• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 17, 2025
Messages
41
சுந்தரம், குழலி - பூங்குன்றன் திருமண விழா அழைப்பிதழில் தங்கள் வீட்டில் உள்ள முக்கிய உறவுகளின் பெயர்களை குறித்து கொண்டு, நக்கீரன் சொன்ன அச்சகத்திற்கு வந்தார்.

ஏற்கனவே அந்த அச்சகத்திற்கு நக்கீரன் வந்திருந்தார்.

நக்கீரனிடம், திருமண அழைப்பிதில் போட, தங்கள் உறவுகளின் பெயர்களை குறிப்பு எடுத்து கொண்டு வந்ததை எடுத்து " இந்தாங்க மாப்பிள்ளை" என்று சுந்தரம் கொடுத்தார்.

நக்கீரனும் அதை வாங்கி கொண்டு,
அச்சக உரிமையாளரிடம், "ஏற்கனவே தான் கொடுத்த மணமகன் உறவினர்கள் குறிப்போடு, இதையும் மணமகள் உறவினர்கள் குறிப்பில் சேர்த்து விடுங்கள்" என்று சுந்தரம் கொடுத்த குறிப்பைக் கொடுத்தார்.

அச்சக உரிமையாளர் " கொஞ்சம் நேரம் காத்திருங்கள். திருமண அழைப்பிதழில் போட வேண்டிய மாதிரியை உங்களிடம் காண்பிக்கிறேன்" என்றார்.

நக்கீரனும்" ம்ம் " என்று சொல்லி விட்டு, சுந்தரத்திடம் " நாம் இவர் திருமண அழைப்பிதழ் மாதிரி தயாரிக்கும் வரை நாம், புதிய திருமண அழைப்பிதழ் மாதிரி அட்டைகளைப் பார்ப்போம் " என்று சொல்ல, சுந்தரம்" ம்ம் " என்று சொல்லி விட்டு, உங்கள் தம்பி வரவில்லையா?" என்று கேட்க,

நக்கீரன் " அவன் இதோ இப்போ வந்து விடுவான்" என்று சொல்லி முடிப்பதற்குள், பூங்குன்றனும் அங்கே வந்தான்.

சுந்தரம், பூங்குன்றனைப் பார்த்து " வாங்க மாப்பிள்ளை" என்று சொல்ல,
பூங்குன்றனும் " ம்ம்" என்று சிறு புன்னகையுடன் தலையாட்டினான்.

நக்கீரனுக்கு தெரிந்த ஒரு நபர் அந்த அச்சகத்திற்கு வர, நக்கீரன், சுந்தரத்திடம் " நீங்கள் என் தம்பி கூட பேசிக் கொண்டு இருங்க, நான் இதோ எனக்கு தெரிந்த ஒருவர் வந்து இருக்கிறார், அவரிடம் பேசி விட்டு வருகிறேன் மாமா" என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

சுந்தரமும் "ம்ம்" சரி என்று சொல்லி விட்டு, பூங்குன்றனிடம் மறுபடியும் மன்னிப்பு கேட்கலாம் என்று, மன்னிப்பு கேட்கும் போது,

பூங்குன்றன் கெட்ட நேரத்திற்கு, யாரோ ஒருவர் முன்பு ஒரு முறை,
கருடப் பார்வை நாளிதழ் அலுவலகத்தில், புதிய கடை திறப்பு விழாவிற்கு விளம்பரம் செய்ய வந்த போது ,
"அதில் உள்ள சில வரிகளை மட்டும் எடுத்து விட்டு, புதிய வரிகளை போட்டு விளம்பரம் செய்தால் நல்லா இருக்கும் என்று பூங்குன்றன் சொல்ல" , வந்தவரோ " உங்கள் வேலை எதுவோ அதை மட்டும் செய்தால் போதும் " என்று அலட்சியமாக சொன்னார்.

பூங்குன்றனும் , விளம்பம் செய்ய வந்தவர் சொன்னதை கேட்டு" சரி " என்று சொல்லி அப்படியே நாளிதழில் விளம்பரம் செய்தார்.

ஆனால் அவருக்கு கொடுத்த யோசனையை வேறு ஒரு புதிய கடை திறப்பவரின் கடைக்கு விளம்பரம் செய்ய, அந்த விளம்பரம் மக்கள் மத்தியில் பிரபலமானது.

அதைப் பார்த்ததும், தன் தவறை உணர்ந்த, பூங்குன்றனிடம் மன்னிப்பு கேட்கவும், அடுத்து தான் ஒரு புதிய தொழில் துவங்க இருப்பதற்கு, விளம்பரம் செய்யவும்,

பூங்குன்றனுக்கு போன் செய்து, தன்னைப் பற்றிய விளக்கம் சொல்ல,

அப்போது சுந்தரமும், பூங்குன்றனிடம் மன்னிப்பு கேட்க, பூங்குன்றன் சுந்தரம் பேசியதை கவனிக்காமல், போன் செய்தவரிடம் கொஞ்சம் சத்தமாக " நான் தான், அன்றைக்கு உங்களிடம் சொல்லும் போது, உன் வேலையை பாருங்க, என்று சொல்லி விட்டு, இப்போது மன்னிப்பு கேட்டால், நான் என்ன செய்வேன்?" என்று சொல்ல,

சுந்தரம், 'மாப்பிள்ளை நம்மை தான் குத்திக் காட்டுகிறார் 'என்று மனதிற்குள் நினைத்து கொண்டு, அங்கிருந்து வேறு பக்கம் சென்றார்.

பூங்குன்றன் " அந்த கடைக்காரரிடம், புதிய தொழில் துவங்க வாழ்த்துக்கள். நான் எதையும் மனதில் நினைக்க வில்லை. நீங்கள்
எங்கள் நாளிதழ் அலுவலகத்திற்கு வாருங்கள், அங்கே வைத்து பேசிக் கொள்ளலாம்" என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தார்.

பூங்குன்றன், அச்சக உரிமையாளரிடம் சென்று, திருமண அழைப்பிதழ் மாதிரியை பார்த்து விட்டு, அண்ணனிடம் சென்று, "ஏதோ ஒரு விசயத்தை முக்கியம்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து, "எனக்கு அலுவலகத்தில் முக்கியமான வேலை இருக்கிறது "என்று சொல்லி விட்டு சென்றான்.

திருமண அழைப்பிதழில் போட வேண்டிய பெயர்களை போட்டு விட்டு அதை அச்சக உரிமையாளர், நக்கீரனை அழைத்து காண்பித்தார்.

நக்கீரனும் , சுந்தரமும் அந்த மாதிரி திருமண அழைப்பிதழை பார்த்தார்கள். சுந்தரம் அந்த திருமண அழைப்பிதழில், மணமகன் என்ற இடத்தில் பூங்குன்றன் பெயர் போட்டு, அவனின் படிப்பை பற்றிய குறிப்பு இல்லாததை கண்டு அச்சக உரிமையாளரிடம் கேட்க போக,

நக்கீரன்" உங்கள் மருமகன் பூங்குன்றன் தான், அவன் படிப்பை பற்றி மட்டும் அல்ல, வேறு யாருடைய படிப்பு தகுதியையும் குறிப்பி வேண்டாம் என்று என்னிடம் சொன்னான்" என்று சொல்ல,

சுந்தரம்" ஏன் "என்று கேட்க,

நக்கீரன்" என் படிப்பு தகுதியை போட்டு என் வருங்கால மனைவியின் படிப்பு தகுதியை குறைக்க வேண்டாம் " என்று சொன்னான் என்றார்.

சுந்தரம், மனதுக்குள் ' நம் மகள் 10 தான் படித்திருக்கிறாள் என்று தெரிந்தும் அதை குறைவாக வெளியே தெரியக் கூடாது என்று நினைத்த பூங்குன்றன் மேல் இருந்த கோபம் போய் மருமகன் மீது நல்லவர் தான் ' என்று நினைத்துக் கொண்டார்.

அதை மகளிடமும் உடனே போன் செய்து சொல்லி விட்டார்.

திருமண அழைப்பிதழ் மாதிரியை இருவரும் பார்த்து விட்டு, இருவரும் தேர்வு செய்த அட்டையை காண்பித்து " இதில் பத்திரிகை அடிங்க" என்று அச்சக உரிமையாளரிடம் சொன்னார்கள்.

திருமண அழைப்பிதழ் மாதிரியை வாங்கி கொண்டு சுந்தரம் தன் வீட்டில் உள்ள மனைவி மற்றும் மகளிடம் காண்பித்தார்.


வளவன், தன் கட்சி தலைவரிடம் பெருமையாக " நாளை உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு முதல் முறையாக, நான் கருடப் பார்வை நாளிதழில் விளம்பரம் செய்து உள்ளேன் " என்று சொன்னான்.

தலைவரும்,"அப்படியா...!" என்று ஆச்சரியமானார். வளவன்" உங்கள் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சின்ன கூட்டமும் ஏற்பாடு செய்து உள்ளேன் " என்றான்.

தலைவர், " ஓ இதுவேறயா...!" என்று இன்னும் ஆச்சரியமானார்.

மறுநாள் தலைவர் பிறந்தநாள்.
தலைவரும், வளவன் சொன்னது போல, கருடப் பார்வை நாளிதழில் நம் பிறந்தநாள் விளம்பரம் வந்துள்ளதா?
என்று தேடிப் பார்த்து விட்டு, அதில் அவரின் பிறந்த நாள் விளம்பரம் இல்லை என்றதும், வளவன் மீது கோபம் வந்தது.

வளவனும், அதேபோல் கருடப் பார்வை நாளிதழில் தன் தலைவரின் பிறந்த நாள் விளம்பரத்தை ஆர்வமாக பார்க்க, அது இல்லாததைக் கண்டு, அந்த நாளிதழின் அலுவலகத்திற்கு போன் செய்து கோபமாக கேட்க, போனை எடுத்தவர், "அதான் முடியாது என்று நேற்றே பணம் திருப்பிக் கொடுத்தாச்சுல "என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தார்.

வளவன் தன் நண்பர்களிடம் போன் செய்து என்ன பிரச்சினை என்று கேட்க?, அதற்கு ஒரு நண்பன் தன் மீது உள்ள தப்பை சொல்லாமல்" அந்த நாளிதழில் யாரோ ஒரு முக்கியமானவனாம், அவன் தான் இந்த மாதிரி சின்ன கட்சி தலைவரின் பிறந்த நாள் விளம்பரத்தை முன் பக்கம் போட முடியாது என்று சொல்லி விட்டு, வேண்டும் என்றால் நடுப்பகுதியில் ஒரு ஓரத்தில் போடுகிறேன் என்று சொல்ல நாங்கள் கோபத்தில் வேண்டாம் என்று சொல்லி விட்டு வந்தோம் " என்று, அங்கே நடந்த முழு விவரங்களையும் சொல்லாமல் அரைகுறையாக சொன்னான்.

வளவன் இதைக் கேட்டு கோபத்தில் இருக்க, அவன் சார்ந்த கட்சித் தலைவர் வீட்டில் வேலை செய்யும் ஒருவர் போன் செய்து " தலைவர் உன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார், அதனால் நீ இன்று அவரைப் பார்க்க வந்து விடாதே" என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தார்.

வளவனும் 'இப்போது என்ன செய்யலாம் ' என்று யோசித்து விட்டு, இறுதியில் தலைவரை நேரில் சந்தித்து, தன் பக்கம் உள்ள நியாயத்தை சொல்ல வீட்டுக்கு சென்றான்.

அங்கே இவன் வருவதைப் பார்த்த கட்சி உறுப்பினர் ஒருவர் தலைவரிடம் சொல்ல, தலைவர் " அவனை இங்கே வர வேண்டாம்" என்று சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு தன் அறைக்குள் சென்று விட்டார்.

வளவன் வீட்டுக்குள் போக முயற்சிக்க, அங்குள்ளவர்கள் யாரும் உள்ளே விடவில்லை. இறுதியில் வளவன் " தலைவா, தலைவா" என்று கத்தினான்.

தலைவர் அவர் அறையை விட்டு வெளியே வந்து " என்ன?" என்று கேட்க, வளவன், தன் நண்பன் சொன்னதைச் சொல்ல, தலைவர் இன்னும் கோபம் அதிகமாகி,
" நான் உன்கிட்ட என் பிறந்தநாள் விளம்பரம் போடச் சொன்னேனா?" என்று சொல்லி விட்டு, "இப்ப பாரு அந்த நாளிதழ் இப்போது தான் பிரபலம் ஆக இருக்கிறது.

அந்த நாளிதழே என்னை முன்பக்கத்தில் போட அங்கீகரிக்கவில்லை, அப்ப இனிமேல் எந்த நாளிதழிலும் என்னை மதிக்க மாட்டார்கள்" என்று ஆதங்கப்பட்டு கொண்டே, " நம்ம கட்சி இன்னும் நம்ம மாவட்டத்தை தாண்டி வளரவில்லை.

ஆனாலும் என் செல்வாக்கை வைத்து, உங்கள் அப்பா போதை மருந்து வழக்கில் கைதானதைக் கேள்வி பட்டு, உனக்காக , அந்த இன்ஸ்பெக்டரிடம் பேசி,உங்கள் அப்பா மீது தவறில்லை என்று நியாயத்தை புரிய வைத்தேன் "என்று சொல்லி விட்டு, "இனிமேல் நீ என்னைத் தேடி வராதே, நீ என் கட்சி உறுப்பினரும் கிடையாது " என்று சொல்லி விட்டு மீண்டும் தன் அறைக்குள் சென்று விட்டார்.

அங்கே இருந்த ஒரு உறுப்பினர், "என்னப்பா வளவா, நீ சும்மா இருந்திருக்கலாம்" என்று சொல்லி விட்டு , " தலைவர் அவர் பிறந்த நாள் பற்றிய செய்தி வந்திருக்கிறது என்று தனக்கு வரப்போகும் மனைவியின் வீட்டில் சொல்ல,

அவர்களும் பார்த்து விட்டு, தலைவரிடம் எரிச்சலூட்டும் படி செய்துள்ளார்கள் "நீங்கள் என்ன அவ்வளவு பெரிய அரசியல் வாதியா? , உங்கள் பிறந்த நாள் விளம்பரம் முதல் பக்கத்தில் வர.! என்று சொல்ல, அதான் தலைவர் உன் மீது கோபப்பட்டார் " என்றார்.

வளவனுக்கு கோபம் எல்லாம், கருடப்பார்வை நாளிதழில் இருக்கும் தன் தலைவர்
பிறந்தநாளை போடாத அந்த ஆசிரியர் மீது தான் (பூங்குன்றன் என்று தெரியாது)
கோபம் வந்தது.

தொடரும்,
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top