• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
46
40. சனாதனனின் அதிரடி நடவடிக்கையும்..

சஞ்சனாவின் அமைதியும்....

தனா சொல்லி சென்ற பின்னர் மனதில் ஒரு ஓரத்தில் சிறு சலனம் இருந்தாலும்... அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், இயல்பாக இருப்பது போல் கிளம்பி சாப்பிட்டு விட்டு சென்றான் ருத்ர தேவ்.

சனாதனும் ருத்ராவின் பிராப்ளத்திற்காக கமிஷனர் ஆபீஸ் சென்று கமிஷனரிடம் நேரடியாக பார்த்து பேச சென்றான்.

கமிஷனர் அலுவலகம்....

நேற்று கமிஷனர் உடன் இவனை பார்த்து இருந்ததால் அங்கு இருந்த ஆபிஸர்ஸ்... என்ன ஏது என்று விசாரித்து விட்டு உள்ளே ஒரு மீட்டிங் நடந்து கொண்டு இருக்கிறது. சிறிது நேரம் வெயிட் பண்ணுங்க என்று சொல்லவும் அவனும் வெளியில் அமர்ந்து இருந்தான் சனாதன்.

சரியாக ஒரு அரை மணி நேரம் கழித்து...

கமிஷனருடன் சேர்ந்து சில உயர் அதிகாரிகளும் வெளியில் வர..

கமிஷனர் சனாதனை பார்த்து விட்டு மற்றவர்களிடம் ஏதோ பேசி அவர்கள் சென்றதற்கு பிறகு, சனாதன் அருகில் வந்து என்ன மிஸ்டர் சனாதன் காலையிலே வந்து இருக்கிறீர்கள் என்று கேட்டார்.

சரி சார் உங்களுக்கு சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும் நேற்று நடந்த பிரச்சினை விஷயமாக உங்களிடம் சிறிது பேச வேண்டும் அதற்காக வந்தேன் என்று சொன்னான் சனாதன்.

சரி வாருங்கள் உள்ளே சென்று பேசலாம் என்று தன் அறைக்கு அழைத்துச் சென்றார் கமிஷனர்.

உள்ளே சென்று தன் இருக்கையில் அமர்ந்தவர். எதிரில் இருந்த இருக்கையில் சனாதனை அமரச் சொன்னார்.

அவனும் உட்கார்ந்து விட்டு கமிஷனரை பார்க்க....

கமிஷனர் சொல்லுங்கள் என்ன பிரச்சினை என்று கேட்டார்.

ருத்ராவிற்கு வந்த வீடியோ, போன் கால்ஸ் அதற்கு பிறகு அது அனைத்தும் டெலிட் ஆனது .... ருத்ரா சென்று அந்த இடத்தில் சோதனை செய்தது என்று அனைத்து தகவல்களையும் சொல்லியவன்... இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.

இந்த கேசில் சம்பந்தப்பட்ட பெண் என் வீட்டு பெண் என்று தெரிந்து தான் யாரோ இந்த வேலையை செய்கிறார்கள்... என் பெயரை கெடுப்பதற்காகவா இல்லை உங்களுக்கு ஏதேனும் யாரிடமும் பிரச்சனை இருக்கிறதா? கவி என் உறவுக்கார பெண் என்பதற்காக மட்டும் இல்லாமல் உங்களுடன் யாராவது விரோதம் பாராட்டி இருந்தால்... அவர்களால் கூட இப்படி நடக்க வாய்ப்புகள் உண்டு அதற்காக தான் கேட்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம் ஒரு போலீஸ்காரனை அனைத்து விதமாகவும் நான் யோசிக்க வேண்டும் என்று கேட்க...

சிறிது நேரம் அமைதியாக இருந்த சனாதன் சில விஷயங்களை... எடுத்து டேபிள் மீது வைத்து விட்டு... பி கேர் ஃபுல்... எல்லா நேரமும் இப்படியே அமைதியாக நான் போக மாட்டேன். இதுவும் உங்களுடைய நேர்மைக்கும், உங்களுடைய பதவிக்கு மட்டும் மதிப்பு கொடுத்து இந்த ஒரு முறை மன்னிக்கிறேன்.

இனி ஒரு முறை இது போல் ஏதேனும் தவறுதலாக கூட என் குடும்ப விஷயத்தில் தலையிட்டால்... என் முடிவு வேறு மாதிரி இருக்கும்... வெளிநாட்டில் இருந்து வந்தவன் தானே இவன்.. என்ன செய்து விடுவான் என்று மட்டும் தப்பு கணக்கு போட மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் என்று டேபிள் மீது தான் வைத்த விஷயங்களை பார்த்துக் கொண்டே சொல்ல... கமிஷனருக்கு ஒரு நொடி யாரு டா இவன் என்பது போல் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருந்தார்.

ஓகே சீ யூ லேட்டர் சார் என்று சொல்லி விட்டு கமிஷனர் பதில் சொல்ல வேண்டும் என்று எல்லாம் அவகாசமே கொடுக்காமல்.. தன் வந்த வேலை முடிந்தது என்று எழுந்து சென்று விட்டான்.

சனாதன் சென்ற சில வினாடிகள் வரை எதுவும் செய்யாமல் அமைதியாக அமர்ந்து இருந்தவர் டேபிள் மீது அவன் வைத்து விட்டுப் போன அனைத்து ஆதாரங்களையும் எடுத்துக் கொண்டு வேகமாக தன் தங்கையின் வீட்டை நோக்கி சென்றார்.

சஞ்சனா அலுவலகத்திற்கு வந்து தன் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த சனாதன் கோபத்தின் உச்சியில் வேகமாக தன் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான்...

நிதானமாக ஆனால் சீரும் வேங்கையாக வேகமாக வந்தான்... சஞ்சனா அவளுடைய கேபினில் இவன் வந்ததை கவனிக்காமல் அவள் அவளுடைய டீம் மெம்பர்ஸோட இணைந்து வேலையில் ஈடுபட்டு இருக்க...

அவள் அவளுடைய வேலையை செய்து கொண்டு இருப்பதாலும்.. கூடவே மற்ற எம்பிளாயீஸ் இருப்பதால் அமைதியாக தன் அறைக்கு சென்றவன்.. உள்ளே சென்று அடுத்த வினாடி சஞ்சனாவை தன் அறைக்கு வர சொன்னான்.

என்ன இந்த குரங்கு உள்ளே வந்ததும் வராததுமாக நம்மை கூப்பிடுகிறான் என்று நினைத்துக் கொண்டே கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள் சஞ்சனா.

உள்ளே சென்று அவனுக்கு குட் மார்னிங் சார் என்று சொல்லி விட்டு, அவன் எதிரில் நின்று கொண்டு இருந்தாள்.

அவள் அருகில் வரும் வரை அவ்வளவு கோபமாக இருந்தவன் இப்பொழுது தன்னை அடக்கிக் கொண்டு... உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா என்று திட்டினான்...

அவளோ அவனை இவன் என்ன லூசா என்ற ரீதியில் பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றாள்.

அவளின் அமைதியை பார்த்தவன்.. வாயில் என்ன வைத்து இருக்கிறாய்... உன் வாயில் உள்ள முத்து எதுவும் உதிர்ந்து விடாது. வாய் திறந்து பேசினால் என்ன என்று கடுப்பில் பேசியவனை கண்டு மேலும் அமைதியாகவே நின்றாள்.

இவ்வளவு கோபத்திற்கும் அவள் அமைதியாக இருக்கவும் சற்று நிதானத்திற்கு வந்தவன்...

இருக்கையில் அப்படியே சாய்ந்து கண்களை மூடி அமர்ந்தான். அமர்வதற்கு முன் அவளை பார்வையாலே முதலில் உட்காரு என்று சொல்லி விட்டு கண்களை மூடினான்.

சில நிமிடங்கள் கழித்து கண்களை திறந்தவன் முன்பு... ஒரு வாட்டர் பாட்டில் தண்ணியை தள்ளி வைத்தாள்.

ஒரு பாட்டில் நீரையும் குடித்து முடித்தவன்... எதிரில் இருக்கும் சஞ்சனாவை பார்த்து சாரி என்று சொன்னான்.

இப்போதும் அமைதியாகவே இருந்தவள்.. சாரி கேட்டவனே காரணத்தை சொல்லட்டும் என்று அமைதியாக அமர்ந்து இருந்தாள் சஞ்சனா.

உன்னோட போன் காணாமல் போய்விட்டதா என்று கேட்டான்... போலீசில் புகார் செய்து இருக்கிறாயா என்று கேட்டான்.

சனாதன் இப்படி கேட்கவும் புருவங்களை லேசாக சுருக்கியவள்..‌ ஆமாம் என்னுடைய ஒரு மொபைல் தொலைந்து விட்டது. ஆனால் நான் போலீசில் எல்லாம் புகார் கொடுக்கவில்லை ஏன் திடீரென்று கேட்குற.. ஆமாம் என் போன் தொலைந்தது எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்டாள்.

உனக்கு கவிப்பிரியா என்று யாரையும் தெரியுமா என்று கேட்டான்.

கவி பிரியா வா... சட்டென்று நினைவுக்கு வராமல் யோசித்துக் கொண்டே இருந்தாள்.

ஓகே லிசன் நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள். இவன் யார் ... ??. நான் இவன் சொல்லவதை எல்லாம் கேட்க வேண்டுமா என்று நினைத்தால் அது உன் பாடு... ஆனால் என் மனதிற்கு உன்னிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. அதனால் சொல்கிறேன் என்று சொல்லி அவன் நேற்று நடந்த பிரச்சினை... அதற்கு பிறகு , ஹாஸ்பிடலில் வைத்து கவிப்பிரியா தன்னிடம் சஞ்சனாவை பற்றி கூறியது...

பிறகு இரவு டின்னர் முடித்து அனைவரும் செல்லும் பொழுது... நம் அனைவரையும் மறைவாக நின்று அவள் கவனித்துக் கொண்டு இருந்தது என்று அனைத்து விஷயங்களையும் பொறுமையாக எடுத்து சொன்னான்.

சொல்லி முடித்து விட்டு இப்போதாவது ஏதாவது கேள்வி கேளுப்பாள் என்று சிறு இடைவெளி விட .. அவள் அப்பவும் இன்னும் கூட இவன் விஷயத்திற்கு வரவே இல்லை என்பது போல் இருக்க... மீதி விவரங்களையும் கூறு என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டு அமைதியாகவே, அவன் என்ன சொல்ல போகிறான் என்று கேட்பதற்கு அமர்ந்து இருந்தவளை பார்த்தவன்... மனதிற்குள் ராட்சசி எப்படி உக்காந்து இருக்கா பாரு...

மனதில் பெரிய அல்லி ராணி என்று நினைப்பு ... இவளுக்கு எல்லாம் நல்லது செய்ய நினைத்தேன் பார்.. என்னை சொல்ல வேண்டும் என்று தன் மனதிற்குள் தன்னை தானே திட்டி கொண்டவன்...

காலையில் ருத்ராவிற்கு வந்த வீடியோ போன் கால்ஸ், அதற்கு பிறகு அனைத்தும் டெலிட் ஆனது ... பிறகு கமிஷனர் ஆபீஸ் போய் அவரை பார்த்து நிலைமையை எடுத்து சொல்லி விட்டு வந்தது என்று அனைத்தையும் சொல்லி முடித்தான்.

இதுவரையும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவள்.. இப்போது சனாதனனை பார்த்து...

சோ.. நீங்க சொல்வது வைத்து பார்க்கும் பொழுது ருத்ரா சார் அவருடைய போனுக்கு வந்த.. அனைத்து போன் கால், வீடியோஸ் எல்லாம் என்னுடைய தொலைந்து போன மொபைலில் இருந்து வந்து இருக்கு என்று சொல்கிறீர்கள் அப்படித்தானே என்று கேட்டாள்.

இப்போது அமைதியாக இருப்பது சனாதனின் முறையாயிற்று...

அவன் பதில் பேசாமல் இருக்கவும்... அடப்பாவி இது என்ன டா சின்னப்புள்ளத்தனமா இருக்கு... எவ்வளவு பெரிய விஷயங்களை எல்லாம் அசால்டாக செய்து விட்டு, இப்போது எனக்கு முன்பு அமர்ந்து கொண்டு சிறுபிள்ளை போல் கோபித்துக் கொள்கிறாய்... ஐயோ புருஷா... புருஷா... என்று தன் மனதிற்குள் அவனை கேலி செய்து கொண்டு இருந்தவள் ... !!!.. ஒரு நிமிடம் திடுக்கிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள். இப்போது தான் என்ன சொல்லி அவனை கிண்டல் செய்தோம் என்று ஒரு நிமிடம் கண்கள் மூடி யோசித்தாள்..

ஐயையோ இந்த கிறுக்கன் ஏதோ நம்மை செய்கிறான்... கவனத்தை திசை திருப்பாதே என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள்.. ஆக காலேஜில் விட்டுப்போன பகை இப்போது மீண்டும் தொடர்கிறது என்று சொல்கிறீர்கள் அப்படித் தானே மிஸ்டர் சனாதன் என்று கேட்டாள் சஞ்சனா.

போடி ஹேரு... என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன்...

எஸ் .. அஃப்கோர்ஸ் என்று சொன்னான் சனாதன்.

அந்த மொபைல் என்னிடம் இருந்த மிஸ் ஆனது ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில்... ஆனால் அது இவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டு பண்ணும் என்று நான் நினைக்கவில்லை.

அதே சமயம் இதனால் வேறு ஏதேனும் பிரச்சினைகள் எனக்கு வருமா என்று சனாதனை பார்த்து கேட்டாள் சஞ்சனா.

ஆமா அப்படியே பிரச்சனை வந்தாலும் நீ பயந்துற மாதிரி தான் கேள்வி கேட்கிறா... பயப்படுகிற ஆளும் மூஞ்சியும் பாரு என்ற மனதிற்குள் கழுவி கழுவி அவளை ஊத்திக்கொண்டு...

அது எல்லாம் ஒரு பிரச்சனையும் வராது. இந்த உன்னுடைய போன் என்று அந்த போனையும் அவளிடம் கொடுத்தான்.

அதை வாங்கிக் கொண்டவள் தேங்க்ஸ் என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்து விட்டு அவருடைய கேபினில் இருந்து வெளியில் சென்றாள்...

கமிஷனர் தன் தங்கை வீட்டில்... சென்று என்ன செய்வார்????...
இனி சஞ்சனாவின் அடுத்த மூவ் எப்படி இருக்கும்????..

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top