- Thread Author
- #1
69. பாண்டவர் இல்லத்திற்கு வருகை தரும் ரஞ்சித் கிருஷ்ணா அவனால் ஏற்படும் புது உறவு...
கவிப்பிரியாவின் காரில் மோதிய ருத்ராவின் கவிப்பிரியாவை வீட்டில் விட செல்லும் பொழுது அங்கு இருக்கும் சூழ்நிலையில் அவளுக்கு அங்கே இருந்தால் பாதுகாப்பு இருக்காது என்று ருத்ரா சஞ்சனா இருவரும் சேர்ந்து தங்கள் பாண்டவர் இல்லத்திற்கு அழைத்து வந்தனர்.
இங்கு வந்ததுமே சின்ன சின்ன கலாட்டாக்களோடு கவிப்பிரியாவை இயல்பு நிலைக்கு கொண்டு வர...
கர்ணாவோ அழகி, சஞ்சனா, மிதுனா..பற்றி சில விஷயங்கள் சொல்லி விட்டு சரி நாங்கள் அனைவரும் சாப்பிட போகிறோம் உங்களுக்கு அண்ணா சாப்பாடு கொண்டு வருவான் என்று, அவளை அண்ணி என்று அழைத்து நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று சொல்லாமல் சொல்லி விட்டு சென்ற கர்ணாவை மிகவும் பிரமிப்பாக பார்த்துக் கொண்டு இருந்தாள் ருத்ராவின் கவிப்பிரியா...
வெளியே சென்ற அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட... மிதுனா சரோஜா அம்மாவிற்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு அவர் அறைக்கு சென்றாள்.
அந்த நேரம் சரியாக கவிப்பிரியா அவர்கள் வீட்டிற்குள் வர...
யாருமே அவளை வா என்று வரவேற்கவே இல்லை.. அதோடு அவளை யாருமே கண்டு கொள்ளவும் இல்லை. மிதுன், ருத்ரா, லிபின், மூவருக்கும் அழகி சாப்பாடு பரிமாறி கொண்டு இருந்தாள். ஆனால் சஞ்சனா மட்டும் வா கவிப்பிரியா என்று அழைத்து உட்கார் என்று சொல்ல...
மற்றவர்களின் உதாசீனம் கோபத்தை கிளறினாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சஞ்சனாவிடம் அக்கா நான் அம்மாவை பார்க்க வந்தேன் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே...
மாடியில் இருந்து சனாதன் கீழே இறங்கி வந்தவன், கவிப்பிரியா ஹாலில் நின்று கொண்டு இருப்பதை பார்த்து விட்டு வா கவிப்பிரியா எதற்கு நின்று கொண்டு இருக்கிறாய்... உட்கார் என்று சொல்லிக் கொண்டே வந்தான்.
அவனின் இந்த கவனிப்பில் கொஞ்சம் மனம் சாந்தி அடைந்தவள்... இருக்கட்டும் மாம்ஸ் என்று சொல்ல வந்தவள் ஏனோ சஞ்சனாவை பார்த்து விட்டு, ... நான் சரோஜா அம்மாவை பார்க்க தான் வந்தேன் அவர்கள் எங்கே இருக்கிறார் என்று கேட்டாள்.
அதற்குள் அவளுக்கு அருகில் வந்து இருந்தவன்.. ஓ!!.. அப்படியா... சரி வா உன்னை அத்தையிடம் கூட்டிப் போகிறேன் என்று அவரை சரோஜா அத்தையின் அறைக்கு அழைத்துச் சென்றான் சனாதன்.
தனா கீழ இறங்கி வர ஆரம்பித்ததுமே சஞ்சனா டைனிங் டேபிளுக்கு சென்று இருந்தாள்.
அப்போது ருத்ரா சஞ்சனாவிடம் எங்க டா மற்றவர்கள் எல்லாம் வரேன் என்று சொன்னார்கள் யாரையும் காணோம் என்று கேட்டான்...
ஆமாம் மாம்ஸ் என்னிடம் எல்லோரும் வந்து இருக்கணும் ஒருவேளை லொகேஷன் தெரியாம தடுமாறிட்டு இருக்காங்களா.. என்ன என்று தெரியவில்லையே.. இருங்க நான் போன் பண்ணி கேட்கிறேன் என்று தன்னுடைய போனை எடுக்க எழுந்தவளை...
சாப்பிட உட்கார்ந்து பிறகு எழுந்து கொள்ளாதீர்கள். உட்கார்ந்து சாப்பிடுங்கள். நான் போய் உங்களுடைய போனை எடுத்து வருகிறேன் எங்கே இருக்கிறது என்று கேட்டுக் கொண்டே, சஞ்சனாவிற்கு இடியாப்பம் தேங்காய் பாலும் பரிமாறியவள்...
ஹாலில் என்னுடைய வாலட்டில் தான் இருக்கிறது என்று சொல்லவும்... அழகியையும் சென்று எடுக்கப் போக சரியாக புவனா, ரிஸ்வந்த், லீனா, சரண் மற்றும் புதியவன் ஒருவனும் அவர்களுடைய இணைந்து வர...
அழகி பொதுவாக அனைவரையும் வாருங்கள் என்று அழைத்து அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்... நீங்களும் வாங்க என்று சாப்பிடும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.
அப்போது சரியாக ருத்ரா பிரியாவிற்கு சாப்பாடு எடுத்துட்டு போக சின்ன பவுலில் நான்கு இடியாப்பம் தேங்காய் பாலும் கலந்து எடுத்துக் கொண்டு... வந்தவர்கள் அனைவரையும் பார்த்து வாங்க என்று சொல்லி விட்டு, பவுல் எடுத்து கொண்டு போக...
பிரியா இருந்த அறை கதவை திறக்க, அவள் கட்டிலில் சாய்ந்து படுத்து இருந்தாள்.
அதை சரணோடு வந்த ஆண் கவனிக்க..
சற்றும் யோசிக்காமல்... ஏய் நரம்பி இங்கே என்ன டி பண்ணிட்டு இருக்க என்று கேட்டு கொண்டு, தயக்கமின்றி உள்ளே செல்ல...
அங்கு இவ்வளவு நேரமும் ஒரு தயக்கத்தோடும் ஒரு படபடப் போடும் அமர்ந்து இருந்தவள் உள்ளே வந்தவனை பார்த்ததும் ரஞ்சிமா என்று சொல்லி அவனை கட்டிக் கொண்டாள் .
அவனும் அவளுக்கு வாகா அவள் அருகில் அமர்ந்து அவளை கட்டிக் கொண்டவன் என்னாச்சுடா ஏன் இங்கே இருக்கிறாய் உன்னை எப்படி அந்த கூண்டுக்குள் இருந்து வெளியே விட்டார்கள்... இது யார் வீடு டா என்று கேட்டுக் கொண்டு இருந்தான்.
அவளோ எதற்குமே தனக்கு பதில் தெரியாது என்பதால் அவள் அழுது கொண்டே மட்டும் இருந்தாள்.
சரி சரி முதலில் அழுகையை நிறுத்து, நீ ஏன் படுத்துகிறாய் உனக்கு எதற்கு இவர்கள் சாப்பாடு எங்கு கொண்டு வந்து தருகிறார்கள் உனக்கு ஏதோ உடம்பு சரி இல்லையா என்று கேட்டான்.
முதலில் உள்ளே வந்து அவன் கவிப்பிரியாவை கட்டிப்பிடித்ததும் ருத்ராவிற்கு கோபம் வந்தாலும், அவள் இயல்பாக இருக்கிறாள் என்பதால் அமைதியாக இருந்தான். அவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டு...
இப்போது சனாதன், சஞ்சனா, புவனா, ரிஷ்வந்த், கர்ணா, லிபின், மிதுன் அழகி என்று அனைவருமே கவிப்பிரியாவின் வாசலில் வந்து நின்று கொண்டார்கள்...
அங்கே அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.
சரணோ அடப்பாவி லிப்ட் கொடுத்து கூட்டிட்டு வந்துட்ட ஒரே காரணத்துக்காக, வீட்டுக்குள்ள என்னை அடி வாங்க வச்சிருவான் போலையே என்று,0மனதில் நினைத்தாலும் தன் நண்பன் அந்தப் பெண்ணும் பேசுவதை கண்டு யாரும் எதுவும் சொல்லாததால் கொஞ்சம் தைரியமாக, அதே சமயம் அனைவரும் அமைதியாக இருக்க சரி என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று அவனும் வேடிக்கை பார்த்தான்..
சிறிது நேரம் அழுது கொண்டே இருந்தவள்... அழுகை கொஞ்சம் மட்டு பட... புதிதாக வந்தவனும் அவளுக்கு அமைதியாக தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தான். ரஞ்சி இங்க இருக்கும் யாரையும் எனக்கு தெரியாது ஆனால் இவர்கள் அனைவரும் ரொம்ப ரொம்ப நல்லவர்கள் உன்னை மாதிரியே என்று சொன்னாள்.
ஓஹோ அப்படியா ரொம்ப மகிழ்ச்சி... ஆமா எப்படி நீங்க இங்க வந்தீங்க என்று ஒரு குழந்தை இடம் கேட்பது போல் அவளின் மூக்கை ஆட்டிக்கொண்டே கேட்க...
அவ்ளோ ரஞ்சிமா எனக்கு ஒரு சின்ன விபத்து சாயந்திரம் ஆயிடுச்சு... அப்போ இதோ இவர் தான், என்னை அந்த பூத் பங்களாவில் இருந்து தைரியமாக இங்கு கூட்டிட்டு வந்தார். எனக்கு வீட்டுக்கு டாக்டர் செய்யலாம்னு கூட்டிட்டு வந்து ட்ரீட்மென்ட் பண்ணினார் தெரியுமா?.. அப்போதைக்கு அந்த குண்டுஸ் மூஞ்சிய பாக்கணும் ஐயோ எனக்கு அப்படி இருந்துச்சு...
அதை விட அந்த வளர்ந்து கெட்டவன் என்ன சீன் பண்ணான் தெரியுமா?.. டோர் எல்லாம் லாக் பண்ணி ரொம்ப பெரிய சீன் எல்லாம் காமிச்சான் டா.. அதையும் இவர் சரியா சூப்பரா ஒரே கிக்ல உடைச்சிட்டு கூட்டிட்டு வந்துட்டாரு டா என்று.... நீ கூட ஒரு தடவை அந்த டோரா ஓபன் பண்ண முடியாமல் தடுமாறின தானே... தெரியுமா என்று சிறுபிள்ளை போல் அவள் பேசிக்கொண்டே இருக்க... அங்கு இருந்த அனைவருக்கும் அவர்களுக்குள்ள இருந்த ஏதோ ஒரு இனம் தெரியாத ஒரு நட்பு... அது அவர்களுக்கு எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று அவர்களின் பேச்சில் புரிந்தது. அனைவருமே அமைதியாகவே பார்த்துக் கொண்டு இருந்தார்களே தவிர அவர்களுக்கு இடையில் யாருமே செல்லவில்லை.
ஏய் நரம்பி சைடு கேப்ல என் காலை வாருற பாத்தியா... போடி ... உன் கட்சி நான் கா... என்று சொல்ல...
சத்தியமா அங்கு இருந்த அனைவருக்கும் ஏதோ வளர்ந்த இரண்டு குழந்தைகள் பேசுவது போல் தான் இருந்தது...
அச்சச்சோ கா ... விட்டுட்டியா... சாரி... டா சாரி... சாரி... இன்று உதட்டை பிதுக்கி அழுக ஆரம்பிக்க...
அடியே .. ஆரம்பிச்சிடாத டி... அட.. அழுகாதடி.. இது யார் வீடு என்று உனக்கும் தெரியல, எனக்கும் தெரியாது... என் பிரண்டை டிராப் பண்ண வந்தேன் அவ்வளவு தான், என்று சொல்லி கொண்டே கொஞ்ச நேரம் இரு என்று திரும்பிப் பார்க்க தங்களை சுற்றி அத்தனை பேர் நிற்பதை பார்த்தவன்...
அனைவருமே இளையவர்களாக இருக்க.. அச்சச்சோ சாரி கைஸ்... நான் சரணோட ஃப்ரெண்ட் ... ரஞ்சித் கிருஷ்ணா. இவ என்னோட ஃபிரண்ட் கவிப்பிரியா.
நானும் இவளும்சிறு வயதில் இருந்தே, ஒண்ணா தான் படிச்சோம். ஆரம்பத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் தான் இருந்தார்கள். இப்பொழுது தான் குடி மாறி போய்விட்டார்கள்.
என்ன நடந்துச்சு எப்படி இவள் இங்கு வந்தாள்... இவளுடைய சித்தி மிகவும் மோசமானவர்கள் இவளை தனியாக இப்படி .. அதுவும் இத்தனை யங்ஸ்டர்ஸ் இருக்கிற வீட்டிற்கு அனுப்பவே மாட்டாளே... இவளும் என்னென்னவோ சொல்கிறாள் என்ன நடந்துச்சு என்று கேட்டான் ரஞ்சித்
ருத்ரா ஏனோ ரஞ்சித் அவனை பார்ப்பதற்கு நல்லவனாக தோன்றினாலும், அவனுக்கும் கவிப்பிரியாவுக்கும் இருக்கும் பாண்டிங் பார்த்து கொஞ்சம் பொறாமை ஏற்பட அவன் அமைதியாகவே நின்று இருந்தான்.
சஞ்சனா தான் நடந்த விபரங்களை எடுத்து சொல்லி அவள் இங்கு வந்த விபரம் அனைத்தையும் சொல்ல...
ஓஓ.. சூப்பர் சிஸ்டர். ஐயோ கால் வலி சரியா போனால் மறுபடியும் அவள் அங்கே தானே போக வேண்டும்.... அப்போது அவர்கள் சித்தி அவளை மிகவும் கொடுமைப்படுத்துவார்களே என்ன செய்வது என்று கவலை ஆனான்.
இப்போது ருத்ரன் அவன் அருகில் சென்று அவனின் தோளை தட்டி கவலைப்படாதே நண்பா.. உன் தோழி மிகவும் சீக்கிரமாக
கவிப்பிரியா ருத்ரதேவ் என்று ஆகிவிடுவாள்... அதனால் நீ கவலை கொள்ள வேண்டாம் என்று சொன்னான்.
ருத்ரா அவ்வாறு சொல்லியதும், ஏய் நரம்பி உனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க.. என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை... ஏதோ ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூ போறேன் என்று சொன்னாய்.. என்னோட மாலுக்கு வான்னு கூப்பிட்டேன் வரமாட்டேன் சொல்லிட்ட, அதனால் இரண்டு நாட்கள் உன்னுடன் கோபமாக பேசாமல் இருந்தேன். சரி எங்கேயோ போய் வேலைக்கு தானே சேர போகிறேன் என்று சொன்னாய், இப்ப என்னடான்னா உனக்கு திருமணம் ஏற்பாடு ஆகி இருக்குன்னு சொல்றாங்க!!.. என்னடி ரெண்டே நாள்ல என்னை மறந்துட்டியா என்று கோபத்தோடு பாவமாக கேட்டான் ரஞ்சித் கிருஷ்ணா.
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...