- Thread Author
- #1
36.. வீட்டில் புவனா, ரிஸ்வந்த் இருவரின் காதல் அறியும் தருணம்....
அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் அன்றைய இரவை கடக்க...
ஒவ்வொருவருக்கும்... ஒவ்வொரு விதமாக விடியும் விடியல் என்னவோ அனைவருக்கும் பொதுவாக விடிவது போலவே இளம் சூரியன் தன் பொன் கதிர்களை பூமிக்கு பாய்ச்சினான்...
லீனா, லட்சுமி அம்மா உடனே எழுந்து... காலை வேலைகளை முடித்துக் கொண்டு... காலை டிபனுக்கும் உதவி செய்தவள்..
லக்ஷ்மி அம்மா பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு போய்ட்டு வரட்டுமா, என் தங்கைகள் இவ்வளவு தூரம் வந்து தங்கி வேலை பார்த்தாலும், இப்ப தான் எனக்கு அனுமதி கிடைத்து இருக்கு.. அதனால் சிவனுக்கு போய் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வரேன் என்று கேட்டாள் லீனா.
சரி டா பாத்து பத்திரமாக போயிட்டு வா.. ஆனால் நீ தனியாக போய் விடுவாயா நான் வேண்டுமானால் உனக்கு துணைக்கு வரட்டுமா? என்று கேட்டார் லட்சுமி அம்மா.
இல்ல லட்சுமி மா பக்கத்தில் தானே நானே போய் விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு, பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்றி விட்டு, சுடம் காண்பித்து இறைவனை வேண்டி விட்டு... கோவிலுக்கு செல்வதற்காக வெளியில் வந்தாள்...
நடந்து போவதற்கு பதிலாக.. வண்டியில் செல்லலாம் தானே என்று கேட்டாள் லட்சுமி மா.
அச்சச்சோ அந்த வண்டியை யாரு ஓட்டுவார்கள்.. எருமை மாடு கணக்கா .. என் எடையை விட 4 மடங்கு எடை கொண்டது அந்த வண்டி... அதை யார் தூக்கி சுமப்பது என்று சொல்லி கொண்டே நான் நடந்தே போய்க் கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டே வீதியில் இறங்கி நடந்தாள்.
லீனா பேசியது கேட்டு கொண்டே வந்த சரண்... லட்சுமி மா... என்ன மறந்து விட்டீர்களா... ?.. அவளுக்கு தான் சைக்கிள் கூட ஓட்டத் தெரியாதே என்று சொல்லி கொண்டே வந்தவன் சரோஜாவின் கையில் இருந்த காபியை எடுத்துக் கொண்டு...
அடகடவுளே இன்னும் பாப்பா அப்ப ஸ்கூட்டி ஓட்ட கத்துக்க வில்லையா ??!!!..
என்னிடம் டிரைவிங் ஸ்கூல் போறேன் சொல்லுச்சு என்று கேட்டாள் லட்சுமி.
அட ஏன் லட்சுமி மா அந்த கொடுமையை கேட்கிறீர்கள் என்று சரண் கேட்டுக்கொண்டே காபியை குடித்துக் கொண்டு இருக்க, சரி விடு நான் கேட்கவில்லை என்று அவர் கிச்சன் நோக்கி சென்றார்.
அடக்கடவுளே இந்த கொடுமை அதை விட பெரிய கொடுமையா இருக்கே என்று நொந்து கொண்டவன்..
அட வாங்க லட்சுமி மா என்று தன் அருகில் அவரை இழுத்து அமர வைத்துக் கொண்டு... அவர் மடியில் படுத்தவன் அவரது இடது கையை எடுத்து தன் சிகைக்குள் விட்டு விட்டு...
நான் என்ன சொல்ல வந்தேன் என்று யோசித்தவன்.. ஹான்... உங்க அருமை பொண்ணு லீனா டிரைவிங் ஸ்கூல் போனேன்னு சொன்னா தானே!!! அவள் போய் சேர்ந்த மூன்றே நாட்களில் அந்த ஸ்கூல்ல இழுத்து மூடிட்டு அவர் வேறு பக்கம் போய் விட்டார் என்று சொன்னான் சரண்.
அடக்கொடுமையே அந்த அளவுக்கா நம்ம பாப்பாவோட பர்பாமென்ஸ் இருந்துச்சு என்று லட்சுமி மா சிரிக்காமல் கேட்க...
அதே தான் மா.. எப்பவாவது ரோட்டில் அவர்களை பார்க்க நேர்ந்தால் அவர்கள் பார்க்கும் பாசமான பார்வையை பார்த்து பயந்து தலை குனிந்து வருகிறேன்... என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே... சரண் மொபைலுக்கு பாசமலர் ஒன் என்று நம்பரில் இருந்து கால் வர...
அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தவன்.. சொல்லு டா செல்லக்குட்டி என்ன ஆச்சு இப்ப தானே கோவிலுக்கு போன என்று கேட்டான்.
இப்ப தான் டா.. இங்கே பார்த்தேன் நம்ம டிரைவிங் ஸ்கூல் மாஸ்டரை... அவர் தான் உன்னை பார்க்க வேண்டும் என்று ஆசையாக கேட்டாரா .. அதான் வீட்டுக்கு அட்ரஸ் சொல்லி அனுப்பி வைத்து இருக்கிறேன் என்று சொல்லி விட்டு போனை கட் செய்தாள் லீனா.
சட்டென்று எழுந்து அமர்ந்தவன்.. லட்சுமி மாவை பார்க்க.. நீங்க தானா?.. அது நீங்க தானா என்று சந்திரமுகி பட டயலாக் போல பேசி கேட்க...
அது நானே.. அது நானே... நிலாவிடம் ஃபோனில் பேசியதும் நானே.. இங்கு நடந்த நிகழ்வுகளை லைவ் டெலிகாஸ்ட் பண்ணதும் நானே... நானே... அது நானே.. என்று த்ரிஷா போல் சொல்லிக் கொண்டே வந்து நின்றாள் மிதுனா.
ஏன் பாப்பா இந்த கொலைவெறி.. அவள் சும்மாவே ஆடுவாள். இப்போது காலில் சலங்கை வேறு கட்டி விட்டு இருக்கிறாய். சிவன் கோவிலுக்கு போயிட்டு வந்து ருத்ர தாண்டவம் ஆட போகிறாள்... என்று சொல்லி கொண்டு இருக்க..
அங்கு வந்த புவனா வீடு பாத்துக்கலாம் சரண்.. இந்த ரெண்டு சில்வண்டுகளை சமாளிப்பதற்கு நமக்காக எந்த ஒரு அடிமையாவது வராமல் போய்விடுவான் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே... நீங்கள் அனைவரும் நினைப்பது போலவே ரிஷ்வந்த் அங்கு வந்தான்.
அங்கு இருந்த அனைவரும் ரிஷ்வந்தை ஒரு மாதிரி பார்க்க...
இன்று உன்னை காப்பதற்கு நான் இருக்கிறேன் கவலைப்படாதே தோழா என்பது போல் ... சஞ்சனா மேல் இருந்து கீழே வந்தவள் அப்புறம் ரிஷ்வந்த் உனக்கும் புவனாவிற்கும் இடையில் என்ன பஞ்சாயத்து ஓடுகிறது என்று கேட்டாள்.
தண்ணீர் குடிக்காமல், சாப்பிடாமல் எதுவும் செய்யாமலே புறை ஏறியது புவனாவிற்கு...
ரிஷ்வந்த் எதையும் அறியாமல்... உங்கள் யாருக்கும் தெரியாமல் எங்கள் இருவருக்கு இடையில் என்ன பஞ்சாயத்து அப்படி எதுவும் இல்லையே என்று கேட்டான். ரிஷ்வந்த்.
புவனாவிற்கும் அப்பாடா இன்னைக்கு தான் டா உருப்படியா பதில் சொல்லி இருக்கே என்று நினைத்து, நெஞ்சில் கை வைத்து அமைதியாக அமர்ந்த அடுத்த நொடி.. உன் அமைதிக்கு நான் பொறுப்பல்ல என்பது போல் ரிஷ்வந்த் அடுத்த கேள்வியை கேட்டான்.
ஆமாம் ஏன் இந்த கேள்வியை திடீரென்று கேட்கிறாய் அவள் ஏதும் உன்னிடம் சொன்னாளா என்று... இவர்களிடம் மறைப்பதற்கு முடியாமல் சொல்லிவிட்டாளோ தங்களின் காதலைப் பற்றி என்ற சந்தேகத்தில் அவன் ஆர்வ மிகுதியில் கேட்டான் ரிஷ்வந்த்.
அப்போது நெஞ்சில் ஆசுவாசமாக வைத்து அமர்ந்த கையை, வாயில் வைத்து அடப்பாவி இப்படி கவுத்து விட்டியேடா என்று தோரணையில் அவனை பார்க்க...
அவனோ புவனாவை பார்க்காமல் சஞ்சனா என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று அவளையே ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்குமே அவர்களிடம் சொல்லாமல் இருப்பது குற்ற உணர்ச்சியாக இருக்க வேகத்தில் கேட்டு விட்டு அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.
சஞ்சனாவோ ஆற அமர வந்து அமர்ந்தவள்... இல்லை நேற்று இரவு வந்து... மிதுனாவிடம் கேட்டுக் கொண்டு இருந்தால் உன்னை யாரும் அலுவலகத்தில் சைட் அடித்தார்களா என்று?? . அது தான் எதுவும் பந்தயம் வைத்தீர்களோ என்று கேட்டேன் அதற்கு ஏன் நீ இவ்வளவு எக்சைட்மென்ட் ஆகிறாய் என்று கேட்டாள்.
ஓஓஓ... அப்படியா என்று தன் குரலில் இருந்த உற்சாகம் அனைத்தும் வடிய அமைதியாக கேட்டு விட்டு புவனாவை பார்த்து பாவமாக அமர்ந்து கொண்டான்.
இங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்த லட்சுமி அம்மா... ஓஹோ கதை அப்படி போகிறதா என்று சஞ்சனாவை பார்த்து கண்ணடித்தார்.
அங்கு இருந்த மிதுனாவை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் புவனா ரிஸ்வந்தின் காதல் மேலோட்டமாக புரிய... லட்சுமி அம்மா கலாய்த்தார்.
புவனாவோ வெட்கம் ஒரு பக்கம்... அனைவரும் என்ன சொல்வார்களோ என்ற பயம் ஒரு பக்கம்... என்ன செய்வது என்று தெரியாமல் வேகமாக எழுந்தவள், ரிஷ்வந்த் தலையில் கொட்டி விட்டு பக்கி உன்னால் இன்று லட்சுமி அம்மாவே என்னை கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்... இன்று முழுவதும் நான் என்ன பாடுபட போகிறேனோ தெரியவில்லை என்று அவனை முறைத்துக் கொண்டே வெளியில் ஓடினாள்.
ரிஷ்வந்த்தும் ஓகே லட்சுமி அம்மா... லீனா தனியா எங்கேயோ போறாளே என்ன எங்கே போறான்னு கேட்பதற்காக வந்தேன். மிதுனா நீ கிளம்பிய பிறகு சொல்லு நான் வருகிறேன் என்று எழுந்து வேகமாக வெளியே சென்றான்.
இருவரின் ஓட்டத்தை பார்த்த மூவரும்... சஞ்சனா, சரண், லட்சுமி மூவரும் சிரிக்க, மிதுன அவர்களை பார்த்து இப்ப எதற்கு சிரிக்கிறீர்கள் என்று கேட்டாள்.
போடி ட்யூப் லைட் முதலில் எழுந்து வேலைக்கு கிளம்பு வழியை பார்.. உன் சாரதி தான் சொல்லி விட்டு சென்றானே.. சீக்கிரம் கிளம்பி ரெடி ஆகு என்று அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.
பாண்டவர் இல்லம்...
இரவு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் தூங்கி இருக்க.. ஆனாலும் இப்பவும் போல காலையில் 5:00 மணிக்கு எழுந்தவர்கள்.. வழக்கம் போல் தோட்டத்திலேயே வாக்கிங் சென்றனர்.
அப்போது முதன் முதலில் அழகி யோகா செய்த இடத்திற்கு வரும் பொழுது அங்கே அவன் இல்லாமல் இருப்பதைக் கண்டு... கர்ணா மனம் வருந்தினாலும்.. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அந்த இடத்தில் இருந்து வேகமாக கடந்து சென்றான்.
எப்பவும் போல சனாதனும், மிதுனும் இருவரும் பேசிக்கொண்டே ஒன்றாக இணைந்து வந்தனர். அவர்களும் அழகி இல்லாததை பார்த்து விட்டு, சுற்றி முற்றி பார்த்தனர்.
தனா எங்க டா அழகிய காணோம் என்று கேட்டான் மிதுன்.
நேரத்தோடு யோகா செய்து முடித்து விட்டு போய்விட்டாள் போல் என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்கு சென்றனர்.
அங்கு ஏற்கனவே கர்ணா லிபின் இருவரும், சரோஜா அத்தை கொடுத்த கம்மங்கூழ் குடித்துக்கொண்டு இருந்தார்கள்.
அவர்களோடு இணைந்து இவர்கள் இருவரும் கம்மங் கூழை சரோஜா அத்தை இடம் வாங்கி குடித்துக் கொண்டு இருந்தனர்.
ஆமா எங்கே ருத்ராவை காணோம் என்று சரோஜா கேட்டார்.
அவனும் இன்னும் எழுந்து வரவில்லையா என்று கேட்டான் தனா.
அவனும் இன்னும் வரவில்லையா என்றால்,
வேறு யாரு வர வேண்டும் இன்னும் என்று சரோஜா கேட்டார் தனாவை பார்த்து....
இல்லை காலையில் எழுந்ததில் இருந்து ருத்ரா.. அதே மாதிரி அழகி இருவரையும் நாங்கள் யாரும் பார்க்கவில்லை என்று தனா சொன்னான்.
அது வா இப்போது தான் ருத்ரா நீங்கள் அனைவரும் வருவதற்கு முன்பு யாருடனோ போனில் பேசிக்கொண்டு வெளியில் சென்றான்.
அதே மாதிரி அழகிக்கு என்ன ஆயிற்று தெரியவில்லை.. இரவு நன்றாக தான் பேசிக் கொண்டு இருந்தாள்..
ஆனால் இப்போது காய்ச்சலில் அணத்தி கொண்டு படுத்து இருக்கிறாள். அது தான் 4:00 மணிக்கு எழுந்து வரும் பொழுது அவளின் முனகல் சத்தம் கேட்டு, பத்து போட்டு விட்டு கசாயம் வைத்து கொடுத்து இருக்கிறேன்... என்று சொல்லி விட்டு நால்வரும் குடித்த குவலையை எடுத்துக்கொண்டு சென்றார் சரோஜா.
இவ்வளவு காலையில் எங்கு சென்றான் ருத்ரா....
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...