- Thread Author
- #1
65. கவிப்பிரியா v/s கவிப்பிரியா மோதல்....
ருத்ரா ஹாஸ்பிடல்ல விட்டு சிறிது தூரம் சென்று... தங்கள் வீடு இருக்கும் பகுதிக்கு காரை செலுத்த... அப்போது அவர்களின் காரை ஓவர் டேக் செய்து சென்றது ஒரு ஸ்கூட்டி...
மிதமான வேகத்திலேயே தான் சென்றால் அந்த பெண். ஆனால் இவன் தான் மிகவும் காரை மெதுவாக ஓட்டிக்கொண்டு போனான் ருத்ரா.
அதை பார்த்து விட்டு சரோஜா, ஏன் கண்ணு நாளைக்கு வீட்டுக்கு போயிடுவோமா என்று கேட்டாள் சரோஜா...
சரோஜா அப்படி கேட்கவும் ருத்ரா, சஞ்சனா இருவருமே சிரித்து விட்டார்கள்.
அம்மா .. பாவம் உங்களுக்கு கால் வலிக்குமோ என்று தானே மாம்ஸ் மெதுவாக காரை ஓட்டுகிறார்... ஆனால் நீங்கள் அவரை ஓட்டுகிறீர்கள் பார்த்தீர்களா என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே,...
இவர்களை கடந்து சென்ற அந்தப் பெண்... அம்மா ஆஆஆஆஆ என்ற அழகோடு கீழே விழும் சத்தம் கேட்டது...
ஐயோ என்னன்னு போய் பாருப்பா... இப்ப நம்மை முந்தி சென்ற பெண்ணுக்கு தான், எதுவும் அடிபட்டுவிட்டது என்று நினைக்கிறேன் என்று சரோஜமா பதறினார்.
ருத்ராவும் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி கீழே இறங்கி போய் பார்க்க... டர்னிங்கில் திரும்பும் போது சரியாக கவிப்பிரியா அவளுடைய காரில் வந்து தான் அந்த பெண்ணை இடித்து தள்ளி இருந்தாள்.
இறங்கி வந்தவன் கீழே விழுந்த பெண்ணை பார்க்காமல் இடித்து தள்ளியது கவிப்பிரியா என்று தெரிந்ததும் எப்படி அப்படி ஒரு கோபம் வந்தது என்று தெரியாமல் வேகமாக போய் அவளை ஒரு அடி கன்னத்தில் வைத்து இருந்தான்.
அதை காருக்குள் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்த சஞ்சனாவும், சரோஜாவும் பதறிப் போக .... யம்மா சஞ்சு கொஞ்சம் வேகமாக போய் அவனை என்ன என்று பாரு... அந்த கவி பிள்ளையை போட்டு அடிச்சு கிட்டு இருக்கான் என்று பதறினார்.
அம்மா கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க நான் போய் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு அவளும் வேகமாக இறங்கி போக..
அங்கு தன்னை அடித்தது ருத்ரா என்பதால் மட்டுமே அமைதியாக நின்று கொண்டு இருந்தாள் கவி..
ஆனால் அவனோ அவளை சரமாரியாக திட்டிக் கொண்டு இருந்தான். உனக்கு கண்ணு ரோட்டில் வைத்து ஓட்ட தெரியாதா?.. எப்ப பாரு ஆக்சிடென்ட் பண்ணி கொண்டே இருக்கிறாய்... நீ எல்லாம் எதற்கு காரில் வருகிறாய், பேசாமல் நடந்து வரலாம்.. பெட்ரோல் செலவு மிச்சமாகும் உன் அப்பாவிற்கு ... அதே சமயம் ரோட்டில் இருப்பவர்களும் தைரியமாக நடந்து போவார்கள் வண்டியில் போவார்கள் என்று திட்டிக் கொண்டு இருந்தவனை..
கண் சிமிட்டாமல் அவனை பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள் கவிப்பிரியா.
வேகமாக வந்த சஞ்சனா ருத்ராவை பார்த்து விட்டு, மாம்ஸ் கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா?.. இப்ப இவளை திட்டுவதற்கு நேரமா இங்கே பார் கீழே விழுந்த பெண் மயங்கி கிடக்கிறாள் அவளை என்னன்னு வந்து பாரு வா என்று இழுத்தாள் சஞ்சனா..
சஞ்சனா சொன்னதற்கு பிறகு தான் ஐயோ என்று கவிப்பிரியாவை திட்டுவதை நிறுத்தி விட்டு, கீழே விழுந்து கிடந்த பெண்ணை பார்க்க அவளோ குப்புற விழுந்து கிடந்தாள்.
சஞ்சனா ருத்ராவை கூப்பிட்டு கொண்டே அந்த பெண்ணை தூக்கி தன் மடியில் திருப்பி படுக்க வைக்க அவளது முகம் அவளது முடிகளால் மூடி இருந்தது.
சரியாக ருத்ரா அந்த பெண்ணை பார்க்க...
அப்போது தான் சஞ்சனா அவளின் முடிகளை விலக்கி விட்டு, அவளுக்கு தண்ணீர் எடுத்து தருமாறு கூற... அவளுடைய வண்டியிலேயே வாட்டர் பாட்டில் இருக்கவும் அதில் இருந்து எடுத்து தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தார்கள் சஞ்சனாவும் ருத்ராவும்...
முகத்தில் தண்ணீரை தெளித்து முகத்தை துடைத்து விட... லேசா கண் திறந்து பார்த்தாள் அந்த பெண்.
அந்தப் பெண் கண் திறந்ததும் அவளுக்கு குடிப்பதற்கு தண்ணீரை கொடுக்க...
அதை வாங்கி பருகியவள் சற்று தெம்போடு தேங்க்ஸ் சிஸ்டர் என்று சஞ்சனாவை பார்த்து சொன்னாள்.
உனக்கு எதுவும் அடிபட்டு இருக்கிறதா டா?.. என்று பரிவோடு கேட்டாள் சஞ்சனா.
தெரியல அக்கா மயக்கம் வந்துருச்சு.... காலையில் சாப்பிடலை வேறு, இன்டர்வியூ அட்டென்ட் பண்ணனும்னு கோவிலுக்கு போய் பூஜை பண்ணிட்டு வந்தேனா.. அதுதான் சட்டென்று அவர்கள் என்னை மோதவும் மயக்கம் வந்துடுத்து மற்றபடி அது எதுவும் பலமாக படவில்லை என்று நினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே எழுந்து நின்றவள், ஐயோ அம்மா... என்று மறுபடியும் உட்கார்ந்து கொண்டால் அப்பொழுது தான் தெரிந்தது, அவளுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டு கால் வீங்கி இருப்பதை பார்த்து ருத்ரா...
சஞ்சு மா நீ அந்த பொண்ணோட ஸ்கூட்டி எடுத்துட்டு நம்ம வீட்டுக்கு வா என்று சொல்லி விட்டு, சற்றும் யோசிக்காமல் கீழே விழுந்த பெண்ணை தூக்கிக்கொண்டு போய் தன் அத்தைக்கு அருகில் உட்கார வைத்து விட்டு, காரை கிளப்பிக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
சஞ்சனாவும் அவளுடைய பூஜை சம்பந்தப்பட்ட பொருட்கள் அவளுடைய போன் எல்லாத்தையும் எடுத்து அவளுடைய ஸ்கூட்டியில் முன்பக்கமாக வைத்து விட்டு, அவளுடைய ஹெல்மெட்டை தான் அணிந்து கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு போனாள்.
இருவரும் அந்த பெண்ணை மாறி மாறி கவனித்துக் கொண்டு, அதுவும் ருத்ரா அவளை தூக்கிக்கொண்டு சென்ற பிறகும் கவிப்பிரியா அதே இடத்திலேயே நின்று கொண்டு இருந்தாள். சஞ்சனா ருத்ரா இருவருமே அவளை சற்றும் கவனிக்காமல் அவர்கள் வீட்டை நோக்கி சென்று விட்டார்கள்.
காருக்குள் சரோஜா அம்மா... என் தாயீ கால் ரொம்ப வலிக்குதா என்று கேட்டார்.
ஆனால் அந்த பெண்ணோ ... தன்னை ருத்ரா தூக்கி வந்ததை நினைத்துக் கொண்டு அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்து இருந்தாள்.
அவளின் அமைதியும் பதட்டத்தையும் கண்டு..
சரோஜா அம்மா அவளின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு, என்ன டா உன் அனுமதி இல்லாமல் அவன் பேசாமல் உன்னை தூக்கிக் கொண்டு வந்து விட்டான் என்று கோபமா இருக்கியா என்று கேட்டாள்.
இதுவரை அமைதியாக இருந்தவள் இப்போது சரோஜாவை பார்த்து....
ஐயோ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை மா... ஆனால் அவர் சற்றும் கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னை தூக்கிக் கொண்டு வந்து விட்டார். எனக்கு அது தான் ஒரு மாதிரியாகிவிட்டது, வேறு ஒன்றும் இல்லை. அந்த இடத்தில் என்னால் எழுந்து நிற்கவே முடியவில்லை எனக்கு விபத்தில் உதவி இருக்கிறார் அவரை போய் நான் எப்படி தப்பாக நினைப்பேன்.
அது மட்டும் இல்லை பொதுவாகவே என்னை சேர்ந்தவர்கள் யாரும் என்னுடன் அதிகம் இன்று ஏதோ சொல்ல வந்தவள் கண்களுக்குள் கண்ணீரை இழுத்துக் கொண்டு...
ஒன்றுமில்லை அம்மா என்னை எங்கள் வீட்டில் இறக்கி விட்டு விடுங்கள். என் வீடு இதே பகுதியில் தான் இருக்கிறது. இந்த தெருவை கடந்த பிறகு அடுத்த தெருவில் மூன்றாவது வீடு என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.
சரி டா கண்டிப்பாக இறக்கி விட்டு செல்கிறேன் உன் பெயர் என்ன மா என்று கேட்டாள் சரோஜா.
என் பெயர் கவிப்பிரியா அம்மா என்று அந்தப் பெண் சொன்ன மறு நிமிடம் காரை வேகமாக பிரேக் போட்டு இருந்தான் ருத்ரா...
அதில் முன்பக்கமாக சென்று மோத இருந்ததை சரோஜா அம்மா பிடித்து அவளை நிறுத்த... அவள் நெற்றி அடிபடாமல் தப்பித்தது.
ருத்ரா எதற்காக இப்படி பிரேக் போட்டாய் இங்கே பாரு என்னிடம் இந்த பெண்ணிற்கு அடிபட்டிருக்கும் இவ்வளவு நேரம் எனக்காக காரியம் எதுவாக ஓட்டிக்கொண்டு வந்துட்டு ... இப்போது மறுபடியும் என்னை ஹாஸ்பிடலில் சேர்க்கும் ஐடியாவில் இருக்கிறாயா என்று கேட்டார் சரோஜா.
அய்யோ அத்தை சாரி தெரியாமல் ஏதோ ஒரு நினைப்பில் பிரேக் போட்டு விட்டேன் என்று சொல்லி விட்டு, இவ்வளவு நேரமும் அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்தவன் இப்போது அவளை திரும்பி ஒரு முறை பார்த்து விட்டு, உன் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டான்.
இதே தெருவில் மூன்றாவது வீடு நான் இங்கே இறங்கி கொள்கிறேன் என்று சொல்ல, பின் பக்கமாகவே அவளுடைய ஸ்கூட்டியில் வந்த சஞ்சனாவும் அவர்கள் கார் நிப்பாட்டி இருக்கவும் அவர்களுக்கு அருகில் வந்து என்ன என்று கேட்டாள்.
அக்கா இதோ இங்கு இருந்து மூன்றாவதாக தெரிகிறது அல்லவா அது தான் என் வீடு, எனக்கு கொஞ்சம் காரில் இருந்து இறங்க உதவி செய்யுங்கள் அக்கா.. நான் மெதுவாக என் வண்டியில் வீட்டிற்கு சென்று கொள்கிறேன் என்று சொன்னாள்.
ஆனால் ருத்ரன் சஞ்சுவை பார்த்து சஞ்சு முன்னாடி சென்று அவர்கள் வீட்டின் கதவை நீக்கி விட்டு, உள்ளே இருப்பவர்களை பார்த்து விஷயம் என்னவென்று சொல், நான் பின்னாடியே வருகிறேன் என்று சொல்லி விட்டு காரை எடுத்தான்.
ஆனால் கவிப்பிரியாவோ அய்யய்யோ எதற்கு வீட்டிற்கு எல்லாம் வருகிறீர்கள்... ப்ளீஸ் என் வீட்டிற்கு வர வேண்டாம். நான் .. இப்படியே என்னை இறக்கி விட்டு விடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள் ...
ஆனால் அதற்குள் அவர்கள் வீட்டிற்கு முன்பு காரை நிப்பாட்டி இருந்தான் ருத்ரா.
இப்போது சரோஜமா ஏன் டா இவ்வளவு பயப்படுகிறாய். உன் வீட்டில் உன் அப்பா அம்மா திட்டுவார்களா என்று கேட்டாள்.
சட்டென்று கண்கள் கலங்க, எனக்கு அப்பா அம்மா இருவருமே இல்லை அம்மா என்று சொல்லி கொண்டு .. இருக்கும் போதே உள்ளே இருந்து ஒரு
கொடூரமான ஒரு குரலில், அந்த மூதேவியை இப்போது கோவிலுக்கு போகவில்லை என்று யார் அடித்தது... நாளைக்கு இன்டர்வியூக்கு போகும் போது கோவிலுக்கு சென்று இருக்கலாம் தானே, அதை விட்டு இப்போது போகிறேன் என்று பெட்ரோலுக்கு தண்ட செலவு, இப்போது காலில் அடி வேற அதுக்கு யார் தண்டம் அழுகுவது என்று திட்டிக் கொண்டே, ஒரு குண்டு பெண்மணி நடந்து வந்து கொண்டு இருந்தாள்.
சஞ்சனாவும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதுவும் செய்து விடக்கூடாது என்பதற்காக அமைதியாக அந்தப் பெண் பேசுவதை கேட்டுக்கொண்டு அவளும் வெளியில் வந்தாள்.
அந்த நேரம் சரியாக கவிப்பிரியாவை ருத்ராவும் அவளை தூக்கிக்கொண்டு காரில் இருந்து இறங்கி இருந்தான் ருத்ரா.
ருத்ராவின் விலைமதிப்பான கார், ருத்ராவின் அழகு, இது இரண்டையும் பார்த்து அந்த குண்டு பெண்மணி... இந்த தரித்திரத்திற்கு இப்படி ஒரு வாழ்வு வருவதா?... என்ற கோபத்தில்....
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...