற
என்று சற்று வருத்தமாக சொன்னார்.

பூங்குன்றன் கொஞ்சம் பணிவாக "இல்லைன்னா இப்பத்தான் நாளிதழ் மக்களிடம் கொஞ்சம் பிரபலமாகி, உள்ளது அதான் லீவு போட வேண்டாம் என்று நினைக்கிறேன்"

" என் மீது நிறுவனத்திற்கு ஒரு நம்பிக்கை வந்துள்ளது அதை நான் காப்பாற்ற வேண்டாமா ? , பந்தக்கால் ஊனும் சுபநிகழ்ச்சி முடிந்த பிறகு தான் அலுவலகத்திற்கு போகிறேன்"
என்றான்.

நக்கீரன் சொன்ன தேதியில் சுந்தரம்
குழலியை தவிர தன் குடும்பத்தோடு மற்றும் தன் நெருங்கிய உறவோடு ஒரு வேன் பிடித்து நக்கிரன் வீட்டுக்கு வந்தார்கள்.

சுந்தரம் குடும்பத்தினரை ,நக்கீரன் பெற்றோர் இல்லாததால், அந்த இடத்தில் சுசீலாவின் பெற்றோரை நிற்க வைக்க நக்கீரன் முடிவு செய்து அவர்களையும் வரவைத்து இருந்தார்.

சுந்தரம் குடும்பத்தினரை, நக்கீரன், சுசீலா மற்றும் சுசீலாவின் பெற்றோர்
" வாங்க வாங்க "என்று வரவேற்றார்கள் .

பூங்குன்றனும்
அனைவரையும் " வாங்க வாங்க" என்று வரவேற்றான்.

பந்தக்கால் வைபவ நிகழ்ச்சிக்கு இப்போது புதிய கட்டாக (சீர் வரிசை)
பெண் வீட்டில் இருந்து மாப்பிள்ளைக்கு புது வேட்டி சட்டை எடுத்து வர வேண்டும். அதை மாப்பிள்ளை அணிந்து தான் பந்தக்கால் வைபவத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

அதனால் சுந்தரமும், பூங்குன்றனுக்கு
ஒரு புதிய வேட்டி சட்டை எடுத்து வந்தார்.

பூங்குன்றன், வந்தவர்களை வரவேற்று விட்டு, சுசீலா அண்ணியின் தம்பியுடன், " வா மாப்பிள்ளை, என் அறைக்கு போய் கிளம்புவோம்" என்று சொல்ல, சுசீலா தம்பி மகேஷ் " மாப்பிள்ளை, நீ தான் தயாராக வேண்டும். நான் ஏற்கனவே தயாராகி தான் எங்கள் வீட்டில் இருந்து வந்தேன்" என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

சுந்தரம், பூங்குன்றனுக்கு எடுத்து வந்த புதிய ஆடையை, நக்கீரனிடம் காட்டி " உங்கள் தம்பி, எங்கே மாப்பிள்ளை?, இதை அவரிடம் கொடுக்க வேண்டும்" என்றார்.

நக்கீரன், சுற்றும்முற்றும் பார்த்து விட்டு, தன் மனைவி சுசீலாவிடம் தன் தம்பியை பற்றி கேட்க, அதற்கு சுசீலா,
" என் தம்பி கூட தான் உங்கள் தம்பி இருந்தாப்ல " என்று சொல்லி விட்டு, தன் தந்தையிடம்" தம்பி மகேஷ் எங்கப்பா?" என்று கேட்க,

அதற்கு அவர்" மருமகன் பூங்குன்றனும் உன் தம்பியும், வீட்டுக்கு உள்ளே போனதைப் பார்த்தேன் " என்றார்.

அதை அப்படியே சுசீலா தன் கணவரிடம் சொல்ல, நக்கீரனும் அதை சுந்தரத்திடம் சொல்ல, சுந்தரம் உடனே தன் மகன் வளவனை அழைத்து, " மாப்பிள்ளை உள்ளே இருக்கிறாராம். அவரிடம் இந்த புதிய ஆடையை கொடுத்து விட்டு வா " என்று சொல்லி அனுப்பினார்.

வளவனும், உள்ளே போய் பூங்குன்றன் அறையில் பார்க்க, அங்கே சுசீலா தம்பி மகேஷ் மட்டும் தான் இருந்தார்.

மகேஷ், வளவனைப் பார்த்து" என்ன பங்காளி?" என்று கேட்க, வளவன், மகேஷிடம்" இது மாப்பிள்ளைக்கு
பந்தக்கால் வைபவத்திற்கு எடுத்து வந்த புதிய ஆடை என்றும், இப்போது இது புதுக்கட்டாம் ல (சீர் வரிசை) " என்று சொல்ல,

மகேஷ்" ஓ அப்படியா பங்காளி, மாப்பிள்ளை ஒரு முக்கியமான போன் வந்தது, இங்கே சரியாக சிக்னல் கிடைக்கல, அதான் மாடியில் போய் பேசப் போய் இருக்கிறான்" என்று சொல்லி விட்டு, " நீங்கள் என்னிடம் கொடுங்கள், நான் மாப்பிள்ளை போன் பேசி விட்டு வந்ததும் நீங்கள் கொடுத்ததாக சொல்லி கொடுக்கிறேன் "என்று சொல்லி விட்டு,

வளவனிடமிருந்து பூங்குன்றனுக்கு எடுத்த ஆடையை வாங்கி பார்த்தான்.

" இந்த கலர் மாப்பிள்ளைக்கு பிடிக்காதே " என்று சொல்லி விட்டு
" சரி நான் அவனை சமாளித்து கொள்கிறேன் "என்று சொல்லி விட்டு "நீங்கள் போங்க " என்று சொன்னான்.

சிறிது நேரத்தில் அங்கே பூங்குன்றன் வர, அவனிடம் வளவன் கொடுத்த புதிய ஆடையை காட்டி" இது பெண் வீட்டில் இருந்து உனக்கு பந்தக்கால் வைபவத்திற்கு, எடுத்து வந்த ஆடை " என்று சொல்ல,

பூங்குன்றன் தலையை வாரிக் கொண்டே" அவர்கள் ஏன் புதிய ஆடை எடுத்து வர வேண்டும்?" என்று கேட்க, மகேஷ்" இல்லை மாப்ள, இப்ப இது புதுகட்டாம்..." என்று இழுத்துச் சொல்ல,

பூங்குன்றன் சத்தமாக " எனக்கு இது பிடிக்காது என்று உனக்கு தெரியும் தானே மாப்ள" என்று சொல்ல,

பூங்குன்றன் எனக்கு பிடிக்காது என்பது ஆடையின் கலரை அல்ல, மாமனார் வீட்டில் இருந்து சீர் வரிசை என்று எதுவும் வருவது பூங்குன்றனுக்கு பிடிக்காது, அதைத் தான் அவன் சொன்னான். அதை மகேஷும் புரிந்து கொண்டான்.

ஆனால் அந்த அறைக்கு வெளியே இருந்து இதைக் கேட்ட குழலி அம்மாவுக்கு, பூங்குன்றன் ஆடை கலர் தான் பிடிக்க வில்லை என்று கோபமாக சொல்கிறான் என்று தவறாக புரிந்து கொண்டார்.

மகேஷ், வளவன் கொடுத்த புதிய ஆடையை எடுத்து கொண்டு போய்
வளவனிடம் திரும்ப கொடுக்க தேட,
அங்கே வளவன் இல்லை. அவன் அப்பா சுந்தரமும், அவர் மனைவியும் இருந்தார்கள்.

மகேஷ் அவர்களிடம் போய் " இந்தாங்க சித்தப்பா" என்று கொடுக்க, சுந்தரமும்,தான் எடுத்து வந்த புதிய ஆடையை பார்த்து விட்டு "ஏன்?" என்று மகேஷிடம் கேட்க,

மகேஷ் " மாப்பிள்ளைக்கு இது பிடிக்காது சித்தப்பா" என்று சொல்லும் போது, அங்கே வளவன் வரவும், மகேஷ் அங்கிருந்து நகரவும் சரியாக இருந்தது.

சுந்தரம் " மாப்பிள்ளை இதை ஏன் வேண்டாம் என்று சொன்னார்" என்று தன் மனைவியிடம் கேட்க, வளவன் " இந்த கலர் மாப்பிள்ளைக்கு பிடிக்காதாம்" என்று சொல்ல, சுந்தரம் " அப்படியா...! " என்று சொல்லி விட்டு, "அப்படியே ஆனாலும் நாம் இதை முதல் முறையாக எடுத்து வந்தததை இதை திரும்ப கொடுக்க சொல்வாரா , என்ன..! " என்று ஆச்சரியமாக சொல்ல,

குழலி அம்மா " அவர் இந்த கலர் பிடிக்காது என்று சத்தமாக மகேஷிடம் சொன்னதை நானும் கேட்டேன் " என்றார்.

மூவரும், என்ன மனுஷன் இவர்,குழலி எப்படித் தான் இவரிடம் வாழப்போகிறாளோ? என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு விட்டு,
" சரி சரி, இது நமக்குள்ளேயே இருக்கட்டும். குழலிக்கோ, அல்லது நம் உறவினருக்கோ தெரிய வேண்டாம்" என்று சுந்தரம் சொல்ல,
இருவரும் ஒன்று போல் " சரி" என்றார்கள்.

அப்போது அங்கே இருந்த ஒரு பெரியவர், "பந்தக்கால் ஊன
நல்ல நேரம் முடிய இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு, சீக்கிரம் தயாருகுங்கள் " என்றார்.

அனைவருக்கும் பந்தக்கால் ஊனும் இடத்திற்கு வந்தார்கள்.

பந்தக்கால் ஊன்றும் சுப நிகழ்ச்சிக்கு, உரல், உலக்கை மற்றும் பந்தக்கால் ஒன்றும் தயாராக இருந்தது.

அங்கே இருந்த ஒரு பெரியவர் வளவனைப் பார்த்து " ம்ம் உன் மாப்பிள்ளைக்கு, மாலை போட்டு நெற்றியில், கைகளில் சந்தனம் குங்குமம் வைத்து மரியாதை செய்" என்று சொல்ல,

வளவன் தன் தங்கச்சிக்கு மாப்பிள்ளையாக வரவிருக்கும் பூங்குன்றனுக்கு உரிய மரியாதை செய்தார். பூங்குன்றன் கையில் மஞ்சள் காப்பு ஒன்றை வளவன் கட்டினான்.

பூங்குன்றனிடம், " இதை உன் திருமணம் முடியும் வரை அவிழ்க்க கூடாது" என்று பெரியவர்கள் சிலர் சொன்னார்கள்.

வளவனின் உறவினர்கள் சிலர் நக்கல் செய்யும் விதமாக
"மாப்பிள்ளைக்கு கன்னத்தில் மஞ்சள்தடவு" என்றார்கள்

பூங்குன்றன் பங்காளிகளும் பூங்குன்றனிடம் அதேபோல்" வளவனுக்கு நீ செய் " என்று சொன்னார்கள்

மாப்பிள்ளை மச்சானும் அழகாக மஞ்சள் பூசி கொண்டது புகைப்படக் கலைஞர் அழகாக படம் பிடித்தார் .

மஞ்சள் மற்றும் சாணத்தில் செய்த விநாயகருக்கு , தேங்காய் உடைத்து ஊதுபத்தி பொருத்தி பூஜை செய்து விட்டு, கற்பூரம் காட்டினார் ஒரு பெரியவர்.

பிறகு அந்த கற்பூர தீபாராதனையை
பந்தக்காலுக்கும் காட்டி விட்டு, அனைவரையும் தொட்டு கும்பிட சொன்னார்.

பூங்குன்றனை மட்டும் சாமி கும்பிட்டு விட்டு விழுந்து கும்பிட சொன்னார்.

பந்தக்காலுக்கு பூஜை முடிந்ததும்,
ஒற்றைப்படையில் வருவது போல் உறவினர்களை வரவைத்து, பந்தக்காலை ஊன வேண்டிய இடத்தில், நல்ல நேரம் முடியும் முன்பாக, பெண்களின் மங்கல குலவோசையுடன் பந்தக்கால் மாரிமுனை பார்த்து ஊன்றப்பட்டது.

பூங்குன்றனை சில போட்டோக்கள் எடுத்து அதை வளவன் தன் தங்கைக்கு அனுப்பி வைத்தான்

பந்தக்கால் உரிய நேரத்தில் ஊன்றும் போது, பெண்கள் மங்கல ஒலியாக குலவைகள் போட்டார்கள்.

பந்தக்கால் வைபவம் நல்ல படியாக முடிந்ததும், அனைவருக்கும் சாப்பாடு தயாராக இருந்தது.

முதலில், பொண்ணு வீட்டில் இருந்து வந்தவர்கள் சாப்பிடட்டும் என்று, நக்கீரன் மாமனார் சொல்ல, அப்படியே ஆகட்டும் என்று நக்கீரன் உறவினர்களும் சரி என்றார்கள்.

சுந்தரம் வீட்டில் இருந்து வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு, வேனில் கிளம்பி சென்றார்கள்.

வளவன், தனக்கு அலுவலகத்தில் ஒரு முக்கியமான வேலை இருக்கிறது என்று, தன் அப்பா அம்மாவிடம் சொல்லி விட்டு தன் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றான்.

சுந்தரமும் அவர் மனைவியும், சுசீலாவிடம் " மகளே இன்னைக்கு முகூர்த்த புடவை எடுக்க எங்கே போகலாம்?" என்று கேட்க, சுசீலா " சித்தப்பா முகூர்த்த புடவை எடுக்க, இங்கே சங்கரநயினார் புரத்தில் நல்ல கடை இருக்கு, அதனால் இங்கேயே எடுப்போம் " என்றார்.

அதன் படி முகூர்த்த புடவை எடுக்க
,
சுந்தரம் குடும்பமும், நக்கீரன் குடும்பமும் சென்றது.

பூங்குன்றன் தன் அலுவலகத்திற்கு ஒரு முக்கியமான வேலைக்காக சென்றான்.

தொடரும்,
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top