• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
40
34... சரோஜாவின் வருகையால்...

மாறும் மெய்யழகியின் மறுவாழ்வும்

முதலிரவு அறை..

கட்டிலில் மல்லிகை பூ அலங்காரம் இருக்க, பக்கத்தில் டேபிளில் பல வகைகளோடு இனிப்புகளும் பழங்களும், அதோடு அழகான நறுமணத்துடன் ஊதுபத்தியும் எரிந்து கொண்டு இருக்க... கட்டிலில் அமர்ந்து இருந்தான் பழனி.

கல்யாணம் என்ற பேச்சு ஆரம்பித்ததில் இருந்து இப்போ வரை மெய்யழகியை அவன் எதுவுமே செய்யவில்லை. ஆனால் இப்போது அவன் தன் கட்டிலில் தனக்கு தாலி கட்டிய புருஷனாக அமர்ந்து இருப்பதை பார்ப்பதற்கு கடவுளே என்னை இந்த நிமிடமே கொன்று விடு. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது கடவுளே என்று வேண்டிக் கொண்டே அவன் அருகில் பயத்துடன் போய் நின்றாள்.

அவள் உள்ளே வந்தது தயங்கி நின்றது எதையும் கவனிக்காமல்... பழனி எதையோ யோசனையில் அமர்ந்து இருந்தவன்.. தன் அருகில் நிழல் ஆடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க...

குட்டி தேவதையாக தான் அருகில் இருக்கும் அழகியை பார்த்தவன்... அவள் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி அருகில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு...

அவளின் புடவை முந்தானையை எடுத்து கீழே போட்டான். பயத்தில் நடுங்கும் கோழி குஞ்சாய் வியர்க்க கண்களை மூடி அமர்ந்து இருந்தாள் அழகி.

முந்தானையை கீழே போட்டு விட்டு இப்போது அவளின் ஜாக்கெட்டின் கொக்கிகளை கழட்ட ஆரம்பித்தான்...

ஐயோ இறைவா என்னை கொன்று விடு என்று ஊமையாக கதறி கொண்டு இருந்தாள் அழகி.

கொக்கிகளை கழட்டியவன் அருகில் எறிந்து கொண்டு இருந்த கத்தை ஊதுபத்தியை எடுத்து அவளின் இரு மென்மைகளிலும் வைத்து அழுத்தினான்.

இவ்வளவு நேரமும் மனதால் கதறி கொண்டு இருந்தவள்... ஊதுபத்தியின் நெருப்பில் சுட எரிச்சலில் வலியோடு கண்களை திறந்து பார்த்தாள்...

ஆனால் பழனி என்ன சட்டென்று அணைஞ்சு போச்சு என்று சொல்லி கொண்டே... மறுபடியும் பற்ற வைத்துக் கொண்டு, ஏற்கனவே அவன் கடித்து தழும்பாகி போய் இருந்த நெஞ்சு குழியில் மொத்த ஊதுபதியையும் கொளுத்தி அதில் வைத்தான்.

வலி பொறுக்காமல் இவ்வளவு நேரமும் அழுகையை அடக்கிக் கொண்டு நின்றவள். இப்போது ஏன் இப்படி பண்ற.. என்று வலியில் அழுது கொண்டே கேட்டாள் அழகி.

என்ன பண்ண என்னால் ஒரு பெண்ணுடன் இயல்பாக சந்தோஷமாக இருக்க முடியாது. அதனால் தான் இது நாள் வரை நான் கல்யாணமே செய்து கொள்ளவில்லை. ஆனால் உன்னை பார்க்கும் போது எல்லாம்.. எனக்குள் ஏதேதோ செய்ததோ அதனால் தான் உன்னை கல்யாணம் செய்து கொண்டால் உன்னுடன் சந்தோஷமாக வாழ முடியும் என்று நினைத்து தான் இது அத்தனையும் செய்தேன்.

ஆனால் எனக்கு தெரிந்து என்னால் உன்னோட உறவு வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த விஷயத்தை நீ வெளியே யாரிடமாவது சொல்லிவிட்டால் என்ன செய்வது என் மானம் கப்பல் ஏறிடும்... என்று சொல்லி கொண்டே இருந்தவன் சற்றும் யோசிக்காமல் அப்படியே அவளை கட்டிலில் இருந்து கீழே தள்ள... அவள் கீழே விழுந்ததில் இடுப்பில் அடிபட்டதோடு சரிந்து கிடந்தவளின் கால் பாதத்தின் பக்கவாட்டில் ஏறி நின்றான்.

வலியில் துடித்துக் கொண்டு ஐயோ ப்ளீஸ் டா கீழே இறங்கு சத்தியமா நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்... தாத்தா வலிக்குது என்று சொல்லி கொண்டே அப்பாயி வா... அப்பாயி... என்று அழுதாள் அழகி.

அவளின் வலியில் அழகும் அந்த அழுகையின் குரலைக் கேட்டு ஆனந்தமாக சிரித்தவன்... அப்படியே இறங்கி அவளின் முதுகு பக்கம் வந்து ஓங்கி ஒரு உதை தான் ... அப்படியே சுருண்டு போய் வலியில் சுவற்றில் மோதி அரை மயக்கத்தில் கிடந்தாள்.

அவளின் அருகில் சென்று அமர்ந்தவன்... அவளின் ஆடைகளை முழுவதும் கலைந்து விட்டு.... ஆடை மறைக்கக் கூடிய அனைத்து இடங்களிலும் ஊசிகளால் வைத்து குத்தி குத்தி காயப்படுத்தினான்.

நீ எனக்கு மட்டும் தான் உன்னை வேறு யாரிடமும் கொடுக்க மாட்டேன். நீ அப்படியே என்னை விட்டு போனாலும் வேற யாருக்கும் நீ இந்த உடம்பை கொடுக்கக் கூடாது. மீதி யாராவது தியாகி எவனாவது வந்தாலும் அவனுக்கு கொடுப்பதற்கு கூசி குறுகி தான் போக வேண்டும் என்று கூறிக்கொண்டே ஊசிகளால் குத்தி எடுத்தான்.

அரை மயக்கத்தில் இருந்தவளோ அவனின் இந்த கொடூர செயலில் முழு மயக்கத்திற்கு சென்றாள்.

தன்னுடைய ஆசை தீர அவளை காயப்படுத்தியவன்... அவளைத் தூக்கி கட்டலில் படுக்க வைத்து விட்டு.. இப்போது நீ காலையில் வெளியில் சென்றால் உன் உடலில் இருக்கும் வலிகளுக்கு நமக்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது என்று தான் நினைப்பார்கள். இதோ இந்த ரத்த திட்டுகள் சொல்லாமல் சொல்லும் சொச்சை கதையை என்று சொல்லி விட்டு, அவளை அப்படியே போட்டு விட்டு, தான் வாங்கி வைத்து இருந்த மது பானங்களை எடுத்து வைத்து அங்கு இருந்த ஸ்வீட்ஸ்களோடு சரக்கு அடித்த மட்டையாகினான்.

அதிகாலை நான்கு முப்பது மணி...

இரவில் சரோஜா தன் ஊருக்கு வந்தாலும்.. எப்பவும் அதிகாலை எழும் பழக்கத்தால், எப்பவும் போல எழுந்தவள் தங்களுடைய மாட்டு கொட்டகைக்கு வந்து.. அங்கு நடக்கும் வேலைகளை பார்த்துக் கொண்டு தனக்கு பிடித்த தன்னுடைய லட்சுமி கன்னுக்குட்டிக்கு அருகில் வந்து அமர்ந்து அதன் தலையை தடவி கொடுத்தவர், என்ன டா செல்லம் எப்படி இருக்கிறாய் என்று பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு பால் கறந்து கொண்டிருந்த வேலன்... உங்கள் லட்சுமி குட்டி எல்லாம் நாங்கள் நன்றாக தான் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் உங்கள் தங்கச்சி பொண்ணு அழகி தான் அது வாழ்க்கையை அதுவே கெடுத்துக் கொண்டது என்று புலம்பினார்.

உறவு முறையில் சரோஜா... வீராசாமிக்கு மகள் முறை வேண்டும் அதனால் அழகியும் எப்பவுமே பெரியம்மா பெரியம்மா என்று பாசமாக இருப்பாள்.

சரோஜாவும் சிறுவயதிலேயே தங்கையும் தங்கையின் கணவரும் இறந்த துக்கத்தில் இருந்த குழந்தைக்கு ஆதரவாக இருந்தார். அவள் ஊருக்கு செல்லும் போதெல்லாம் இவள் அழுது கொண்டு தான் இருப்பாள், இந்த முறையும் கூட அழுது கொண்டு தான் அனுப்பி வைத்தாள்.

ஏன் என்னாச்சு என் செல்ல குட்டிக்கு என்ன பிரச்சினை என்று கேட்டாள் சரோஜா.

நடந்த அனைத்து விஷயங்களையும் வேலன் சொல்லி முடிக்க.. கோபத்தில் எழுந்தவள் சற்றும் தாமதிக்காமல் தன் தங்கையின் வீட்டை நோக்கி நடந்தாள்.

அவர்கள் வீட்டிற்கு சென்று பார்க்க காலை வேலையை அங்கு இருந்த வேலையாட்கள் செய்து கொண்டு இருந்தார்கள்.

முன் பக்கம் வேலை செய்து கொண்டு இருந்த சிட்டு வேகமாக ஓடி வந்து.. வாங்கம்மா பாப்பா கல்யாணத்துக்கு கூட வராமல் விட்டு விட்டீர்களே என்று சொல்லிக் கொண்டே.. உள்ளே அழைத்து சென்றார்.

சிட்டுப் பெரியப்பாவும் பெரியம்மாவும் எங்கே என்று கோபத்தில் கத்தினாள் சரோஜா.

அவர்கள் இருவரும் தோட்டத்து வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள். இதோ
பாப்பா அறையில் பாப்பாவிற்கு நேற்று இரவு தான் என்று சொல்லாமல் திக்கிக் கொண்டு நின்றாள்...

கோபத்தில் வேகமாக சென்று சரோஜா.. சற்றும் யோசிக்காமல்... கதவை வேகமாக தள்ளினாள். அது பழங்காலத்து தேக்கு மர கதவு ... இருந்தாலும் சரோஜாவின் ஒரே தட்டில் ஆட்டம் கண்டது.. மறுபடியும் வேகமாக ஒரு தள்ளு தள்ள பெரும் சத்தத்துடன் கதவு திறந்து கொண்டது.

அங்கே கட்டிலில் தன் மகளை கண்டவர்... சற்று யோசிக்காமல் பெட்ஷீட்டை எடுத்து பிள்ளைக்கு போத்தி விட்டு விட்டு... திரும்பி பார்க்க கூடி போதையில் மட்டையாகி கிடந்தவனின் அருகில் வந்தவர்... அவன் குடித்து போட்டு விட்டு இருந்த பாட்டில்களை உடைத்து... சிறிதும் யோசிக்காமல் அவனுடைய... ஆண்மை இல்லாத ஆண்மையிலும், நெஞ்சிலுமாக மாறி மாறி ஆத்திரம் தீர குத்தியவள்.. பொறம்போக்கு நாயே என்று திட்டி விட்டு..

போர்வையோடு தன் மகளை அள்ளித் தூக்கிக்கொண்டு... சிட்டுவைப் பார்த்து.. நான் இங்கே வந்தது இப்படி நடந்தது எதையும் நீ யாரிடமும் மூச்சு கூட விடக்கூடாது. சிறிது நேரம் இங்கே பாப்பாவோடு இரு. நான் வருகிறேன் என்று ரத்த களறியாக வெளியில் சென்றவரை பார்க்க அப்படியே காளி அவதாரம் எடுத்தது போல் இருந்தது சிட்டுவிற்கு.

விரைவாக சென்று கையில் ஒரு துணி பை உடன் தன்னுடைய டாட்டா சுமோவில் வந்தவர்...

வேகமாக சென்று இந்த முறை தன் மகளுக்காக வாங்கி வந்த சுடிதாரை இந்த நிலையில் அவளுக்கு தானே போட்டு விடுவோம் என்று நினைக்காதவர்... இவ்வளவு நேரமும் இருந்த ஆவேசம் அடங்கி ... கண்கள் கண்ணீரை சிந்த கைகள் மட்டும் பரபரப்பாக அவளுக்கு அந்த உடையை மாட்டிக் கொண்டு இருந்தார்.

துணிகளை அணிவித்தவள் அவள் உடம்பில் இருந்த அனைத்து நகைகளையும் கழட்டி... சிட்டுவிடம் கொடுத்து விட்டு, தாலியைஒரு நிமிடம் கைகளில் ஏந்தி பார்த்தவர்... இதற்கு என்று ஒரு புனிதம் இருக்கிறது. ஆனால் இதை அணிவித்தவனுக்கு எந்த தகுதியும் இல்லை. சுமந்து கொண்டு இருப்பவளுக்கு தலையெழுத்தும் இல்லை என்று ... சொல்லி அதை அறுத்து எறிந்தவர்.. அழகியின் தலையை சுற்றி தூக்கி எறிந்தார் அது எங்கு சென்று விழுந்தது என்று தெரியாமல்.... தன் மகளை கைகளில் ஏந்தியவர்...

தனது காரில் முன் பக்கத்தில் அமர வைத்து... சீட் பெல்ட் அணிந்து விட்டு... சிட்டுவை பார்த்து இங்கு நான் வந்தது... நடந்தது ஏதேனும் ஊருக்குள்ளேயோ???! இல்லை இங்கு யாரிடமோ மூச்சு விட்டாய் ... அடுத்த உன் நிலைமை என்ன ஆகும் என்று எனக்கு தெரியாது என்று கோபத்தின் உச்சத்தில் உக்கிரமாக உறுமியவள்... தன் ஊரின் எல்லையை கடக்கும் வரை மிகவும் அமைதியாக வண்டியில் சென்றவள்... தன் ஊரின் எல்லையை கடந்த பிறகு சீறிப்பாய்ந்தார்.

இதுவரை நடந்த அனைத்தையும் சொல்லிக் கொண்டு வந்த அழகி... அதன் பிறகு உடலுக்கான சிகிச்சை சில வாரங்களில் முடிந்தாலும், மனதிற்கான சிகிச்சை எனக்கு ஒரு வருடங்கள் நடந்தது. அதன் பிறகு என் பள்ளி படிப்பை முடித்து காலேஜ் முடித்து இதோ ஏழு வருடங்கள் ஆகிவிட்டது என்று சொல்லி கொண்டே வந்தவளை...

எதுவும் கேட்காமல் அவளின் அருகில் சென்று அமர்ந்து, அவளின் வாயில் கைகளை வைத்து இனி எதுவும் பேச வேண்டாம்.. என்பது போல் மூடி... அவளை தன் நெஞ்சோடு அனைத்து கொண்டான் கர்ணா.

இது வரை மறைவில் நின்று கேட்டுக் கொண்டு இருந்த சனாதன் கண்களும் கலங்கி போய் இருக்க... தன் தம்பியின் செயலில் சரி இனி அவன் பார்த்துக் கொள்வான். இதற்கு மேல் இங்கு நிற்பது சரியல்ல, கேள்விகள் பல இருக்கு ... அதை பொறுமையாக தெரிந்து கொள்ளலாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு வந்த வழியே சத்தம் இன்றி உள்ளே சென்றான்.

இணைந்திருங்கள்... இனி... எல்லாம் சுகமே....

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top