• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
29. வில்வனூர்....

வில்வனூர் இது என்னுடைய கற்பனையில் உதித்த கிராமத்தின் பெயர். கிராமம் என்னுடைய கற்பனையே தவிர எந்த ஒரு இடத்தையும் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை.

வில்வனூர்...

அந்த இரவின் மடியில் அந்தக் களம் முழுவதும் அமைதியாக இருக்க... மனிதர்கள் நீங்கள் பேசவில்லை என்றால் என்ன?.. நாங்கள் உரையாடுகிறோம் என்று இரவு பூச்சிகள் சிருங்காரம் ... மனிதர்களின் குரல்களை விட ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது.

அந்தக் களத்தின் ஓரத்தில் இருந்த சிறு குடிலில்... நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன் என்பது போல் எரிந்து கொண்டு இருந்தது ஒரு மஞ்சள் நிற குண்டு பல்பு.. ஆனால் அதன் முழுவதும் கருமை படிந்து இருக்க மங்கலான வெளிச்சம் மட்டுமே அந்த அறையில் இருந்த இரண்டு வயதானவர்களுக்கு போதுமானதாக இருக்குமா தெரியவில்லை ஆனாலும் அதில் தான் .... வசித்து வந்தனர்.

பெரியவர் வீராச்சாமி.. கயிற்றுக் கட்டில் படுத்து இருக்க... அவருக்கு கீழே ஒரு பாயை விரித்து படுத்து இருந்தாள் முத்தாயி...

அவரின் இருமல் சத்தத்தில் எழுந்த முத்தாயி அவருக்கு... அடுப்பு கங்கில் போட்டு வைத்து இருந்த சுடு தண்ணி தவளையில் இருந்து ஒரு டம்ளர் சுடு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க...

அதை வாங்கி குடித்தவர் கண்கள் கலங்கி இருந்தது.

ஏன் சாமி.. கண்ணு கலங்கி கிடக்கு என்று கேட்டுக்கொண்டே அவரின் கண்களை துடைத்து விட்டார் முத்தாயி..

முத்தா நாம் இருவரும் பூமிக்கு பாரமாக இருக்கிறோம்... வாழ வேண்டிய வயதில் எத்தனை பிள்ளைகள் இறக்கிறார்கள்... ஆனால் நாம் ஏன் இன்னும் உயிரோடு இருக்க வேண்டும்... என்று கண் கலங்கினார். அதே நேரம் அந்த இரவு நேரத்தில் அவருடைய பழைய பட்டன் போன்.. தன்னுடைய ஒலியை எழுப்பியது.

இதோ இந்த அழைப்பு தான் மாமா.. நீயும் நானும் உயிரோடு இருக்க காரணமே என்று சொல்லிக் கொண்டே மாடத்தில் இருந்து போனை எடுத்துக் கொடுக்க...

இவ்வளவு நேரமும் விரக்தியில் பேசிக் கொண்டு இருந்த விழிகள்... மிளிர உண்மை தான் முத்தாயி... என்று சொல்லி கொண்டே போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தவர்....

ஏத்தா... அழகி ... நல்லா இருக்கியா என்ன டா இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்க... மனசு எதுவும் வெசனமா கிடக்கா என்று பரிதவிப்போடு கேட்டார் வீராசாமி.

ஐயோ வீரா அப்படி எல்லாம் எதுவும் இல்லை... நான் தான் கூறுகெட்ட சிறுக்கி, நேரம் காலம் தெரியாமல் உன்னை உசுப்பி விட்டுடேனா.. மனசுக்கு ரொம்ப அமைதியா சந்தோஷமா இருந்துச்சா.... நான் வேற யார் கிட்ட சொல்லுவேன் உங்க கிட்ட தானே சொல்ல முடியும். அது தான் மணிய பாக்காம கால் பண்ணிபுட்டேன்.. என்று பேசிய தன் பேத்தியின் குரலில் இருந்த சந்தோஷம் முதியவருக்கும் தெரிய அவரும் மகிழ்ச்சியோடு சொல்லுத்தா...

என் பேத்திக்கு என்ன சந்தோஷம்... இவ்வளவு உற்சாகமாக இருக்கிறாளே.. ஏதாவது விசேஷம் வச்சி இருக்காகளா கண்ணு சரோஜா.. என்று கேட்டார் வீராசாமி.

ஐயோ அது எல்லாம் ஒன்றும் இல்லை வீரா... ஏனோ மனசுக்கு ரொம்ப அமைதியா இருக்கு வீரா. முன்னே எல்லாம் என்ன நடக்கும் என்று பயந்து கொண்டே இருப்பேன். சரோஜா அம்மா மட்டும் தான் எனக்கு ஆறுதலும் தைரியமும் சொல்வார்கள். இங்கு சுற்றிலும் நிறைய பேரு வேலைக்கு இருக்கிறார்கள். அவர்களுடன் பேசி பழக கொஞ்சம் தைரியம் வந்து இருந்தேன். இருந்தாலும் இடை இடையே உங்கள் நினைவு வரும் போது எல்லாம் பயமாக இருக்கும்.

நீங்களும் என்னுடன் வாருங்கள் என்றால் வர மறுக்கிறீர்கள்.. ஆனால் இப்போது எனக்கு நம்பிக்கை வந்து இருக்கு.. இங்க சரோஜா அம்மாவின் மருமகன்கள் 5 பேர் வந்து இருக்கிறார்கள்.

அவர்கள் ஐந்து பேரையும் பார்க்கும் போது மனதிற்கு திருப்தியாக இருக்கிறது கண்டிப்பாக எனக்கு எந்த கஷ்டமும் வர விட மாட்டார்கள். என்னை வேற்று மனுஷி போல் ஒரு முறை கூட அவர்கள் பார்க்கவில்லை தெரியுமா?.. அவர்கள் குடும்பத்தில் ஒருத்தி போல் தான் என்னிடம் பேசி பழகுகிறார்கள்.

சரோ அம்மா கிட்ட சொல்லிட்டு... நேரம் பார்த்து அவர்களிடம் உங்களைப் பற்றி பேச தான் போகிறேன். உங்களை என்னுடன் இங்கு அழைத்து வர தான் போகிறேன் என்று சொன்னாள் மெய்யழகி.

சரித்தா... ரொம்ப சந்தோஷம் நீ எப்படி இப்படி பிடிவாதம் பிடிக்கிறியோ.. அதே தான் நாங்களும் சொல்றோம், நீ கல்யாணம் பண்ண சம்மதித்து.. ஓகே கல்யாணம் நடக்கும் போது, அப்போதைக்கு அங்கு வந்து உன் கல்யாணத்தை நாங்கள் இருவரும் முன்னே நின்று நடத்தி வைப்பதோடு உன்னுடனே இருக்கிறோம் சரியா என்று சொன்னார் வீரா...

இப்போது அமைதியாக இருந்த அழகி... முத்தாயிட்ட போன குடு என்று மட்டும் சொன்னாள்.

சிரித்துக் கொண்டே தன் மனைவியிடம் ஃபோனை நீட்டினார் வீராசாமி.

என்ன கண்ணு எப்பவும் போல உன் தாத்தா கல்யாணம் பற்றி பேச்சு எடுத்த உடனே என்னிடம் போன கொடுக்க சொல்லிட்டியா... ஏன் கண்ணு எங்க கஷ்டம் உனக்கு புரியலையா?.. எங்களுக்கும் வயசு ஆகிகிட்டே போகுது.. உனக்கு ஒரு நல்லது பண்ணி பார்க்கணும்னு நாங்க நினைப்பது தவறா கண்ணு... என்று கண் கலங்கினார் முத்தாயி.

அவள் அந்த பக்கம் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததால்.. அவளுக்கு பின்னே நின்று இருந்த கர்ணாவை கவனிக்க தவறினாள்.

முதலில் சந்தோஷமாக பேசிக் கொண்டு இருந்தவள் திடீரென்று அமைதியாக இருக்கவும், அதுவும் அந்த இருளிலும் அவளுடைய வரி வடிவத்திலே தெரிந்தது அவள் கலங்கி கொண்டு இருக்கிறாள் என்று..

சட்டென்று சிறிதும் யோசிக்காமல் அவள் கையில் இருந்தால் போனை பின்பக்கம் இருந்து வாங்கியவன்...

ஹலோ என்று பேசினான் கர்ணா.

தென் பேத்தியின் ஃபோனில் முதன் முறையாக ஒரு ஆணின் குரல் கேட்டதும்.. பதட்டத்தில் தன் கணவரிடம் போனை கொடுத்து நீ பேசு என்று சொன்னார் முத்தாயி..

என்ன ... த்தா... உன் அப்பாயி எப்படி அலறி அடித்துக் கொண்டு என்னிடம் போனை கொடுக்கிறா... என்ன பண்ண என்று வீராசாமி கேட்க..

தாத்தா வணக்கம். நான் சரோஜா அத்தையின் மருமகன்களில் ஒருவன் கர்ணா தேவ் பேசுகிறேன். சும்மா வெளியில் வந்து நின்று கொண்டு இருந்தேன். அப்போது வெளியே மெய் அழுவது போல் இருந்தது. ‌அது தான் யார் என்று விசாரிக்கலாம் என்று போனை வாங்கினேன் என்று சொன்னான்.

ரொம்ப சந்தோஷம் தம்பி உங்களைப் பற்றி எல்லாம் தான் பேசிக் கொண்டு இருந்தாள்... என்ன அவள் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொன்னாள். அது தான் அவளை திருமணத்தை பற்றி பேசினோம் அழுக ஆரம்பித்து விட்டாள் என்று வீராசாமி தன் பேத்தியை பற்றி சொல்லிக் கொண்டே போக... கர்ணாவும் கேட்டுக் கொண்டு இருந்தான்.

அழகி தன் கையில் இருந்து போன் பறிக்கப்பட்டதுமே ஷாக்கிங் ஆகிய நின்றவள், திருமணத்தை பற்றி கர்ணாவிடம் பேசுவதை எங்கேயோ இருந்து கேட்பது போல் கேட்டதும் தான் சுய உணர்வுக்கு வந்தவள்..

வேகமாக அவனிடம் இருந்து தன்னுடைய மொபைல் போனை பிடுங்கியவள்... என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. இது தான் நிங்கள் கற்றுக் கொண்ட மேலைநாட்டு நாகரீகமா?.. அடுத்தவர்கள் பர்சனலில் தலையிடுவதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?.. என்று சட்டென்று பதட்டத்தில் வார்த்தைகளை சிதறவிட்டாள் மெய்யழகி.

ஒரு நிமிடம் ஒரே நிமிடம் அவளை ஆழ்ந்த ஒரு பார்வை பார்த்தவன்... அந்த இருளிலும்.. வெண்மையாக ஜொலித்த அவளின் சேலை மறைக்காத... வெண் இடையில் கையை வைத்து தன் புறம் இழுத்தவன்... எத்தனை ஜென்மங்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் இந்த ஜென்மத்தில் என்னை விட்டு நீ வேறு எங்கும் போகவும் முடியாது... எனக்கு இல்லாத உரிமை உன்னிடத்தில் வேறு யாருக்கும் கிடையாது.

அது உன் தாத்தா, அப்பாயியாக இருந்தாலும் கூட... இன்னும் ஒரு தடவை இந்த மாதிரி பேசினால் பல்லை பேத்து விடுவேன்... ஆனால் அதே நேரம் இப்போ நீ பேசின வார்த்தைகளுக்கு தண்டனை, நீயாக என்னிடம் வந்து பேசாமல் நான் உன்னிடம் பேச மாட்டேன். நான் உன்கிட்ட பேசமாட்டேன் என்று சொல்லவும் ரொம்ப எல்லாம் சந்தோஷ பட்டு கொள்ளாதே.. பேச மட்டும் தான் மாட்டேன் ஆனால் எல்லாம் செய்வேன் என்று,.. எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் அழுத்தி சொன்னான்.

தன் நெஞ்சோடு சேர்ந்து அணைத்து நின்றவளை... பார்க்க...

ஆரம்பத்தில் இருந்த பயமும் விலகி... பதட்டமும் விலகி இருந்தாலும் அவள் கண்களில் ஏதோ ஒன்று உறுதியாக தெரிய அவள் கண்களை பார்த்துக் கொண்டே இருந்தவன்...

மெய்... சத்தியமா டி நான் இங்கு வந்து உன்னை பார்த்ததில் இருந்து ஒரு நிமிடம் கூட உன்னை நினைக்காமல் இல்லை. இந்த இருளிலும் உன் வரி வடிவத்திலேயே நீ கலங்குவதை கண்டு தாங்க முடியாமல் தான்.. உன்னை யார் கஷ்டப்படுத்துகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக தான் உன் கையில் இருந்து போனை வேகமாக வாங்கினேன்... சாரி டி. உன்னை பார்த்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது... ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை .. வெறும் இரண்டே நாளில் பார்த்து நான் உன்னை விரும்புகிறேன் என்று சொல்வதால் உனக்கு என் காதல் புரியவில்லையா?... இல்லை என் காதல் ஆழமில்லை என்று நினைக்கிறாயா?.. மெய் உனக்கு மெய்யாகவே என்னை பிடிக்கவில்லையா என்று நெகிழ்ந்து விட்ட குரலில் கேட்டான் கர்ணா.

மாமா ப்ளீஸ் கொஞ்சம் என்னை விட்டு நகர்ந்து நில்லுங்களேன் என்று கேட்டாள் மெய்.

ஏய்... என்ன டி.. நான் இவ்வளவு பீலிங்கா பேசிக் கொண்டு இருக்கிறேன் அதற்கு பதில் சொல்லாமல்... என்னை தவிர்ப்பது போலவே பேசுகிறாய். ஏன் நான் உன்னை ஏமாற்றி விடுவேன் என்று நினைக்கிறாயா?.. என்னை பார்த்தால் நல்லவன் போல் இல்லையா?.. உன்னை பொழுதுபோக்காக நேசிக்கும் ரோட் சைட் ரோமியோ போல் தெரிகிறதா.. உனக்கு உண்மையாக என்னை பிடிக்கவில்லையா என்று அடிபட்ட குரலில் கேட்டான் கர்ணா.

அவன் பேச பேச அவளின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் இருக்க..

போன் தொடர்பு கட் ஆகாமல் அங்கு இருந்த வீராச்சாமியும் முத்தாயும் கூட இவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டு இருக்க..

ஆத்தா மகமாயி இந்த பொண்ணு எதையும் உளராமல் இருக்கணுமே என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டு இருந்தார் வீராச்சாமி.

அவரின் வேண்டுதலுக்கு மகமாயி இப்போது செவிசாய்க்காமல் விட...

அவர் எதை நினைத்து கலங்கினாரோ அதையே அவள் சொன்னாள்...

மாமா நான் இன்னொருவனின் மனைவி என்று மெய் சொன்ன அடுத்த வினாடி.. பதறி விலகி நின்றான்.

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top