• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
73
67. ருத்ராவின் கவிப்பிரியா பாண்டவர் இல்லத்திற்கு வருகை...


கவிப்பிரியாவின் காரில் அடிபட்ட ஒரு பெண்ணை அவள் வீட்டில் சேர்க்க ... அங்கே அவளின் நிலைமையை கண்டு, ருத்ரா அந்தப் பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக தூக்கி வரும் பொழுது அந்த பெண்ணின் (கவிப்பிரியா) சித்தி... கத்தி சத்தம் போட்டு அச்சச்சோ வீட்டில் ஆம்பளை இல்லாத நேரம் பார்த்து வயசுக்கு வந்த பெண்ணை தூக்கிக்கொண்டு செல்கிறானே என்று கத்தி கூப்பாடு போட...

கவிப்பிரியாவை தூக்கிக் கொண்டே .. அந்த குண்டு பெண்மணியை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தவன்...

முன்னேறி செல்லாமல் அங்கேயே நின்று, ஏன் உன் அருகில் இருப்பவன் ஆண் பிள்ளை இல்லையா என்று கேட்டு நக்கலாக சிரித்து விட்டு, மிகவும் நிதானமாக வெளியே சென்றான்..

ருத்ரா தன் பிள்ளையை ஆம்பளையா என்று கேட்ட நொடி கோபமாக..
டேய் ஜகன் அவன் அந்த தரித்திரம் புடிச்சவளை தூக்கிக்கொண்டு இந்த வீட்டு வாசல்படியை தாண்ட கூடாது என்று சத்தம் போட்டு கத்தினாள்.

அதற்கு அந்த ஜகனும் ஏன் மா இவ்வளவு சத்தம் போடுகிறாய் அமைதியாக இரு என்று சொல்லி விட்டு தன் கையில் இருந்த ரிமோட்டை அழுத்தி விட்டு போகும் ருத்ராவை நக்கலாக பார்த்துக் கொண்டே சோபாவில் அமர்ந்தான் கால் மேல் கால் போட்டு....

சரியாக ருத்ராவும் கவிப்பிரியாவை தூக்கிக் கொண்டு வாசல் படிக்கு அருகில் வந்தான். அவன் வாசல் படியை தாண்ட போகும் சமயம் திடீரென்று அந்த ராஜ நிலைக்கு நடுவில் இருந்து ஒரு கண்ணாடி கதவு இரண்டு பக்கமும் வந்து லாக் பண்ணியது.

விநாடிக்கும் குறைவாக அந்த கண்ணாடி கதவை பார்த்து விட்டு, தன் சித்தியிஆன் சத்தத்தில் பயந்து போய் அவனின் கழுத்தை குழந்தை போல் இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு இருந்த கவி பிரியாவை பார்த்து...

ஓய் முட்டக்கண்ணி என்று அழைத்தான்..
ருத்ரா..

ருத்ராவின் முட்டக்கண்ணி என்று அழைப்பில் கண்களை விரித்து பார்த்தாள்...

என்னை பார்த்தது போதும் அப்படியே என் சட்டை பையில் கர்ச்சிப் இருக்கும் அதை எடு என்று சொன்னான் ருத்ரா.

அவளும் எதுவோ மகுடிக்கு மயங்கும் பாம்பு போல அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, அவன் சட்டை பையில் இருந்த கர்ச்சிப்பை தன்னுடைய இடது கையால் எடுத்தாள்....

அதை அப்படியே உன் முகத்தில் போட்டு மூடிக்கொள் என்று ருத்ரா சொன்னான்.
அவள் வேறு ஏதும் சொல்லாமல் அதே போல் தன் முகத்தில் கர்ச்சிப்பால் மூடிக்கொண்டாள் கவிப்பிரியா.

கவிப்பிரியா தன் முகத்தை மூடிய அடுத்த நொடி, சற்றும் அலட்டிக் கொள்ளாமல் ஒரே கிக்கில் அந்த கண்ணாடி கதவை தூள் தூளாக உடைத்தான் ருத்ரா.

அவன் கதவை உடைத்து கொண்டு வெளியில் செல்ல...

அதைப் பார்த்த தாயும் மகனும் சில வினாடிகள் செயலிழந்து நின்று விட்டனர்.

அதற்குள் ருத்ரா காருக்கு அருகில் செல்ல... சஞ்சனாவும் காரில் இருந்து கீழே இறங்கி வழி விட... தன் அத்தை அருகிலேயே கவிப்பிரியாவை அமர வைத்தவன், பிரியா இது என்னுடைய அத்தை சரோஜா,... உனக்கு அம்மா இவர்களோடு நம் வீட்டிற்கு செல்.. சஞ்சு மா... பிரியா வண்டி சாவியை கொடு... நீ காரை ஓட்டிக்கொண்டு போ அத்தை உனக்கு வழி சொல்வார்கள் என்று சொல்லி விட்டு, தன் அத்தையை பார்த்து
இங்க ஒரு சிறு பஞ்சாயத்து அதை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னான் ருத்ரா.

சஞ்சனாவும் ருத்ராவின் மிக அருகில் சென்று அவன் காதில்... மாம்ஸ் சந்தடி சாக்கில் உங்களுக்கு ஒரே எபிசோடில் அழகாக ஒரு தேவதையை கண்டுபிடித்து விட்டீர்களே... ஆனா உங்க ஆள் ரொம்ப வீக்கா இருக்குமோ, இவ்வளவு நேரம் கையில் தூக்கி வைத்துக் கொண்டே இருந்தீர்கள். கை வலிக்கவில்லை என்று கேட்டாள் சஞ்சனா.

ஏய் வாண்டு எனக்கும் நேரம் வரும்... அப்போது நானும் கேட்பேன் இப்போ ஒழுங்கா ஓடிப்போ.. என்று ருத்ரா சிரித்த முகமாக சொல்ல...

பாரு டா தனக்குன்னு ஒரு ஆள் வந்த உடனே இந்த சிடு மூஞ்சி சித்தப்பா கூட சிரிக்கிறாரு என்று கலாய்த்தாள் சஞ்சனா.

அப்போது சரோஜா .. சஞ்சீமா கால் வலிக்குது என்று சொன்ன அடுத்த நொடி...

அச்சச்சோ... மா... சாரி ... மா... இதோ வீட்டுக்கு போகலாம் என்று சொல்லிட்டு, மாம்ஸ் உங்களை அப்புறம் கவனிச்சிக்கிறேன் என்று சொல்லியவள்... காரை ஸ்டார்ட் செய்தாள் சஞ்சனா.

சஞ்சனா கார் கிளம்பிய பிறகு ருத்ரன் இப்போது நிதானமாக மறுபடியும் அதே வீட்டிற்குள் சென்றான்.

அதே நேரம் சனாதனும் தன் வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்று இருந்தான்.

சஞ்சனா டிரைவிங்கில் இருக்கும் போதே சனாதனுக்கு மெசேஜ் செய்து நடந்த விஷயங்களை சொல்லி இருக்க... அவனும் அதற்குத் தகுந்தார் போல் சில நடவடிக்கைகளை செய்து இருந்தான்.

சஞ்சனாவின் கார் உள்ளே நுழைய சரியாக மிதுன், மிதுனா இருவரும் கூட அவர்கள் காரில் பின்னாடி வந்து இருந்தனர்.

பல சிந்தனைகளில் மெய்யழகி படுத்து இருந்தாலும் சனாதன் கார் வீட்டிற்கு வந்ததுமே அவள் இயல்பாகி... சனாதனிடம் விசாரித்து விட்டு, வரும் அனைவருக்கும் இரவு உணவு தயார் செய்ய கிச்சனுக்கு சென்று, அங்கு இருந்த வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

காரில் இருந்து சஞ்சனா வேகமாக இறங்கி உள்ளே சென்று, அழகியை ஆலம் கரைத்து எடுத்து வர சொன்னாள். அதற்கு முன்பே கர்ணா சொல்லி சென்றதால் ஆலம் கரைத்து ரெடியாக வைத்து இருந்தாள் அழகி..

சஞ்சனா உள்ளே சென்றதை பார்த்து விட்டு, சரி மித்து நீங்கள் போய் காரை பார்க் செய்து விட்டு வாருங்கள். நான் போய் சரோஜா அம்மா இறங்குவதற்கு உதவி செய்கிறேன் என்று சொல்லி விட்டு வந்தவள்... கார் உள்ளே பார்க்க, அங்கே வேறொரு பெண்ணும் இருப்பதை பார்த்தவள்... பார்த்துக்கொண்டே தவறாக நினைக்க வேண்டாம் கொஞ்சம் இறங்கி வருகிறீர்களா... அம்மா இறங்குவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டாள் மிதுனா.

தான் யார் என்று தெரியாவிட்டாலும் அவளுடைய இன்முகமான பேச்சில் என்ன சொல்வது என்று தெரியாமல் கவி பிரியா திணற...

சரோஜா... மிதுனா கண்ணு அந்த பொண்ணுக்கும் காலில் அடிபட்டு இருக்கு டா.. என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சரியாக, அப்பொழுது அங்கு ருத்ரன் வந்து சேர்ந்தான்.

அவ்வளவு பெரிய உருவம் அந்த குட்டி ஸ்கூட்டியை ஒட்டிக்கொண்டு வருவதைப் பார்த்து மிதுனா சிரித்தே விட்டாள்.

ஐயோ மாமா என்ன இது கோலம்... உங்களுக்கு ஏற்ற வண்டியா இது என்று நகைத்தவளை பார்த்து...

ஏய் குள்ள கத்திரிக்கா நீ என்னோட அண்ணியா வரப்போற அந்த மரியாதையா உனக்கு கொடுக்கணும்னு நினைக்கிறேன் ... என்ன வேண்டுமா வேண்டாமா என்று கேட்டான் ருத்ரா..

இத்தனை நாட்களில் அவன் முகத்தில் இந்த அளவுக்கு மகிழ்ச்சியை பார்க்காதவள் நொடியில் புரிந்து கொண்டு, ஓஹோ உங்களின் மலர்ச்சிக்கு காரணம் உள்ளே இருக்கும் காரிகை தானோ... ம்ம் நடத்துங்கள் நடத்துங்கள் என்று கிண்டல் செய்தாள்..

அப்போ என்னுடைய ஒரகத்தியா?.. (கொழுந்தனாரின் மனைவியை அப்படி எங்கள் பக்கம் சொல்வார்கள்) சரி அப்ப நானே உதவி செய்கிறேன் என்று சென்றவளை...

அடிப்பாவிகளா ஒருத்தி என்ன டா என்றால் சிடு மூஞ்சி சித்தப்பாவாக இருந்த நான் சிரிக்கிறேன் என்று சொல்கிறாள்... இப்போது நீயும் அதையே வேறு விதமாக சொல்லி... அந்தப் பெண்ணை ஓரகத்தி என்று முடிவு செய்து விட்டாய் .. ஆனால் நான் அவளிடம் இன்னும் நான்கு வார்த்தைகள் கூட இணைந்தாற் போல் பேசவே இல்லை தெரியுமா என்று பாவமாக சொன்னான் ருத்ரா.

அதற்குள் சஞ்சனாவும் அழகியும் இணைந்து ஆலம் கரைத்து எடுத்து வர...

அப்போது காருக்கு வெளியே இருவரும் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்த சரோஜா அம்மா...

அடடா இந்த பிள்ளைகளுக்கு என்ன ஆயிற்று.. அப்போ சஞ்சனா இப்ப மிதுனா இருவரும் சேர்ந்து என்ன தான் பேசுகிறார்கள் ருத்ரா கிட்ட என்று வாய் விட்டு புலம்ப...

உள்ளே அமர்ந்து இருந்த கவிப்பிரியாவுக்கு தான் தர்ம சங்கடமாக இருந்தது.

அப்போது அழகி வந்து மாமா கதவை திறங்கள் வெளியே வரட்டும் அவர்கள் என்று சொல்லவும்...

இருவருமே தலையில் தட்டிக் கொண்டு, கதவை திறக்க ருத்ரா சற்றும் தாமதிக்காமல், கவி பிரியாவை கை தாங்கலாக தூக்கி கீழே இறக்கி விட்டு, மிதுனா இவளைப் பிடித்துக் கொள் என்று சொல்லி விட்டு, தனது அத்தையே அப்படியே அழகா தூக்கினான்.

ஏனோ கவிப்பிரியா முதன் முதலில் அவன் அவங்க அத்தையை தூக்கியதை பார்த்து விட்டு வாய் விட்டு சிரித்தாள்.

ஆனால் முழுதாக அந்த சிரிப்பை சிரிப்பதற்கு முன் சட்டென்று அமைதியாக விட்டாள்.

புது இடம் என்பதால் பழக தயங்குகிறாள் என்று அனைவருக்கும் அது புரிய.. இப்போது இருவருக்குமே ஆலம் சூற்றி பொட்டு வைத்து விட...

லிபின் சரியாக அவங்க அத்தையை உட்கார வைப்பதற்கு வீல் சேர் கொண்டு வந்தான். அதில் அமர வைத்த உடன்.. அழகி வந்து சரோஜாவை அவருக்கு என்று தயார் செய்த அறைக்கு அழைத்துச் சென்றாள். மற்றவர்களும் அவர்கள் பின்னே சென்றார்கள்.

சஞ்சனாவும் மிதுனாவும் கஷ்டப்பட்டு கவி பிரியாவை படிகளில் ஏற்றி கொண்டு இருந்தார்கள்.

காலில் வீக்கம் இப்போது அதிகமாக இருக்க அவளால் காலை ஊன்றவே முடியவில்லை.

சஞ்சனா, மிதுனா இருவருமே அவளுக்கு கை தாங்கலாக உதவிகள் புரிந்தாலும், அவள் காலின் வலியால் அவளால் ஒரு எட்டு கூட எடுத்து வைக்க முடியாமல் திணற... ருத்ரா வந்து அவளை தூக்கி சென்றான்.

சரோஜா அத்தையை சனாதனும் கர்ணாவும் தூக்கி கட்டிலில் படுக்க வைக்க... லிபின் அவர்களின் காலுக்கு அடியில் மென்மையான தலையணையை வைத்து விட்டான்.

இப்போது தான் அழகி சரோஜாவின் மீது சாய்ந்து அழுக ஆரம்பித்தாள். தன்னுடைய உணர்வுகளை மருத்துவமனையில் காட்டாதவள் இங்கு வீட்டில் முழுவதுமாக அழுது தீர்த்தாள்.

அவளை சமாதானம் செய்வதற்குள் சரோஜாவிற்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது.

அப்போது தான் என்ன அழகி...?... என்ன பழக்கம் இது வீட்டிற்கு ஒரு விருந்தாளி வந்தார்களே அவர்களை கவனித்தாயா? அதை விட்டு விட்டு என்னிடம் உட்கார்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டு இருக்கிறாய் என்று சத்தம் போட்டார்.

அப்போது தான் அழகியும் அட ஆமாம் அம்மா யாரது உங்களுடன் ஒரு பெண்ணும் வந்தார்களே என்று இப்பொழுது கவனத்தில் கொண்டு வந்து கேட்டாள்.
இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top