• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
73
66. கவிப்பிரியாவின் வீட்டில்.....

சஞ்சனாவும் ருத்ராவும் காரில் சரோஜாவை அழைத்துக் கொண்டு வர.. அப்போது தங்களுக்கு முன்னே வண்டியில் சென்ற பெண்ணுக்கு விபத்து ஏற்பட ... வேகமாக சென்று பார்க்க அங்கு கவிப்பிரியா தான் அந்த விபத்தை ஏற்படுத்தி இருக்க... அவளை திட்டிக் கொண்டு இருக்கும் சமயம் சஞ்சனா வந்து, ருத்ராவை அமைதிப்படுத்தி அங்கே மயங்கி கிடந்த பெண்ணை தங்கள் காரிலேயே ஏற்றிக் கொண்டு அவளின் வீட்டிற்கு சென்றார்கள்.

அந்தப் பெண்ணோ தன்னை கவிப்பிரியா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அதே சமயம் தங்கள் வீட்டிற்கு நீங்கள் எல்லாம் வர வேண்டாம் எனவும், என் வீட்டு தெரு முனையில் இறக்கி விட்டு விடுங்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்க அதை சிறிதும் கவனிக்காமல்,

கவிப்பிரியாவின் ஸ்கூட்டியில் வீட்டிற்குள் சென்று அங்கு இருந்த ஒரு பெண்மணியை அழைத்துக் கொண்டு வந்தாள் ஆனால் அந்த குண்டு பெண்மணியோ கவிப்பிரியாவே சரமாரியாக திட்டிக்கொண்டே வந்தாள்.

சஞ்சனாவும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதுவும் செய்து விடக்கூடாது என்பதற்காக அமைதியாக அந்தப் பெண் பேசுவதை கேட்டுக்கொண்டு அவளும் வெளியில் வந்தாள்.

சரியாக கவிப்பிரியாவை காரில் இருந்து இறக்கி தூக்கிக் கொண்டு வந்தான் ருத்ரா.

ருத்ராவின் விலைமதிப்பான கார், ருத்ராவின் அழகு, இது இரண்டையும் பார்த்து அந்த குண்டு பெண்மணி... இந்த தரித்திரத்திற்கு இப்படி ஒரு வாழ்வு வருவதா?... என்ற கோபத்தில்....
நொடியில் மனதில் பல்வேறு திட்டங்களை போட்டுக் கொண்டு,

இவ்வளவு நேரமும் கடுமையாக இருந்த முகத்தை சிரிப்பாக மாற்றி, ஐயோ தம்பி எதற்கு பாவம் நீங்கள் தூக்கிக் கொண்டு இருக்கிறீர்கள் ... அவளை இறக்கி விடுங்கள் நான் கை தாங்கலாக கூட்டி செல்கிறேன்... நீயும் வா மா... என் இவ்வளவு நேரமும் சஞ்சனாவிடம் கடுமையான முகத்தை காட்டிய பெண்மணி இப்பொழுது முற்றிலுமாக மாறி சஞ்சனாவை துணைக்கு அழைக்க, சஞ்சனாவிற்கு உள்ளுக்குள்ளே புகைந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல்...

ஏய் குண்டூஸ் இரு... டி... உனக்கு இருக்கு கச்சேரி என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு, கவிப்பிரியாவை பார்க்கும் போது தன்னோட வயது தான் இருக்கும் என்று தெரிந்தாலும், அந்த குண்டூசை வெறுப்பேற்றுவதற்காக..

சின்ன மாமா அக்காவை தூக்கிக் கொண்டு, நீங்களே உள்ளே சென்று அவர்கள் அறை எது என்று கேட்டு அங்கே படுக்க வையுங்கள் என்று சொன்னாள்... அதோட அந்த குண்டு பெண்மணியையும் பார்த்து ஐயோ அம்மா என்னால எல்லாம் அக்காவை தாங்கிக்க முடியாது. நான் மிகவும் வீக்கானவள்.. என்று சொல்லி கொண்டே ருத்ராவோடு கவிப்பிரியாவின் அறைக்கு பின்னாடியே சென்றாள் சஞ்சனா.

அப்போது கவிப்பிரியா ஐயோ கடவுளே... என்று கடவுளை வேண்டிக் கொண்டு, இவ்வளவு நேரமும் யார் கைகளில் இருந்தாளோ.. அவனை இதுவரை பார்க்காமல் இருந்தவள், இப்பொழுது தான் முதன் முறையாக அவன் முகத்தை பார்க்க...

ஏனோ அவள் கண்களில் இருந்து அருவி போல் கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது.

அவளின் கண்ணீர் ருத்ரா கையில் பட அவள் முகத்தைப் பார்த்தவன்... ஏன் மா கால் ரொம்ப வலிக்கிறதா என்று கேட்டு, நான் காரில் வரும் போதே மெசேஜ் பண்ணிட்டேன்.‌ டாக்டர் வந்திடுவாங்க கொஞ்சம் பொறுத்துக்கொள் என்று சொன்னான். அவளும் அவன் பேச்சுக்கு மறுப்பேச்சு பேசாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

உன் அறை எந்த பக்கம் இருக்கிறது என்று கேட்டான்.

அவளோ அவளின் இடது புறம் கையை நீட்டி சொல்ல அந்த பக்கம் அழைத்துச் சென்றான்.

சஞ்சனாவும் அவர்கள் இருவரின் பின் சென்றாள். ஆனால் அந்த குண்டு பெண்மணி அப்படியே ஹாலில் சோபாவில் அமர்ந்து விட்டாள்.

கவிப்பிரியா காட்டிய திசையில் சென்று பார்க்க அதை கிச்சனாக இருந்தது. எதிர்பார்க்க மிகவும் அழகாக நேர்த்தியாக இருந்தது அந்த மாடுலர் கிச்சன். அதன் மூலையில் ஒரு ஓரத்தில் இருந்த பலகை மீது ஒரு பிளாஸ்டிக் பாய், மடித்து வைக்கப்பட்டு அதன் மீது ஒரு தலையணையும் ஒரு போர்வையும் மடித்து அழகாக வைக்கப்பட்டு இருந்தது.

இப்போது அவனைப் பார்க்காமல் சஞ்சனா வை பார்த்து, சிஸ்டர் அந்த பாயை கொஞ்சம் எடுத்து கீழே விரித்து விடுங்கள். சார் என்னை அந்த பாயில் உட்கார வைங்க என்று சொன்னாள். பாவம் நீண்ட நேரமாக தூக்கிக் கொண்டு நிற்கிறீர்கள்.. என்று கவிப்பிரியா சொல்லவும்...

சற்றும் யோசிக்காமல் அப்படியே தன் காருக்கு தூக்கி சென்றான் கவிப்பிரியாவை.

சஞ்சனாவும் அவர்களுக்கு பின்னால் செல்ல அவளுடைய ஸ்கூட்டி சாவியை மறக்காமல் எடுத்துக்கொண்டு சென்றாள்.

உள்ளே சென்றவர்கள் மறுபடியும் அதே போல் திரும்பி வர ஒரு நிமிடம் அந்த குண்டு பெண்மணி அவர்களை ஆழ்ந்த ஒரு பார்வை பார்த்தாள்.

அதில் சஞ்சனா, ருத்ரா இருவருக்கும் எந்தவித பிரச்சினையும் எங்களுக்கு இல்லை என்பது போல், அவர்கள் போக்கில் நடந்து கொண்டு இருக்க கவி பிரியாவோ..

சார் சார் மறுபடியும் எங்கே வெளியே தூக்கி கொண்டு போகிறீர்கள்.. சார் சத்தியமாக கால் வலிக்கிறது சார், அதனால தான் நீங்கள் தூக்கும் போது அமைதியாக இருந்தேன்.

இப்பொழுது நீங்கள் என்னை இறக்கி விடாமல் இருப்பது, அதோடு என் சித்தியும் என்னை தவறாக பார்க்கிறார்கள். என் அப்பா வந்தால் பெல்ட்டாலே அடித்து உறித்து எடுத்து விடுவார்... ப்ளீஸ் சார் என்று கெஞ்சி கொண்டு இருந்தாள் கவிப்பிரியா.

அப்போது சஞ்சனா அங்க சுவற்றில் மாட்டி இருந்த குடும்ப புகைப்படத்தில் கவிப்பிரியாவின் தந்தையை பார்த்து விட்டு, ..

ருத்ராவைஅழைத்து அவன் காதுகளில் ஏதோ சொல்ல, அவனும் கவி பிரியாவை கையில் ஏந்தி கொண்டே... சஞ்சனாவிற்கு சற்று தலையை குனிந்து என்ன என்று கேட்க, சஞ்சனாவும் சொன்ன சில விஷயத்தில், ஓஹோ அப்படியா சரி டா. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு..

சரி சஞ்சனா நீ முன்னாடி சென்ற அத்தையோட காரில் இரு நான் இவளை கூட்டிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு....

ருத்ரா அந்த குண்டு பெண்மணி இடம் செல்ல... சஞ்சனா காருக்கு சென்றாள்.

அங்கு சென்று அந்த சோபாவில் கவிப்பிரியாவை அமர வைக்க, ... இந்த குண்டு பெண்மணி ஏதோ கோபமாக சொல்ல வருவதற்கு முன்பு, மாடியில் இருந்து இறங்கி வந்த ஒரு பையன்....

சனியனே கோவிலுக்கு சென்றால் போயிட்டு வர இவ்வளவு நேரம் ஆகுமா உனக்கு? என்னுடைய ஃப்ரூட் சாலட் சாப்பிடும் நேரமே கடந்து விட்டது. யார் தருவார்கள் எனக்கு... கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத சனியனை எல்லாம் வீட்டுக்குள் வைத்துக் கொண்டு, நம் உயிரை வாங்குகிறார் அப்பா என்று தன் அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தவன்...

அப்போது தான் அங்கு ஆறடியில் ஒருவன் தன்னை குறுகுறு என்று பார்த்துக் கொண்டு இருப்பதை கண்டு கொண்டவன் போல்..

அவனின் தோரணையே அவன் மிகப்பெரிய பணக்காரன் என்பது தெரிய... ஹாய் ஹேண்ட்சம்... ஹு ஆர் யூ???. எதற்கு அந்த தரித்திரம் பிடித்தவள் அருகில் நிற்கிறீர்கள்...

ஆமாம் அம்மா யார் இவர் என்று?.. ருத்ரா பதில் ஏதும் பேசாமல் இருக்க கேள்வியை தன் அம்மாவிடம் கேட்டான்.

தெரியல டா பார்ப்பதற்கு நல்லா அழகாகவும் நல்ல வசதியானவனாகவும் தான் இருக்கிறான். ஆனால் பாவம் இனிமேல் இப்படியே வசதியானவனாக இருப்பானா என்று தான் தெரியவில்லை என்று இரக்கப்படுவது போல் நடித்தாள்.

சரியாக ருத்ரா போன் பண்ணி சொல்லி இருந்த டாக்டர் அந்த நேரம் வந்து சேர..

டாக்டர் ஷர்மிளா.. நான் சொன்ன கவிப்பிரியா இவங்க தான் என்று அறிமுகப்படுத்த, டாக்டர் ஷர்மிளா ...

ருத்ரா கொஞ்சம் அவர்களை அப்படியே சோபாவில் படுக்க வை என்று சொன்னார்.

அவனும் அவ்வாறே செய்ய, காலில் அடிபட்டு இருந்த இடத்தை பரிசோதித்து பார்க்க...

காலில் அடிபட்ட இடத்தை தொடும் போது வலி ஏற்பட அருகில் இருந்த ருத்ராவை தான் இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

அவளின் உள்ளங்கைகள் அவ்வளவு மோசமாக இருந்தது.. சொரசொரப்பாக மென்மை என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு இருந்தது.... இங்கு வந்ததில் இருந்து அவள் நிலைமை என்ன மாதிரி இருக்கும் இந்த வீட்டில் என்று தெரிந்தாலும், அவளின் கைகளில் சொரசொரப்பும், காய்ப்பும் ஏனோ மனதிற்கு சிறு வலியை தந்தது.

ருத்ரா காலில் ப்ராக்சர் மாதிரி தெரியல.. இவ்வளவு நேரம் ஆகியும் அவர்கள் வலியை இந்த அளவுக்கு தாங்கிக்கொள்ளும் பொழுது, வீக்கம் மாதிரி தான் இருக்கு என்று சொல்லி விட்டு, ஒரு இன்ஜெக்ஷன் போட்டு விட்டு வலிக்கு மருந்து மாத்திரைகளையும் எழுதி கொடுத்து விட்டு, ஒரு ஸ்ப்ரேவும் எழுதி கொடுத்து விட்டு சென்றார்.

அவர் சென்றதும்... கவிப்பிரியாவை பார்த்து உன் அப்பாவின் நம்பரை சொல் என்று கேட்டான்...

அதற்கு கவிப்பிரியா தன் சித்தியை பார்த்தால் நம்பரை சொல்லாமல்..

இவ்வளவு நேரமும் அங்கே நடக்கும் சம்பவங்களை ஒரு பார்வையாளராக மட்டுமே, அனைத்தையும் தாயும் மகனும் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தார்களே தவிர, ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. இப்பொழுது கவிப்பிரியா தங்களை பார்க்கவும்...

வாடி மகளே யார் எவருன்னு தெரியாமல், எவனோ ஒருத்தன் நடு வீட்ல வந்து நின்னுகிட்டு உன்ன தூக்கி கொண்டு வந்து, இல்லாத வேலை எல்லாம் பார்ப்பான்... நீயும் இளிச்சுட்டு அவன் கூட இருப்ப, அதை எல்லாம் பார்த்துட்டு நான் சும்மா இருக்கேனா??!!!??... அப்ப அதுக்கு பின்னாடி எவ்ளோ பெரிய விஷயம் இருக்குன்னு உனக்கு தெரியும்.‌

தெரிஞ்சும் உனக்கே பயம் இல்லாம இருக்கும் போது எனக்கு என்ன கவலை என்று, இப்பொழுது தன் மகளை பார்த்து அவள் நக்கலாக சிரிக்கும் அந்த ஒரு பார்வையிலேயே அவள் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டவள்....

அடக்கடவுளே ஆமாம் நான் எப்படி இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். கடவுளே இப்ப நான் என்ன செய்யப் போகிறேன்... இறைவா உனக்கு என் மீது கருணையே கிடையாதா என்று நொந்து கொண்டவள், இப்பொழுது ருத்ராவை பார்த்து சார் தயவு செய்து நீங்கள் வீட்டை விட்டு வெளியே போங்க... இன்று பயத்தோடும் பதட்டத்தோடும் தனக்கு உதவி செய்தார்கள் என்பதையும் மறந்து, ஒரு நன்றி கூட சொல்லாமல் அவர்களுக்கு ஏதேனும் தன்னால் தீங்கு ஏற்பட்டு விடக்கூடாது என்ற பயத்தில் ருத்ராவை வெளியே போகச் சொன்னாள்.

அவளின் பயமும் பதட்டமும் எதனால் என்பதை புரிந்து கொண்டவன் இப்பொழுது இளம் புன்னகையோடு...

அவளை மறுபடியும் தூக்கினான்... அவள் மறுக்க மறுக்க அவளை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல நினைக்கையில்...

அந்த குண்டு பெண்மணி ஐயோ இதைக் கேட்க யாருமே இல்லையா வீட்டில் ஆம்பிளை இல்லாத நேரம்... நடு வீட்டிற்குள் வந்து வயசு பெண்ணை தூக்கிக்கொண்டு போகிறானே இவன் எல்லாம் உருப்படுவானா என்று சத்தம் போட்டு கத்தினாள்....

கவிப்பிரியாவை தூக்கிக் கொண்டே .. அந்த குண்டு பெண்மணியை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தவன்...

முன்னேறி செல்லாமல் அங்கேயே நின்று, ஏன் உன் அருகில் இருப்பவன் ஆண் பிள்ளை இல்லையா என்று கேட்டு நக்கலாக சிரித்து விட்டு, மிகவும் நிதானமாக வெளியே சென்றான்..

இணைந்திருங்கள்
சொல்லவா ... வேண்டாமா...

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top