• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
5. யார் இவர்கள் ?

பனிஷ்மென்ட் கொடுப்பதற்காக சஞ்சனா புவனா மிதுனா மூவரையும் அழைத்து அவர்கள் சஞ்சனா புவனா இருவருக்கும் கீழ்பாக்கம், எக்மோர் என்று இரண்டு வேறு வேறு பிரஞ்சுகளுக்கு அவர்களை மாற்றி விட்டதாக சொல்லவும்...

மிதுனா கோபத்தில் பேசிக் கொண்டு இருக்கும் போது சஞ்சனா அவளை சமாதானப்படுத்தி, அவளையும் புவனாவையும் வெளியே அனுப்பி விட்டு நீங்கள் ஆரம்பித்த விளையாட்டை நாங்கள் விளையாடுகிறோம் சார். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று சொன்னவள் வரட்டுமா எம்டி மச்சான் என்று சொல்லி விட்டு திரும்பிய அவளை ஒரு நிமிடம் இரு என்று சொன்னான் ஆனால் அவன் குரலில் முற்றிலும் இவ்வளவு நேரம் இருந்த இலகு தன்மை மாறி கடும் கோபமாக இருந்தது அந்த ஒற்றை வார்த்தையே.

அவனின் கோபம் உணர்ந்தாலும் மெல்ல மெதுவாக திரும்பி அவனிடத்தில் வந்தவள்... சொல்லுங்க எம்டி சார் என்று கேட்டால் மிகவும் பணிவாக சஞ்சனா.

அவளின் பணிவு மேற்கொண்டு ஆத்திரத்தை கிளப்ப ஏன் என்றால் அது அவள் நடிக்கிறாள் என்பது அப்பட்டமாக தெரிந்தது.

ஒருமுறை கண்களை இறுக முடி திறந்தவன்.. இங்க பாருங்க மிஸ் சஞ்சனா... விநாயகம் அங்கிள் சொன்ன ஒரே காரணத்திற்காக தான் உங்கள் மூன்று பேரையும் மன்னித்து வேற வேற பிரான்ச் மட்டும் மாத்தினேன். இல்ல என்றால் இங்கு நடப்பதே வேறு என்று கோபமாக சொன்னான்.

அவன் கோபத்தை கண்டு பயந்து நடுங்குபவளா சஞ்சனா... இப்போது மறுபடியும் திமிர் ஆகவே அவன் முன்பு அமர்ந்து, சோ மிஸ்டர் எம்டி சார், நாங்கள் என்ன தவறு செய்தோம் இந்த அளவுக்கு கடுமையாக எங்களை தண்டிப்பதற்கு என்று கேட்டாள் சஞ்சனா.

நீங்கள் சொன்னீர்களே கார் பார்க்கிங் விளையாடியதற்காகவா.. அது ப்ளே கிரௌண்ட் இல்ல தான் பட் நாங்க யாரையும் கஷ்டப்படுத்தலையே எங்க இஷ்டத்துக்கு நாங்க விளையாடினோம்.

ஓஹோ என் ஃப்ரெண்ட் வந்து உங்ககிட்ட ப்ரொபோஸ் பண்ணதால உங்க மனசு காயப்பட்டு அதற்காக இந்த பனிஷ்மென்ட்... அப்படி சொல்ல வரீங்களா? ஆனா பாருங்க...

எப்படி யோசித்தாலும் அந்த இடத்துல நீங்க அடிக்காம வந்து இருந்தா கூட நீங்க சொல்றது ஓகே அந்த இடத்துல தான் உடனே பனிஷ்மென்ட் அங்கையும் கொடுத்துட்டீங்களே அவள அடிச்சு.. அது மட்டும் இல்லாமல் அட்வைஸ் வேறு இது கார் பார்க்கிங் நாட் பிளே கிரவுண்ட் என்று அப்புறம் என்ன... ம்ம் ... அப்புறம் எதுக்கு இந்த பனிஷ்மென்ட் என்று தனக்குள் பேசிக் கொள்வது போல பேசிக்கொண்டே அவனை வெறுப்பேற்றிக் கொண்டு இருந்தாள் சஞ்சனா.

லுக் மிஸ் சஞ்சனா எனக்கு இந்த மாதிரி ஓவரா ஆட்டிட்யூட் உள்ள பெண்கள் யாரையும் பிடிக்காது அதற்காகத்தான்.. எனக்கு உங்களை யாரையுமே பார்க்க பிடிக்கவில்லை.. அதே சமயம் விநாயம் அங்கிளுக்காக உங்களை வேலை விட்டு நிறுத்தவும் முடியவில்லை.. அதனால தான் வேற பிரான்ச் மாற சொல்றேன் போதுமா என்று கோபமாக சொன்னான்.

ச்சு... சச்சு... பாவம் விநாயகம் அங்கிள் என்று அவருக்கு வருத்தப்பட்டாள் சஞ்சனா.

ஏய்... இடியட் இப்ப எதுக்கு அங்கிள் பாவம் என்று சொல்கிறாய் என்று கேட்டான் எம்டி.( அவன் இந்த கம்பெனிக்கு எம்டி தான் ஆனால் அவன் கழுத்தில் பாருங்கள் எம்டி என்ற சிக்னேச்சர் இல் தான் செயின் போட்டு இருப்பான்... ஆமா இவன் பெயர் என்னவாக இருக்கும்... )

அதுவா இவ்வளவு நாட்களாக நல்ல அழகாக கொண்டு போய்க் கொண்டிருந்த இந்த கம்பெனியை இப்படி பாழும் கிணற்றில் தள்ளிவிட்டு செல்வது போல் உங்களிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டாரே என்று தான் வருத்தப்பட்டு சொன்னவள் அதற்கு மேல் அங்கு நிற்காமல்....

நாளையில் இருந்து இந்த ஆபீஸ்க்கு நான் வரமாட்டேன். ஆனால் கூடிய சீக்கிரம் இதே ஆபீஸில் மறுபடியும் நாங்கள் மூவரும் ஒன்றாக வேலை செய்வோம். அது மட்டும் இல்லாமல் அப்ப நீங்களே எம்டி சார் நீங்களே இங்கே வர சொல்லி இருப்பீர்கள்... என்று சொல்லி விட்டு சென்றாள்.

அவள் வெளியே சென்ற பின்பு....

விநாயகம் அங்கிளுக்கு போன் செய்தான்...

அவன் போன் செய்வான் என்று காத்துக் கொண்டு இருந்து இருப்பார் போல அடுத்த ரிங்கில் அட்டென்ட் செய்தவர்...

என்ன யங் மேன் எப்படி இருக்கு என்னுடைய ஆபீஸ் என்று சிரிப்புடன் கேட்டார் விநாயகம்.

அங்கிள்... ஏன் உங்களுக்கும், டாடிக்கும் இவ்வளவு கோபம் எங்கள் ஐந்து பேர் மீதும்... நாங்கள் உண்டு எங்கள் வேலை உண்டுன்னு ஸ்டேட்ஸ்ல சந்தோஷமா தானே இருந்தோம். உங்க நண்பரை நாங்கள் எந்த விதத்திலாவது கஷ்டப்படுத்தி இருக்கிறோமா..

ஆனால் நல்லா எங்கள வச்சு செய்வதற்காகவே இங்கே அனுப்பி வைத்தீர்களா...

நீங்க ஆஹா ஓஹோன்னு பாராட்டி அனுப்பினீர்களே அந்த மூன்றும் ஒவ்வொரு விதமான பிசாசுகள்... முடியல அங்கிள் எனக்கு எவ்வளவு கோபம் வருதோ அவ்வளவு கோபம் உங்கள் மேல் காட்ட தோன்றுகிறது.

ஆனால் நான் கோபப்படக்கூடாது என்று நீங்கள் சொல்லி இருப்பதால் அதுவும் டாடி மேல் சத்தியம் செய்து இருப்பதால் இப்போது அமைதியாக இருக்கிறேன். ஆமாம் எங்கே உங்கள் அருமை நண்பர் உங்கள் வால் பின்னாடி தானே இருக்கும்...

இருக்கட்டும் அவரிடம் பிறகு பேசிக் கொள்கிறேன் என்று சொன்னவன்... விநாயகம் என்ன சொல்ல வருகிறார் என்று எதுவும் கேட்கவில்லை தானாக பேசிவிட்டு தானாகவே போனை வைத்து விட்டான்.

அந்த பக்கம் விநாயகம் சிரித்துக் கொண்டே இருந்தார். போன் லவுட் ஸ்பீக்கரில் போட்டு பேசி கொண்டு இருந்தார் விநாயகம்.. அதனால் இதுவரை தன் மகன் பொரிந்து தள்ளிய அனைத்தையும் கேட்டுக் கொண்டே இருந்தவர்...

ஏன் விநாயகம் நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா என்று ஒரு மாதிரி மனம் கேட்காமல் ஒரு விதமான பரிதவிப்போடு தன் மகனின் கோபத்தை கண்டு ஜெடி கேட்டார்.

தன் நண்பன் ஜெடியின் முகத்தில் தோன்றிய கவலையை பார்த்த விநாயகம்... டேய் சில் டா.

இங்கு இருந்தவரை அவங்க ஐந்து பேருக்குமே நீயும் சரி தங்கச்சியும் சரி... நல்ல பிள்ளைகளாக ஒழுக்கமாக வாழ கற்றுக் கொடுத்து விட்டீர்களே தவிர... நல்ல படிப்பை கொடுத்து பணம் சம்பாதிக்க கற்றுக் கொடுத்து விட்டீர்கள், கஷ்டம் என்றால் என்ன தெரியாமல், அதற்காக அவர்கள் கஷ்டப்பட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் சொல்லி அங்கு அவர்கள் கஷ்டப்பட அனுப்பவில்லை.

அது நீ பிறந்து வளர்ந்த மண்... அதைப் பற்றி அவர்களும் உணரட்டுமே என்று தான் அங்கு அனுப்பி இருக்கிறேன். இங்கு இருந்து சூழ்நிலைக்கு அங்கு அவர்கள் சட்டென்று ஒத்து போக கஷ்டமாகத் தான் இருக்கும்.

எந்த இடத்திற்கும் சென்றாலும் அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்வதற்கு பெண் பிள்ளைகள் போல பெண் பிள்ளைகளை பெற்றா வைத்திருக்கிறாய், எல்லாம் தடிமாடு மாதிரி ஆண் பிள்ளைகளா பெற்று வைத்திருக்கிறாய். கொஞ்ச நாள் நம்ம நாட்டுல நம்ம அட்மாஸ்பியர்ல வளர்ந்து பார்க்கட்டும்...

ஏன் என் தங்கச்சி ஏதாவது சொல்லும் என்று பயப்படுகிறாயா என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தார்... ஜெடியின் மனைவி ரூபவதி பெயருக்கு ஏற்றார் போல் அம்சமான அழகோடு தெய்வ கடாச்சாமாக இருப்பது போல், வெளிநாட்டில் இருந்தாலும் நான் என்றும் தமிழச்சியே என்பது போல் அழகான பட்டு சேலையில் சிறந்த முகத்தில் மஞ்சள் பூசிய முகத்தோடு மாரியம்மனை பார்ப்பது போலவே அழகாக இருந்தாள்.

இருவருக்கும் காப்பி எடுத்துக் கொண்டு வந்தார், என்ன அண்ணா யாரு உங்களுக்கு இப்போ போன் பண்ணியது பெரியவனா... உங்களுடைய சிரிப்பு சத்தம் கிச்சன் வரை கேட்டது... அப்ப என்னுடைய பெரிய தவப்புதல் வந்த கோபப்பட்டு உங்களிடம் கத்திருப்பான் சரியா என்று கேட்டுக் கொண்டே, இருவருக்கும் அந்த காபியில் அவர்களுக்கு தகுந்த அளவிற்கு சுகர் போட்டு கலக்கி இருவரிடமும் நீட்டினார்.

தங்கச்சி மா நீ சொல்றது மிகவும் சரியே பெரியவன் எம்டி தான் இப்படி கத்துறானே நீ அவனை இவ்வளவு நாட்கள் எப்படி தான் சமாளித்தியோ... ஆனால் கவலையே படாத இங்கு உன்னை பாடாய் படுத்தியதற்கு அங்கு அவர்கள் தரமாக படுவார்கள் என்று சொன்னார்.

அவர் சொன்ன விதத்தில் சிரித்தாலும் ஏன் அண்ணா மிகவும் கஷ்டமாக இருக்குமா அங்கு என்று கேட்டாள் பாவமாக...

ரூபவதியின் முகத்தில் தோன்றிய தாய்மையின் கவலையை பார்த்த விநாயகம் தங்கச்சிமா இந்த அளவுக்கு நீ கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. நான் ஐந்து பேரையும் நல்லா தரமான இடத்திற்கு தான் அனுப்பி வைத்து இருக்கிறேன்... அங்கு அவர்கள் நன்றாக இருப்பார்கள் கொஞ்சம் முதலில் தடுமாற்றமாக இருக்கும் பிறகு போகப்போக சரி பண்ணிக் கொள்வார்கள் நீ என்ன பெண் பிள்ளையை வா பெத்து வைத்திருக்கிறாய், ஆண் சிங்கங்களை பெத்து வைத்திருக்கிறாய் ஒன்றும் கவலைப்படாதே... என்று சொன்னவர் மனதிற்குள் நினைத்துக் கொண்ட பாவம் ஐந்து பேரும் என்ன பாடுபட போகிறார்களோ பாழம் படட்டும்...

வாழ்க்கை அழகான பொக்கிஷம் அந்த பொக்கிஷத்தை தேடுவதற்கு சரியான இடம் தேவை அந்த இடம் தான் இந்த ஐவருக்குமே சிறப்பான இடம் என்று தனக்குள்ளாக சொல்லிக் கொண்டவர்...

சரி வா மா சாப்பிட போகலாம் என்று அழைத்துக் கொண்டு சென்றார்.

இங்கு அலுவலகத்தில்...

எம்டி ரூமில் இருந்த வெளியில் வந்தவள்.. நேராக தங்கள் கேபினுக்கு செல்ல அங்கே புவனாவும் மிதுனாவும் சரியான கோபத்தில் எதிரில் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு இருந்த ரிஷியை திட்டிக் கொண்டு இருந்தார்கள்.

அவனும் எதற்கு திட்டுகிறார்கள் எதற்கு திட்டுகிறார்கள் என்று தெரியாமல் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தான்.

அவர்கள் இருவரிடமும் திட்டு வாங்கிக் கொண்டு இருக்கும் ரிஷ்வந்தை பார்த்துக்கொண்டே வந்து அவர்கள் அருகில் அமர்ந்தவள்..

அவள் அருகில் அமர்ந்த பின்னர் தான் அவள் வந்தது கவனித்து புவனா, மிதுனா இருவரும் இவ்வளவு நேரமும் ரிஷிவன் தேத்தி கொண்டிருந்தவர்கள் இப்போது அவளை திட்ட ஆரம்பித்தார்கள். ஏய் லூசாடி நீ இப்ப எதற்காக அந்த வீணா போனவன் சொன்னா கண்டிஷனுக்கு ஒத்துக்கொள்கிறேன் என்று சொன்ன, நீ சொன்னது மட்டும் இல்லாமல் என்னையும் வேற பிரான்ச்சுக்கு போக சொல்கிறாய் நீ என்ன பைத்தியமாடி...

இந்த கம்பெனியில் வேலை பார்த்தது போதும் இனி ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்.. முதலில் என்ன கண்டிஷன் என்று கேட்டுவிட்டு கிளம்புகிற வழியை பாரு.. புவனா நீ முதலில் அப்பாவிற்கு ஃபோன் பண்ணு என்று சொன்னாள் மிதுனா.

இவ்வளவு நேரமும் மிதுனா பேச்சை அமைதியாக கேட்டவள் எப்போது வேகமாக எழுந்து நின்று ஒரு நிமிடம் நான் சொல்வதை நீங்கள் அனைவரும் கேட்பீர்களா மாட்டீர்களா என்று வேகமாக கத்தினாள் சஞ்சனா.
இவள் சொல்லுவாள் அது அடுத்த பதிவில் நாமும் அப்போது கேட்டுக் கொள்ளலாம் ஓகே இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top