• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
3.கடற்கரையில் வாங்கிய அடி...

தன்னை சுரண்டிய படி... சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் சுரண்டி கொண்டு இருந்தவரின் தலையில் வேகமாக ஒரு கொட்டு கொட்டி...


இன்னும் ஒரு தடவை என் கையை நீ சுரண்டுன ... அப்புறம் நடக்கிறதே வேற என்னடி இவ இப்படி பண்ணிட்டு இருக்கா, நீ அமைதியா இருக்க ஏண்டி இப்படி என் உயிரை வாங்குறீங்க என்று சஞ்சனா, மிதுனா இருவரையும் பார்த்து புவனா கேட்டாள்.

அப்பவும் சஞ்சனா ஏதோ ஒரு சிந்தனையிலேயே இருக்க...

மிதுனா தான் பேச்சை ஆரம்பித்தாள். புவனா...

மிதுன மறுபடியும் புவனா என்று இழுக்கவும் பொறுமை இழந்தவள் என் பெயர் புவனா என்று பெயர் வைத்து 22 வருடங்கள் ஆயிடுச்சு. புவனா என்பது என் பெயர் என்றும் எனக்கு நல்லாவே தெரியும். இதுக்கு மேல ஒரு தடவை உன் வாயிலிருந்து புவனா என்று பேர் வந்துச்சு... அப்புறம் இந்த புவனா சும்மாவே இருக்க மாட்டா .. அட ச்சீ கருமம் தயவு செய்து இப்ப நீ என்னனு சொல்ல வரியா இல்லையா...

என் பெயரை நானே ஏலம் போட வைக்கிற கொன்னுடுவேன் டி என்று கடுப்படித்தவள் சஞ்சனா அப்போவும் அமைதியாக இருப்பதை பார்த்த பொறுமை இழந்து தன் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு தன்னுடைய டீம் மெம்பர்ஸ் அனைவரையும் பார்த்து தயவு செய்து கொஞ்சம் இந்த வேலையை பாருங்கள்... என்று தன்னுடைய வேலைகளை நிறுத்தி வைத்துவிட்டு தன்னுடைய டீம் மெம்பர்ஸ் செய்ய வேண்டிய வேலைகளை சொல்லி விட்டு,

மிதுனாவை பார்த்து திரும்பி உட்கார்ந்து... தயவு செய்து நேரா மேட்டருக்கு வா இதுக்கு மேல எனக்கு பொறுமை இல்லை என்று கடுப்படித்தாள் புவனா.

அது வந்து புவனா என்று ஆரம்பிக்கும் போதே அவளின் முறைப்பை பார்த்துக் கொண்டே கொஞ்சம் அமைதியா இரு இப்ப சொல்ல தான் போறேன் என்று சொல்லி விட்டு, இந்த வாரம் நீ காய்ச்சலாக இருக்கு என்று சொல்லி எப்போதும் போற சன்டே அவுட்டிங்க்கு வரல..

நான், சஞ்சு, ரிஷு மூன்று பேரும் போனோமா...

அப்ப முதலில் அபிராமி மால் போய் வின்டோ சாப்பிங் பண்ணிட்டு நல்லா அங்கேயே சாப்பிட்டு விட்டு.. நேராக பீச் போனோம்.

அங்கே போனதும் ....

பீச்..

ஆளுக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்க்க.. அங்க விளையாடிட்டு இருந்த சிறுவர்களோடு சிறுவர்களாக மிதுனா சஞ்சனா இருவரும் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

ரிஸ்வந்த் வழக்கம் போல் மனது அமைதியாக உட்கார்ந்து அவர்கள் சேட்டையை பார்த்துக் கொண்டு இருந்தான்.

திடீரென்று அப்போது அந்த பீச்சில் விலை உயர்ந்த கார்களாக..
பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராயல்ஸ், ஜாக்குவார் நிறைய கார்கள் வந்து நின்றது...

அதைப் பார்த்து விட்டு என்ன ஏதேனும் சூட்டிங் எடுக்க போகிறார்களோ என்று நினைத்துக் கொண்டு அனைவரும் அங்கு பார்க்க அதில் இருந்து இறங்கியவர்கள் அனைவருமே பாரினர்ஸ்..

நொடியில் குறிப்பிட்ட அந்த பகுதிக்குள் அந்த இடமே நம்ம பீச்சில தான் இல்ல கோவளம் பீச்சாங்கற அளவுக்கு மாறி போச்சு...

மக்கள் அதற்கு பிறகு அவர்களைப் பார்த்து விட்டு சினிமா சூட்டிங் இல்லை என்று அவரவர் அவர்கள் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

அப்போது அந்த பாரினர்ஸ் கூட்டத்திற்கு நடுவில் செம க்யூட்டா அம்புட்டு அழகா ஒரு சாக்லேட் பாய் மாதிரி ஒருவன் வந்து அவர்கள் அங்கு இருந்த அனைவரிடமும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற போல் அவர்களுக்கான தேவைகளை செய்து கொடுத்து கொண்டு இருந்தான்.

அலைகளுக்குள் பால் விளையாடிக் கொண்டு இருந்தார்கள் சஞ்சனா மிதுனா சிறுவர்கள் என்று..

அப்போது சஞ்சனா அடித்த ஒரு பால் அங்கு இருந்த ஒரு பெண்ணின் மீது பட்டு விட்டது. அந்தப் பெண் சிறிதும் கோபப்படாமல் அதை எடுத்து அவரிடமே தூக்கி வீசி எறிந்தாள்.

சஞ்சனா நின்ற இடத்தில் இருந்து கொண்டு சாரி சிஸ்டர் அண்ட் தேங்க்யூ என்று கத்தினாள்.

ஹாய் லிஷா ஏதும் அடி பட்டு விட்டதா என்று அக்கரையாக அவளிடம் கேட்டுக் கொண்டு பார்வையின் கோபத்தை மட்டும் சஞ்சனா மீது வைத்தான்.

டோன்ட் பேணிக் மேன்... ஐ அம் ஆல் ரைட் என்று அந்த லிசா என்கிற பெண்ணும் அவனை சமாதானம் செய்ய ..

அவனோ ஓகே.. பட் ஐ அம் ரியலி சாரி ஃபார் யூ என்று கேட்டான்.

ஹேய் சில் பேபி டோன்ட் வொரி என்று சொல்லி விட்டு.. லிசா தன் பாய் ஃப்ரெண்ட் ஜான்னோடு சஞ்சனா குரூப்பில் சேர்ந்து விளையாட ஆரம்பித்தாள்.

இன்னும் சஞ்சனா மீது கோபம் வந்தாலும் லீசாவே காம்ப்ரமைஸ் ஆகி கொண்டதால்.. அவன் அங்கு இருந்த ஒரு நிழற்குடையில் அமைதியாக வந்து அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.

சஞ்சனாவும் தான் பால் அடித்தது முதல் அவனின் அசைவுகள் அனைத்தையும் மறைமுகமாக பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். ஏனோ அவனின் கோபம் அவர்களுக்கு பெரிதாகவே படவில்லை.. சரி தான் போடா என்று அமைதியாக இருந்தாள். அடிவாங்கிய பெண்ணை அமைதியாக விளையாட வந்துவிட்டால் இவன் என்ன என்ற நினைப்பில் அவனை கண்டுகொள்ளாமல் இருந்தாள்.

இவ்வளவு நேரமும் சஞ்சனா, இருவரிடமும் நெருங்க நினைத்த ஒரு இளைஞர் பட்டாளம் இப்போது அங்கு வந்த பாரினர்ஸ் பார்த்து விட்டு இயல்பாக அவர்களை நெருங்கி வந்தனர்.

ஆனால் அதை எதையும் சஞ்சனா கவனிக்காமல் பால் கைக்கு வந்ததும் மறுபடியும் விளையாட ஆரம்பித்து விட்டாள். அவள் கவனம் எல்லாம் அந்த சாக்லேட் பாய் போல் இருந்தவன் மீது இருந்தது.. அவனின் அர்த்தம் இல்லாத கோபத்திற்கு அவனை ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருந்தவள், இங்கு அவர்களோடு விளையாட வந்த இளைஞர்களின் பார்வையும் பால் வீச்சும் தவறாக இருப்பதை கவனிக்க மறந்து விட்டாள்.

இரண்டு முறை அவளின் நெஞ்சுக்கே பால் வர அப்போது தான் துணுக்கூற்று அந்த இளைஞர்களை பார்த்துக் கொண்டே, பாலை அங்கு இருந்த ஒருவனின் நெற்றி பொட்டிற்கு வேகமாக அடித்தாள்.

அவளின் இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத அந்த பையன் தலையில் நன்றாக அடியை வாங்கிக் கொண்டான்.

இப்போது ஆத்திரத்தில் மறுபடியும் அவளின் நெஞ்சில் அடிப்பதற்கு பாலை குறி வைத்து அடிக்க லாவகமாக நகர்ந்து கொண்டாள் சஞ்சனா.

ஆனால் அந்த பால் வலுவாக லிசாவின் கைகளில் பட்டு விழுந்தது. அதைப் பார்த்தவர் இதற்கு மேல் அமைதியாக இருந்தால் சரி வராது என்று அந்த பையனிடம் வேகமாக சென்றாள் அப்போது அங்கு வந்த ஒரு அலை வேகமாக அவர்கள் மீது மோத .. அதில் தடுமாறி அருகில் அங்கு ஓடி வந்த ஒருவன் மீது பளார் என்று அறைந்து இருந்தாள்.

அடுத்த நொடி சற்றும் தாமதிக்காமல் சஞ்சனாவின் கன்னமும் எரிந்தது. ஆமாம் அந்த சாக்லேட் பாய் அவனை அடித்து இருந்தான் அவளை.

கோபத்தில் அவனை முறைத்துப் பார்க்க ஆனால் அங்கு அவளிடம் அடி வாங்கிய ஒருவன் அதற்கு மேல் கோபத்தோடு பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.

இவர்களின் சண்டையை பார்த்து விட்டு ரிஷ்வந்த் வேகமாக வந்து... சாரி ப்ரோ தெரியாமல் நடந்து விட்ட ஒரு சிறிய ஆக்சிடென்ட் தான் இது.

இதோ இந்த பொறுக்கி பயலை அடிக்க வந்து உங்களை தவறுதலாக அடித்து விட்டாள் அலையின் காரணத்தால்.. அதற்கு நீங்களும் அடித்து விட்டீர்கள் இதோடு இதை விட்டு விடுங்கள் என்று சொல்லி விட்டு.. மற்றவர்கள் யாரும் எதுவும் பேச இடம் கொடுக்காமல் தன் தோழிகள் இருவரையும் இழுத்துக் கொண்டு வேகமாக சென்றான்.

ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் சஞ்சனா கோபத்தில் ரிஷ்வந்த் கையை விட்டு விட்டு... டேய் நான் என்ன டா தப்பு பண்ணினேன். அவன் எதற்கு என்னை அடித்தான். அவனும் அவன் முகர கட்டையும்.. என்னால் அவனுக்கு பதிலடி கொடுக்காமல் இங்கு இருந்து வர முடியாது என்று சுற்றி முற்றி பார்க்க...

அங்கு நம் மக்கள் இளநீர் வாங்கிக் குடடித்து விட்டு கீழே போட்டு சென்று இருந்த இளநீர் கூடு கிடக்க... அதை எடுத்தவள்.

சற்று தொலைவில் இருந்த... அதாவது தன்னை அடித்தவனின் கார் அங்கு நின்று கொண்டு இருக்க, .. ரொனால்டோ ஸ்டைலில் ஒரு கிக் ஒன்றை கொடுக்க... அது பறந்து போய் அவனின் கார் சைடு கண்ணாடியை உடைத்து கீழே விழுந்தது.

சரியான கோல் அடித்ததற்காக மிதுனாவும் சஞ்சனாவும் கைகளை உயர்த்தி ஹை ஃபை போட்டு கொண்டு.. கட்டிப்பிடித்து மகிழ்ச்சியோடு தங்கள் காரில் ஏறி புறப்பட்டனர்.

இது வரை சொல்லி முடித்த மிதுனா... அமைதியாக இருந்தாள்.

அமைதியாக இது வரை அவள் சொல்லிய அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த புவனா இப்போது அவள் முகத்தை பார்த்து விட்டு...

திடீரென்று அவளின் அமைதியான முகத்தை கவனித்து விட்டு அதே சமயம் அவளின் அமைதி எதற்காக என்று புரிந்து கொண்டதற்கு அடையாளமாக கலகலவென்று சிரித்தாள் புவனா.

புவனாவின் சிரிப்பில் கடுப்பானவள் இப்ப எதற்கு இப்படி கெக்க பிக்க கெக்க பிக்கன்னு சிரிச்சுகிட்டு இருக்க என்று கோபத்தில் கத்தினாள் மிதுனா.

மிதூ கோபத்தில் கத்தினாலும் இவளால் சிரிப்பை அடக்க முடியாமல் அதே சமயம் சஞ்சனா வை பார்க்க மறுபடியும் சிரிப்பு வர..

ஓஹோ அன்றைய அவளின் கன்னத்தின் கை தடமும், இன்றைய உன் கன்னத்தில் கைத்தடமும் எதற்கு என்றால், அதற்கு காரணம் ஒரே சம்பவம் என்று சொல்கிறீர்கள்.. அப்படித் தானே அது சரி...

ஆமாம் உன்னை அடித்தது.. அடி வாங்கியவனா?.. அடி கொடுத்தவனா??..

என்று கிண்டலாக கேட்டாள் புவனா.
 
Member
Joined
Jun 26, 2025
Messages
37
மிதூ கோபத்தில் கத்தினாலும் இவளால் சிரிப்பை அடக்க முடியாமல் அதே சமயம் சஞ்சனா வை பார்க்க மறுபடியும் சிரிப்பு வர..

ஓஹோ அன்றைய அவளின் கன்னத்தின் கை தடமும், இன்றைய உன் கன்னத்தில் கைத்தடமும் எதற்கு என்றால், அதற்கு காரணம் ஒரே சம்பவம் என்று சொல்கிறீர்கள்.. அப்படித் தானே அது சரி...

ஆமாம் உன்னை அடித்தது.. அடி வாங்கியவனா?.. அடி கொடுத்தவனா??..
என்று கிண்டலாக கேட்டாள் புவனா.

சஞ்சனா அடித்ததாக சொன்னேன் தானே அவன் தான். அவனை அவள் அன்று அடித்தற்கு இன்று என்னை அவன் அடித்து விட்டான் என்று அடி வாங்கிய கன்னத்தை தடவிக் கொண்டே சொன்னாள்.

அச்சச்சோ பாவம் மிது குட்டி... சரி விடு சாய்ந்தரம் வீட்டிற்கு போகும்போது உனக்கு பெரிய டெய்ரி மில்க் சில்க் வாங்கி தருகிறேன் என்று புவனா சொல்லவும் இவ்வளவு நேரம் இருந்த பயம், வலி, அனைத்தும் தொலைந்து போக...

ஏய்... நிஜமாகவே தான் சொல்கிறாயா..‌ இல்லை என சமாதானப்படுத்துவதற்காக சொல்கிறாயா.. ப்ளீஸ் டி செல்லம் உண்மை சொல்லு என்று கேட்டாள் மிதுனா.

அடி சத்தியமாக வாங்கி தருகிறேன்.. ஆனால் ஒன்று சொல்... இப்ப உன்னை அடித்து சென்றவனும்.. நம்ம சஞ்சனாவை அடித்தவனும்.. யார்.. உனக்கு ஏதும் தெரியுமா என்று கேட்டாள் புவனா.

ஹாய் பிரண்ட்ஸ் உங்களுக்கு ஏதேனும் தோன்றுகிறதா... நீங்க சொல்வதாக இருந்தால் சொல்லலாம்...

இணைந்திருங்கள்
சொல்லவா

... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top