• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
45
39. ருத்ராவுக்கு வீடியோவால் வரும் பிரச்சனை

கவி பிரியா வீட்டில்

காலையில் கண் விழித்தவள்.. நேற்று நடந்த நிகழ்வுகளை மனதிற்குள் அசை போட்டு கொண்டே படுத்து இருந்தாள். ஏனோ ருத்ராவின் முகம் மட்டுமே அவள் மனதுக்குள் மறுபடியும் மறுபடியும் வர... நான் எங்கும் எதிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பவள்...

என் சொந்த தங்கை என்றாலும் என் சித்தப்பாவிற்கு அவள் தான் முதல் மகள் என்றாலும்.. என்றுமே அவருக்கும் நான் தான் முதல் பெண். என் குடும்பத்திற்குமே நான் தான் முதல் வாரிசு... அப்படி இருக்கும் போது ... நேற்று நீ உன் அண்ணன்கள் இருவரும் வரும்போது பார்த்தேன் எனக்கு தெரிந்து நீதான் அவர்கள் இருவருக்கும் பிறகு பிறந்த பயனாக இருப்பாய் என்று தோன்றுகிறது... நான் எப்படி உன் வீட்டில் மூன்றாவது ஆளாக வந்து இருக்க முடியும். ஆனாலும் நீ ஏனடா உன் வீட்டில் மூன்றாவதாக பிறந்து இருக்கிறாய்...
அவு
உன் முதல் அண்ணன் மீது .. அழகாக இருக்கிறார்... தெளிவாக இருக்கிறார்.‌.. ஆனாலும் ஏனோ அவருக்கும் எனக்கும் செட் ஆகும் என்று தோணவில்லை. அவருக்கும் எனக்கும் ஏஜ் கூட பெருசா டிஃபரென்ஸ் இருக்குற மாதிரி இல்லைன்னாலும் எனக்கு ஏனோ அவர் மீது எந்த இன்ட்ரெஸ்ட்டுமே வரவில்லை.

உன் இரண்டாவது அண்ணன் சனாதன் அவன பாக்க செம சும்மா ஜிவ்வுன்னு இருக்குது தான்... ஆனால் நேற்று இரவு அந்த வீணா போனவளோடு அவனைப் பார்த்ததிலிருந்து எனக்கு அவன் மீது சரியான கொலைகாண்டு தான் வருகிறது. என்ன பண்ணி தொலையா அவனை உனக்காக முதன் முதலில் மாமான்னு சொல்லி பேசிட்டேன். இனிமே அவன் முன்னாடி என்னால இயல்பா பேச முடியுமா என்று கூட தெரியவில்லை. ஊர் உலகத்திலேயே ஏதோ பெண்ணே கிடைக்காதது போல் என்னோட சீனியர் அந்த சஞ்சனா குரங்கின் குடும்பத்தோடு சுற்றிக் கொண்டு இருக்கிறார்.

என்ன செய்வது என்றே தெரியவில்லையே உன்னை எப்படி கரெக்ட் பண்ணுவது... நீ என்னமோ என்னை பார்த்தால் கசப்பான மருந்தை குடிக்க சொல்வது போல் பார்க்கிறாய். ஹ்ம்ம் என் பின்னே எத்தனை பேர் சுற்றுகிறார்கள். ஆனால் நீ மட்டும் என்னை ஒரு பொண்ணாக கூட கருதாமல் அவாய்ட் செய்வது நினைக்கும் போது தான் எனக்கு அப்படியே பற்றி கொண்டு வருகிறது...

அதே எண்ணம் தான் உன் மீது இப்பொழுது பித்து பிடித்து அலைகிறேன். ஆனால் எனக்கு அந்த வீட்டில் முதல் மருமகள் என்ற பெயர் தான் வேண்டும். அதற்கு உன் அண்ணன்கள் இருவருக்கும் திருமணம் ஆவதற்கு முன் நான் உன்னை திருமணம் செய்ய வேண்டும்.

ஆனால் அது மிகவும் சுலபமாக இருக்கும் என்று தோன்றவில்லை.. உன்னை சமாளிப்பது ஒரு பக்கம் என்றால்... எனக்கு என்னவோ என் உள் மனது கண்டிப்பாக சஞ்சனாவும் ஒரு இடையூறாக இருப்பாள் என்று தான் தோன்றுகிறது. அதனால் முதலில் ருத்ரா உன் அலுவலகத்திற்கு நான் வருகிறேன். உங்கள் அலுவலகத்தில் நீங்கள் எல்லோரும் எந்தவிதத்தில் இருக்கிறீர்கள் என்று பார்த்துக்கொண்டு, பிறகு அதற்கு தகுந்தார் போல் நான் காய் நகர்த்துகிறேன். கண்டிப்பாக உங்கள் வீட்டிற்கு முதல் மருமகளாக நான் தான் வருவேன் என்று... மனதில் ராணி மங்கம்மா என்று நினைப்போடு சபதம் செய்தவள் எழுந்து காலை கடன்களை முடித்துக் கொண்டு...

கீழே வர தன் தந்தை சித்தப்பா என்று அனைவரும்.. சாப்பிடுவதற்காக இவளின் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தனர்.

தீபா மட்டும் வழக்கம் போல் யார் சாப்பிட்டால் என்ன??. சாப்பிடாவிட்டால் எனக்கு என்ன என்பது போல் எடுத்து வைத்து தனக்கு பிடித்த சோலா பூரியை சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.

குட் மார்னிங் பா... லவ் யூ பா... என்று சொல்லி தன் சித்தப்பா, பிறகு தன் அப்பா என்று இருவருக்கும் கன்னத்தில் முத்தம் வைத்து சொன்னவள்... சாப்பாடு பரிமாற நின்று கொண்டு இருந்த தன் சித்திக்கும் அதே போல் கட்டி அணைத்து முத்தமிட்டு குட் மார்னிங் சித்தி என்று சொன்னாள்.

அவள் அமர்ந்ததும் மூவருக்கும் சாப்பாடை பரிமாறினார். கவிப்பிரியாவின் சித்தி ருக்மணி...

எங்க சித்தி அம்மாவை காணோம் என்று கேட்டாள் சாப்பிட்டுக் கொண்டே..

என்னவோ தெரியவில்லை டா காலையில் எழுந்ததுமே அக்கா சோர்வாக இருந்தார். பிறகு மனசு சரியில்லை என்று சொல்லி விட்டு காலையிலேயே கோவிலுக்கு சென்று விட்டார். வர நேரம் தான் டா. நீ சாப்பிடு என்று சொல்லி சாப்பாடை வைத்தார்.

தன் தங்கை சாப்பிடும் சோலா பூரி தனக்கும் மிகவும் பிடித்த உணவாக இருந்தாலும், தனக்கு முன்னே அவள் சாப்பிட தொடங்கி விட்டதால்... அதை பரிமாற வந்த தன் சித்தியிடம்,இன்று எனக்கு நெஞ்சு சரியில்லை அதனால் நீங்கள் மசால் தோசை எடுத்து வாருங்கள் சித்தி என்று சொல்லி விட்டு தன் போனில் இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் பார்த்துக்கொண்டு இருந்தாள் கவிப்பிரியா.

இது மாதிரி வழக்கமாக நடைபெறுவத தான் என்பதால்.. அவள் வரும் நேரம் சரியாக இருந்தால் மசால் தோசையை கிச்சனில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து அவளுக்கு பரிமாறினார்‌ அவளது சித்தி ருக்மணி.

தீபா கோவத்தில் சாப்பிட்டு முடித்து வேகமாக எழுந்து சென்றாள்.

அவளின் கோபம் கண்டு என்ன சித்தி இவள் எப்போது தான் மாறுவாள், ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று கடுப்பை மறைத்துக் கொண்டு சலிப்போடு கேட்டாள் கவிப்பிரியா.

அவளின் குணமே அப்படி தான் டா.. இன்று நேற்றா பார்க்கிறோம். நீ விடு அதை எல்லாம் நினைத்து கவலை கொள்ளாதே..‌ என்று கவிப்பிரியாவுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டு இருந்தார் கோபாலகிருஷ்ணன்.

இல்ல சித்தப்பா இவ வீட்ல மட்டும் என் கூட போட்டி போடல, எங்க வந்தாலும் என் கூட போட்டி போட்டு கிட்டு, எல்லார்கிட்டயும் என்னை பற்றி தவறாக பேசிக்கொண்டு தான் இருக்கிறாள். நம்ம ரெண்டு பேரும் ஒரே குடும்பம் அப்படிங்கற அந்த நினைப்பு அவளுக்கு வரவே மாட்டேங்குது சித்தப்பா. சரி விடுங்க சின்ன பெண் தானே புரிந்து கொள்வாள் என்று தான் ஏதோ பெரிய பக்குவப்பட்டு பெண் போல் பேசிவிட்டு சென்றாள். ஒரு பூரிக்காக கூட அவளை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை... இதை இங்கு இருப்பவர்கள் யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்..

அப்படி புரிந்து கொள்ளும் பொழுது கவிப்பிரியாவின் நிலை என்ன தீபாவின் நிலை என்ன... காலம் தான் பதில் சொல்லும்..

பாண்டவர் இல்லம்...

அனைவரும் வேலைக்கு கிளம்பி செல்லும் பொழுது சரியாக ருத்ரா வேகமாக வீட்டிற்குள் வந்தான்.

அனைவரும் வேலைக்கு கிளம்பி கொண்டு இருப்பதை கண்டவன் எதுவும் பேசாமல்.. அமைதியாக தன் அறைக்குச் சென்றான்.

அவனின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட சனாதன்..‌ மிதுன், கர்ணா, லிபின் மூவரும் கேள்வியோடு நிற்பதை பார்த்து விட்டு... நீங்கள் மூவரும் கிளம்புங்கள் நான் அன்புடன் பேசிவிட்டு நானும் கிளம்புகிறேன் எதுவாக இருந்தாலும் இரவில் பார்த்துக் கொள்ளலாம் என்று அனுப்பி வைத்து விட்டு...

ருத்ரா அறைக்கு சென்றான் சனாதன். உள்ளே சென்று பார்க்க அறைக்குள் ஆளில்லாமல் போக... பாத்ரூம் சென்ற பார்த்தால் அங்கும் ஆள் இல்லை. இங்கு அவன் அறைக்கு தானே வந்தான் என்று யோசித்துக் கொண்டே திரும்பும் பொழுது தான் ருத்ரா பால்கனியில் நிற்பது தெரிந்தது.

அவனிடத்தில் மெதுவாக சென்று என்னாச்சு ருத்ரா?.. காலையிலேயே கிளம்பி வெளியே சென்று விட்டாய் என்று அத்த சொன்னாங்க. இப்பவும் வரும் போது ஒரே டென்ஷனா வர என்ன ஆச்சு ஏதாவது பிராப்ளமா என்று கேட்டான் சனாதன்.

ஆமா தனா... எல்லாம் அந்த இடியட் கவிப்பிரியாவாள் வந்த தொல்லை தான்... எஒன்று எரிச்சலோடு சொன்னான் ருத்ரா..

என்ன சொல்ற ருத்ரா அவளால என்ன பிரச்சனை வந்தது என்று கேட்டான் தனா.

அவளை காப்பாற்ற போய் எனக்கு வந்த வினை தான்... ஏதோ சொல்லுவாங்கல்ல அம்மா கூட... அடிக்கடி சொல்லுவாங்களே சொந்த காசு அது இது என்று ஏதோ சொல்வார்களே என்ன டா என்று புலம்பினான்.

சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வார்கள் என்று சொல்வார்கள் அதை தான் சொல்றியா என்று கேட்டான் சனாதன்.

அதே அதே தாண்டா... அதே மாதிரி தான் அவளை நான் காருக்குள் தள்ளி காரை வேகமாக தள்ளி காரை எடுத்துக் கொண்டு போனதை... ஏதோ ஒரு பரதேசி நாய் வீடியோ எடுத்து, அதை எனக்கே அனுப்பி வீடியோவை பேஸ்புக் இன்ஸ்டா இதில் எல்லாம் பதிவு செய்து... அவன் பிரபலமாகப் போகிறானாம்... அது.. இது .. ஏதோ சொல்லி காலையிலேயே என்னை டென்ஷன் பண்ணிட்டான் டா...

அது தான் அவன் யார் என்ன என்று விசாரிக்கலாம் என்று, அதே இடத்திற்கு மறுபடியும் சென்று ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று பார்த்து விட்டு வந்தேன்.. ஆனால் எனக்கு ஒரு தடயமும் கிடைக்கவில்லை.

நான் அந்த வீடியோ பார்த்து அடுத்த நிமிடம் அந்த வீடியோ டெலிட் ஆயிடுச்சு... அது ... அதனால என்னால ஒன்னும் கண்டுபிடிக்கவே முடியல. அதே சமயம் அதற்குப் பிறகு வந்த கால் ரெக்கார்டர் எதுவுமே இல்ல. என்ன செய்யறது என்று எனக்கு சுத்தமா புரியல டா... என்று தலையில் கை வைத்து அப்படியே பால்கனி சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான்.

பாவம் ஏதோ பெண் என்று நினைத்து... நானா போய் பிரச்சனையில் மாட்டிக்கொண்டேன். அப்பவே எனக்கு மனதிற்கு நெருடலாக தான் இருந்தது. சரியான போதையில் வேறு இருந்தால் திமிரு எடுத்தவள்... தமிழ்நாட்டு குடிகாரி... எனக்கு எதுக்கு டா இந்த தேவை இல்லாத டென்ஷன்... எனக்கு ஏன் டா ஆண்டவன் இப்படி சோதிக்கிறான் என்று புலம்பினான்.

ருத்ராவின் புலம்பல்களை பொறுமையாக கேட்டவன் லேசான புன்னகையோடு அவன் அருகில் அமர்ந்து...

டேய் 26 வயது பையன் மாதிரியா பேசுற.. ஏதோ ஸ்கூலுக்கு போற பையன் மாதிரி பேசிட்டு இருக்கேன் அதுவும் ப்ரீ கேஜிக்கு போற பையன் மாதிரி பேசிக்கிட்டு இருக்க... இது எல்லாம் ஒரு விஷயமே இல்லை. அது மட்டும் இல்லாமல் இந்த கேஸ் கமிஷனர் லெவலுக்கு போனது.

நீ திட்டிகிட்டு இருக்கியே அந்த தமிழ்நாட்டு குடிகாரி... கமிஷனரின் சொந்த தங்கை மகள்... அதனால் அவள் பெயர் கெடும்படி அவர் விடமாட்டார்.

இது அவர்கள் குடும்பத்திற்கு வேண்டாதவர் யாரோ செய்யும் வேலையாகத் தான் இருக்கும். அதனால் அமைதியாக இந்த விஷயத்தை நான் கமிஷனர் மூலம் சரிபார்த்துக் கொள்கிறேன். இதற்குப் பிறகு உனக்கு ஏதேனும் போன் வீடியோஸ் வந்தா அதை உடனடியாக எனக்கு ஃபார்வேர்ட் பண்ணி விடு என்று, சொல்லி விட்டு முதலில் எழுந்து கிளம்பி ஆபீஸ்க்கு போடா ப்ராஜெக்ட் இருக்கு என்று தன் தம்பியை விரட்டி விட்டு.. அவனும் நேரே கமிஷனர் அலுவலகத்திற்கு தான் சென்றான் சனாதன்.

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...

நான் எப்படி மாத்திரை போட்டுக் கொண்டேன் என்று சிந்திக்கும் மெய்...

ருத்ராவிற்கு வந்த வீடியோவால் வரும் பிரச்சனை அதில் தெரியாமல் மாட்டிக் கொள்ளும் சஞ்சனா...

இனி வரும் பகுதிகளில்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top