• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
66
58. சரோஜா ... புவனா மிதுனா இருவரையும் புரிந்து கொள்ளுதல்...

மிதுனா.. சனாதனிடம் மிதுனை பற்றி கவலை வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் சஞ்சனாவிடம் என்னிடம் பேசியது போல் பேசி மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று சொல்லி விட்டு வேகமாக சரோஜாவின் அறைக்குள் நுழைய...

அங்கு சரோஜாவும் சஞ்சனாவும் சிரியஸாக பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து விட்டு, அச்சச்சோ சஞ்சுமா இந்த தேவ் குரூப் பசங்களோட சேர்ந்து நீயும் சீரியஸ் கேர்ள் ஆயிட்டியா...

உன் கூட பேசிட்டு இருக்கும் போது இந்நேரம் சரோஜா அம்மா முகம் எவ்வளவு ப்ரைட்டா இருக்க வேண்டாம்.. இப்படி சோகமாக இருக்கிறது என்று கலாய்த்து கொண்டே உள்ளே வந்தவளை பார்த்து இருவரும் சிரித்துக்கொண்டு அமர்ந்து இருந்தனர்.

ஏய் வாயாடி... நான் எங்க சோகமா இருந்தேன் என்று சரோஜா மிதுனாவின் கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதில் கேள்வி கேட்டார்.

நாம் ஒரு கேள்வி கேட்டு கலாயிச்சா இவங்க பதில் கேள்வி கேட்டு கலாய்க்கிறாங்க... அப்பா ஃபுல் ஃபார்ம் ல தான் இருக்காங்க... மிதுனா பீ கேர்ஃபுல் என்று சத்தமாகவே ஆனால் மனசுக்குள் சொல்வது போல் சொல்ல அங்கு இருந்து மூவருமே சிரித்துக் கொண்டு இருந்தனர்.

சனாதனும் வெளியில் மிதுனாவின் வாய் சாதுரியத்தை நினைத்து வியந்து கொண்டே... அவன் அத்தையை போலவே அவனும் வாயாடி சரியான வாயாடி என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான்.

எதே... என்னடா நடக்குது இங்க ஆளாளுக்கு உண்மையா இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க... சித்திரை மாச வெயிலில் எல்லாரும் இப்படி உண்மைய சொன்னா எனக்கு வேர்க்காது... இப்படி எல்லாம் புகழ்ச்சி பிடிக்காது மிதுனாவுக்கு... என்று அவள் வியர்க்காத அந்த ஏசி அறையில் வேர்த்தது போல் தன்னுடைய ஷாலை எடுத்து விசிறிக்கொள்ள...

ஐயோ அத்தை ... ம்ம்... நான் என்ன சொல்வது உங்கள் நிலைமை ?!???! உங்கள் சகோதரன், உங்கள் தோழி!!!???; இவர்களின் நிலைமை அதாவது வருங்காலத்தில் உங்களுடைய நிலைமை எல்லாம் என் கண்முன்னே அழகாக தெரிகிறது... ம்ம்... வாழ்த்துக்கள் என்று சொன்ன சனாதனை சஞ்சனாவும் மிதுனாவும் இடுப்பில் கை வைத்துக் கொண்டு மேலும் கீழும் பார்க்க...

சரோஜா அத்தை காலில் இருக்கும் வலியை கூட மருந்து சிறுபிள்ளை போல் சிரித்துக் கொண்டே இருந்தார்.

அவரின் சிரிப்பை கண்டு மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்க...

சஞ்சனா இப்பொழுது மெய்யழகியை பற்றி சரோஜா அம்மாவிடம் விசாரித்தாள்..

சரோஜா அம்மாவும் மெய்யழகி பற்றிய அனைத்து விபரங்களையும் எடுத்து சொல்ல மிதுனாவிற்கும் சஞ்சனாவிற்கும், வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அட விடுங்க சரோமா பழனி .. பேர பார் பழனி ... முருகனின் அறுபடை வீடுகளில் ஒரு பெயரை வைத்து கண்டு... செய்வது இல்லாம் நாச வேலை, சரி விடுங்க கண்டிப்பா நம்ம கையில் மாட்டாமல் போயிடுவானா என்ன?..

கவலையே படாதீர்கள் உங்கள் ஐந்து மருமகன்கள் வச்சி செய்வதை காட்டிலும், இந்த மகள்கள் போதும் அவனுக்கு எல்லாம்... தரமான சம்பவம் பண்ணி விடுவோம். நேரில் மட்டும் அவன் யார் என்று காட்டுங்கள் பிறகு இருக்கு அவனுக்கு கச்சேரி என்று சஞ்சனா சொன்னாள்.

அவள் சொன்ன தோரணையிலேயே சரோஜா அம்மாவின் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கண்ணுகளா உங்கள மாதிரி வளர்க்கணும் அப்படின்னு நினைச்சு தான் மெய்யழகியை நல்ல படிக்க வைத்து கொஞ்சம் தைரியமானவளாகத்தான் வளர்த்து இருக்கிறேன். ஆனாலும் அவளுக்குள் இருக்கும் பயத்தை எவ்வளவு ட்ரீட்மென்ட் செய்து போக்கினாலும்... வெளியில் நமக்காக தைரியமாக இருப்பவள் எனக்கு தெரிந்து அவள் இன்னும் அந்த நினைவில் இருந்து மீண்டு வந்தது போல் தோன்றவே இல்லை.

அப்படியே அதை கடந்து வந்து இருந்தால் இந்நேரம் என் மருமகன் கர்ணாவை அவள் நேசித்தும் மறுத்து கொண்டு இருக்க மாட்டாள்..

அதனால் அவளை முதலில் சரி செய்ய வேண்டும் அந்த நாசமா போகிறவன் நம் கண்களில் படும் நாளை நானும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்... இருந்தாலும் நமக்கு இப்பொழுது அழகியை சரி செய்து கர்ணாவின் மனதை புரிய வைக்க வேண்டும் அவளுக்கு... என்று தன் கவலையை சஞ்சனா, மிதுனா, சனாதன் மூவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

சரி மா நீங்க அமைதியாக சிறிது நேரம் படுத்து ஓய்வெடுங்கள்.. யார் யார் என்னென்ன வேலைக்கு போய் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை அதனால் நாங்கள் அலுவலகத்துக்கு சென்று அங்கு என்ன நடக்கிறது என்று ஒரு பார்வை பார்த்து விட்டு, வீட்டில் லட்சுமி அம்மாவிடம் தகவல் சொல்லி விட்டு, நாங்கள் உங்களை சாயந்திரம் ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது வருகிறோம் என்று, சொல்லி சஞ்சனாவும் மிதுனாவும் விடை பெற்றனர்.

இருவரும் எந்த அளவிற்கு ஜாலியாகவும் பேசுகிறார்களோ அதே அளவிற்கு சூழ்நிலையை அழகாக கையாளும் வித்தை தெரிந்து வைத்து இருக்கிறார்கள்... அருமையான பிள்ளைகளாக இருக்கிறார்கள் தனா மா என்று கேட்டார் சரோஜா.

ஆமாம் அத்தை பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத சிறு பிள்ளைகள் போல் துரு துருவென்று இருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மிகவும் திறமையானவர்கள் அத்தை.
உண்மையில் இந்த அளவிற்கு தெளிவும் சிந்தனையும் நேர்மையும் இருந்தால் கண்டிப்பாக பெண்கள் அவர்களை தங்களும் பாதுகாத்துக் கொண்டு, தங்களை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்ளும் திறமை படைத்தவர்களாக இருப்பார்கள் என்று பேசிக் கொண்டு இருந்தவன்... போனில் மிதுனா காலிங் என்று வரவும்..

வாயாடி தான் கூப்பிடுகிறாள் இருங்க லவ்டு ஸ்பீக்கரில் போடுறேன்... எவ்வளவு மரியாதையாக பேசுகிறாள் என்று மட்டும் பாருங்கள் என்று சொல்லி விட்டு, சனாதன் போனை அட்டென்ட் செய்து லவ்ட் ஸ்பீக்கரில் போட்டு விட...

யோவ் மாமா... அழகான பொண்ணுங்க ரெண்டு பேரும் வெளியில் கிளம்புகிறார்களே... அது மட்டும் இல்லாமல் அம்மாவை நாங்கள் ரெஸ்ட் எடுக்க தானே சொன்னோம். நீ அருகிலேயே உட்கார்ந்து இருந்தால் உன்னிடம் பேசிக் கொண்டு தானே இருப்பார்கள். அந்த பேசிக் மேனர்ஸ் கூட உனக்கு தெரியாது முதலில் வெளியில வாயா.

நான் உன்னிடம் என்ன சொன்னேன் நீ அதை மறந்து விட்டு உள்ளே வந்து எனக்கு வாயாடி பட்டம் கட்டிக் கொண்டு இருக்கிறாய்... நினைவிருக்கட்டும்... நான் யார் என்று?.. நினைவிருக்கிறது தானே என்று மிரட்டும் தோனியில் கேட்டவளை கண்டு... இப்போது சரோஜா சனாதன் இருவருமே சத்தம் போட்டு சிரிக்க... வெளியில் நின்று கொண்டு இருந்த மிதுனா வேகமாக உள்ளே வந்து...

அச்சச்சோ லவ்டு ஸ்பீக்கரில் போட்டு இருக்கீங்களா??.. சாரி சரோமா இதை சொல்லக்கூடாது என்று தான் நினைக்கிறேன். ஆனாலும் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை கொஞ்சம் கூட உன் மருமகன்கள் யாருக்கும் மூளையே இல்லை.

எப்படி தான் இவர்களிடம் நாங்கள் குப்பை கொட்ட போகிறோமோ தெரியவில்லை... என்று சொல்லிக்கொண்டு இருந்தவளை பார்த்து சரோஜமா வாயில் கையை வைத்து ஆவென்று பார்த்துக் கொண்டு இருந்தார்.

சஞ்சனா அலுவலகத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று ஒரு முறை போனில் பேசி விட்டு வர... வெளியில் மிதுனா இல்லாமல் அறைக்குள் பேச்சு சத்தம் கேட்கவும் மறுபடியும் உள்ளே போய்விட்டாளா என்று சொல்லிக் கொண்டே கதவை திறந்து உள்ளே வர..

சரோஜா அம்மா வாயில் கை வைத்து ஆச்சரியமாக மிதுனாவை பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து விட்டு,

சஞ்சனா உள்ளே வந்ததுமே மிதுனா அமைதியாகிவிட்டாள்.. ஆனால் அவளின் பேச்சிலிருந்து வெளியில் வராத சரோஜா அம்மாவை பார்த்து விட்டு,

என்ன... டி ... பண்ணி தொலச்ச அம்மா இந்த அளவுக்கு ஷாக்காக இருக்காங்க என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் சஞ்சனா.

அது வா நான்... உண்மைய சொன்னேன் என்று சினிமா டயலாக்கில் பேச...

ஐயோ சாரி சரோமா.. இவள் கொஞ்சம் அப்படித்தான் மனதிற்கு மிகவும் பிடித்து விட்டால் அவர்களை மொக்கை போட்டே கொன்று விடுவாள்... நான் இப்பவே இவளை அழைத்து சென்று விடுகிறேன்.. நீங்கள் சற்று ஓய்வெடுங்கள் என்று சொல்லி மிதுனாவை இழுத்துக் கொண்டு சென்றாள் சஞ்சனா.

வாசல் வரை சென்றவள் திரும்பி சனாதனை பார்த்து கொஞ்சம் வெளியில் வருகிறீர்களா என்று கேட்டாள் சஞ்சனா.

சஞ்சனாவின் அழைப்பில் சரோஜமா கடவுளே எவ்வளவு அழகான சமாதான பிள்ளைகள் என்று நினைத்துக் கொண்டு, அம்மா தாயே மகமாயி என் குடும்பத்திற்கு நல்ல பிள்ளைகளை கொடுத்து இருக்கிறாய்... குழந்தை இல்லா எனக்கு இவர்கள் என்னை அம்மா என்று அழைப்பது சொல்ல முடியாத அளவிற்கு மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது... கடவுளே என் மருமகன்கள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்.

அவர்களின் எண்ணம் போல் அனைவரும் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று.. மகமாயிடம் வேண்டிக் கொண்டவர்... கால் வலி இருந்தாலும் மனதில் இருந்த அமைதி, அவருக்கு அமைதியான தூக்கத்தை தந்தது.

சஞ்சனா, மிதுனாவிடம் ஏன் டி முதல் நாள், முதல் தடவை ஆஸ்பத்திரியில் வைத்து பார்க்கிறோம் ஒருவரை.. அவர்களிடம் கொஞ்சமாக அமைதியாக இருப்பது போல் நடிக்கவாவது செய்யலாம் தானே... பாவம் அவர்கள் ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ இந்த பயமாக இருக்கிறது என்று, சஞ்சனா பேசிக் கொண்டு இருப்பதை கேட்டுக் கொண்டே வந்த சனாதன்...

பேச வாய் திறப்பதற்கு முன்பே மிதுன் லிபின் இருவரும் ஹாஸ்பிடல் ப்ரொசீஜர் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் முடித்து விட்டு வந்தனர்.

இனிமேல் சாய்ந்தரம் அத்தையை டிஸ்சார்ஜ் செய்தால் போதும் இப்பொழுது அவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். என்ன பண்ணிட்டு இருக்காங்க அத்தைக்கு காலில் வலி அதிகமாக இருக்கிறதா என்று மிதுனும் லிபினும் கேட்க..

நாங்க இருக்கும் போது அத்தையின் கால் வலி அவர்களுக்கு தெரிய விட்டு விடுவோமா?.. அவர்களிடம் நல்ல சிரிச்சு பேசி அவர்களை சிரிக்க வைத்து அவர்களை ரெஸ்ட் எடுக்க வைத்து விட்டு தான் வந்து இருக்கிறோம். நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் லிபின் சார் என்று லிபினிடம் பதில் சொன்னாலும், பார்வை என்னவோ மிதுன் மேல தான் இருந்தது மிதுனாவிற்கு.

அப்போது அங்கு வந்த ருத்ராவும் சரி நீங்கள் அனைவரும் சென்று அவரவர் வேலையை பாருங்கள். நான் அத்தையோடு இங்கே இருக்கிறேன் என்று சொன்னான்.

சரி டா, நீ சொல்வதும் சரி தான் புவனா சென்று விட்டாள் ஏற்கனவே ஆபீஸ்க்கு.. அதனால நீ அத்தையோடு இரு... ஈவினிங் நாங்கள் வரும் பொழுது காபி வாங்கிட்டு வருகிறோம் என்று சொன்னான் சனாதன்.

அது எல்லாம் ஒன்றும் வேண்டாம் நீங்கள் அத்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு தயாராக மட்டும் வாருங்கள்.. நான் இங்கு கேன்டினில் வாங்கிக் கொள்கிறேன். இப்பொழுது தான் கேண்டின் போய் பார்த்து விட்டு வந்தேன்... இங்க காபி நன்றாகத் தான் இருக்கிறது என்று சொல்லி அனைவரையும் அனுப்பி வைத்து விட்டு உள்ளே சென்றான்... ருத்ரா.
கவிப்பிரியா பற்றி ருத்ராவிடம் பேசும் சரோ...

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top