- Thread Author
- #1
ஹாய் பிரண்ட்ஸ் மன்னிக்கவும் கொஞ்சம் உடல்நலம் சரியில்லாததால் பதிவுகள் போடுவது தாமதம் ஆகிவிட்டது. இனி தொடர்ந்து வரும். நன்றி.
68. ருத்ராவின் கவி பிரியா பாண்டவர் இல்லத்தில் இருப்பவர்களை பற்றி தெரிந்து கொள்ளுதல்...
கவிப்பிரியாவின் வருகை...
சரோஜா, கவிப்பிரியா இருவரும் வீட்டிற்கு வந்த பிறகு... சரோஜாவை பார்த்து அழகி கதறி அழுக... அவளை சமாதானம் செய்ய முடியாமல் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு.. என்ன அழகி இது?.. என்ன புது பழக்கம்.. வீட்டிற்கு புதிதாக ஒரு பெண் வந்தாளே, அவளைப் பற்றி என்ன ஏது என்று விசாரித்தாயா என்று சத்தம் போட...
அப்போது தான் அழகியும் தன் அழுகையை நிறுத்தி விட்டு ஐயோ ஆமா அம்மா யார் அந்த பெண்.. அவ்வளவு அழகாக இருந்தார்களே என்று கேட்டாள் அழகி...
இவ்வளவு நேரம் அவள் அழுகையை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் தவித்த கர்ணா அவளின் இயல்பு நிலையை கண்ட பின்பு தான் மனதிற்கு மகிழ்ச்சி வர அமைதியாக வெளியே சென்றான். வெளியே சென்ற கர்ணாவை பார்த்து விட்டு லிபினும் அவன் பின்னாடியே சென்று,
என்ன ப்ரோ அப்படியே அழுகிறாய் நீ... அவ்வளவு காதல்... நடத்து நடத்து... என்று கிண்டல் செய்தான் லிபின்.
இதற்கிடையில் அழகியும் சரோஜாவிடம் அவருக்கு தெரிந்த வகையில் கவிப்பிரியா யார் என்று விசாரித்து தெரிந்து கொண்டு, சரி மா நான் போய் அவர்களை பார்க்கிறேன். இரவு உணவிற்கு அனைவரையும் கூப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டு வெளியில் வந்தாள்.
அதற்குள் ருத்ராவும் சென்று கவிப்பிரியாவை தூக்கிக்கொண்டு போய் கீழே உள்ள மற்றும் ஒரு அறையில் அவளை படுக்க வைத்து விட்டு சஞ்சனா, மிதுனா இருவரையும் துணைக்கு இருக்க சொல்லி விட்டு வெளியில் வந்தான்.
சரியாக அழகியும் சரோஜா அம்மாவிடம் அந்த பெண்ணை பற்றி விசாரித்து விட்டு, அவர்கள் மூன்று பேருக்கும் தண்ணீர் எடுத்துக்கொண்டு போய் பார்த்தாள்.
ஹாய் சஞ்சனா, மிதுனா நீங்கள் இருவரும் முதன் முதலில் வீட்டிற்கு வரும் பொழுது உங்களை நான் கவனிக்க மறந்து விட்டேன் மன்னித்துக் கொள்ளுங்கள். அம்மாவிற்கு இப்படி ஆனது நான் சுத்தமாக யார் வந்தது வரலை என்பதை கூட கவனிக்கவே இல்லை ... மன்னித்துக் கொள்ளுங்கள் என்று மன்னிப்பு கேட்டாள். அதே கையோடு அங்கு கட்டில் படுத்து இருக்கும் கவி பிரியாவிடமும் மன்னித்துக் கொள்ளுங்கள் சிஸ்டர் நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது முதலில் இப்பொழுது அம்மா சொன்னார்கள்..
உங்களுக்கு நாங்கள் அனைவரும் இருக்கிறோம். பயம் வேண்டாம். இது உங்கள் வீடு உங்கள் வீட்டில் நீங்கள் இருப்பது போல் சுதந்திரமாக இருக்கலாம் என்று சொன்னாள் அழகி.
இதுவரை அமைதியாக படுத்து இருந்த கவிப்பிரியா முதன் முதலில் வாயை திறந்து... அக்கா வேண்டாம் அக்கா.. இது என் வீடு போல் என்று சொல்லாதீர்கள் எனக்கும் அதற்கும் ராசியே இல்லை என்று கண் கலங்கினாள்.
அவளின் பேச்சைக் கேட்டு அங்கு இருந்த மூன்று பெண்களுமே ஒரு நொடி வருத்தப்பட்டாலும் உடனே இயல்பாகி..
ஹலோ கவிப்பிரியா மேடம் நீங்க இனிமே சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் இது உங்க வீடு தான். அதனால் தேவை இல்லாத விஷயங்களை போட்டு மனதில் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். நான் சஞ்சனா, இவள் மிதுனா, இது மெய்யழகி.
மெய்யழகி யார் என்றால்?.. இப்பொழுது உங்கள் காரில் உங்களுடன் வந்தார்கள் அல்லவா சரோஜா அம்மா அவர்களின் தங்கை மகள்.
எங்கள் இருவரின் குடும்பத்தை பற்றி பிறகு சொல்கிறேன். ஒரே நாளில் அனைத்தையும் தெரிந்து கொண்டால் மண்டை குழம்பி விடும், ஆனால் இப்பொழுது ஒரு சிறு முன்னோட்டம் அதாவது நாங்கள் இருவருமே இதே வீட்டிற்கு தான் வருங்கால மருமகளாக வரப்போகிறோம் என்று மிதுனா சொன்னாள். அப்புறம் இதோ இவளும் இந்த வீட்டின் மருமகள் தான் என்று சொன்னாள் சஞ்சனா...
அழகி சஞ்சனாவை பார்த்து சஞ்சு ப்ளீஸ் அப்படி எல்லாம் எதுவும் சொல்லாதீர்கள்... ஆனால் அதே சமயம் இப்போ சிறிது நேரத்திற்கு முன்னாடி மிதுனா நீ என்ன சொன்ன இந்த வீட்டிற்கு நீங்கள் இருவரும் மருமகளா?.. அப்படியா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஆனால் அதே சமயம் சஞ்சனா நீ சொல்வது கடைசி வரை நடக்கவே நடக்காது என்று சொல்லும் போதே அழகியின் கண்கள் கலங்கியது...
கவி பிரியாவிற்கு என்ன ஏது என்று தெரியவில்லை.. அவர்களின் பேச்சில் இருந்து அழகிக்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிய...
கவிப்பிரியாவும் கலங்கிய கண்களோடு அழகியின் கைகளைப் பிடித்து அழுத்தி வார்த்தைகளால் இல்லாமல் கை அணைப்பில் ஆறுதல் சொன்னாள்.
அப்போது அங்கு வந்த கர்ணா... ஹாய் கேர்ள்ஸ் என்ன பண்ணிட்டு இருக்கீங்க...
இந்த அண்ணிகள் எல்லாம் சேர்ந்து அவர்களை இன்ட்ரோ பண்ணிக்கிட்டார்களே யாராவது அவங்களோட ஜோடிஸ் யாருன்னு உங்க கிட்ட அறிமுகப்படுத்தினாங்களா?.. இல்ல தானே இப்படித் தான் பண்ணுவாங்க...
இருங்க நான் சொல்றேன் யார் யார் எப்படி எப்படின்னு என்று சொல்லி விட்டு, எங்க அப்பா அம்மா இருவரும் சிங்கப்பூர்ல இருக்காங்க... அவர்களை இப்போது நீங்கள் நேரில் பார்க்க வாய்ப்பில்லை நேரில் பார்க்கும்போது மற்ற விவரங்களை பேசிக்கொள்வோம். இப்போ என்னோட முதல் அண்ணா மிதுன் தேவ்.... அவருக்கு இல்லத்தரசியாக வரப்போவது தான் இதோ இந்த குட்டிச்சாத்தான் ... சாரி... சாரி ... மிதுனா அண்ணி என்று கிண்டலாக சொன்னான்..
அப்புறம் எங்க தனா அண்ணா கிட்ட இந்த அம்மா இன்னும் காதலை சொல்லவே இல்ல.... அதைவிட முக்கியம் அவனும் இவங்க கிட்ட இன்னும் சொல்லவே இல்ல... இது எல்லாத்தையும் விட பெரிய ஹைலைட் என்ன அப்படின்னா இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க அப்படின்னு எங்க எல்லாருக்குமே தெரியுது, ஆனா அது இவங்களுக்கு இன்னும் தெரியாதுன்னு சொல்லிக்கிட்டு இன்னும் சொல்லாம இருக்காங்க...
அடுத்ததா மூணாவது ஆள் தான் உங்க ஆள் ருத்ரா... ருத்ரதேவ்.. என்று சொல்லும் போது ...
அச்சச்சோ என்னங்க நீங்க என்னென்னமோ சொல்றீங்க, அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று அவசரமாக மறுத்தாள் கவிப்பிரியா. அவரை நான் இன்று காலையில் தான் பார்த்தேன். அதுவும் உங்கள் அனைவரையும் பார்க்கும் போது நீங்கள் அனைவருமே மிகப்பெரிய பணக்காரர்கள் போல் தெரிகிறீர்கள்..
உங்களுக்கும் எனக்கும் செட்டாகாது. அதை விட மிகப்பெரிய ஒரு உண்மை இருக்கு என்ன தெரியுமா?.. நான்... நான் ... இவ்வளவு நேரம் படபடப்பாக பேசிக் கொண்டு இருந்தவள் இப்போது அமைதியாக தலை குனிந்த வண்ணம் நான்... நான் ஒரு தரித்திரம் பிடித்தவள்.. அதனால் தயவு செய்து உங்கள் அனைவருக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள்.
என் கால் சரியானதும் நான் நாளைக்கு காலையிலேயே இந்த வீட்டில் இருந்து சென்று விடுவேன்.. தயவு செய்து யாரும் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்னால் உங்களுக்கு தொல்லை தான் வந்து சேரும் ப்ளீஸ் நீங்கள் அனைவரும் மிகவும் நல்லவர்களாக தெரிகிறீர்கள் தயவு செய்து என்னை மட்டும் விட்டு விடுங்கள் நான் இங்கு இருந்து சென்று விடுகிறேன். நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். மனமார என் தெய்வத்திடம் உங்களுக்காக நான் வேண்டிக் கொள்கிறேன் என்று சொன்னாள் ருத்ராவின் கவிப்பிரியா...
ஐயோ சஞ்சு அண்ணி... கடைசியில் பார்த்தால் மிதுன் அண்ணா மட்டும் தான் கொடுத்து வைத்தவர் போல... அழகா மிதுனா ஓகே சொல்லிட்டீங்க... மற்றபடி எங்கள் அனைவரின் பாடும் பெரும் பாடா இருக்கும் போலவே என்று பரிதாபப்படுவது போல் பேச...
ஹலோ கொழுந்தனாரே நாங்கள் எல்லாம் ரொம்ப ஸ்ட்ராங் தான்... உங்க அண்ணா தான் ரொம்ப பெரிய டியூப் லைட்டாக இருக்காரு... ஆனால் உன் நிலைமையும் ருத்ரா மாம்ஸ் நிலைமையும் தான் ரொம்ப மோசம் என்று நினைக்கிறேன் என்று அவளும் பரிதாபப்படுவது போல் பேச...
இப்போது அழகியோ சஞ்சுவை பார்த்து கொஞ்சம் சும்மா இருக்கீங்களா நீங்க... இவர் சும்மாவே வச்சு செய்வாரு என்னை... நீங்க வேற உங்க பங்குக்கு கொளுத்தி போடாதீங்க சரி வாருங்கள் சாப்பிட போகலாம் யாருக்கும் பசிக்கலையா என்று பேச்சை மாற்றினாள்...
சரி சரி வா சஞ்சனா அவர்கள் ... அவரவர் பாட்டை பார்த்துக் கொள்வார்கள்.. நமக்கு ரிப்ளையரா இருக்கு நமக்கு எந்த பிரச்சனையும் இல்ல நம்ம போய் சாப்பிட போகலாமா என்று கடைசியில் அழகி, கர்ணா எல்லாரையும் தாண்டி சஞ்சனாவை இழுத்துக்கொண்டு வேகமாக மிதுனா வெளியே சென்றாள்.
கர்ணா அவர்கள் இருவரும் சென்றதைப் பார்த்து விட்டு அடேங்கப்பா ரொம்ப தெளிவு தான் என்று சொல்லியவன்... சற்றும் யோசிக்காமல் அழகியை தன் தோளோடு சேர்த்து அணைத்து...
எப்படி இருக்கு எங்க ஜோடி பொருத்தம் என்று கேட்டான்..
ம்ம்... ரொம்ப சூப்பராக இருக்கிறது என்ற கவி பிரியா ... அவளின் தற்போதைய இயல்பு மறைந்து, சிறுவயதில் சந்தோஷமாக இருந்தது போல் மிகவும் சந்தோஷமாக சொன்னாள் .. ரொம்ப அற்புதமாக இருக்கிறீர்கள் என்று.. சொன்னாள்.
இவ்வளவு நேரமும் தன்னை யாரோ போல் அழகி என்று அழைத்து வெறுப்பேற்றி கொண்டு இருந்தது நினைத்து வருந்தியவள்... இப்பொழுது அவனின் இந்த அணைப்பில் அப்படியே அமைதியாக நின்றாள். அவளின் அமைதியை தனக்கு சாதகமாகி கொண்ட கர்ணா சட்டென்று அவளிடம் இருந்து விலகி, ... கவிப்பிரியாவிற்கு கண்களாலேயே ஜாடை காட்டி விட்டு.. மெதுவாக அந்த அறையில் இருந்து வெளியே சென்று விட்டு பிறகு வேகமாக அந்த அறைக்குள் வருவது போல் வந்தவன்...
ஏய் அழகி என்ன இங்கேயே மரம் போல் நின்று கொண்டு இருக்கிறாய். அங்கே அனைவரும் சாப்பிட அமர்ந்து விட்டார்கள்.. என்ன கனவு காண்கிறாயா சாப்பிட்டு விட்டு, அப்புறம் பிறகு போய் படுத்து கொண்டு கனவு காண் என்று, இங்கு நடந்தது எதுவுமே நடக்காதது போல் அவன் மறுபடியும் அவளை அந்நியப்படுத்தி பேச...
கவி பிரியாவின் முன் அழுது விடக்கூடாது என்பதற்காக சிரித்துக் கொண்டு.. அப்படி இல்ல அத்தான் இதோ போய் சாப்பாடு வைக்கிறேன் அனைவருக்கும் என்று சொல்லி விட்டு வெளியே சென்றாள்... அழகி. ஆனால் அவள் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கீழே விழ, அதை யாரும் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டு சென்றாள்.
ஐயோ என்னங்க இப்படி பண்ணிட்டீங்க அவங்க பாருங்க அழுதுகிட்டே போறாங்க என்று கவிப்பிரியா பதறிப்போய் சொல்ல...
அட விடுங்க அண்ணி, அவளுக்கு ஒரு சின்ன ஷாக் ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு நீங்க அது பத்தி கவலைப்படாதீங்க.. போகப் போக உங்களுக்கும் புரியும். இப்ப அமைதியா ரெஸ்ட் எடுங்க ... உங்களுக்கு சாப்பாடு அண்ணா கொண்டு வருவான் என்று சொல்லி விட்டு வெளியே சென்றான்.
வெளியே சென்ற கர்ணாவையும் இந்த வீட்டில் உள்ள மனிதர்கள் அனைவரையும் பிரம்மிப்பாக பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் கவிப்பிரியா. அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க அங்கு கவிப்பிரியா வேகமாக வந்தாள்.
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...