- Thread Author
- #1
கர்ணாவிடம், அழகி தான் மெண்டல் ஹாஸ்பிடல் டிரீட்மென்ட் எடுத்தது தன்னுடைய இந்த நிலைமை ... தன்னால் ஒருவனை ஏற்றுக் கொண்டு அவனோடு வாழ முடியுமா... நான் எப்போது மூர்க்கத்தனமாக மாறுவேன் என்று எனக்கே தெரியாது அதனால் எனக்கு எந்த விதமான ஆசைகளும் மனதில் இல்லை. நான் சொல்ல வருவது புரிகிறதா இதற்கு மேல் என்னால் தெளிவாக சொல்ல முடியாது. நான் திருமண வாழ்க்கைக்கு அன்பிட்.. அது மட்டும் இல்லாமல் நான் வாழ்வதற்கே தகுதி இல்லாதவள் என்று தான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி கொண்டே போனவள்... கர்ணா ஏதாவது சொல்லுவான் என்று நினைக்க.. நீ சொல்லி முடி என்பது போல் அமைதியாகவே இருக்கவும்.. அத்தான் ப்ளீஸ் நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா என்று கேட்டாள்....
வாயில் விரல் வைத்து இருந்த கர்ணா... விரலை எடுக்காமலே நீ சொல்ல நினைத்தது அனைத்தையும் முழுவதும் சொல்லி விட்டாயா என்று மெய்யை பார்த்து கேள்வி கேட்டான்...
அவளும் அமைதியாக தலையை ஆட்டி
ம்ம்.. என்று மட்டும் சொன்னாள்.
ம்ம் ஓகே.. சரி அழகி நீ போய் உன் வேலையை பார். இன்னும் கொஞ்ச நேரத்தில் பொழுது சாய்ந்து விடும். சாயந்திரம் ஆகிவிட்டால் ஹாஸ்பிடலில் இருந்து அத்தை அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள். வரும்பொழுது அம்மாவிற்கு ஆலம் கரைத்து உள்ளே கூட்டிட்டு வரவேண்டும் அதனால் ஆழம் கரைத்து மட்டும் ரெடியாக வை. அவர்கள் அறையில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நான் செய்து வைத்து விட்டேன் என்று சொல்லி விட்டு, அவள் ஏதோ இவ்வளவு நேரமும் கதை சொன்னது போல், அந்த கதையை கேட்டவன் போலும் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அமைதியாக வெளியே சென்றான் கர்ணா.
என்ன இந்த அத்தான் நான் சொல்ல வந்ததை புரிந்து கொண்டானா இல்லையா... டேய் நான் என்ன சொன்னேன் அவன் என்ன பதில் சொல்லிவிட்டு போகிறான்.. கடவுளே இந்த மர மண்டைக்கு நான் சொல்ல வந்தது.. புரிந்ததா??!!! புரியலையா??!! என்று அவன் தன் அறையில் இருந்து சென்று விட்டான் என்று நினைப்பில் வாய் விட்டு புலம்பிக் கொண்டு இருந்தாள். அப்புறம் என்ன அழகியாம் அழகி இவர் சொல்லவில்லை என்றால் என் பெயர் அழகி என்று எனக்கு தெரியாதாம்.... வந்துட்டார் அழகி குழவி என்று சொல்லிக்கிட்டு... என பொரிந்து தள்ளினாள்.
கர்ணா வெளியில் சென்றவன் தன் மொபைலை எடுப்பதற்காக மீண்டும் அறைக்குள் வர... அவள் பேசிக்கொண்டு இருந்தது... இல்லை... இல்லை... புலம்பிக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருந்த அனைத்தையும் கேட்டவன்...
இப்போதும் அவளை எந்த தொந்தரவும் செய்யாமல் அமைதியாக சென்று தன்னுடைய போனை எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் பொழுது தான் கவனித்தாள் ... வெளியே செல்லும் கர்ணாவை.. ஆஹா இவர் எப்போது உள்ளே வந்தார்...
நான் பேசியது அனைத்தையும் கேட்டு இருப்பாரோ... ஐயோ அழகி அவர் தான் நீ பேசும் அனைத்தையும் கேட்டு கொண்டு தான் இருக்கிறார். ஆனால் பதில் தான் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். ஐயோ அத்தான் உன் மனசில் என்ன தான் ஓடிக்கொண்டு இருக்கிறது தயவு செய்து சொல்லேன்டா.. என்று புலம்பியவள் அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.
அழகியை கர்ணா சுத்தலில் விடும் முயற்சி வெற்றி பெறுமா பொறுத்து இருந்து பார்ப்போம்...
பீச்...
பீச்சில்... மிதுன் மீது மோதி கீழ விழுந்தும், மிதுன் எதுவும் செய்யாமல் அப்படியே சிலை போல் நிற்க கோபம் அடைந்த மிதுன கோபமாக அவன் முன்னே போய் நின்றாள்.
கோபத்தோடு அவனிடம் பேச வாய் திறப்பதற்கு முன்பே அவளை இறுக்கி கட்டி அணைத்து இருந்தான் மிதுன்.
மிதுன் திடீரென்று தன்னை இப்படி அணைப்பான் என்று எதிர்பாராதவள்.. சில நொடி என்ன செய்வது.. எப்படி ரியாக்ட் செய்வது என்பதை மறந்து... மிதுனை அணைக்கவும் இல்லை, விலக்கவும் இல்லை ஆனால் அப்படியே அமைதியாக நின்றாள்.
சிறிது நேரம் அப்படியே நின்றவர்கள் காலின் மீது கடலின் அலைகள் வந்து மோத...
இருவருமே சுய நினைவுக்கு வந்தனர். ஆனால் மிதுன் மிதுனாவை விடுவிக்காமல் தன் கரங்களுக்குள்ளேயே வைத்து இருந்தான்...
அவளும் விலக வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அவனின் கரங்களுக்குள்ளேயே... அவனின் விழிகளை பார்த்துக் கொண்டே இருந்தாள்.. இப்போது மிகப் பெரிய ஒரு அலை வந்து அவர்களை நீருக்குள் இழுத்துச் சென்றது.
திடீரென்று அலை வந்து சுருட்டிக் கொண்டு போகும் என்று யோசிக்காமல் இருக்கவும் நிலை தடுமாறி இருவருமே தண்ணீருக்குள் சென்று வெளியில் வர... மிதுனா வாய் மூக்கில் நீர் ஏறி விட... கொஞ்சம் நிலை தடுமாறியவள் மறுபடியும் நீருக்குள் சென்றாள்..
நீருக்குள் செல்லும் மிதுனாவை பார்த்து மிதுன்... வினுஷா ஆஆஆஆ... என்று கத்தினான்.
தண்ணீருக்குள் போராடிக் கொண்டு இருந்தவளுக்கு மிதுனின் அந்த வினுஷா என்ற அழைப்பு.... ஏனோ மனதில் பெரிய சங்கடத்தை ஏற்படுத்த... இப்பொழுது எதுவும் செய்யாமல் அப்படியே நீருக்குள் அலையின் போக்கிலேயே உள்ளே சென்றாள்...
ஆனால் மிதுன் வேகமாக உள்ளே குதித்து.. நீச்சல் அடித்து...
மிதுனாவை இழுத்துக் கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தான்.
கரையில் வந்து விட... அவளிடம் உனக்கு நீச்சல் தெரியுமா? தெரியாதா? என்று கேட்டான் மிதுன்.
அவளோ மூக்கிலும் வாயிலும் தண்ணீர் போக... இரும்பி கொண்டு தொண்டையை சரி செய்தவள்... தன் மூககை உறிஞ்சி கொண்டே தெரியும் என்று தலையை ஆட்டினாள்.
அடுத்த நொடி பளார் என்று ஒரு அறை கண்களில் பூச்சி பறக்கும் அளவிற்கு வைத்து இருந்தான்.
சிறிது நேரம் என்ன நடந்தது என்று உணரக்கூட முடியாமல் தலைசுற்றி அப்படியே பீச் மணலில் உட்கார்ந்து விட்டாள் மிதுனா.
அழுக கூடாது என்று என்ன தான் மனதில் நினைத்தாலும் ... அந்த பொறம்போக்கு அடித்து அடியில் கண்களில் இருந்து தானாக கண்ணீர் வடிய... கண்களை மறைக்கும் கண்ணீரை துடைத்துக் கொண்டு... சற்று நிதானத்திற்கு வந்த உடன் எழுந்து நின்றவள்...
அவனிடம் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் செய்யாமல்... அவன் வாயில் இருந்து வந்த வினுஷா என்ற பெயரை மறுபடியும் காதில் ஒலிக்க... அவன் அடித்த அடியின் வலி கூட காணாமல் போய் அவன் மனதில் ஒரு பெண் இருக்கிறாள்... என்று எண்ணமே அவளை கூறு போட... முற்றிலும் அமைதியாக அந்த பீச் ஹவுஸை நோக்கி சென்றாள்.
கோபத்தில் மிதுனாவை அடித்தவன்... சிறிது நேரம் கழித்து தான்... உணர்ந்தான், தன் எதிரில் மிதுனா இல்லாததை. வினாடி நேரத்திற்குள் மனதில் ஏதேதோ கெட்ட நினைவுகள் வந்து போக... மிதுனா ஆஆஆஆஆ... என்று கத்தினான்.
பீச் ஹவுஸ் வாசலுக்கு அப்பொழுது தான் சென்ற மிதுனா.... மிதுன் போட்ட சத்தத்தில் திரும்பி பார்க்க மிதுனோ தலையில் கை வைத்து அப்படியே மணலில் மண்டியிட்டு, அழுது கொண்டு இருந்தான்.
ஏனோ அவனின் மனதில் ஒரு பெண் இருக்கிறாள் என்பது தெரிந்தாலும், அவனை அந்த நிலைமையில் விட்டு விட்டு செல்ல மனம் இல்லாமல் மறுபடியும் அவனுக்கு அருகில் வேகமாக ஓடி வந்தாள் மிதுனா.
வந்து பார்க்க அவன் மணலில் மண்டியிட்டு அழுது கொண்டு இருக்கவும் மேலும் பதறியவள்....
மித்து.. ப்ளீஸ் அழுகாதீங்க... இப்ப எதற்கு அழுகுறீங்க?.. நான் தெரியாமல் உங்கள் வாழ்க்கையில் இடைஞ்சலாக வந்து விட்டேன் என்று நினைக்கிறேன்... என்னால் உங்களுக்கு எந்த கஷ்டமும் வேண்டாம். நான் இனி உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனால் நீங்கள் அழ மட்டும் செய்யாதீர்கள். உங்களை இப்படி பார்ப்பதற்கு மனதிற்கு எதுவோ போல் இருக்கிறது...
அதுவும் நீங்கள் அழுவதை பார்க்கும் போது உங்கள் அழுகைக்கு காரணம் நான் தானோ என்று தோன்றுகிறது. தேவையில்லாமல் உங்கள் விஷயத்தில் நுழைந்து, உங்களுக்கு நல்லது செய்வோம் என்று நினைத்து ... நானா ஏதேதோ செய்து உங்களை சங்கடப்படுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் மித்து...
தயவு செய்து இன்னும் ஒரு தடவை நீங்கள் அழுவதை நான் பார்த்தால், வாழ் நாள் முழுவதும் என்னை நானே மன்னித்துக் கொள்ள முடியாத ஒரு பெரிய பாவம் செய்ததைப் போல் உணர ஆரம்பித்து விடுவேன். தயவு செய்து அழுவதை நிறுத்துங்கள் என்று சொல்லவும்...
இம்முறை கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்தவாறே மிதுனாவை தன் மடியில் இழுத்து அமர வைத்துக் கொண்டவன்....
இப்போது அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்துக் கொள்ள...
இவ்வளவு நேரம் சீரியஸாக பேசி கொண்டு இருந்த மிதுனா.. இப்போது வாயில் கோந்து ஒட்டியது போல் அமைதியாக இருந்தாள்...
மிதுன் அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்துக் கொண்டவன், இப்பொழுது முகத்தை எடுக்காமலேயே அப்படியே அவளின் இடையில் கையை வைத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்...
ஆமா காரில் வரும் போது என்ன என்ன சொல்லிட்டு வந்த.. இவனுக்கு எல்லாம் எதற்கு மைண்ட் வாய்ஸ்... அது ஒன்னு தான் குறைச்சல் இவனுக்கு ம்ம் ... அப்படித் தானே, அப்புறம் என்ன நான் ரோபோவா.... எப்படி எப்படி சங்கர் பட ரோபோவிற்கு கூட காதல் வரும் எனக்கு காதல் வராதா.. ???. நான் உணர்ச்சிகள் இல்லாதவனா என்று மிகவும் மெதுவாக ஆனால்.. தேவையான இடத்திற்கு தகுந்த ஏற்ற இறக்கங்கள் கொண்டு அவன் பேச...
அவனின் மூச்சு காற்று தந்த வெப்பமும், அவன் மீசையின் குறுகுறுப்பும்... கழுத்தில் அவளுக்குள் ஆயிரம் இடி மின்னல்களை தோற்றுவிக்க, அவனின் கரங்கள் இடையில் தாளம் போட அவளுக்கு தான் இன்பமான இம்சையாக இருந்தது.
அதிலும் அவன் தன்னை கவனித்து, தான் பேசிய வார்த்தைகளையே அவன் அவனுக்காக ஏற்ற இறக்கங்களோட பேச... பேச...
ஆத்தாடி... சரியான வில்லங்க புடிச்சவனா இருக்கானே... ஒரு தடவை ஒரே ஒரு தடவை நான் பேசுவதை கவனித்துக் கொண்டு வருவது போல்... சின்னதாக ஒரு சின்ன சைகை காட்டி இருந்தால் கூட, நான் அமைதியாக வந்து இருப்பேனே..
ஆனால் அப்போது எல்லாம் சரியான கல்லூளிமங்கன் போல் அமைதியாக இருந்து விட்டு, இப்போ என்ன மெசேஜ் பண்ணுகிறான் என்று சொல்லி கொண்டே வந்தவள் ஆஹா நான் இப்போது மனசுக்குள்ள பேசுகிறேனா வெளியில் வாய் வர்த்தையாக பேசுகிறேனா ஒன்றும் புரியவில்லையே.... என்று குழம்பியவளை தன் பக்கமாக திருப்பி அமர வைத்தவன்....
ஒரு தாய் தன் மகவை மடியில் அமர்த்தி வைப்பது போல் அமர வைத்து இருந்தவன் ... இப்பொழுது அவள் முகத்தை பார்த்து உனக்கு சந்தேகமே வேணாம் பட்டு... இவ்வளவு நேரமும் வாய்விட்டு தான் பேசிக்கொண்டு இருந்தாய் என்று மிதுன் சொல்ல...
வெட்கத்தில் அவன் மார்பில் தன் முகத்தை வைத்து மூடிக்கொண்டாள் மிதுனா...
வினுஷா யார்??...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...