• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 17, 2025
Messages
41
பூங்குன்றன் அண்ணன் வீடு.

பூங்குன்றன் அண்ணன், நக்கீரன் தம்பியிடம் " பூங்குன்றா, உனக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன், உன் அபிப்ராயம் என்ன?"என்று கேட்க,

பூங்குன்றன் " இல்லை அண்ணா, நான் பத்திரிகை துறையில் கொஞ்சம் சாதித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன் "
என்று அண்ணனிடம் பவ்யமாக சொன்னான்.

பூங்குன்றன் சென்றதும், நக்கீரன் மனைவி சுசீலா தன் கோபத்தை பாத்திரம் மீது காட்டினார்.

நக்கீரன், சுசீலாவின் செயல்களை புரிந்து கொண்டு, ' சீக்கிரம் பூங்குன்றனுக்கு திருமணம் செய்ய வேண்டும் ' என்று மனதிற்குள் நினைத்து கொண்டு, வேலைக்கு கிளம்பினார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு,
12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

கோமதியாள் புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று, முதல் முறையாக அந்த பள்ளியில் உள்ள மாணவி யோகேஷ்வரி 593 மார்க் வாங்கி, தென்காசி மாவட்டத்தில் முதல் மார்க வாங்கிய மாணவியாக பெருமைப் பெற்றார்.

593 மார்க் வாங்கிய மாணவி யோகேஷ்வரியை, தன் தோழிகள் மற்றும், சக மாணவர்கள்,வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் நீலகண்டன் உட்பட அனைவரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

தென்காசி மாவட்டத்தில் 12 ம் வகுப்பு
பொதுத்தேர்வில் அதிக மார்க் வாங்கிய யோகேஷ்வரியிடம் பேட்டி எடுக்க ஒரு தினசரி நாளிதழில் இருந்து வந்தார்கள்.

யோகேஷ்வரி அந்த நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "நான் இந்த சாதனை புரிய காரணம், 'கருடப்பார்வை' தினசரி நாளிதழில் வந்த 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் தான் " என்றார்.
மேலும் என் இந்த சாதனைக்கு பக்க பலமாக இருந்தது, என் வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், என் வகுப்பு மாணவர்கள் மற்றும் என் குடும்பத்தினர்" என்று சொல்லி விட்டு, தன் வெற்றியை கொண்டாட சென்றார்.

அன்று மாலை வந்த நாளிதழில்,
தென்காசி மாவட்ட , கோமதியாள் புரம் அரசு மேல்நிலைப்பள்ளி 593 மார்க் வாங்கிய மாணவி யோகேஷ்வரியின்
பேட்டி இருந்தது. அதில் 'கருடப்பார்வை நாளிதழின் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் பற்றிய செய்தி,சிறப்பு பார்வை பக்கத்தில் இருந்தது.

அதன் மூலம் 'கருடப் பார்வை ' நாளிதழ் மக்கள் மத்தியில் தெரிய ஆரம்பித்தது.

கருடப்பார்வை நிறுவனர் பூங்குன்றனை அழைத்து, வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு,
"உங்கள் கணிப்பு படி, அந்த பள்ளி மாணவி முதல் மார்க வாங்க நம் நாளிதழின் மாதிரி வினாத்தாள் தான் காரணம் என்று பாராட்டி உள்ளார்" என்றார் .

"மேலும் நாம் அந்த பள்ளி அரையாண்டு தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வில்லை என்று எந்த நாளிதழும் போடாத செய்தியை நாம் போட்டு இருந்தால் கூட, யாரும் நம் நாளிதழை வாங்கி படிக்க மாட்டார்கள்".

"ஆனால், உங்கள் அறிவுரைப் படி செய்ததால்,இனிமேல் பொதுமக்கள் நம் நாளிதழையும் வாங்கி படிப்பார்கள் " என்று பூங்குன்றனிடம் மகிழ்ச்சி பொங்க சொன்னார்.

பூங்குன்றனும் " ரொம்ப சந்தோசமாக உள்ளது" என்று சொல்லி விட்டு, நம் நாளிதழிலும் அந்த பள்ளி மாணவி பற்றி பெருமையாக போடுவோம்.
மேலும் முகப்பு பக்கத்தில் அந்த மாணவிக்கு நம் நாளிதழ் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்த மாதிரி போடுவோம் " என்று யோசனை சொன்னான்.

நிறுவனரும்"அப்படியே செய்வோம்"என்றார்.

இதற்கிடையில் பூங்குன்றனுக்கு திருமணம் செய்ய, ஒரு தரகர் மூலம்
குழலியை பெண் பார்க்க செல்ல முடிவெடுத்தார் நக்கீரன்.

அதேபோல் குழலி வீட்டிலும், அந்த தரகர்," பூங்குன்றன் வீட்டில் இருந்து உங்கள் மகளை பெண் பார்க்க வருகிறார்கள்" என்று தகவல் சொல்ல, குழலி அப்பா, "என் மகள் படிப்பை பற்றி மாப்பிள்ளை வீட்டில் சொல்லியாச்சா? " என்று கேட்க,

தரகர் " மாப்பிள்ளை வீட்டில், பெண் படிப்பைப் பற்றியோ, வரதட்சணை பற்றியோ, ஏன் பெண் போட்டோ கூட கேட்க வில்லை " என்றார்.

சுந்தரம் "மாப்பிள்ளை என்ன வேலை செய்கிறார்" என்று கேட்க, தரகர் "மாப்பிள்ளை, கருடப்பார்வை நாளிதழில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். அப்பா அம்மா இல்லை.
அண்ணன் ஒருவர் மட்டும்தான் " என்றார்.

சுந்தரம், தன் மனைவி, மகள் குழலி மகன் வளவனிடம், தரகர் பேசியதைப் பற்றி சொல்ல, அவர்களும் சம்மதம் சொன்னார்கள்.

ஒரு நல்ல நாளில் குழலியை பெண் பார்க்க, கோமதியாள் புரத்திற்கு பூங்குன்றன், மற்றும் அவன் அண்ணன்,அண்ணி, அண்ணன் மகள் என நான்கு பேர் வந்தார்கள்.

குழலிக்கு, பூங்குன்றனைப் பார்தத்தும், முதல் முறையாக அன்று சிற்றுந்தில் பார்த்த நியாபகம் வந்தது.

அதேபோல் பூங்குன்றனுக்கும்
குழலியை முதல் முறையாக சிற்றுந்தில் பார்த்த நியாபகம் வந்தது.

சுந்தரமும் பூங்குன்றனைப் பார்த்து விட்டு, அன்று பெட்டிக்கடையில் வைத்து பூங்குன்றனிடம் "கோபப்பட்டதற்கு மன்னிப்பு கேட்க",

பூங்குன்றன், அதை கவனிக்காமல், அவனுக்கு வந்த மொபைல் அழைப்பை ஏற்று அதற்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தான்.

பூங்குன்றன் அழைப்பை துண்டித்ததும், சுந்தரம் மீண்டும், "மன்னிப்பு கேட்க " அதை கவனிக்காமல் பூங்குன்றன் ஒருவருக்கு மொபைலில் அழைப்பு விடுத்தான்.

பூங்குன்றன், போனில் பேசி முடித்ததும்,மீண்டும் ஒரு முறை சுந்தரம் மன்னிப்பு கேட்க முயற்சிக்க,
பூங்குன்றன் மீண்டும் மொபைலில் யாருக்கோ சாட் செய்ய, சுதந்திரத்திற்கு உள்ளுக்குள் கோபம் வந்தது. இருப்பினும் கோபத்தை கொண்டார்.

அங்கே இருந்த குழலி குடும்பத்தினர், என்ன என்பது போல் பார்க்க, சுந்தரம், பிறகு சொல்கிறேன் என்று கையால் சாடை செய்தார்.

பெண் பார்க்கும் படலம் நல்ல படியாக முடிந்தது. பூங்குன்றன் அண்ணன் நக்கீரன், " ஏற்கனவே இருவரின் ஜாதகப் பொருத்தம் பார்த்தாச்சு.எல்லாம் சரியாக உள்ளது.
அதனால் ஒரு நல்ல முகூர்த்தத்தில் திருமணம் செய்து வைக்க, நாள் நாங்க குறித்து கொண்டு வரவேண்டுமா? இல்லை நீங்கள் குறிக்கிறீர்களா?" என்று கேட்க,

சுந்தரம்" நீங்களே குறித்து கொண்டு வாருங்கள்.ஆனால்..." என்று இழுத்தார்.

நக்கீரன் "என்ன விசயம், தயங்காமல் சொல்லுங்க " என்றதும், சுந்தரம், "திருமணம் எங்கள் வீட்டில் வைத்து நடக்க ஆசைப் படுகிறோம்" என்றார்.

நக்கீரன் மனைவி சுசீலா இதைத் கேட்டு விட்டு, " அதெல்லாம் கூடாது,
எங்க அப்பாவும் இதேபோல் தான் கேட்டார்கள். ஆனால் என் கணவர் வீட்டில் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லி விட்டார்கள். இப்போது உங்களுக்கு மட்டும் எப்படி சரி என்று சொல்வார்கள் சித்தப்பா" என்று சத்தமாக சொல்லி முடிப்பதற்குள்,

பூங்குன்றன் " அதைப் பற்றி என்ன, திருமணம் இங்கே நடக்க, எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என்று சொன்னான்.

சுசீலா, தான் பேசும் போது குறுக்கே, அதுவும் வரப் போகும் மாமனாருக்கு ஆதரவாக பூங்குன்றன் பேசி விட்டானே என்று கோபத்தில் நக்கீரனை முறைக்க, நக்கீரன், பொறுத்துக் கொள் என்பது போல மனைவியிடம் கண் ஜாடையில் கெஞ்சினார்.

கருடப் பார்வை நாளிதழ் அலுவலகம்.
வளவன் உறுப்பினராக இருக்கும் கட்சி தலைவர் பிறந்தநாளுக்கு, வாழ்த்துக்கள் விளம்பரம் செய்ய, தன் நண்பர்களுடன் வந்தான்.

வளவன் சொன்ன அனைத்து விவரங்களையும் கேட்டு விட்டு, ஒரு ஆசிரியர் " ம்ம், நீங்கள் சொன்ன தேதியில் இந்த நாளிதழின் முகப்பு பக்கத்தில் உங்கள் வாழ்த்துக்கள் விளம்பரம் வரும் "என்று சொன்னார்.
வளவனும் சரி என்று சொல்லி விட்டு, அதற்குரிய பணத்தை கொடுத்து விட்டு, தன் நண்பர்களுடன் கட்சி அலுவலகத்திற்கு வந்தான்.

பூங்குன்றன் - குழலி திருமணத்திற்கு நக்கீரன் நாள் குறித்து விட்டு, அதை சுந்தரத்திற்கு போன் செய்து சொன்னான். மேலும் "பத்திரிகை தனித்தனியாக அடிப்போமா? அல்லது மொத்தமா அடிப்போமா ?" என்று கேட்க,

சுந்தரம்" மொத்தமாகவே அடித்து விட்டு, அதற்கு ஆகும் செலவில் ஆளுக்கு பாதியாக பிரித்துக் கொள்ளலாம் " என்றார்.

நக்கீரன்" ம்ம், பத்திரிகையில் யார் யார் பெயர் போட வேண்டும் என்று எழுதிக் கொண்டு நான் சொல்கிற அச்சகத்திற்கு வாருங்கள் " என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தார்.

வளவன் உறுப்பினராக இருக்கும் கட்சி அலுவலகம். வளவன் தன் நண்பர்களை அழைத்து, "நாளை நம் தலைவர் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் செய்தி போட சொல்லி விளம்பரம் செய்து இருந்தோம் அல்லவா !, அதில் இன்னும் சில வாக்கியங்களை சேர்த்து, தலைவர் நம் வாழ்த்தைக் கண்டு நம்மை பாராட்ட வேண்டும், அதனால் அந்த நாளிதழ் அலுவலகம் சென்று, நீங்களே , அந்த வாழ்த்துக்கள் செய்தியில் திருத்தம் செய்து வாருங்கள் " என்றான்.

வளவன்," நான் கட்சித் தலைவர் பிறந்தநாள் கூட்டம் போட, ஏற்பாடு செய்யப் போகிறேன்" என்று தன் நண்பர்களிடம் சொன்னான்.

கருடப்பார்வை நாளிதழ் அலுவலகம்.
வளவன் நண்பர்கள் வந்து, 'நாளை வாழ்த்துக்கள் செய்தி போடுவதில் சில வாக்கியங்களை சேர்த்து போட வேண்டும் "என்று சொல்ல , அதற்கு
அங்கே இருந்த அலுவலக ஆள், " என்ன வாக்கியங்களை சேர்த்து போட வேண்டும்?"; என்று கேட்க,

அதற்கு அவர் சில வாக்கியங்களை சொல்லி முடிக்கும் போது, அங்கே வந்த பூங்குன்றன்" இதை எங்கள் நாளிதழில் போட முடியாது " என்று சொல்ல, வளவன் நண்பர்கள்" ஏன் போட முடியாது " என்று பிரச்சினை செய்வது போல் கேட்க,

பூங்குன்றன், " நீங்கள் முதலில் கொடுத்த வாழ்த்துக்கள் செய்தி போட எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்போது நீங்கள் சேர்க்க சொன்ன வாக்கியங்கள், ஒரு சமூகத்தை பெருமையாக சொல்வது போல் உள்ளது " என்று பணிவாக சொல்ல,

வளவன் நண்பர்கள்" நாங்க இதை மாதிரி தான் பிரபலமான நாளிதழில் விளம்பரம் செய்தோம், அவர்கள் மறுக்காமல் சரி என்றார்கள், நீங்கள் இன்னும் பிரபலமே ஆக வில்லை " என்று சொல்லி விட்டு நக்கலாக சிரிக்க,

பூங்குன்றனுக்கு கோபம் வந்தது.
" அப்ப நீங்க அந்த பிரபலமான நாளிதழில் போய் விளம்பரம் செய்யுங்கள் " என்று சொல்லி விட்டு,; அங்கே இருந்த அலுவலக ஆளிடம் அவர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள்" என்று சொல்லி விட்டு வேகமாக தன் அறைக்கு சென்று விட்டான்.

வளவனின் நண்பர்கள், "தாங்கள் பேசியது தவறு தான் என்று அங்கே இருந்தவரிடம் விளக்கம் கொடுத்து விட்டு, நாங்கள் முதலில் சொன்ன வாழ்த்துக்கள் செய்தியை போடுங்கள் " என்று சொல்ல,

அந்த அலுவலக ஆள், " பூங்குன்றன் மறுப்பு சொன்ன பிறகு, இங்கே நாங்க பதிப்பு செய்தால்,
இந்த நாளிதழ் நிறுவனரே கோபப்படுவார் " என்று சொல்லி விட்டு, அவர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தார்.


தொடரும்,
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top