- Thread Author
- #1
64. கர்ணா, லிபின் உரையாடல்...
சரோஜாவின் வருகை....
அழகி கர்ணாவிடம் பேசியதை கேட்டு.. கோபமான லிபினை, டேய் பாசக்கார தம்பி வாடா என்று அவனை அழைத்துச் சென்று... அவனுக்கு உள்ள நிலவரத்தை பற்றி சொல்லலாம் என்று நினைத்து அழகியை ஒரு முறை எட்டிப் பார்க்க...
அவளோ கட்டிலில் குப்புற படுத்து கொண்டு இருந்தாள்... அவள் கண்டிப்பாக அழுது கொண்டு தான் இருப்பாள் என்று தெரிந்தாலும் இப்போது அவளை சமாதானம் செய்ய முடியாது என்று, எதுவும் சொல்லாமல் அறைக்கதவை சாத்தி வைத்து விட்டு...
லிபினைக் கூட்டிக்கொண்டு தன் அறைக்கு சென்றான் கர்ணா.
உள்ளே சென்றவன் தன் தம்பியிடம்... அவனுக்கு தெரிந்த வரையில் சனாதன் சஞ்சனா இருவருக்கும் இடையே மோதல்... பிறகு நட்பு என்று அனைத்தையும் சொன்னவன்.. இருவருமே தங்கள் காதலை இன்னும் உணராமல் இருப்பதையும் சொன்னான்.
அடப்பாவிகளா இவ்வளவு நடந்து இருக்கிறதா என்று ஆச்சரியமாக கேட்டான் லிபின்....?..
டேய் ராசா கொஞ்சம் வெயிட் பண்ணு இதை விட பெரிய அணுகுண்டு இன்னொன்னு இருக்கு...
அது என்ன டா என்று தன் நெஞ்சை மெல்ல வருடி கொண்டே கேட்டான் லிபின்.
அதுவா அது வந்து.... என்று இழுத்து கொண்டு இருந்த கர்ணாவை பார்த்து...
டேய் வெண்கல கருப்பா சொல்லி தொலை டா... ஏதோ வின்னிங் ஃபங்ஷன்ல யார் முதலிடத்தை பிடித்தார்கள் என்று சொல்றதுக்கு இழுக்குற மாதி,ரி இப்ப தான் இழுத்துகிட்டு இருக்கிற, சீக்கிரம் சொல்லு டாபெரிய அண்ணன்
மிதுன் ... அப்புறம் என்ன என்று படபடத்தான் விபின்.
அடிங்கொய்யால என்னை சொல்ல விட்டியாடா, நான் சொல்ல வருவதற்கு முன்பு, நீயா பொறுமை இல்லாமல் கத்தி கொண்டு இருக்கிறாய். நீ அமைதியாக இருந்து இருந்தால் இந்நேரம் நான் விஷயம் என்னவென்று.. சொல்லி முடித்திருப்பேன் என்று, மறுபடியும் நீட்டி முழக்கம் தன் உடன் பிறப்பை பார்க்கும் போது கோபம் வந்தாலும்..
இப்போது மறுபடியும் நாம் வாய் திறந்து பேசினால் இவன் ஜவ்வாக இழுப்பானே தவிர உண்மையை சொல்ல மாட்டான் என்று அமைதியாக அவன் வாயைப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் லிபின்.
கர்ணா ஆஹா தம்பி பையன் சுதாரிச்சுட்டான்டா என்று சொல்லிக் கொண்டு, அதாவது லிபின்..
மிதுன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்று கர்ணா சொன்னான்.
அதை கேட்ட லிபின் டேய் என்ன டா சொல்ற நிஜமா வா.. ஹை ஜாலி... ஜாலி... என்று குதித்தான்.
தன் தம்பியின் சந்தோஷத்தை கண்டு மனதிற்குள் மகிழ்ந்தாலும் அவனை வம்பு இழுப்பதற்காக...
அடேய் மல மாடு இங்க வந்து உட்காரு முதலில்.. 25 வயசு ஆகுது டா, ஆனால் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் என்ன டா இந்த குதியாட்டம் போடுற இது சிறுபிள்ளை போல என்கவும்...
இவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சி போய் லிபின் கர்ணாவை கட்டிக்கொண்டு... மறந்துட்டியா அண்ணா ... நம் அனைவரும் இங்கு எதற்கு வந்தோம் என்று...
நம்முடைய மிதுன் மட்டும் தான் மன அளவில் பாதிக்கப்பட்டானா, வினுஷாவின் பிரிவில் நாம் யாவருக்கும், பாதிப்பு இல்லையா?.. வருத்தமில்லையா?.
என்னால் இப்ப வரை அவளை மறக்க முடியவில்லை டா என்று அழுக ஆரம்பித்தான்....
தன் தம்பியிடம் விளையாட நினைத்த கர்ணா.... இப்போது லிபினை இறுக்க கட்டிக்கொண்டு, என்னடா இப்படி சொல்ற நம்ம வினு மற்றவர்கள் கூட எல்லாம் 23 வருடம் வாழ்ந்தாலும் அவள் நம் கருவறை தோழி டா.. என்று கர்ணாவும் அழுதான்.
சிறிது நேரம் இருவருமே ஒருவருக்கொருவர் ஆறுதலாக தட்டி கொடுத்துக்கொண்டு அப்படியே இருந்தனர்...
சிறிது நேரத்தில் சகஜ நிலைமைக்கு திரும்பிய லிபின்...
ஆமா யாரு டா மிதுன் அண்ணா காதலிக்கிற பொண்ணு என்று கேட்டான் லிபின்.
அது வேற யாரும் இல்லை நம்ம மிதுனா தான் என்று சொல்லவும்.
ஐயோ அப்பா அந்த வாயாடிகளில் இருவர் நமக்கு அண்ணியா என்று கேட்டான்...
ஆமாம் என்று ஏதோ சொல்ல வந்த கர்ணா, பிறகு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க..
அது சரி நான் உள்ளே வரும் போது நீ ஒரு படம் ஓட்டிக்கொண்டு இருந்தாயே அது என்ன என்று கேட்டான் லிபின்.
அது வந்து... இன்று ஆரம்பிக்கும் போதே லிபின் அவனை முறைத்து பார்க்க ..
டேய் இது சீரியசான விஷயம் நான் இழுத்து சொல்லவில்லை, நான் சொல்ல வருவதை பொறுமையாக கேள் என்று அமைதியாக சொன்ன தன் அண்ணன் கர்ணாவை பார்த்து,
விஷயம் ஏதோ சீரியஸ் என்று தெரிந்து கொண்டு லிபின் அமைதியாக அமர்ந்து அவன் சொல்வதைக் கேட்க தயாரானான்.
கண்ணா லிபினிடம் அழகி பற்றிய அனைத்து உண்மைகளையும் சொல்லி, அவள் இப்போது என்ன மனநிலையில் இருக்கிறாள் என்றும் எடுத்து சொன்னான்.
அப்போ உன்னை அழகி விரும்புகிறாள் ஆனால் அதை உன்னிடம் சொல்ல மறுக்கிறாள்... அப்படி சொல்றியா என்று லிபின் கேட்டான்.
ஆமாம் டா.. அவள் வாழ்க்கையில் பட்ட பல இன்னல்கள் அவளால் ஒரு குடும்ப வாழ்க்கைக்குள் வாழ்வதற்கு தன்னால் ஈடுபட முடியாது என்று, அவளுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையில் இருக்கிறாள்.
அதிலும் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் அவளுக்கு என்னை மிகவும் பிடித்து இருக்கிறது... இந்த நிமிடத்திலிருந்து அவளை க்ளோசாக வாட்ச் பண்ணி பாரு... உனக்கே புரியும் என்று சொன்னான் கர்ணா.
சரி கர்ணா பார்ப்போம் என்ன நடக்கிறது என்று... அப்போ இங்கே சிங்கிளாக இருக்கிறது நானும் ருத்ராவும் தான் என்று சொல்ற அப்படித் தானே என்று கேட்டவனை பார்த்து நக்கலாக சிரித்தான் கர்ணா...
கர்ணாவின் நக்கல் சிரிப்பை பார்த்தவன் ... டேய் அப்ப அவனும் கமிட் ஆகி விட்டானா என்று கேட்டான் அதிர்ச்சியாக...
சிறிது நேரம் அவனின் அதிர்ச்சியை ரசித்து பார்த்த கர்ணா...
டேய் அந்த அளவுக்கு எல்லாம் இங்க சீன் எதுவும் இல்லை... ஆனாலும் அவன் வாழ்விலும் ஒரு பெண் இருக்கிறாள் என்றதும்...
டேய் எப்படிங்க டா,... நானும் இங்கே தான் இருக்கிறேன்.. அதுவும் உங்களோடு தான் இருக்கிறேன்... அப்புறம் எப்படி டா இவ்ளோ விஷயம் நடந்து இருக்கிறது ஒன்றுமே எனக்கு தெரியவில்லை. சரி ருத்ரா வாழ்வில் இருக்கும் பெண் யார் அதையும் சொல் என்று லிபின் கேட்டான்.
எனக்கும் இந்த விஷயம் எல்லாம் முன்னாடி தெரியாது.. இன்று ஹாஸ்பிடல் இருக்கும் போது தான் ஒவ்வொன்றையும் கவனித்தேன், அதை வைத்து நான் யூகித்து சொல்கிறேன் என்று சொன்னான் கர்ணா.
அதோடு தனாவும் சில விஷயங்கள் சொல்லி இருந்தான் என்னிடம்... அதுதான் இப்படி இப்படி இருக்கும் என்று நானே ஒரு கணக்கு பண்ணிக் கொண்டேன் ஐ திங்க் நான் நினைத்தது தான் சரியாகவும் இருக்கும் என்று சொல்லிக் கொண்டு வந்தவனை...
டேய் ராசா முதலில் ருத்ர வாழ்வில் இருக்கும் பெண் யாரு அதை சொல் என்று கேட்டான் லிபின்.
அது வா என்று ருத்ரா, கவிப்பிரியா மோதல் அனைத்தையும் சனாதன் போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்த மறுநாள் காலையில் ருத்ரா அண்ணாவிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது கேட்டேன் என்று சொல்லி விட்டு...
அவர்களின் கதை அனைத்தையும் சொல்லி முடிக்க...
டேய் கர்ணா நீ சொன்னது போல் நான் மங்குனி ராசா தான்... நானும் உங்களோடு தான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள வேண்டியது தான்.. ஆனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை பாரு என்று சலித்து கொண்டான் லிபின்.
சரி சரி விடு இதற்காக எல்லாம் வெசனப்படாதே.. உனக்கென்று இனிமேலா ஒருத்தி பிறக்க போகிறாள் என்று கர்ணா சொன்னான்.
டேய் வெங்காய கருப்பா நான் எப்ப டா கமிட் ஆகணும்னு ஆசைப்பட்டேன்.. எனக்கு ஒன்றும் எந்த அவசரமும் இல்லை. பொறுமையாக நீங்க நாலு பேரும் முதலில் அவரவர் வாழ்வில் இருக்கும் பிரச்சினைகளை சரி பண்ணி திருமணத்தை முடியுங்கள். பிறகு நான் எனக்கானவளை தேடி கண்டுபிடித்துக் கொள்கிறேன்.
அதுவரை நான் சிங்கிளா ஜாலியா... என்ஜாயா.. மஜாவா இருந்துட்டு போறேன் என்று... சொல்லி விட்டு விசில் அடித்துக் கொண்டே சென்றான் லிபின்.
லிபின் சென்றதும் சரி மெய் என்ன பண்றான்னு தெரியலையே... அத்தையை கூட்டி வருவதற்குள் அவளை சமாதானம் செய்வோம் என்று கீழே இறங்கி சென்றான்.
மருத்துவமனையில்...
ருத்ரா சனாதன் இருவரும் சரோஜா அத்தையை கை தாங்கலாக தூக்கி வீல் சேரில் அமர வைக்க.. சஞ்சனா சரோஜாவை தள்ளிக் கொண்டு காருக்கு சென்றாள்.
இவர்கள் இருவரும் வருவதற்குள், தனா ருத்ரா இருவரும் ஹாஸ்பிடல் ஃபைல்ஸ் அனைத்தையும் எடுத்துக்கொண்டு... டாக்டரிடம் ஏற்கனவே சொல்லிவிட்டதால் நேரே பார்க்கிங் சென்று காரை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.
சஞ்சனாவும் லிப்டில் இருந்து வெளியில் வந்து வெளி வாசலுக்கு வர சரியாக ருத்ராவும் காரைக் கொண்டு வந்து நிப்பாட்டினான்.
சனாதன், ருத்ரா இருவரும் சேர்ந்து மறுபடியும் வீல் சேரில் இருந்து அத்தையை காருக்குள் அமர வைக்க...
சஞ்சனா சரோஜாவோடு அமர்ந்து கொள்ள...ருத்ரா காரை ஓட்டினான்.
சனாதன் அவனுடைய பைக்கில் பின்தொடர்ந்து வந்தான்.
வீட்டில் தான் கர்ணா லிபின் இருவரும் இருக்கிறார்கள் தானே, அதனால் நான் ஆபிசுக்கு சென்று விட்டு பிறகு வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றான் சனாதன்.
போகும் போது சஞ்சனாவை பார்த்து கண்களாலே அத்தையை கவனமாக பார்த்துக் கொள் என்று சைகை காட்ட...
அவளும் கண்களிலேயே அம்மாவை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் போயிட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பினாள்.
இவர்களின் நயன பாஷையை ருத்ராவும் சரோஜாவும் பார்த்தாலும், எதுவும் தெரியாதது போல் அமைதியாக இருந்து கொண்டார்கள்.
சனாதன் சென்றதும்... காரை மிகவும் மெதுவாக ஓட்டி சென்றான் ருத்ரா... அத்தையின் கால்களில் கட்டு போட்டு இருப்பதால் மிகவும் கவனமாக வண்டி ஓட்டிக்கொண்டு போனான்.
ஹாஸ்பிடல்ல விட்டு சிறிது தூரம் சென்று... தங்கள் வீடு இருக்கும் பகுதிக்கு காரை செலுத்த... அப்போது அவர்களின் காரை ஓவர் டேக் செய்து சென்றது ஒரு ஸ்கூட்டி...
மிதமான வேகத்திலேயே தான் சென்றால் அந்த பெண். ஆனால் இவன் தான் மிகவும் காரை மெதுவாக ஓட்டிக்கொண்டு போனான் ருத்ரா.
அதை பார்த்து விட்டு சரோஜா, ஏன் கண்ணு நாளைக்கு வீட்டுக்கு போயிடுவோமா என்று கேட்டாள் சரோஜா...
சரோஜா அப்படி கேட்கவும் ருத்ரா, சஞ்சனா இருவருமே சிரித்து விட்டார்கள்.
அம்மா .. பாவம் உங்களுக்கு கால் வலிக்குமோ என்று தானே மாம்ஸ் மெதுவாக காரை ஓட்டுகிறார்... ஆனால் நீங்கள் அவரை ஓட்டுகிறீர்கள் பார்த்தீர்களா என்று கேட்டுக் கொண்டு
இருக்கும்போதே,...
இவர்களை
கடந்து சென்ற அந்தப் பெண்... அம்மா ஆஆஆஆஆ என்ற அழகோடு கீழே விழும் சத்தம் கேட்டது...
யார் இவள்...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...