• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
68
62.வினுஷா யார்?..

கடற்கரையில்...

மிதுனாவை முதலில் அடித்து விட்டாலும் பிறகு, அவளைப் பார்க்க தனக்கு எதிரில் ஆள் இல்லாமல் இருக்கவும்... பயத்தில் மிதுனா என்று கத்தி அழுக ஆரம்பிக்கவும்..

வினுஷா என்ற பெயரைக் கேட்டு, தன்னால் மிதுனிற்கு எந்த கவலையும் வரக்கூடாது, அவன் மனதில் ஏற்கனவே ஒரு பெண் இருப்பதால், நாம் விலகி இருப்பது தான் நல்லது என்று முடிவெடுத்து, விலகி சென்றவளால் தன் பெயரை சொல்லி கத்தியவனை கண்டதும் ஒரு நொடி தாமதிக்காமல் அவன் அருகில் வந்து பார்க்க அவன் அழுது கொண்டு இருக்கவும் தாங்காமல், என்னால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இனிமேல் வராது என்று அவள் புலம்புவதை பார்த்தவன்..


சரியாக புரிந்து கொண்டான் வினுஷாவை தான் காதலிப்பதாக நினைத்து தான் இவள் இவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்று உணர்ந்து கொண்டு..

இம்முறை கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்தவாறே மிதுனாவை தன் மடியில் இழுத்து அமர வைத்துக் கொண்டவன்....

இப்போது அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்துக் கொள்ள...

இவ்வளவு நேரம் சீரியஸாக பேசி கொண்டு இருந்த மிதுனா.. இப்போது வாயில் கோந்து ஒட்டியது போல் அமைதியாக இருந்தாள்...

மிதுனும் அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்துக் கொண்டவன், இப்பொழுது முகத்தை எடுக்காமலேயே அப்படியே அவளின் இடையில் கையை வைத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்...

முதலில் அவளை இயல்பாக்கும் பொருட்டு காரில் அவள் பேசியதை மறுபடியும் இவன் ஏற்ற இறக்கங்களோடு அவளிடம் பேசி காட்ட

அடியாத்தி அப்ப அம்புட்டு நேரமும் நான் பேசிக்கொண்டு இருந்ததை கேட்டுட்டு தான் ஒன்றுமே தெரியாத மாதிரி அமுக்கினியாட்டம் அமைதியாக இருந்தீர்களா என்று சண்டைக்கு வந்தாள் மிதுனா...

அவளை தன் முகத்தை பார்க்கும் மாதிரி தன் மடியில் அமர்த்தி குழந்தை போல் வைத்து இருந்தவன், அவள் தன்னோடு போடும் சண்டையை ரசித்துக்கொண்டு... இருந்தான் மிதுன்.

தான் கோபமாக பேசிக் கொண்டு இருக்க ... அவன் தன்னை ரசிப்பதை பார்த்தவள், அப்போது தான் நினைவுக்கு வந்தது அப்போ நான் பேசுவது அனைத்தையும் இவன் அப்போ இருந்தே இப்ப வரைக்கும் ரசித்து கொண்டு தான் இருக்கிறான். அப்ப இந்த மாங்காவுக்கு என்னை பிடித்து இருக்கிறதா? அப்ப அந்த வினுஷா யார் ? என்று இப்பவும் மனசுக்குள் பேசுவதாக நினைத்து வாய்விட்டே கேட்டாள் மிதுனா.

அடியே இப்பவும் அதே கேள்வியை என்கிட்ட கேட்டுடாத மனசுக்குள்ள பேசினேனா இல்ல வாய் விட்டு பேசினேனா நானு என்று, ..
சரியான ஓட்ட வாயா இருந்து கிட்டு, அடிக்கடி இந்த கேள்வி மட்டும் என்னை பார்த்து கேட்டுடாத என்று சொன்னவுடன் தான்...

அச்சச்சோ அப்ப இவ்வளவு நேரமும் நான் வாய் விட்டு தான் பேசிக்கொண்டு இருந்தேனா... அது சரி... ஆமா தெரியாம தான் கேக்குறேன்... நீங்களே பதில் சொல்ல வேண்டியது தானே... அது தான் உளறுகிறேன் தெரியுதுல, என்னோட புலம்பலுக்கு என்ன அர்த்தம் என்று அதுவும் உனக்கு தெரியுது இல்ல, சொல்லித் தொலை யா யார் அந்த வினுஷா உன்னோட கேர்ள் பிரண்டா?.. இல்ல எக்ஸ் லவ்வரா..?.. என்று தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டாள் மிதுனா.

தன்னவளின் பாவனையில் சிரிப்பு வந்தாலும்.. முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு ஏன் டி, பார்ப்பதற்கு குள்ளமாக ஒல்லியா சாய்பல்லவி மாதிரி இருக்க அப்படின்னு நினைத்து, மாரி படத்துல தனுஷ் சாய்பல்லவி தூக்கின மாதிரி மனசுக்குள்ள கற்பனை பண்ணிக்கிட்டு உன்னை மடியில் உட்கார வைத்தால் .. என்னடி இவ்வளவு கனம் கணக்கிறாய்... மாமன் பாவம் டி இறங்கி கீழே உட்கார்றியா என்று கேட்டான் மிதுன்.

ஏன் டா நெடுமரம்... எங்க தலைவர் தனுஷ் சாரே சாய்பல்லவியை தூக்கிட்டாரு.. நீ இப்படி நெடு நெடுன்னு நெடுமரம் மாதிரி வளர்ந்து வச்சிருக்க, என்னை உன் மடியில உட்கார வச்சுக்கிறதுக்கு வலிக்குதா?.. என்று அவனை மணலில் தள்ளி விட்டு அவன் வயிற்றின் மீது ஏறி அமர்ந்து, நெஞ்சில் அடித்துக் கொண்டு இருந்தாள் மிதுனா.

அப்படியே அவளை தன் மார்பில் சாய்த்து கொண்டான் மிதுன்.

அவன் மார்பில் சாய்ந்தவள்...நீ இப்படி எல்லாம் பேசுவியா மாமா ஆஆஆஆஆஆஆஆ !!!! சத்தியமா என்னால நம்பவே முடியல!!!! இப்போ நாம இருவரும் இப்படி படுத்து இருப்பதை கூட என்னால் நம்பவே முடியவில்லை. ஏய் சொல் இது கனவு மட்டும் இல்லை தானே... என்று அவள் படபடப்போடு கேட்க!!?? இல்லை இது உண்மை தான் என்று சொல்லாமல் சொல்லியது மிதுனின் இதய துடிப்பின் சத்தம்....

அவனும் அவளையும் மேலும் இறுக்க அவனின் தீண்டலில் இப்பொழுது அனைத்தையும் மறந்து அமைதியாக அவன் நெஞ்சில் படுத்து இருந்தாள்.

அவனும் சிறிது நேரம் அமைதியாக அவள் தன்னுள் சாய்த்து கொண்டவன் சிறிது நேரம் கழித்து அவள் தலையை வருடிக் கொண்டு மினா... என்று அழைத்தான்...

அவனின் இந்த அழைப்பு புதிதாக இருந்தாலும், பலகால பிரத்தியேகமான தனி அழைப்பு என்பதை புரிந்து கொண்டு சொல்லுங்க மித்து என்று கேட்டாள்.

நான், சனாதன், ருத்ரா மூன்று பேருக்குமே இடைவெளி ஒரு வருட காலங்கள் தான். நான் பிறந்து என் முதல் பிறந்தநாளுக்கு சனாதன் தரித்து விட்டான்... அதே போல் தான் சனாதன் முதல் பிறந்த நாளுக்கு ருத்ரா தரித்து விட்டான். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் மூன்று குழந்தைகள் போதும் என்று திட்டமிடலில் தான் இருந்து இருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு பெண் குழந்தையாவது இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்ள..

மூன்றாவது ருத்ரா ... சரி நமக்கு பெண் பிள்ளை பாக்கியம் இல்லை என்று நினைத்து அவர்களும் அந்த ஆசையை கைவிட்டு விட்டார்கள்... ஆனால் எனக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது மறுபடியும் அம்மா கருத்தரித்தார்கள்.

இருவரும் நீண்ட நேரம்.. அதாவது அப்பாவும் அம்மாவும் நீண்ட நேரம் யோசித்து பிறகு டாக்டரிடம் செல்ல அங்கு அவர்களுக்கு காத்திருந்ததோ பெரிய சர்ப்ரைஸ்.. அதாவது ஒரு குழந்தை அல்ல மூன்று குழந்தைகள்..

சரி எந்த உயிரையும் கொல்லும் உரிமை நமக்கு இல்லை என்று நாங்களும் அந்த மூன்று குழந்தைகளும் வருவதற்காக.. காத்து இருந்தோம்...

அதே போல் மூன்று குழந்தைகள் அழகாக பிறந்தார்கள். முதலில் இரண்டு ஆண் குழந்தை பிறந்தது.. மூன்றாவதாக அழகான ஒரு பெண் தேவதை பிறந்தாள்.. அவள் தான் வினுஷா.

அதுவும் வினுஷாவை முதலில் கையில் வாங்கியது நான் தான். அன்று முதல் எனக்கு எல்லாமும் அவள் தான்... ஸ்கூல் போகும் நேரம் தவிர அவளை நான் கையில் இருந்து அவளை இறக்கவே மாட்டேன்.

கங்காரு தன் குட்டியை தூக்கிட்டு அலைவது போலவே தான்... நான் இருக்கும் இடத்தில் அவள் இருப்பாள். இல்லை அவள் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்.

இப்படி எங்கள் வாழ்க்கையை மிகவும் அழகாகவும், இன்பமாக்கியவள் தான் எங்கள் தங்கை. 23 வருடங்கள் மிகவும் மகிழ்ச்சியாக போனது.. உண்மையில் மிகவும் சந்தோஷமான குடும்பம் என்றால் அது எங்கள் குடும்பம் தான்... பாப்பாவிற்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணினோம்.

என்னுடைய நண்பன் சார்ஜ் வில்லியம்ஸ் மதம் மாறி இருந்தாலும் அவன் மிகவும் நல்லவன். வினுஷாவிற்கும் மிகவும் பிடித்து இருந்தது. திருமண ஏற்பாடுகள் பண்ணினோம் கரெக்டா சர்ச்சில் திருமணம் முடிந்து, நம் வழக்குப்படியும் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜார்ஜ் ஆசைப்பட்டதால், அவர்கள் காரில் திருமணமான பொது தம்பதியர்களை தனியாக வர சொல்லிவிட்டு நாங்கள் அனைவரும் உன்னை சென்றோம். மண்டபத்தில் கல்யாணம் ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கொண்டு இருந்தது ஆனால் ஜார்ஜும் வினுஷாவும் அங்கு... சிறிது நிமிடங்கள் வரை அவன் பேசாமல் கண்களில் கண்ணீர் மட்டும் வர ... கத்தி கதறவில்லை ஆனால் அவன் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.

இவ்வளவு நேரமும் அவன் மீது படுத்து இருந்தவள் இப்பொழுது... அதன் மேல் இருந்து இறங்கி அமர்ந்து அவன் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டவள் அவன் அழுது முடியட்டும் என்பதற்காக காத்து இருந்தாள். ஏதோ ஒரு துயரமான சம்பவம் நடந்து இருக்கிறது.. அது என்ன என்று தெரியாமல் நாம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று, அமைதியாக அவனின் தலையை கோதிக் கொண்டு அமைதியாக இருந்தாள் மிதுனா.

கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கும் மேலாக கண்களில் கண்ணீர் மட்டும் வந்து கொண்டே இருக்க, மூடிய இமைகள் மூடியவாறு இருக்கவும் .. மனது கேட்காமல் அவனுடைய நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டு... மித்து... ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்... ப்ளீஸ் அழுகாத பா எனக்கும் அழுகையா வருது... என்று அவளுக்கும் அழுகை வர... விசும்பிக் கொண்டே அவனிடம் பேசுவும் அவளுடைய அழுகை குரலில் தெளிவானவன்..

ஹேய் மினா, சாரிடா பாப்பா நீ நினைவில் கொஞ்சம் ஓவரா அழுதுவிட்டேன் .என்னால் இன்னும் அவள் இல்லை என்பதை தாங்க முடியவில்லை என்று சொல்ல..

அப்போ அவங்க இப்ப உயிரோட இல்லையா என்று கேட்டாள் மிதுனா.

அவர்கள் வந்த கார் அன்றே விபத்துக்குள்ளாகி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்கள். என் என் வினுஷாவின் மரணத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதில் நான் தான் மிகவும் பாதிப்புக்கு உள்ளானேன். நண்பனிடம் தானே தன் தங்கை போக போகிறாள் என்று நம்பிக்கையில் இருந்த எனக்கு, அவள் உலகிலேயே இல்லை என்று உண்மையை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஆறு மாத காலங்கள் நான் உயிரோடு தான் இருக்கிறேன் என்பதற்கு சாட்சி...., அம்மா, அப்பா, தம்பி அனைவரும் தான் எனக்கு சாப்பாடு ஊட்டி கிட்டத்தட்ட என்னை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் கவனப்பில் மட்டும் உயிரோடு நடமாடிக் கொண்டு இருந்தேனே தவிர, உயிர் உள்ள ஜடமாகத்தான் இருந்தேன்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அம்மா, அப்பா, தம்பிகளுக்காக என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டேன். இருந்தாலும் எனக்கு அங்கு இருக்கும் வரை என்னுடைய தங்கையின் நினைவுகள் வந்து வந்து போக ஒரு ஆறு மாத காலம் ... பிசினஸ் விஷயமாக லண்டனுக்கு போனேன். கொஞ்சம் மனமாற்றம் கிடைத்தது சரி என்று மறுபடியும்..‌ சிங்கப்பூர் வர அடுத்த நிமிடமே என்னால் அங்கு இருக்க முடியவில்லை. எனக்கு எங்கு பார்த்தாலும் என் வீட்டில் என் தங்கையோடு நான் இருந்த ஞாபகங்களே, மறுபடியும் வந்து போக கிட்டத்தட்ட இரண்டு நாள் மயக்கமாகி விட்டேன்.

அதன் பிறகு தான் இந்தியாவிற்கு வர முடிவு செய்து அண்ணன் தம்பி அனைவரும் இங்கு வந்தோம் என்று சொல்லி விட்டு அமைதியாக மிதுனாவின் கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்து கொண்டு கண் மூடி படுத்து இருந்தான்.


மருத்துவமனையில் இருந்து வந்த கவிப்பிரியாவின் அடுத்த முயற்சி என்ன?..
இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top