• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
சஞ்சனாவின் முடிவிற்கு கோபப்பட்டுக் கொண்டு இருந்தனர் ரிஸ்வந்திடம் மிதுனாவும் புவனாவும்..

அப்போது எம்டி கிட்ட பேசி விட்டு சஞ்சனா உள்ளே வந்ததை பார்த்த பிறகு.. ரிஷ்வந்தை இப்போது திட்டுவதை நிறுத்தி விட்டு,

சஞ்சனா நீ சொல்ற எந்த சமாதானத்தையும் நாங்கள் கேட்க போவதாக இல்லை இந்த ஆபீஸ்ல இதுவரைக்கும் வேலை பார்த்தது வரைக்கும் போதும்... இங்கு இருந்து இனிமே ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். உடனடியாக இதற்கு நாம் எவ்வளவு நஷ்ட ஈடு பே பண்ண வேண்டும் என்று கேட்டு சொல்லு, கட்டி விட்டு கிளம்பி கொண்டே இருப்போம் என்று மிதுனா சரியான கோபத்தில் பேச, புவனாவும் அவள் சொல்வது தான் சரி என்பது போல் அமைதியாக இருந்தாள்.

ஆஹா ஒரே ஒரு அறை இந்த அளவுக்கு வேலை பார்க்கிறது.. ரொம்ப வலிக்குதா என்று மிதுனாவின் கன்னத்தை தடவி பார்த்தாள் சஞ்சனா.

தடவிய கையைத் தட்டி விட்டு, சொல்லுடி இது வரைக்கும் என்னை யாராவது அடித்து இருக்கிறார்களா என்று மிதுனா கோபமாக கேட்க...

சம்பந்தமே இல்லாமல் ரிஷி தானாக வந்து மாட்டிக் கொண்டான். காலையில் தானடி மூன்று பேரும் அடித்துக் கொண்டு இருந்தீர்கள்.. அதுவும் மிதுனா எனக்கு தெரிந்து நீ தான் நிறைய அடி வாங்கினாய் என்று தன்னுடைய அரும்பெரும் சந்தேகத்தை கேட்டான்.

இப்போது மறுபடியும் அவன் புறம் திரும்பியாக மிதுனா...

ரிஷ்வந்த் இங்க வாயேன் என்று கூப்பிட்டாள்.

அவனும் தன் சேரில் இருந்து எழுந்து என்னடி என்று அவன் அருகில் சென்றான்...

அவனின் சட்டையை பிடித்து இழுத்து கீழே குனிய வைத்து அவன் தலையில் நச்சு நச்சு நச்சு என்று கொட்டுகளை வைத்தாள்.

சரியாக அந்த நேரம் எம்டி அந்த அறைக்குள் வந்தான்.

யார் அது இவ்வளவு வேகமாக கதவை திறக்கிறீர்கள்... கதவை தட்டி விட்டு வரும் பழக்கம் இல்லையா என்று கேட்டுக் கொண்டே திரும்பி பார்த்தாள் புவனா.

அங்கு என்னமோ அவன் சந்தோஷமாகத்தான் வந்தான். ஆனால் அங்கு இருந்த மூன்று குட்டிச்சாத்தானும், அதில் மிதுனா ரிஷ்வந்தை போட்டு அடித்துக் கொண்டு இருப்பதை பார்த்து விட்டு, புவனாவின் கேள்வியிலும் டென்ஷன் ஆனவன்.

மிதுனா ரிஷ்வந்த் இருவரும் என்னுடைய கேபினுக்கு வாங்க என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

கதவை திறக்கும் போது அவன் முகத்தில் இருந்த புன்னகையை கண்டு இருந்த சஞ்சனா மிதுனாவை பார்த்து பயப்படாமல் போ அவன் ஏதோ நல்ல செய்தி சொல்ல தான் வந்து இருப்பான் என்று நினைக்கிறேன்...

ஆனால் நீங்கள் இருவரும் செய்து வைத்த வேலையில் மீண்டும் கோபமாக போய் விட்டான் என்று சொல்லி விட்டு அமைதியாக அமர்ந்தாள் சஞ்சனா.

சரி அவன் என்ன வேணா சொல்ல வந்து இருக்கட்டும்.. இவ்வளவு தூரம் வந்தவன் சொல்லிட்டு போக வேண்டியது தானே.. அப்புறம் ஏன் தனியாக கூப்பிடுகிறான்.. என்று சொல்லி கொண்டே ரிஷ்வந்தை முறைத்து பார்க்க...

நான் என்ன பண்ண என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு சரி வாடி போலாம் அதற்கு வேறு அவர் ஏதாவது திட்ட போறாரு என்று சொல்லி கொண்டே மிதுனாவை இழுத்துக் கொண்டு போனான்.

எம்டி அறையின் முன் நின்று கதவை தட்டி மே ஐ கம் இன் சார் என்று கேட்டான் ரிஷ்வந்த்.

எஸ் கம் இன் என்று சொல்லி விட்டு... உள்ளே வந்த இருவரையும் பார்த்து அமரும்படி கூறினான்.

இருவருமே அமைதியாக அமர்ந்தனர்.

ஒரு நிமிடம் அமைதியாக இருந்து விட்டு, மிதுனா, ரிஷ்வந்த் இருவரையும் பார்த்து நமக்கு இப்போ ஒரு புது ப்ராஜெக்ட் வந்து இருக்கு...

இங்க சௌத் சைடுல இருக்குற நம்ம ஒவ்வொரு பிரான்ச் ல இருந்தும்.. அவங்க அவங்களுடைய பெஸ்ட் டிசைனிங் தர சொல்லி... இப்ப தான் நம்ம சேர்மன் எனக்கு போன்ல இன்பார்ம் பண்ணுனார். இன்று இருந்து 20 நாட்களுக்குள் ஒவ்வொரு பிரான்சில் இருந்தும் 20 விதமான பெஸ்ட் டிசைன்ஸ் கொடுக்க சொல்லி இருக்காங்க..

சோ உங்களுக்கு தேவையான ஆட்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் எனக்கு சரியா 18 ஆவது நாள் சாம்பிள்ஸ் அனைத்தும் என் கையில் வந்து சேர்ந்து இருக்கனும்.

ஓகே உங்களோட வேலைய போய் பாருங்க என்று சொல்லி விட்டு, அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான் எம்டி.

எக்ஸ்கியூஸ் மீ சார் என்று ரிஷ்வந்த் எம் டி ஐ கூப்பிட்டான்.

என்ன என்ன சந்தேகம் என்று கேட்டான் எம்டி.

அப்ப நீங்க இந்த கம்பெனியோட எம்டி இல்லையா சார்.. சேர்மன் யார் சார் என்று கேட்டான் ரிஷ்வந்த்.

தான் பார்த்துக் கொண்டு இருந்த பைலை நிதானமாக மூடி வைத்து விட்டு, ...

இப்போ இந்த டீடைல் எல்லாம் நான் சொன்னால் தான், நான் சொன்ன வேலையை நீங்கள் செய்வீர்களா மிஸ்டர் ரிஸ்வந்த் என்று கேட்டான் எம்டி.

ஐயோ அப்படி அல்லாம் இல்ல சார்.. சும்மா தெரிஞ்சு கொள்ளலாம் என்று ஒரு கியூரியாசிட்டி தான் என்று கேட்கவும்...

ஏனோ ரிஷ்வந்தின் இன்னசென்ட் ஃபேஸ் அவனுடைய நடவடிக்கைகளும் அதோடு காலையில் மிதுனாவிடம் கொஞ்சம் கூட வருத்தப்படாமல் சிரித்துக் கொண்டே வாங்கிய அடி என்று அவனை பார்க்க மிகவும் பாவமாக இருக்கவும் சிரித்துக் கொண்டே..

இந்த கம்பெனியோட சேர்மேன் மிஸ்டர் ஜெயதேவ் எல்லாரும் ஜெடி என்று கூப்பிடுவாங்க. அவருக்கு 5 பிள்ளைகள். அதில் மூத்த பிள்ளை நான் தான் உங்கள் எம்டி. இது போதுமா இல்லை என் பெயர் விளக்கம் வேண்டுமா என்று கேட்டான்.

இப்போதைக்கு இது போதும் சார் உங்கள் பெயரை நாங்க எங்க டிசைன் முடிச்சதுக்கு அப்புறம் கேட்டு தெரிந்து கொள்கிறோம் என்று சொல்லி விட்டு, என்ன மாதிரி ஆடைகள் என்ன விஷயம் என்று மிதுனா கேட்டாள்.

அவள் கேட்டதற்கான பதிலை கொடுத்து விட்டு இருவரையும் பார்த்து ஆல் தி பெஸ்ட் என்ற சொன்னான் எம்டி.

ரிஷ்வந்த் மிதுனா இருவரும் நன்றி சார் என்று சொல்லி விட்டு வெளியே சென்றார்கள்.

இருவருமே வெளியே சென்றார்கள் ஆனால் மறுபடியும் மிதுனா மட்டும் உள்ளே வந்து.. மதியத்திற்கு மேல் நாங்கள் இன்று லீவு சார் என்று சொன்னாள்.

ஏற்கனவே சஞ்சனா சொல்லி விட்டு போனதில் கடுப்பாக இருந்தவன் இவளும் வந்து லீவு என்று சொல்லவும் கோபம் வந்தாலும் அதை தனக்குள்ளே வைத்துக் கொண்டு அது தான் உங்கள் தோழியே ஏற்கனவே சொல்லிவிட்டார்களே, போய் வாருங்கள் என்று எரிச்சலோடு சொன்னான்.

சார் என் தோழி எங்கள் மூன்று பேருக்கு மட்டும் தவறுதலாக சொல்லி விட்டாள். எங்க ரிஷ்வந்தை மறந்து விட்டாள்.. நாங்க எங்கே போனாலும் நான்கு பேரும் சேர்ந்து தான் போவோம் அதனால் அவனுக்கும் இன்று மதியம் லீவு தான் என்று சொன்னாள் மிதுனா.

பொறுமை இழந்த எம்டி அவள் அருகில் வந்தவன் ... அவள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவளை தன் அருகில் இழுத்து அவள் காதில் ஏதோ சொல்லி விட்டு விலகினான்.

அவன் தன்னை இழுத்த வேகத்தில் தன்னிலை மறந்தவள்.. அவன் தன் காதில் சொன்ன விஷயத்தில் தெளிவு பெற்று அதே போலவே... அவனை தன் பக்கத்தில் இழுத்து அவனைப் போலவே அவனுக்கு காதில் பதில் சொன்னாள்.

அவனுக்கு தகுந்தாற் போல் பதிலை சொல்லி விட்டு ஓகே நன்றி சார்.. எனக்கு மதியம் வரை பொறுமை இல்லை அதனால் நாங்கள் இப்பொழுதே கிளம்புகிறோம்..‌ நாளையில் இருந்து கண்டிப்பாக நீங்கள் சொன்ன தேதிக்குள் டிசைன் முடித்து உங்களிடம் தருகிறோம் என்று சொல்லி விட்டு அவனின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே சென்று விட்டாள் மிதுனா.


மிதுனா வெளியே சென்று தன் நண்பர்களுடன், மதியம் லஞ்ச்க்கு வெளிய போகலாம் பா நான் ரிஷ்வந்தையும் கூட்டி போவதற்கு எம்டி சார் கிட்ட நானே சொல்லிட்டேன் என்று சொல்லி நால்வரும் வெளியே சென்றார்கள்.

அவர்கள் நால்வரும் காரை எடுத்துக் கொண்டு வெளியில் செல்லும் வரை, சிசிடிவியில் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்த எம்டி, விநாயகம் அங்கிள் நீங்கள் சொல்லியதில் எதுவுமே உண்மை இல்லை. ஒன்றே ஒன்று மட்டும் தான் உண்மை இந்த நான்கு பேரும் சரியான கேடிகள். மற்றபடி இவர்களா மிகவும் நல்ல பிள்ளைகள்.. நாங்கள் ஐந்து பேரும் தான் மிகவும் நல்ல பிள்ளைகள்.

நீங்களே விரைவில் ஒத்துக்கொள்வீர்கள்.. உங்களை தெரியாத்தனமாக இந்த போட்டியில் இழுத்து விட்டேன் என்று சொல்வீர்கள் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன்...

தன் தம்பிகளுக்கு போன் செய்து இங்கு காலையில் இருந்து இப்ப வரை நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்லிக் கொண்டு இருந்தான்... கான்பிரன்ஸ் காலில்...

மற்றவர்கள் கேட்டுக் கொண்டு ....

அவருடைய இரண்டாவது தம்பி ஆர் டி.. சோ இங்க கீழ்பாக்கம் பிரான்சுக்கு அந்த புவானவை அனுப்பி வைக்கிறீர்களா என்று கேட்டான்.

ஆமாம் டா.. விநாயகம் அங்கிள் இந்த மூன்று பெண்களையுமே ரொம்ப நல்ல பெண்கள். நீங்கள் அவர்களிடம் சென்று வேலை பார்த்தால் உங்களுக்கும் தமிழ் கலாச்சாரம் புரியும் என்று சொன்னார்..

ஆனால் இங்கு நான் வந்ததில் இருந்து நானும் பார்த்து விட்டேன். இந்த மூன்றும் சரியான ஆராத்துகளாக தான் இருக்கு.

அதிலும் இந்த மிதுனா என்று ஒரு வால் இல்லாத குரங்கு இருக்கே.. அது பயந்து சுபாவம் என்று அங்கிள் சொன்னதை நம்பி நான் ரொம்பவும் ஏமாந்து போய் விட்டேன். பொம்பள புள்ள மாதிரியா இருக்கா சரியான ராட்சசி...

எப்படி எகிறி வந்து பதில் சொல்ற தெரியுமா.. என்று சொல்லி கொண்டே போனவனை நிறுத்தி...

என்ன பதில் எப்ப எகிறி கொண்டு அப்படி என்ன சொன்னாள் என்று ஆர்டி கேட்டான்.

அதுவா என்று ஏதோ சொல்ல வந்தவன்.. அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை... நான் பார்த்துக் கொள்கிறேன். சரி உங்களுக்கு அங்கு ஆபீஸில் என்ன அனுபவம் ஏற்பட்டது அது நீங்கள் சொல்லுங்கள் என்று அப்படியே பேச்சை நிப்பாட்டி விட்டான்.

எதையோ தன் அண்ணன் தங்களிடம் மறைக்கிறான் என்று உணர்ந்தவர்கள் அதே சமயம் அவனை வற்புறுத்தாமல்.
 
Member
Joined
Jun 26, 2025
Messages
37
அவரவர் இன்று முதன் முதலில் தங்கள் கம்பெனியில் என்ன செய்தார்கள் எப்படி அவர்களை வரவேற்றார்கள் என்று சொன்னார்கள்.

ஏய் நான் தான் சொன்னேன் தானே.. யாரையும் வெல்கம் பண்ற மாதிரி இயல்பாக இருப்பது போல் இருக்கட்டும் என்று சொன்னேனே. பிறகு ஏன் அவர்கள் எதற்கு உங்களை வரவேற்றார்கள் என்று கேட்டான் எம் டி.

ப்ரோ சில்.. இருந்துட்டு போகட்டும் அவர்களுக்கு நம்மை வரவேற்பதில் நமக்கு அவர்கள் மரியாதை செலுத்துவதாக அவர்கள் கருதுகிறார்கள் அதை ஏன் நாம் தடுக்க வேண்டும்.. அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் அதே சமயம் அவர்களுக்கான தேவைகளையும் நாம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் நல்ல முறையில் அவ்வளவுதான் என்று மிகவும் இயல்பாக சொன்ன எஸ் டி... எம்டியின் முதல் தம்பி.

ஓகே இந்த பஞ்சபாண்டவர்களின் பெயர்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்...

இணைந்திருங்கள்

சொல்லவா ... வேண்
டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top