• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
30. மெய்யழகியின் கணவன் யார்? மெய்யழகி திருமணம் ஆனவளா?

சனாதன், உதயாவோடு சென்று அவனை பஸ்ஸில் ஏற்றி விட்டு அங்கு இருந்தவர்கள் அனைவரிடமும் சொல்லி விட்டு தன் வீட்டை நோக்கி வந்தான்.


அவன் காரில் வராமல் பைக்கில் வந்ததால்..

வீட்டின் பக்கவாட்டில் மெய்யும் கர்ணாவும் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து விட்டு அங்கு தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைத்து சனாதன் வர. ...

ஆனால் அங்கு நடந்த எதுவும் தெரியாமல் கடைசியாக மெய்யழகி... கர்ணாவின் அணைப்பில் இருக்கும் போது,...

மெய்யழகி இறுதியாக கூறிய ... மாமா நான் திருமணம் ஆனவள் அதாவது இன்னொருவரின் மனைவி என்று சொன்னது கேட்டு.. கர்ணா பதறி விலகி நிற்க...

அவள் தலை குனிந்து நின்றாள்.

கர்ணாவின் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது... அது மணமான பெண்ணை நேசித்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியா... இல்லை தன் முதல் காதல் தனக்கு சொந்தம் இல்லை என்ற விரக்தியா என்று தெரியாமல் கலங்கி நின்றான் கர்ணா.

தன் தம்பியின் நிலையை அறிந்து அவனிடம் வேகமாக செல்ல நினைக்கையில்... கர்ணா கையில் இருந்த போனில் முத்தாயி சத்தம் போட்டு அழைப்பது கேட்டு தன் கண்ணீரை துடைத்து கொண்டு... அம்மாச்சி என்னை மன்னித்து விடுங்கள்... தெரியாமல் உங்கள் பேத்தியின் உண்மை நிலை என்ன என்று யோசிக்காமல் பேசி விட்டேன் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று முத்தாயிடம் மன்னிப்பு கேட்டான்.

அந்த பக்கம் அழுது கொண்டு இருந்த முத்தாயி... ஏன் கண்ணு நிசமா என்ற பேத்தியை உனக்கு பிடிச்சு இருக்கா... என்று ஏக்கத்தோடு கேட்டாள்...

அம்மாச்சி நீங்கள் எந்த அடிப்படையில் கேட்கறீங்க தெரியல.... மெய் ஒரு மாதிரி சொல்கிறாள், நீங்கள் ஒரு மாதிரி கேட்கறீங்க... ஆனால் என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிடுவேன்.

நாங்கள் வெளி நாட்டில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் ஒரு நாள் கூட அந்த கலாச்சாரத்தில் வளரவில்லை.

காலையில் எழும் போது எங்கள் அம்மாவின் கந்த சஷ்டி கவசத்தோடு தான் நாங்கள் எழுந்திருப்போம். எங்க அம்மாவின் குரலில் கேட்கும் போது அவ்வளவு அருமையாக இருக்கும்.

என் மனதில் என்று மெய்யை நினைக்க ஆரம்பித்தனோ அந்த நொடி முதல் என் இறுதி மூச்சு என்னை விட்டு பிரியும் வரை அவளை நினைத்து கொண்டு தான் இருப்பேன். ஆனால் அவள் இன்னொருவரின் மனைவி என்று தெரிந்த பிறகு இனி அவளை என் இறுதி மூச்சு அடங்கும் வரை நான் பார்க்க மாட்டேன் என்று சொன்னான் கர்ணா தேவ்.

இவ்வளவு நேரமும் அவன் பேசியதே பொறுமையா கேட்ட முத்தாயி...

ஐயோ ராசா அப்படி ஒரு முடிவுக்கு மட்டும் வந்துடாதீங்க... போனை அழகி கிட்ட கொடுங்க என்று சொன்னாள் முத்தாயி.

அம்மாச்சி நான் போனை அவர்களுக்கும் கேட்பது போல் தான் வைத்து இருக்கிறேன் நீங்கள் சொல்லுங்கள் என்று சொன்னான் கர்ணா.

அழகி இந்த தாத்தா அப்பாயியை உண்மையா நீ நேசிக்கிற அப்படின்னா என் மேல் சத்தியம் உன் வாழ்வில் நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் இந்த நிமிடம் அந்த தம்பி கிட்ட சொல்ற... இல்லை எங்கள் இருவரையும் நேசிக்கவில்லை என்றால் நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்... பிறகு காலையில் நாங்கள் இந்த உலகத்தை விட்டு போய் இருப்போம்.

அதே சமயம் எங்கள் இருவரின் இறுதி சடங்கிலும் நீ பங்கேற்கக் கூடாது என்று சொல்லிய முத்தாயின் பேச்சை கேட்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டு இருந்தது.

தன் அப்பாயின் பேச்சை கேட்டவர் தான் நின்று கொண்டு இருந்த இடத்திலே மடங்கி அமர்ந்து உட்கார்ந்தாள்.

அந்த நிலையில் அவளின் கண்கள் கண்ணீர் வடித்தாலும் ... சிறிதும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக தான் இருந்தாள்.

முழுமையாக ஐந்து நிமிடம் அங்கு அமைதியே நிலவ‌..‌ அங்கு இருந்த செடி மரங்கள் கூட இரவு பூச்சிகள் கூட அவர்களின் கண்ணீரை கண்டால் இல்லை அவளின் கதையைக் கேட்பதற்காகவோ மிகவும் அமைதியாக காத்திருந்தன. ஆறாவது நிமிடம் தன் அழகையை நிறுத்தி விட்டு கர்ணாவின் கையில் இருந்த போனை வாங்கி அப்பாயி.. நீ சொன்னது போல் கண்டிப்பாக ஒரு விஷயம் விடாமல் அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்.

ஆனால் இனி நான் உன்னிடம் பேச மாட்டேன் என்று சொல்லி விட்டு போனை கட் செய்து விட்டு... மாமா இங்கே வாங்க எவ்வளவு நேரம் நின்று கொண்டே பேசுவது... என்று சொல்லி அங்கு இருந்த கல் மேடையில் அவனை அமர சொல்லி விட்டு, அவனுக்கு எதிரில் அதே கல்மடையில் அமர்ந்தாள் அழகி.

மாமா... நம்ம ஊர் வில்வனூர் தான் எனக்கும் சொந்த ஊர். அங்கே தான் நான், என் அம்மா, அப்பா, அப்பாயி, தாத்தா என்று வாழ்ந்தேன். என்னுடைய ஐந்து வயது வரை எனக்கு கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாது.. ஐந்து வயது வரை என் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மட்டும் தான்... அது என் குழந்தை பருவம்... அதனால்தான் என்னவோ எனக்கு அது அதிகம் நினைவு கூட இல்லை.

ஆனால் என்னுடைய ஐந்தாவது பிறந்த நாளின் போது எங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று மொட்டை அடித்து காது குத்தி அப்பா அங்கு இருந்த அனைவருக்கும் கெடா வெட்டி சோறு போட்டார்.

அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள் அம்மாவும் அப்பாவும்... அன்று எங்கள் குலதெய்வ கோவிலில் வழிபாடுகள் முடிந்து இரவில் பயணமாகிக் கொண்டு இருந்தோம். இரவு நேர பயணம் அப்பா தான் எப்பவும் கார் ஓட்டுவார். எனக்கு எங்கள் அப்பா ஓட்டினால் தான் மிகவும் பிடிக்கும். எனக்காகவே எங்க அப்பா தான் கார் ஓட்டி கொண்டு வந்தார்.

கோவிலில் இருந்து கிளம்பி ஒரு அரை மணி நேரம் இருக்கும்... எனக்கு எதுவோ சாப்பிட்டது ஒத்துக்கொள்ளாமல் வாந்தி வந்தது. அதனால் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு நான் இறங்கி வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தேன்.

அப்பாயி, அம்மா இருவரும் என்னை பிடித்துக் கொண்டார்கள். தாத்தா இயற்கை உபாதைக்காக மறைவான இடத்திற்கு சென்றார்.

நான் வாந்தி எடுத்து முகம் எல்லாம் கழுவி முடித்த பிறகு...

அங்கு அந்த இரவில் மின்மினி பூச்சிகள் நிறையாக இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டு நான் விளையாடிக் கொண்டே இருந்தேன்.

அப்பாவும் என்னுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தார். மற்றவர்கள் அனைவரும் காருக்கு அருகில் நின்று எங்கள் இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

நாங்கள் மேலே தெரிந்த மின்மினி பூச்சியை பார்த்துக் கொண்டு பிடிக்கும் ஆர்வத்தில் இருந்த சமயத்தில் என் தந்தையின் காலுக்கு அருகில் வந்த பாம்பை கவனிக்காமல் விட்டு விட்டோம்.

ஆனால் அதை அம்மா பார்த்து விட்டு வேகமாக வந்தவர் என்னையும் அப்பாவையும் பாம்பு கொத்தி விடுவதற்கு முன்பு... வேகமாக அவசரத்தில் காலால் தள்ள.. அமைதியாக போய்க்கொண்டு இருந்து இருக்கும் ... ஆனால் அம்மாவின் பதட்டம் அந்தப் பாம்பை தாக்குவதாக நினைத்து அம்மாவை தீண்டி விட்டது.

அம்மாவை பாம்பு கடித்ததும்.. அப்பா பக்கத்தில் இருந்த கட்டையால் அதை அடிக்க போக... அப்பாவையும் கடித்து விட்டது... ஆனாலும் அப்பா அந்தப் பாம்பை கொன்று விட்டார்.

அந்தப் பாம்பு உயிர் பிரிவதற்கு முன்பே என் அம்மா இறந்து கீழே விழுந்தார்.

என் அம்மாவின் கண்கள் என்னையும் என் அப்பாவையும் பார்த்துக் கொண்டே மெதுவாக மூடியது.

அதே சமயம் என் அப்பா ... என் தாத்தாவின் கையில் என்னை ஒப்படைத்து விட்டு... என் அப்பாவும் அதே இடத்தில் இறந்தார்.

பிறகு காரியங்கள் அனைத்தும் முடிந்த பிறகு... ரொம்ப நாட்கள் என் அப்பா அம்மாவின் இறந்த துயரத்தில் நான் என் சிரிப்பு முழுவதையும் தொலைத்து விட்டேன். சிறுபிள்ளையாக இருந்தாலும் என் அப்பாவும் அம்மாவும் எனக்கு... மிகவும் தைரியமாக தான் வளர்த்து இருந்தார்கள்.

நாட்கள் செல்ல செல்ல தாத்தா அப்பாயி இருவரின் கவனிப்பிலும் நான் கவலை மறந்து சிறு மொட்டாக சுற்றி திரிந்தேன்.

என் தாய், தந்தை இல்லை என்ற குறையைத் தவிர வேறு எந்த குறையும் இல்லாமல் தான்... என் தாத்தாவும் அப்பாயிம் என்னை பார்த்துக் கொண்டார்கள்.

நான் எட்டாவது படித்துக் கொண்டு இருக்கும் போது பெரிய மனுசியாக ஆனேன்.. என்னுடைய முழு ஆண்டு தேர்வு நடந்து கொண்டு இருந்தது.

பரீட்சை முடிந்த பிறகு எனக்கு சடங்கு வைத்தார்கள் .அப்போது தான் எனக்கு கெட்ட நேரம் ஆரம்பித்தது.

சடங்கிற்கு எனது தாய் மாமனின் குடும்பம் வந்து எங்கள் வீட்டில் தங்கியது. அப்போது தான் என் தாய் மாமனின் கார் டிரைவராக அறிமுகமானான் பழனி என்பவன்.

அவன் வயது என்ன என்று எல்லாம் எனக்கு தெரியாது. ஆள் பார்க்க அழகாக... சிரித்த முகத்துடன் எப்பவும் இருப்பார் அந்த அண்ணன்.

அவர் தான் எங்கு சென்றாலும் எங்கள் அனைவரையும் அழைத்து செல்வார். அவர் கார் ஓட்டும் போது எனக்கு என் அப்பாவின் நினைவு தான் வரும்.

அதனாலயே நான் அவருடன் அதிகம் பழகிக் கொண்டு இருந்தேன். நான் சிறுபிள்ளை என்பதால் பெரியவர்கள் யாரும் அவருடன் பழகுவதை தவறாக நினைக்கவில்லை.

எனக்கும் அவரிடம் என் தந்தையைப் போல் ஒரு உணர்வோடு தான் நானும் பழகினேன். ஒன்பதாம் வகுப்பிற்கு அவர் தான் என்னை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்வார். ஒன்பதாம் வகுப்பு ஹாஃப் இயர்லி எக்சாம் அப்போது தான்.. என் வாழ்வின் இருண்ட பக்கங்கள் ஆரம்பமாகியது.

நான் படித்த பள்ளிக்கூடத்தில் ஆண் பெண் இருபாலரும் படிக்கும் பள்ளிக்கூடம் தான் அது.

அங்கு 11ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மாணவன் செல்வம் என்று ஒருவன்... என்னை விரும்புவதாக வந்து என்னிடம் சொன்னான்.

நான் இது மிகவும் தவறு. நாம் அனைவருமே சிறு பிள்ளைகள்... இதுபோல் என்னுடன் பேசாதீர்கள்.. மீறி இந்த எண்ணத்தில் என்னிடம் பழகி பேச வந்தீர்கள் என்றால் ஸ்கூல்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் என்று சொல்லி விட்டேன்.

அதன் பிறகு ஒரு நாளும் என்னை செல்வம் தொந்தரவு செய்வது இல்லை. ஆனால் நான் போகும் இடம் எல்லாம் என்னை பார்த்துக் கொண்டே இருப்பார்.

எனது தோழிகள் கூட பாவம் என்று அவருக்காக வருத்தப்படுவார்கள். அது மாதிரி அவனுக்காக வருத்தப்பட்ட அனைத்து தோழிகளிடம் இருந்தும் நான் நட்பை முறித்துக் கொண்டேன்.

அந்த சமயத்தில் தான் அரையாண்டு தேர்வு விடு
முறை தொடங்கியது...

அந்த விடுமுறையில் தான்
அன்று ஒரு நாள்...

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top