• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
73
63. மிதுன் மிதுனா இருவரின் காதல்...
லிபினின் கோபமும்

என் தங்கை என்றால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் உயிர். அவள் ஏதோ சிறுபிள்ளையில் இறந்து இருந்தால் கூட அதாவது பிறக்கும் போது இறந்து போயிருந்தால் கூட, இந்த அளவுக்கு வேதனை இருக்காது. திருமணத்தன்று இறந்தது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதுவும் அவளை என் கைக்குள் பொத்தி பொத்தி பார்த்துக் கொண்டேன் நான்..

பிறகு நான் வெளிநாடு சென்று திரும்பி வந்தும் நான் அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கவும்...

அதன் பிறகு தான் என்னுடைய மன மாற்றத்திற்காக, இந்தியாவிற்கு வர முடிவு செய்து அண்ணன் தம்பி அனைவரும் இங்கு வந்தோம் என்று சொல்லி விட்டு அமைதியாக மிதுனாவின் கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்து கொண்டு கண் மூடி படுத்து இருந்தான்.

சிறிது நேரம் அவன் போக்கில் அவனை அமைதியாக இருக்க விட்டு விட்டு...

மாமா வீட்டுக்கு போகலாமா.. ?.. இந்நேரம் சரோஜா அம்மாவை ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய ஆரம்பித்து வீட்டுக்கு அழைத்துப் போவதற்கு ஏற்பாடுகள் பண்ணிக் கொண்டு இருப்பார்கள். மணி ஆகிவிட்டது வா மாமா கிளம்பு.. என்று தன் மடியில் கண் மூடி படுத்து இருந்தவனை எழுப்பி கொண்டு இருந்தாள் மிதுனா.

ஏனோ தெரியல மினா .. உன்கிட்ட பேசினதுக்கு அப்புறம் கொஞ்சம் மனசுக்கு ரிலாக்ஸ்டா இருக்கு. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சாரி டா உன்னை முதலில் பார்க்கும் போது அடித்து விட்டேன் என்று.. அன்று முதன் முதலில் கார் பார்க்கிங் வைத்து அடித்ததை சொல்லி அவன் கன்னத்தை அழகாக வருடிக்கொண்டு மன்னிப்பு கேட்டான்.

அச்சச்சோ மாமா இப்படி எல்லாம் நீ என்கிட்ட மன்னிப்பு கேட்ட வச்சுக்கோ லைஃப் லாங் நீ எனக்கு அடிமையா இருக்க வேண்டியது தான்... அதனால மன்னிப்பு அதெல்லாம் பெரிய வார்த்தை. அதெல்லாம் வேண்டாம் நமக்குள்ள இப்ப எந்திரிச்சு கிளம்பு என்று சொல்லும் அவளை வினோதமாக பார்த்தவன் பார்வையில்...

அவன் என்ன நினைக்கிறான் என்பதை புரிந்து கொண்டவள் சரி சரி விடுங்க இந்த அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு அதெல்லாம் எனக்கு தெரியாது.. அதனால அதை எல்லாம் என்னிடம் எதிர்பார்க்காத... நீ எனக்கு முத்தம் தருகிறாயா? நானும் உனக்கு முத்தம் தருவேன்...

என்ன டா இது ... இவ இப்படி பேசுறாளே இவ பொம்பள பிள்ளை தானா அப்படி எல்லாம் பயப்படாத.. நமக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் பார் பத்தே மாசத்துல உனக்கு உன் வாரிசை எப்படி பெற்று தருகிறேன் என்று சொல்பவளை...

ஐயோ கடவுளே என்று தன் தலையில் அடித்து கொண்டு... அடியே போதும் நிறுத்து டி.. உனக்கு இருக்கோ இல்லையோ எனக்கு வெக்க வெக்கமா வருது...

முதலில் உன்னை என் வீட்டிற்கு பேக்கப் பண்ணிட்டு வரும் வேலையை பார்க்கிறேன். பிறகு மற்றதை பார்த்துக் கொள்வோம். இப்ப வா கிளம்புவோம் என்று எழுந்து பிறகு அவளை தூக்கி விட்டவன்...

உனக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டான்...

கண்டிப்பா இந்த குட்டி வயிறு ரொம்ப பசிக்குது என்று தன் வயிற்றை தொட்டு காட்டி சொல்ல...

அடக்கடவுளே இவள் செய்யும் ஒவ்வொரு அழிச்சாட்டியமும் ... எனக்குள் என்னென்னமோ செய்கிறது. இவளை பக்கத்தில் வைத்துக் கொள்வது மிகவும் டேஞ்சர். சரியான இம்சை காரி, இவளோடு தனியாக இருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இவளை முதலில் கூட்டி செல்வோம்... என்று வேகமாக பக்கத்தில் இருக்கும் ரெஸ்டாரண்டுக்கு கூட்டி சென்றான் மிதுன்.

பாண்டவர் இல்லம்...

கர்ணா தான் சொன்ன அனைத்தையும் கேட்டு விட்டு.. அது சம்பந்தமாக ஒன்று எனக்கு ஆறுதல் சொல்லி இருக்கணும்... இல்லை என்னுடைய பயத்தயாவது போக்க முயற்சி செய்து இருக்க வேண்டும்... அது மாதிரி எதுவும் இல்லாமல் எனக்கென்ன வந்தது என்று... ஏதோ யாரோ கதை சொல்கிறார்கள், நான் கேட்கிறேன் என்பது போல் கேட்டு விட்டு, கடைசியில் எப்பவும் கூப்பிடும் மெய் என்று அழைப்பையும் தவிர்த்து, அழகி என்று கூப்பிட்டு போகிறார் இவர் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்.

இவளின் புலம்பல்களை கேட்டுக் கொண்டே கர்ணா அப்பவும் எதுவும் சொல்லாமல் அவளைக் கடந்து செல்ல...

கோபத்தின் உச்சத்திற்கு சென்றவள் .. யோவ் அத்தான் ஒரு நிமிஷம் நில்லுயா என்று இடம் பொருள் ஏவல் எதையும் பாராமல்... உன் மனசில் என்னய்யா நினைச்சுட்டு இருக்க.. ஒருத்தி எவ்ளோ பீலிங் ஓட தன்னுடைய கடந்த காலத்தை சொல்லிக் கொண்டு இருக்கிறேன் கேட்டு விட்டு.. யாருக்கோ வந்த விருந்து என்று மகராசா கிளம்பி வெளியே போய் கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டாள் கர்ணாவின் மெய்.

கர்ணா அவளின் மிக அருகில் வந்தான்....

இவ்வளவு நேரமும் பெரிய ஜான்சி ராணி போல் வேகமாக பேசியவள்.. கர்ணா தனக்கு மிகவும் அருகில் வரவும் அப்படியே பம்மிக் கொண்டு பின்னாடியே நகர்ந்தவள் சுவற்றில் மோதி அமைதியாக நின்றாள்.

அவளின் இதழ்களை நூழிலையில் தொட்டு விடும் தூரம்... நெருங்கி வந்தவன்.... அவளின் பின்புறத்தில் இருந்த சுவற்றில் இருக்கும் ஸ்விட்ச் பாக்ஸில் இருந்து, போன் சார்ஜரை கழட்டியவன்... இங்கே என்னோட போனுக்கு சார்ஜரே செட் ஆகவே மாட்டேங்குது அழகி.. இங்கே உனக்கு ஏதாவது நல்ல கடை தெரிந்தால் சொல்... அப்படி எதுவும் தெரிந்த கடை இல்லை என்றால், வேற புது போன் தான் வாங்கியாக வேண்டும். அதுவும் எங்கே வாங்கலாம் என்று சொல் என்று சொல்லிக் கொண்டே சார்ஜரை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றான் கர்ணா.

கர்ணா சென்ற சில நொடிகள் அப்படியே எதுவும் தோன்றாமல் சிலையாகி அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தாள் அழகி...

அழயின் பேச்சையும் கர்ணாவின் செயலையும் கண்ட இன்னொரு ஜீவன்... அவனுடன் ஒட்டி பிறந்த லிபின் அவனும் எதிர்பாக்கமாக வாசல் வழியாக வந்தவன் இவர்கள் இருவரின் செயல்களையும் கண்டு ப்ரீஸ்ஸிங் மோடுக்கு சென்றான்.

மாடிக்கு சென்று தன் மொபைலுக்கு சார்ஜ் போட்டு விட்டு, கீழே அழகியின் நிலை என்ன என்று தெரிந்து கொள்வதற்காக மேல் இருந்து கீழே எட்டிப் பார்த்தான் கர்ணா.

அழகி அதே இடத்தில் நின்று இருக்க... இன்னைக்கு இது போதும் என்று நினைத்துக் கொண்டவன் இருடி இனி தான் இருக்கு உனக்கு அனத்தம் என்று சொல்லிக் கொண்டு, அவளை நார்மல் மோடுக்கு கொண்டு வருவதற்காக கீழே வர அப்போது தான் வாசலை கவனித்தான்.

அங்கே பிரமை பிடித்தது போல் நின்று கொண்டு இருக்கும் தன் உடன்பிறப்பை பார்த்தவனுக்கு சிரிப்பு வர, இப்பொழுது அழகியை விட்டு லிபினிடம் சென்றான் கர்ணா.

டேய் லிபின்.. என்ன டா ஆச்சு கம்பெனியில் வேலை சீக்கிரமாக முடித்து விட்டதா?.. அது சரி வந்ததும் வீட்டுக்குள் வராமல் ஏன் வாசல் படியிலேயே நிற்கிறாய் என்று கேட்டான்... ஆமாம் நீ எப்போது வந்தாய் என்று கர்ணா கேட்க...

ம்ம் அழகி புள்ள... யோவ் அத்தான் என்று உன்னை கூப்பிடும் போதே நான் வந்து விட்டேன் என்று சொல்லி கொண்டே அழகியிடம் சென்று...

யம்மாடி அத்தை ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பி விட்டார்கள் இன்னும் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவார்கள் நீ அதற்கு பிறகு அதிர்ச்சியாகி ஒரே இடத்தில் நின்று கொள். இப்போது முதலில் அவர்கள் வருவதற்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கிறதா என்று கேட்டான்.

லிபின் தன் அருகில் வந்து பேச ஆரம்பித்ததுமே சுய நினைவுக்கு வந்தவள்..

ஹான்... ஆச்சு மாமா என்று சொல்லி விட்டு அமைதியாக தன் அறைக்கு சென்று விட்டாள் அழகி.

அவள் சென்ற பிறகு தன் உடன்பிறப்பை பார்க்க.. அவனோ எதுவுமே தெரியாது என்பது போல் மிக நல்லவனாக ஹாலில் அமர்ந்து இருந்தான் கர்ணா.

டேய் நாயே இங்க என்ன.. டா... நடக்குது, நாம் அனைவரும் இங்கே எதற்காக வந்தோம்... அது கொஞ்சமாவது உனக்கு நினைவு இருக்கிறதா?.. அதற்கான முயற்சியில் கொஞ்சமும் இறங்காமல்.. நீ உனக்கான ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதுல நீ எல்லையை தொடும் தூரம் வந்து விட்டாய் போல என்று கோபமாக கேட்டான் லிபின்.

தன் உடன் பிறப்பின் கோபத்தை கண்டு சிரித்துக் கொண்டே...

டேய் மங்குனி பயலே.. அது எல்லாம் உனக்கு மூன்று அண்ணிகள் ரெடி ஆகிட்டாங்க என்று சொன்னவனை... பார்த்து..

டேய் என்ன டா சொல்ற மூணு பேர கரெக்ட் பண்ணிட்டியா என்று கேட்டான் லிபின்.

அவன் கேட்ட விதத்தை பார்த்த கர்ணா, அட நாதாரி பயலே ... உன் இரண்டாவது அண்ணன் தனா கமிட் ஆகி ரொம்ப நாளாச்சு... ஆனால் அது அந்த பக்கிக்கே தெரியாது.. ஏன் என்றால் அவன் பிக்கப் பண்ணிருக்க ஆளும் உன்ன மாதிரி கொஞ்சம் டியூப் லைட்... இவன் சொன்னது மட்டும் சஞ்சனாவுக்கு தெரிந்தால் எப்படி இருக்கும் ???!!!¿(!!!!¿??...

அப்புறம் நீ ரொம்ப கவலைப்பட்டு பேசுகிறாயே உன்னுடைய பெரிய அண்ணன் முதல் அண்ணன் அவன் இன்று கமிட்டாகி விட்டான் என்று சொல்லி கொண்டே போக...

டேய் ... டேய் ராசா நிறுத்து... நீ என்ன ஜோசியம் சொல்வது போல் சொல்லிக்கொண்டே போகிறாய்... அது எப்படி இன்று கமிட் ஆகிவிட்டான் என்று சொல்கிறாய். தனா கமிட் ஆகிட்டான் ஆனால் ஆகவில்லை என்று சொல்கிறாய் ... குழப்புகிறாயே டா... என்ன டா நடக்கிறது இங்கே என்று கேட்டான் லிபின்.

ஏய் பொறுமை, நான் சொல்றேன் கொஞ்சம் அமைதியா இரு என்று சொல்லி விட்டு அழகியின் அறையை எட்டி பார்க்க..

அவளோ கட்டிலில் குப்புற படுத்து கொண்டு இருந்தாள்... அவள் கண்டிப்பாக அழுது கொண்டு தான் இருப்பாள் என்று தெரிந்தாலும் இப்போது அவளை சமாதானம் செய்ய முடியாது என்று, எதுவும் சொல்லாமல் அறைக்கதவை சாத்தி வைத்து விட்டு...

லிபினைக் கூட்டிக்கொண்டு தன் அறைக்கு சென்றான் கர்ணா.

உள்ளே சென்றவன் தன் தம்பியிடம்... அவனுக்கு தெரிந்த வரையில் சனாதன் சஞ்சனா இருவருக்கும் இடையே மோதல்... பிறகு நட்பு என்று அனைத்தையும் சொன்னவன்.. இருவருமே தங்கள் காதலை இன்னும் உணராமல் இருப்பதையும் சொன்னான்.

அடப்பாவிகளா இவ்வளவு நடந்து இருக்கிறதா என்று ஆச்சரியமாக கேட்டான் லிபின்....?..

இன்னும் எவ்வளவோ இருக்கிறது கேளடா என்று சொன்ன கர்ணா சொல்வதைக் கேட்ட லிபின் ....

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top