- Thread Author
- #1
57. மிதுனாவிடம் உதவி கேட்கும் சனாதன்.
சனாதனிடம் தன் காதலை சொல்லும் மிதுனா...
மிதுன் லிபின் இருவரும் டாக்டரை பார்க்க போக... கவிப்பிரியா கோபத்தோடு சென்று விட்டாள்.
பிறகு சரண் லீனா இருவரும் ஒன்றாக சென்றனர். மிதுனா ரிஷ்வந்த் இருவரும் கிளம்பும் சமயம்... ரிஷி நீ புவனாவை கூட்டிக்கொண்டு அவள் ஆபீசில் விட்டுவிட்டு நீ நம்ம ஆபீஸ் போயிட்டு அங்க என்ன நிலவரம் என்று பார்த்து இன்னைக்கு ஃபுல்லா நீங்க ஹேண்டில் பண்ணியாகணும் போய் பாரு சீக்கிரமா என்று அனுப்பி வைத்தாள் மிதுனா.
சரி எங்களை அனுப்பி வைத்து விட்டு நீ இங்கு என்ன பண்ண போகிறாய் என்று கேட்டான் ரிஷ்வந்த்.
ம்ம்.. இந்த ஹாஸ்பிடல்ல குழந்தை காய்க்கிற மரம் ஒன்று இருக்கிறதாம். அது தான் உனக்கும் புவனாவுக்கும் சேர்த்து இப்பவே ஒரு குழந்தை ஆர்டர் பண்ணிட்டு போலாம்னு வெயிட் பண்றேன். போடா லூசு நான் சொன்னதை செய் என்று சொன்னாள் மிதுனா.
இது உனக்கு தேவையா என்பது போல் புவனா அவனை பார்த்து சிரித்துக் கொண்டு நின்றாள்.
பாவி அவ என்னை கலாய்ச்சிட்டு இருக்கா... நீ சிரிச்சிட்டு இருக்கியா, வந்து தொலை என்று புவனாவை இழுத்துக்கொண்டு சென்றான் ரிஷி.
பார்க்கிங் வரை அமைதியாக சென்ற புவனா அங்கே அவனோடு வண்டியில் ஏறாமல் வெளியிலேயே நின்று கொண்டு இருந்தாள்.
அடியேய் உனக்கு என்ன டி... இன்னும் மிச்சம் இருக்கு!!!.. என்று மனதிற்குள் சலித்துக் கொண்டாலும், வெளியில் செல்ல குட்டி ஏன் மா இன்னும் வண்டியில் ஏறாமல் இருக்கிற... வா... வாடா செல்லம் என்று அழைத்தான் ரிஷி.
அவளோ எதுவும் பேசாமல் கைகளை கட்டிக் கொண்டே வெளியே நின்றாள்.
நான் என்ன சொன்னேன் அதற்கு மிதுனா என்ன சொன்னாள், மிதுனா சொல்லியதற்கு நான் என்ன சொன்னேன்... ஒவ்வொன்றாக யோசித்துப் பார்க்க கடைசியில் தான் சொல்லிய வார்த்தை என்ன என்று யோசித்தவன், ஆஹா வந்து தொலை என்று சொல்லி விட்டேனா !!!!????;..
இவர்கள் அனைவரும் சேர்ந்து நம்ம ஒருத்தன வச்சு செய்வாளுக நம்ம ஒரு வார்த்தை... ஒத்த வார்த்தை எப்பவாவது தெரியாம சொல்லிட்டோம்னா மூஞ்சிய தூக்கி ஏழு ஊருக்கு நீட்டி வச்சுக்குவாளுக என்று மனதுக்குள் பொறுமியவன் வெளியில் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு... காரில் இருந்து கீழே இறங்கி வந்து புவனாவை தோளோடு அனைத்து... செல்ல குட்டி மாமா தெரியாம சொல்லிட்டேன் டா.
மன்னிக்க மாட்டியா... சாரி டா என் பூந்தி... சீச்சீ சாரி பேபி... என் செல்லக்குட்டி புவினு சொல்ல வந்தேன் அது தான் பூந்தி ஆகிவிட்டது என்று முறைத்துக் கொண்டு நின்ற அவளிடம் காதை பிடித்து தோப்புக்கரணம் போட...
இவ்வளவு நேரமும் அமைதியாக நின்றவள் ஓஹோ அப்போ நாங்க உன்னை வச்சு செய்யும் போதெல்லாம் இப்படித் தான் மனதுக்குள் எங்களை கழுவி கழுவி ஊத்தியதோடு இல்லாமல், எங்களுக்கு பட்ட பெயர் எல்லாம் வைத்து இருக்கிறாயா நீ...
இது தெரியாமல் இவ்வளவு நாட்களாக நாங்கள் தான் முட்டாளாக இருந்து இருக்கிறோம்... அதுவும் உன்னை போய் ரொம்ப நல்லவன்... என்று நம்பி விட்டேன் என வடிவேலு பாணியில் சொல்லி தன் நெஞ்சில் குத்திக் கொண்டாள் புவனா.
ஐயையோ இவ சீரியஸா ... பேசுறாளா... சிரிச்சுக்கிட்டே பேசுறாளா இல்ல வில்லங்கமா இருக்காளா ஒன்றும் தெரியவில்லையே.. என்று மனதில் புலம்பிக்கொண்டவன், அவளின் காலில் விழுகாத குறையாக கெஞ்சி கதவை திறந்து உள்ளே தள்ளி உட்கார வைத்தான்.
உள்ளே அமர்ந்தவள் அமைதியாகவே அமர்ந்து இருக்க அவனாகவே அவளுக்கு சீட் பெல்ட் போட்டு விட்டு... காரை ஸ்டார்ட் செய்தான் ரிஷி.
எப்பவும் படபடவென்று பேசிக்கொண்டே இருப்பவள் இன்று அமைதியாகவே வந்தாள் புவனா.
புவனாவின் அமைதி ரிஷ்வந்துக்கு ஏதோ செய்ய... அருகில் இருந்த ஒரு சின்ன காபி ஷாப்பில் நிப்பாட்டியவன், புவனாவை பார்க்க அவளோ எனக்கென்ன வந்தது என்று யாருக்கோ வந்த விருந்து என்று அமைதியாக அமர்ந்தே இருந்தாள்.
ஒரு நீண்ட பெருமூச்சு எடுத்து விட்டவன் மறுபடியும் தானே சீட் பெல்ட் கிளிப்பை கழட்டி விட்டு..... அவளின் புறம் வந்து கதவை திறந்து இப்பவும் அவளை கீழே இறக்கி கையோடு கூட்டி சென்றான் காபி ஷாப்பிற்கு....
மருத்துவமனையில்...
சனாதனும் மிதுனாவும் வெளியில் நிற்க... சரோஜா அம்மாவிடம் சஞ்சனா பேசிக் கொண்டு இருந்தாள்.
சரோஜாவும் சஞ்சனாவின் குடும்ப அமைப்புகள் அனைத்தையும் விலாவாரியாக கேட்டு தெரிந்து கொண்டார்.
அவர் கேட்பதிலேயே எதற்காக கேட்கிறார் என்று புரிந்து கொண்ட சஞ்சனாவிற்கு தான் ஒன்றும் சொல்ல முடியவில்லை... அவள் மனக்கண்ணில் சனாதன் வந்து வந்து போக பெண்ணவளுக்கு முதன் முறையாக கூச்சமும் வெட்கமும் போட்டி போட்டு வந்தது.
சஞ்சனாவின் பேச்சின் ஆரம்பத்தில் ருத்ராவிற்கு அவளை பேசி முடிக்கலாம் என்று நினைத்து இருந்த சரோஜா அம்மாவின் மனக்குழப்பத்தையும் தன்னுடைய மனதின் எண்ணத்தின் மூலமாக தான் விரும்புவது சனாதனை என்பதை சொல்லாமல் சொல்லி இருந்தால் சஞ்சனா.
ஆமாம் அவள் என் பேச்சில் பெரும்பகுதி சனாதனனை பற்றியும் அதுவும் அவனை திட்டுவது போல் திட்டிக் கொண்டிருந்தாலும் அவனை திட்டும்போது எல்லாம் அவள் முகமும் கன்னமும் சிவப்பதைக் கண்டே அனுபவசாலியான சரோஜா புரிந்து கொண்டார் .
அதன் பிறகு தான் அந்த வீட்டில் உள்ளவர்கள் யார் யார் எப்படி என்று அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டவர் அவர்களுடைய குடும்பப் பின்னணி மிகவும் பிடித்தும் போய்விட... தன அண்ணனுக்கு போன் செய்து தன்னுடைய விருப்பத்தையும் சொல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார் சரோஜா.
வெளியில் நின்ற சனாதன் மிதுனாவிடம்.. மிதுனா எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணுவியா என்று கேட்டான்.
சொல்லுங்க சார் என்ன பண்ணனும் என்று கேட்டாள் மிதுனா.
சார் வேண்டாமே.. கால் மீ தனா.. என்று சொன்னான்.
ஓகே சஞ்சனா ருத்ராவை மாம்ஸ் கூப்பிட்டா... அப்ப நானும் உங்களை தனா மாமா கூப்பிட வா என்று கேட்டாள் மிதுனா.
நீ எப்படி வேணாலும் கூப்பிடு அலுவலகத்தில் மட்டும் உறவு முறை வைத்து கும்பிட்டு விடாதே. எதற்கும் ஒரு நேரம் காலம் இருக்கு.. அதனால் வெளி இடத்தில் மட்டும் கூப்பிட்டுக்கொள் என்று சொன்னான் சனாதன்.
ஓகே மாமா இப்ப என்ன உதவி செய்யணும் நான் உங்களுக்கு என்று கேட்டாள் மிதுனா.
மிதுன் அவனுடைய பிரச்சனை என்ன அப்படின்னு எங்க எல்லாருக்குமே தெரியும். அவனுக்கு ஒரு மாறுதல் தேவை என்று தான் இந்தியா அழைத்து வந்தோம் இங்கு வந்து அவன் மிகவும் இயல்பாக இருக்கிறது போல் உங்கள் அனைவருக்கும் தெரியும் ஆனால் அவனுடைய இயல்பு இது அல்ல எங்கள் அனைவரையும் விட மிகவும் புத்திசாலி அதே சமயம் மிகவும் அன்பானவன் யாரிடமும் கடுமையாக ஒரு சொல் செல்லாதவன் ஆனால் இப்பொழுது அப்படியே மாறி...
எதற்கும் சந்தேகம்.. எதிலும் சந்தேகம்.. யாரையும் நம்பாமல் உறவுகளின் மீது எந்த நம்பிக்கையும் இல்லாமல், உறவுகள் என்றால்... எங்களை தவிர வேறு யாரையும் அவன் உறவுகளாக ஏற்றுக் கொள்ளப் போகும் மனநிலையில் இல்லை.
அதற்கு எல்லாம் காரணம் ஒரே ஒரு என்று எதையோ சொல்ல வந்தவனை இடை மறித்த மிதுனா,...
மாமா நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் அவருடைய பிரச்சினை என்னவென்று அவர் வாயாலே என்னிடம் சொன்னால் மட்டும் தான், அவருக்கு என்னால் ஏதாவது உதவி செய்ய முடியும். அதே சமயம் அவருக்கு ஏதோ ஒரு பிராப்ளம் இருக்கு என்று எனக்கும் நன்றாகவே தெரிந்தது...
நீங்கள் அனைவரும் எவ்வளவு ஜாலியாக ஜோவியலாக இருக்கும் போது அவர் மட்டும் தனித்து இருப்பது எனக்கு நெருடலாக தான் இருந்தது. அது என்ன ஏது? அவரை மறுபடியும் பழையபடி ஆக்குவது எல்லாம் என் பொறுப்பு. நான் பார்த்துக் கொள்கிறேன் ... அதற்கு நீங்கள் இப்போது எனக்கு ஒன்று செய்ய வேண்டும், அது என்ன அப்படின்னா?.. எப்படியாவது என்னை அவரோடு இப்போது வெளியில் செல்லும் போது கோர்த்து விட வேண்டும்.
இந்த மாதிரி என்னை தனியா அவர் கூட கோர்த்து விட்டுட்டீங்கன்னு வச்சுக்கோங்க... அவரை பழையபடி நான் மாற்றி விடுகிறேன் என்று தில்லாக சொல்பவளை பார்த்து உங்கள் மூன்று பேருக்கும் கொஞ்சம் கூட வெட்கம், கூச்சம் இது எல்லாம் இருக்காதா... எப்படி இப்படி சட்டு சட்டென்று முடிவு எடுக்கிறீர்கள்.. என்ன இருந்தாலும் நாங்கள் யாரும் அறிமுகம் இல்லாத ஆண்கள் தானே எப்படி உங்களுக்கு எங்கள் மீது இவ்வளவு நம்பிக்கை வந்தது என்று கேட்டான்...
அடக்கடவுளே இவ்வளவு நேரம் நல்ல தானே இருந்தீக.... ஏன் இப்படி திடீர்னு 60s,70s.. போய்ட்டீங்க... உங்களைப் பற்றி எங்களுக்கு தெரியாதுன்னு யார் சொன்னது? எங்களை பற்றி உங்களுக்கு தெரியாதுன்னு யார் சொன்னது? நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் விநாயகம் அங்கிள் பண்ணுன கோல்மால்ல ஒரே குறிக்கோளோட தான் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.
நாம் அனைவரும் இணைந்து இருப்பது அந்தப் பிள்ளையாரப்பனின் திருவிளையாடல் தான் எனக்கு தெரியும். உங்களுக்கும் தெரியும்.. அது மட்டும் இல்லாமல்... ஒருவரின் மீது நம்பிக்கை என்பது உணர்ந்து வர வேண்டும்... அது இருப்பதால் தான் நீங்கள் என்னிடம் வந்து பேசுகிறீர்கள். அந்த நம்பிக்கையில் தான் நானும் உங்களிடம் பேசுகிறேன்.
இதையும் மீறி உண்மையில் எனக்கு மிதுனை மிகவும் பிடித்து இருக்கிறது. அவர் வாழ்வில் என்ன நடந்து இருந்தாலும் அதை சரி பண்ணி அவரை மாற்றி எனக்கு உடையவராக மாற்றிக் கொள்ளும் திறமை எனக்கு இருக்கிறது. இதுவரை என்னுடைய எண்ணத்தை என்னுடைய குட்டி சாத்தான்களிடம் கூட சொல்லவில்லை...
உங்களிடம் தான் சொல்லி இருக்கிறேன் அதுவும் எதற்காக என்று உங்களுக்கே தெரியும்.. ஃப்யூச்சர்ல நீங்க அண்ணன் தம்பிங்க எல்லாருமே எங்ககிட்ட மாட்டிக் கொண்டு எங்களுக்கு வர போற அடிமைகளில் ஒருவர் தானே நீங்களும்... அது தான் அந்த நம்பிக்கையில் தான் என்று சொல்லி விட்டு, அவன் புரிந்து கொள்ளும் முன்பே வேகமாக சரோஜாவின் அறைக்குள் சென்று விட்டாள் மிதுனா.
உள்ள எவ்ளோ வேகமாக சென்றாளோ அதே வேகத்தில் திரும்பி வந்து இது போல் அதாவது வெட்கம் கூச்சம் இது எல்லாம் கொஞ்சம் கூட இல்லையா என்று என்னிடம் கேட்டது போல், சஞ்சுவிடம் இப்படி எல்லாம் கேட்டு விடாதீர்கள் அவள் பதிலடி வேறு மாதிரி இருக்கும் என்று, ... அவன் என்ன இருந்தாலும் அப்படி கேட்டு இருக்கக் கூடாது என்பதற்கும் பதிலடி கொடுத்து விட்டு வேகமாக உள்ளே சென்றாள் மிதுனா.
மிதுனாவின் பேச்சிலும் அவளின் உரிமையிலும் சிறிது நேரம் சிரித்துக் கொண்டு இருந்தவன்...ஐயோ கடவுளே இந்த வாலு கூட்டத்தில் நாங்கள் மாட்டிக்கொண்டோமே...
என்ன சொன்னாள் பிள்ளையாரின் திருவிளையாடலாம் ... ஆமாம் எல்லாம் இந்த விநாயகம் பண்ணிய வேலை தானே... மாமா நேரில் பார்க்கும் போது உனக்கு இருக்கு என்று சொல்லி சிரித்துக் கொண்டே அவனும் உள்ளே சென்றான்..
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...