Member
- Joined
- Mar 17, 2025
- Messages
- 44
- Thread Author
- #1
பூங்குன்றன் கோமதியாள் புரம் அரசு மேல்நிலைப்பள்ளி அலுவலகத்தை நோக்கி சென்றான்.
அலுவலகத்தில் உள்ளே இருந்து வந்த எழுத்தர் இராமச்சந்திரன், பூங்குன்றனைப் பார்த்து "வாங்க வாங்க , நீங்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து தானே வாரீங்க.!" என்று பூங்குன்றன் தன்னை அறிமுகம் செய்யும் முன் அவரே தவறாக புரிந்து கொண்டு, அவராகவே ஒரு விளக்கம் கொடுத்தார்.
"தலைமை ஆசிரியர் வெளியே போய் இருக்கிறார். துணை தலைமை ஆசிரியர் நாகராஜன் இன்று விடுமுறை. மற்ற அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வந்து விட்டார்கள். இப்போது வகுப்பு இல்லாத ஆசிரியர்கள்,
ஆசிரியர்களுக்கான அறையில் உள்ளார்கள் " என்றார்.
பூங்குன்றன் "இல்லை நான் வந்து," என்று சொல்லும் முன், எழுத்தர் இராமச்சந்திரன் " நீங்கள் இந்த வாரத்தில் ஏதோ ஒரு நாளில் இங்கே இரகசியமாக ஆய்வுக்கு வருவீர்கள் என்று உங்கள் அலுவலகத்தில் உள்ள ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன்"என்று புத்திசாலி போல் நினைத்து பேசினார்.
பூங்குன்றனை அழைத்து கொண்டு, ஆசிரியர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு அழைத்து சென்று, அவர்களிடம் பூங்குன்றனை காட்டி" சார் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து வந்திருக்கிறார்" என்று சொல்லி விட்டு, தனக்கு ஒரு வேலை இருக்கிறது என்று சொல்லி அங்கிருந்து சென்றார்.
பூங்குன்றன் அங்கே உள்ள ஆசிரியர்களிடம், தன்னைப் பற்றிய உண்மைகளை சொன்னார். " நான் கருடப் பார்வை நாளிதழில் இருந்து வந்து இருக்கிறேன். 12 ம் வகுப்பு மாணவர்கள் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற முடியாமல் போனதை பற்றி விசாரித்து அதை எங்கள் நாளிதழில் கட்டுரையாக போடுவதற்காக இங்கே வந்தேன் " என்றார்.
உடனே அங்கே இருந்த ஆசிரியர்களில் ஒருவர் பதறிப் போய், "அப்ப நீங்க எங்களைப் பற்றி உங்கள் நாளிதழில் தவறாக கட்டுரை போடுவீர்களா?" என்று கேட்க,
பூங்குன்றன் " நாங்கள் சொல்லும் செய்தியில் உண்மை இருந்தால் மட்டுமே கட்டுரையில் போடுவோம். மேலும் இதனால் யாருக்காவது பிரச்சினை என்றால் நாங்கள் கட்டுரையில் அதைப் பற்றி குறிப்பிட மாட்டோம்" என்றார்.
உடனே அங்கே இருந்த அனைத்து ஆசிரியர்களும், " எங்களுக்கும் எங்கள் மாணவர்கள் அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனது வருத்தம் தான்" என்று ஒன்று போல் சொன்னார்கள்.
அதில் ஒரு ஆசிரியர் மட்டும் "இது எல்லாத்துக்கும் காரணம், துணை தலைமை ஆசிரியர் நாகராஜன் தான்" என்றார்.
பூங்குன்றன் " துணை தலைமை ஆசிரியர் நாகராஜன் தான் காரணமா?, ஏன்" என்று கேட்டார்.
உடனே அந்த ஆசிரியர் " தலைமை ஆசிரியர் உடல் நலம் பிரச்சினை காரணமாக மூன்று மாதங்கள் மருத்துவ விடுப்பில் சென்றார். அந்த மூன்று மாதங்களில் தலைமை ஆசிரியர் பொறுப்பை தற்காலிகமாக துணை தலைமை ஆசிரியர் நாகராஜன் ஏற்றுக் கொண்டார்.
அவர் ஏற்றுக் கொண்டதிலிருந்து , மாணவர்கள் கல்வி கற்பதில் நிறைய மாற்றங்கள் செய்கிறேன் என்று சொல்லி, யாருக்கும் பிடிக்காத மாதிரி கடுமையான விதிமுறைகள் நிறைய போட்டார்.
அந்த கடுமையான விதிமுறைகளால்
மாணவர்கள் மட்டும் அல்ல ஆசிரியர் நாங்களும் மிக சிரமப் பட்டோம் " என்றார்.
பூங்குன்றன் " அப்படி என்ன கடுமையான விதிமுறைகள்?" என்று கேட்க, வேறு ஒரு ஆசிரியர் அந்த கடுமையான விதிமுறைகள் பற்றி சொன்னார்.
" 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓய்வே இல்லாமல் படிக்கவும், மதிய உணவு இடைவேளையையும் சீக்கிரம் முடித்து விட்டு படிக்க வேண்டும் என்றும் மேலும் சில கடுமையான விதிமுறைகள் பற்றி" சொன்னார்.
பூங்குன்றன் "ம்ம், ஆனால் அந்த விதிமுறைகளில் சில நல்ல விதிமுறைகளும் உள்ளதே" என்று சொல்ல, அந்த ஆசிரியர் " ஆம் உள்ளது. ஆனால் மாணவர்கள் நிறைய பேர் சாப்பிட கூட முடியவில்லையே என்று மன உளைச்சலுக்கு ஆளானார்கள்".
"12 ம் வகுப்பு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் நாங்களும் உணவு இடைவேளை நேரத்தை குறைத்து கொண்டு பாடம் நடத்த சென்றதால், நாங்களும் மன உளைச்சலுக்கு ஆளானோம் " என்று வருத்தத்துடன் சொன்னார்.
அதையெல்லாம் தன் செய்தி குறிப்பில் குறித்து கொண்டான் பூங்குன்றன்.
"மாணவர்களை நான் சந்தித்து பேசலாமா? என்று கேட்க,
ஒரு ஆசிரியர் " அதற்கு நீங்கள் தலைமை ஆசிரியரிடம் தான் அனுமதி வாங்க வேண்டும் " என்றார்.
அப்போது பள்ளியில் காலை இடைவேளைக்கான மணி ஒலித்தது.
அப்போது 12 ம் வகுப்பு மாணவர்கள் சிலர் ஆசிரியர் ஓய்வு அறைக்கு வர,
அவர்களிடம், அந்த மாணவர்களிடம் பூங்குன்றன் சில கேள்விகள் கேட்க,
மாணவர்களும், இவர் ஆசிரியர் ஓய்வு அறையில் இருப்பதால், இவரும் ஒரு ஆசிரியர் என்று நினைத்து பதில் சொன்னார்கள்.
மீண்டும் மணி அடிக்க, அனைத்து மாணவர்களும் தங்கள் வகுப்பை நோக்கி சென்றார்கள்.
ஓய்வு அறையில் இருந்த ஆசிரியர்களும் தங்கள் வகுப்புக்கு பாடம் நடத்த சென்றார்கள்.
அதற்குள் தலைமை ஆசிரியர் வந்து விட, பூங்குன்றன் அவரைப் பார்க்க அவர் அறைக்கு சென்றான்.
தலைமை ஆசிரியர் நீலகண்டனைப் பார்த்து தான் வந்த விசயத்தை சொன்னான் பூங்குன்றன்.
தலைமை ஆசிரியர் நீலகண்டன் " மாணவர்களை சந்தித்து பேச அனுமதி தர முடியாது.மேலும் எங்கள் பள்ளி பற்றி உங்கள் நாளிதழில் எந்த செய்தியும் வரக் கூடாது" என்றார்.
" ஏற்கனவே அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லையே என்று அனைத்து மாணவர்களும் மன உளைச்சலில் இருக்கும் போது நீங்கள், நாளிதழில் இருந்து வந்து இருக்கிறேன் என்று சொன்னால், அவர்களுக்கு இன்னும் மன அழுத்தம் அதிகரிக்கும்." என்றார்.
அப்போது பூங்குன்றன் தன் பையில் இருந்து ஒரு மாதிரி வினாத்தாள் ஒன்றை எடுத்து, தலைமை ஆசிரியரிடம் காட்டி " இது எங்கள் நாளிதழின் இந்த ஆண்டு 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள். இதை நாங்கள் நல்ல முறையில் ஆராய்ந்து தான் இந்த மாதிரி வினாத்தாளை தயார் செய்தோம். அதை மாணவர்களிடம் கொடுத்து தேர்வு எழுத வையுங்கள்.
அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் மன உளைச்சலில் இருந்து வெளிவர ஒரு புத்துணர்ச்சி போல் இருக்கும் " என்று தலைமை ஆசிரியர் சம்மதம் சொல்லும் அளவுக்கு பக்குவமாக சொன்னான்.
தலைமை ஆசிரியர் பூங்குன்றன் கொடுத்த மாதிரி வினாத்தாளை வாங்கி பார்த்து விட்டு, " இது ஒரு மணி நேரம் வரை தான் தேர்வு எழுதும் அளவில் உள்ளதால், முயற்சி செய்து பார்க்கலாம்"என்று சொல்லி விட்டு,
" இதை நாங்கள் நடைமுறை படுத்த அனுமதி கிடையாது. இருப்பினும் மாணவர்கள் இந்த மாதிரி வினாத்தாளை எழுதி அதில் நல்ல
ஒரு மாற்றம் வந்தால் எனக்கு சந்தோசம் தான் " என்று சொல்லி விட்டு, பூங்குன்றன் கொடுத்த அந்த மாதிரி வினாத்தாளை 12 ம் வகுப்புக்கு அனுப்பி வைத்தார்.
12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு இடைவேளை விடும் நேரத்திற்குள் தேர்வு எழுதும் அளவுக்கு கால அவகாசம் இருந்ததால், மாணவர்களும் அந்த மாதிரி வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கு விடைகள் எழுதி
அதை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்தார்கள்.
தலைமை ஆசிரியர் நீலகண்டன் மாணவர்களுக்கு இது கண்டிப்பாக ஒரு புத்துணர்ச்சி தரும் என்று நினைத்தார். அதனால் இரண்டு ஆசிரியர்களை மதிய உணவு இடைவேளை முடிந்ததும், அதை திருத்தச் சொன்னார்.
அவர்களும் விரைவாக அந்த மாதிரி வினாத்தாளை திருத்தினார்கள்.
மாணவர்களின் விடைத் தாளை திருத்திய ஆசிரியர்களுக்கே ஆச்சரியம். மாணவர்களின் விடைகள் அனைத்தும் சரியாக இருந்தது.
அனைத்து மாணவர்களும் 90 % மேல் மார்க வாங்கி இருந்தார்கள். அதை தலைமை ஆசிரியரிடம் அந்த ஆசிரியர்கள் கொடுத்து விட்டு, கண்டிப்பாக 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இது ஒரு புத்துணர்ச்சி தரும் என்றார்கள்.
தலைமை ஆசிரியரும் மாணவர்களின் விடைத்தாளை பார்த்து விட்டு, ஆசிரியரை பாராட்டி விட்டு, பூங்குன்றனையும் அழைத்து கொண்டு 12 ம் வகுப்புக்கு சென்றார்.
12 ம் வகுப்புக்கு தலைமை ஆசிரியர் வந்ததும், அனைத்து மாணவர்களும் எழுந்து நிற்க, அனைத்து மாணவர்களையும் உட்கார சொல்லி விட்டு, முக மலர்ச்சியாக " நீங்கள் எழுதிய விடைத்தாளை கண்டு ஆச்சரியமும் பரவசமும் அடைந்தேன்" என்று சொல்லி விட்டு, அனைத்து மாணவர்களிடமும் வகுப்பு ஆசிரிரியரை தான் கொண்டு வந்த அவர்களின் வினாத்தாளை கொடுத்து கொடுக்க சொன்னார்.
ஆசிரியரும் அனைத்து மாணவர்களுக்கும் கொடுத்ததும், அவர்களும் வாங்கி பார்த்து விட்டு,
மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.
தலைமை ஆசிரியர், பூங்குன்றனை காட்டி, இவர் கொடுத்த யோசனை தான் இது என்று சொல்லி விட்டு, அந்த வகுப்பை விட்டு பூங்குன்றனுடன் அவர் அறைக்கு சென்றார்.
தலைமை ஆசிரியர் நீலகண்டன், பூங்குன்றனைப் பார்த்து, " மாணவர்கள் எப்படி புத்துணர்ச்சியாக இருக்கிறார்களோ, அதேபோல் நானும் புத்துணர்ச்சியாக இருக்கிறேன்" என்று சொல்லி விட்டு,
எங்கள் பள்ளியை பற்றி உங்கள் நாளிதழில் எந்த செய்தியும் வர வேண்டாம் என்று பணிவாக கேட்கிறேன் " என்று சொல்ல,
பூங்குன்றன் " அதெல்லாம் கண்டிப்பாக எங்கள் நாளிதழில் இந்த செய்தியை போட மாட்டேன் "என்று சொல்லி விட்டு, "என் கணிப்பு படி இந்த ஆண்டு இறுதி தேர்வில், உங்கள் பள்ளியில் உள்ள ஒரு மாணவர் நல்ல மார்க் வாங்குவார், அன்று கண்டிப்பாக உங்கள் பள்ளியைப் பற்றி எங்கள் நாளிதழில் செய்தி போடுவோம், அப்போது நீங்கள் தடுக்க கூடாது " என்று சொல்ல,
தலைமை ஆசிரியர் நீலகண்டன்,
சிரித்து கொண்டே" கண்டிப்பாக உங்கள் கணிப்பு படி, எங்கள் மாணவர்களில் ஒருவர் நல்ல மார்க் வாங்கினால், நீங்கள் உங்கள் நாளிதழில் செய்தி வந்தால் தடுக்க மாட்டேன் " என்றார்.
பூங்குன்றன் தன் நாளிதழின் நிறுவனரிடம் அனைத்து விசயங்களையும் சொல்லி இப்போக்கு அந்த பள்ளி பற்றி எதுவும் செய்தி வேண்டாம் என்று சொன்னதை அடுத்து, அவரும் சரி என்றார்.
இதற்கிடையில் வேறு ஒரு காரணத்திற்காக கோமதியாள் புரம் அரசு மேல்நிலைப்பள்ளி துணை தலைமை ஆசிரியர் நாகராஜன் மூன்று மாதங்கள் சஸ்பென்ட் செய்யப் பட்டார். அவர் இதற்கு காரணம் அந்த நாளிதழ் ஆசிரியர் பூங்குன்றன் தான் என்று, பூங்குன்றன் மேல் கோபத்தில் இருக்கிறார்.
அதேபோல் குழலியின் அப்பா சுந்தரம் பெட்டிக்கடையில் போதை மருந்து இருந்தது என்று காவல் துறைக்கு தகவல் கொடுத்தது ஒரு பத்திரிகை ஆசிரியர் என்று, குழலி அண்ணன் உறுப்பினராக இருக்கும்
புதிய கட்சி தலைவர் மூலம் வளவனுக்கு தெரிந்து அதை வளவனும் தன் வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொன்னான்.
இனி
வளவனுக்கும், பூங்குன்றனுக்கும் நேரிடையாக பிரச்சினை வராமல் வேறு ஒரு முறையில் பிரச்சினை வருகிறது.
தொடரும்,