- Thread Author
- #1
7. சஞ்சனாவின் பதிலும்... புவனாவின் அழுகையும்...
ஆபீஸில் இருந்து வெளியில் வந்த நான்கு பேரும் நேராக ஓட்டலுக்கு சென்று... நான்கு பேருமே அவரவர்க்கு விருப்பமான உணவுகளை ஆர்டர் செய்து... அரட்டைகளோடு சாப்பிட்டு முடித்தனர்.
அடுத்து எங்கே செல்வது என்று ரிஸ்வந்த் கேட்க..
புல்லட் ஷோரூம் போடா என்று சொன்னார்கள்.. சஞ்சனாவும் புவனாவும்.
ஏன் டி புல்லட் ஷோரூம் போக சொல்கிறாய் என்று கேட்டான் ரிஷ்வந்த்.
இவ்வளவு நேரம் அமைதியாக சாப்பிட்டு விட்டு ஜாலியாக பேசிக்கொண்டு வந்தவர்கள் இந்த கேள்வியில் கோபம் வர..
அருகில் அமர்ந்து வந்த புவனா அவனை பார்த்து ஐயோ பாவம் என்று கூறி விட்டு உச்சு கொட்டினாள்.
அப்பவும் புரியாமல் எதுக்கு நீ இப்ப உச்சு கொட்டுகிறாய் என்று கேட்ட நொடி... பின் பக்கம் அமர்ந்து இருந்த இரண்டு ராட்சசிகளும் அவன் மண்டையில் நங்கு நங்கு என்று கொட்ட ஆரம்பித்தனர்.
அடியே ராட்சசிகளா கொஞ்ச நேரம் விடுங்கடி நீங்கள் மூன்று பேருமே மாற்றி மாற்றி கொட்டி கொட்டி என் மண்டை வடிவேல் சார் கொண்டை போல் ஆகி விட்டது என்று தன் தலையை தேய்த்துக் கொண்டே
அப்படி என்ன டி நான் கேட்டுட்டேன் தப்பா என்று மறுபடியும் ரிஷி கேட்டான்.
நீ வண்டி ஓட்டிட்டு இருக்க ராசா அதனால நீ தப்பிச்ச ஒழுங்கு மரியாதையா புல்லட் ஷோரூம் கொண்டு போய் நிப்பாட்டு காரை என்று கத்தினாள் மிதுனா.
ஆனால் அவனோ வண்டியை அருகில் இருந்த ஒரு சின்ன ஐஸ்கிரீம் பார் முன்னாடி நிப்பாட்டி விட்டு... கீழே இறங்கி சென்றவன் நால்வருக்குமே ஒரு குல்பி ஐசை வாங்கிக்கொண்டு வந்தான்.
அவன் எதற்கு செல்கிறான் என்று தெரிந்த மூன்று பெண்களுமே எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்து இருந்தனர்.
பொறுமையாக ஆளுக்கு ஒன்றாக கொடுத்து விட்டு தன்னுடைய ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டே..
நேரடியாக சஞ்சனாவை பார்த்து இப்ப சொல்லு சஞ்சனா இப்ப எதற்காக அவர் சொன்ன பனிஷ்மென்ட்க்கு நீ ஒத்துக் கொண்டாய் அது மட்டும் இல்லாமல் உங்க ரெண்டு பேருக்கும் புல்லட் வாங்க போறீங்களா? சரி வாங்கி கொள்ளுங்கள் நான் வேண்டாம் என்று சொல்லல. ஏன் எப்பவும் போல நானே உங்க இருவரையும் டிராப் செய்து விட்டு அதுக்கப்புறம் நானும் மிதுனாவும் ஆபீஸ் போறோமே.. என்று கேட்டான் ரிஷ்வந்த்.
அவன் அமைதியாகவும் பொறுமையாகவும் கேட்கவும்... எப்பவும் போலவே தன் நண்பனின் நிதானத்தில் மூன்று பெண்களுமே நிதானதோடு..
சாரி டா ரிஷு.. இன்று காலையில் இருந்து உன்னை மிகவும் பாடாய்ப் படுத்தி விட்டோம் என்று சஞ்சனா மூவரின் சார்பாகவும் பொதுவாக சொன்னாள்.
லூசு பக்கி இப்ப அதுவா முக்கியம் என்ன விஷயம் எதற்காக நீ ஒத்துக்கொண்டாய். என்ன டா ஆச்சு அதை முதலில் சொல்லு என்று அவன் பொறுமையாகவும் அதே சமயம் கரிசனத்தோடு உண்மையான நட்பில் அன்போடு கேட்டான் ரிஷ்வந்த்.
சரியாக நான்கு பேருமே ஐஸ் சாப்பிட்டு முடித்து இருக்க.. மூவரிடம் இருந்தும் ஐஸ் குச்சிகளை வாங்கியவன்.. அதை அங்கு இருந்த டஸ்பினில் போட்டு விட்டு வந்து மறுபடியும் காருக்குள் அமர்ந்து இப்ப சொல்லு என்று கேட்டான் ரிஷ்வந்த்.
நம்ம விநாயகம் சார் வந்து.. ஃபாரின் போவதற்கு முன்பே என்னிடம் சில விஷயங்கள் சொல்லி விட்டு தான் போனார். அதனால் தான் நானும் இன்று வந்த அந்த கேன பையன் சொன்ன டீலுக்கு ஒத்துக்கொண்டேன் என்று சொன்னாள் சஞ்சனா.
அப்படி என்னடி சார் உன்கிட்ட சொன்னார் என்று புவனா கேட்டாள்.
நம்மளுடைய நாலு பிரான்சுக்குமே அவருடைய ஃபிரண்ட் ஜெடி அப்படி என்று ஏதோ பேர் சொன்னாரு.. அவனுடைய மகன்கள் 5 பேரும் வந்து பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்று சொன்னார்.
அது மட்டும் இல்லாமல் அவர்கள் அனைவருமே வெளிநாட்டு கல்ச்சரில் வளர்ந்தவர்கள்... நம் நாட்டு கலாச்சாரம் பாரம்பரியம் பண்பாடு இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசையில் வருவதாகவும் சொன்னார்.
அதோடு அவர்கள் கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் வளர்ந்தவர்கள் என்றும்.... அவர்கள் இது வரை வாழ்ந்த வாழ்க்கை, வாழ்க்கை என்பதை விட இனிமேல் வாழப்போகும் வாழ்க்கை தான் உண்மையான வாழ்க்கை என்று அவர்கள் உணர வேண்டும் அதை நீயும் உன்னுடைய நண்பர்களும் சேர்ந்து தான் செய்ய வேண்டும் என்று என்னிடம் கேட்டார்.
சார் வருபவர்கள் எல்லாருமே இளம் வயது ஆண்கள் ஏன் எங்களை அவர்களோடு கோர்த்து விடுகிறீர்கள்.. எங்களுக்கும் அவர்களுக்கும் செட் ஆகுமா என்று கேட்டேன்.
சத்தியமாக உங்களுக்கும் அவர்களுக்கும் எந்த விதத்திலும் செட்டாகாது... ஆனால் அப்படி இருப்பவர்களை உங்களால் தான் சமாளிக்க முடியும். அதே சமயம் என் நண்பனின் பிள்ளைகளுக்கு நல்வழிப்படுத்த எனக்கு தெரிந்து வேற யாரையும் நியமிக்க பயமாக இருக்கிறது.
ஆமாம் மா ஏனென்றால் இந்த வயது அப்படி, இன்னொன்று அவர்களுடைய பொருளாதார வசதி அதிகம் என்பதால் அதற்காகவே வரும் சிலரை என்ன செய்வது தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் உங்களைப்போல பெண்கள் இருக்கும் உலகில் தான் அந்த மாதிரி பெண்களும் இருக்கிறார்கள். அதற்காக நான் பெண்களை குறை சொல்லவில்லை ஆண்களிலும் அதை விட மோசமானவர்கள் இருக்கிறார்கள் இல்லை என்றும் சொல்லவில்லை, ஆனால் நல்லவர்களும் இருக்கும் இடத்தில் தான் தீயவர்களும் இருக்கிறார்கள் இதில் ஆண் பெண் பேதம் இல்லை என்பது என் கருத்து அதே சமயம் என் நண்பனின் பிள்ளைகள் அனைவரும் வாழ்க்கையில் நல்லபடியாக வர வேண்டும்...
அதனால் தான் நான் உங்கள் நால்வரையும் தேர்ந்தெடுத்து இருக்கிறேன் என்று சொன்னார் விநாயகம்.
சரி அங்கிள் நீங்க இவ்வளவு தூரம் சொல்வதால் நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அவர்களோடு நாங்கள் என்ன செய்தாலும் நீங்கள் தலையிடக்கூடாது. அவர்கள் எங்களிடம் நல்ல முறையில் அணுகினால் தப்பித்தார்கள்.. அதை விட்டு எங்களிடம் ஏதாவது ராங்காக பிஹேவ் பண்ணினா அதுக்கு தகுந்தாப்புல தான் எங்களது நடவடிக்கையும் இருக்கும் அப்போது நீங்களோ, நண்பரோ, அல்லது உங்கள் நண்பரின் குடும்பத்தினர் யாரும் வந்து எங்களிடம் எதுவும் கேட்கக் கூடாது. இல்லை என்றால் எங்களுக்கு இந்த வேலையே வேண்டாம் என்று ரிசைன் செய்து விட்டு சென்று விடுவோம் என்று சொன்னாள் சஞ்சனா.
சரிம்மா அப்படியே பண்ணிடலாம் என்று சொல்லி விட்டு தான் சென்று இருந்தார் என்று அனைத்தையும் சொல்லி முடித்தவள், ஆனால் அங்கிள் நமக்கே தெரியாமல் நமக்கு ஆப்பு வைப்பது போல் ஏதோ டாக்குமெண்ட்ல சைன் வாங்கி இருக்கிறார்.
இருக்கட்டும் எவ்வளவு தூரம் போகிறது என்று பார்ப்போம் இடையில் ஏதேனும் ஐந்து வண்டியில் ஒரு வண்டி மக்கர் பண்ணினாலும்.. பறந்து சென்று விநாயகம் அங்கிளை வச்சு செஞ்சுட்டு வந்துருவோம் என்று சொன்னாள் சஞ்சனா.
அப்போது மிதுனா புவனா இருவரும், அப்போது நம்மிடம் மாட்டிக் கொண்ட பலியாடுகளா இவர்கள் என்று கேட்டார்கள்.
ரிஷ்வந்த் அவர்கள் இருவரையும் மேலும் கீழும் பார்த்தவன்..
ஒன்றும் சொல்லாமல் வண்டியை புல்லட் ஷோரூம் நோக்கி செலுத்தினான்.
புவனாவிற்கு பிடித்த நிறம் கருப்பு.. கருப்பு நிற புல்லட் ஒன்றை புக் செய்தாள்.

சஞ்சனா தனக்கு பிடித்த சிவப்பு நிறத்தில் புல்லட்டை புக் செய்தாள்.

பிறகு உடனடியாக பேமெண்ட் செய்து டெலிவரியும் எடுத்துக் கொண்டு சென்றார்கள்.
புவனா நீ தானே நாளையில் இருந்து வண்டியை ஓட்டப் போகிறாய்.. இப்போது வீடு வரைக்கும் நான் ஓட்டிக்கொண்டு வருகிறேன் உன் புல்லட்டை தாடி என்று கேட்டாள்.
புவனாவும் எதுவும் சொல்லாமல் கீயை அவளிடம் கொடுத்து விட்டு, சரி நான் ரிஸ்வந்த் ஓட காரில் வருகிறேன்.. நீங்கள் இருவரும் புல்லட்டில் வாருங்கள் என்று சொல்லி விட்டு புவனா காரில் சென்று அமர்ந்தாள்.
சஞ்சனாவும் மிதுனாவும் தங்களுடைய புல்லட்டை எடுத்துக் கொண்டு சீறிப்பாய்ந்தனர்.
எப்போதும் இல்லாத அளவிற்கு அமைதியாக மிகவும் அமைதியாக காரில் வந்தாள் புவனா.
சிறிது தூரம் சென்றதும் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு,
ஏய் என்ன டா, என்ன ஆச்சு நீ எப்பவும் இப்படி அமைதியா இருக்க மாட்டியே உனக்கு என்ன ஆச்சு டா என்று கேட்டான் ரிஷ்வந்த்.
இதுவரை அமைதியாக அமர்ந்து வந்தவள் ரிஷி கேட்கும்போது கூட அமைதியாக தான் அமர்ந்து இருந்தாள். ஆனால் அவன் கேட்டு முடித்த பிறகு அவளால் அமைதியாக இருக்க முடியாமல் அவன் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள்.
அவள் அவ்வாறு படுத்துக்கொள்ளவுமே அவளின் மனநிலையை உணர்ந்தவன் எதுவும் பேசாமல் அவள் தலையை கோதி விட.. சிறிது நேரத்தில் தன் கால்களில் அவளின் கண்ணீரின் ஈரம் கண்டு.. பதறி...
ஏய் பேபி எழுந்திரு என்று சொல்லி அவளை தூக்க... அவளோ மாட்டேன் என்று அவனின் இடையோடு சேர்ந்து கட்டிக்கொண்டு.. அழுதாள்.
சரி அவள் அழுது முடிக்கட்டும் என்று அழுது முடிக்கும் வரை அமைதியாக இருந்தான்.
சிறிது நேரத்தில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள்.. மெதுவாக எழுந்து அமர்ந்தாள் புவனா.
இப்போது அவள் முகத்தை பார்க்க கண்ணீர் தடம் அவளது கன்னங்களில் இருக்க அதை தன் கர்ச்சீப்பால் துடைத்து விட்டவன்..
என்னடா இன்று காலையில் இருந்து நடக்கும் எதையும் உன்னால் நம்ப முடியவில்லை.. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
எப்பவும் பயப்படுபவள் என்று நினைத்துக் கொண்டு இருந்த மிதுனா அந்த போடு போடுகிறாள்.
எப்பவும் எந்த சூழ்நிலையிலும் எதற்கும் கலங்காமல் மிகவும் போல்டாக இருக்கும் பெண் நீ என்று நான் நினைத்து இருந்தால், அது மிகவும் தவறு என்பது போல் இந்த அழுகை அழுகிறாய்.. ம்ம்... என் செல்ல குட்டிக்கு அழுக தெரியும் என்பதே எனக்கு இன்று தான் தெரிகிறது பாரேன்.. என்று ஆச்சரியப்படுவது போல் அவன் கூறிய விதத்தில்..
சிரித்த புவனா...
நீ சொல்வது மிகவும் சரி தான் ரிஷி.. நானும் சஞ்சனாவும் சிறுவயதில் இருந்தே நாங்கள் இருவரும் எந்த தவறு செய்தாலும் சிறிதும் பயப்படவும் மாட்டோம். ஆனால் நாங்கள் செய்யும் தவறில் எந்த தப்பான விஷயங்களும் இருக்காது சின்ன சின்ன சேட்டைகள் தான் இருக்கும். ஆனால் அதற்கு கூட மிதுனா தான் பயப்படுவாள்.
வீட்டில் எங்களுக்காக பேசி அவள் சமாதானம் செய்வாள். ஸ்கூல் படிக்கும் போதும் கூட எந்த பிரச்சினை என்றாலும், நாங்கள் முன்னே நின்று பிரச்சினையை பெரிதாக்குவோமே தவிர சிறிதாக்க மாட்டோம்.
அந்த நேரங்களிலும் மிதுனா தான் பயந்து கொண்டு... ஆசிரியர்களில் கண்டிப்பானவர்கள் இல்லாமல் ப
க்குவமாக இருப்பவர்களை பார்த்து கூட்டி வந்து பிரச்சனையை சரி செய்வாள்...
ஆனால்....
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...