• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
27. கவிப்பிரியா சனாதன் நட்பு

போகும் தன் அண்ணன் மிதுனை பார்த்து மிதுன் நீங்கள் இருவரும் கிளம்புங்கள் என்று சொல்லி விட்டு.. இப்போது கவிப்பிரியாவை கைகட்டி கொண்டு அவளை போலவே நின்று அவளை பார்த்தான்.


அவளும் அவனுக்கு நிகராக அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

ஏய் வாலு என்ன பண்ணுன அந்த நாலு பேரை.. இப்படி போட்டு அடிச்சு வச்சு இருக்க என்று கேட்டான்.

ஐயோ மாம்ஸ்.. உங்களுக்கு என் மேல் கோபம் இல்லையா.. ஹப்பாடா... எங்க உங்கள் பிரதர் மாதிரி என்னை திட்டவோ இல்லை என்னிடம் அட்வைஸ் பண்ணவும் போகிறீர்களோ என்று பயந்துவிட்டேன் என்று சொன்னால் கவிப்பிரியா.

எதே... நீ பயந்தாய்... அதை நான் நம்பனும் என்று நீ எதிர்பார்க்கிறாய்... வேணாம் எனக்கு சிரிப்பு வருது, நான் அதிகம் சிரிக்க மாட்டேன். என்னை சிரிக்க வைக்க ட்ரை பண்ணாத என்று சொல்லி விட்டு லேசாக புன்னகைத்தான் சனாதன்.

பார் டா... சிரிப்பு சிக்கனம் ... தேவை இக்கனம் என்று யாரும் போர்டு வைக்கல... சோ... நீங்கள் தாராளமாக சிரிக்கலாம்.. எனக்கு ஒன்றும் பிரச்சினையே இல்லை என்று கெத்தாகவே சொன்னாள் கவிப்பிரியா.

ஏனோ கவிப்பிரியா பேசுவது இயல்பாக இருப்பது போல் அனைவருக்கும் தோன்றினாலும், அவளுக்குள் ஏதோ ஒரு தவறு இருப்பது போல் சனாதன் மனதிற்கு பட...

சில நேரத்துக்கு முன்பு நீ என்னை எப்படி அழைப்பாய் என்று கேட்டான் சனாதன்.

அச்சச்சோ மாம்ஸ் இவ்ளோ ஷார்ப்பா இருக்கீங்களே.. இது ரொம்ப தப்பா ஆச்சே... அதுவும் என் விஷயத்தில் இவ்வளவு ஷார்ப்பா இருக்க கூடாதே என்று சொன்னாள் கவிப்பிரியா.

சனாதனுக்கு கவிப்பிரியா மாம்ஸ் என்று கூப்பிடுவது சுத்தமாக விருப்பமே இல்லை. ஆனால் ஏதோ ஒன்று அவள் மீது அதாவது எப்படி சொல்வது அவளை தூரத்தில் வைப்பதை விட, அருகில் வைத்துக் கொள்வதுதான் சிறந்தது என்று மனதிற்கு பட்டாலும் ஆனால் நல்ல விதமாக அவன் மனதிற்கு படவில்லை... இருந்தாலும் ஏதோ ஒன்று தன் குடும்பத்தின் நலனுக்கு இவளுடன் பேசிக் கொள்வது நல்லது என்று தோன்ற, சரி உன் கூட பேசி பழகலாம் என்ற எண்ணத்தில் தான் என் அண்ணனையும் தம்பியையும் அனுப்பி வைத்தேன்.

உனக்கு உன் தந்தைக்கும் வேறு எங்கேயும் செல்லும் பிளான் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டான் சனாதன்.

அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நானும், அப்பாவும் இனி வீட்டிற்கு தான் செல்வோம். வாருங்கள் எங்களுடனே சென்று விடலாம் என்று சொன்னாள் கவிப்பிரியா.

ஓகே ஆனால் போகும் வழியில் ஒரு குறிப்பிட்ட பைக் ஷோரூம் இன் பெயரைச் சொல்லி என்னை அங்கே இறக்கி விட்டு விடுங்கள் என்று சொன்னான்.

பிறகு மூவரும் கிளம்பி செல்ல.. ஒரு சிக்னலில் கார் நின்று கொண்டு இருக்கும் போது... பரவாயில்லை உங்கள் பெண்ணை மிகவும் அழகாக வளர்த்திருக்கிறீர்கள் மிகவும் தைரியமானவள் ஆக இருக்கிறாள் என்று சொன்னான் சனாதன்... கவி பிரியாவின் அப்பா வெங்கடாசலத்திடம்.

அதற்கு அவர் பதில் சொல்வதற்கு முன்பே கவிப்பிரியாவை பதில் சொன்னாள்.

நான் இப்படி இருப்பதற்கு காரணம் எல்லாம் மூர்த்தியை தான் சேரும் அவள் மட்டும் இல்லை என்றால் நான் இந்த அளவிற்கு சண்டை பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்க மாட்டேன்... என்னுடைய ரோல் மாடல் அவள் தான். எங்கள் காலேஜில் எனக்கு சீனியர் அவள். அவளின் தைரியத்தையும், இந்தப் பிரச்சனையானாலும் தட்டி கேட்கும் அவள் குணத்தையும் பார்த்து தான், என்னை நான் இந்த அளவுக்கு வளர்த்துக் கொண்டேன். ஆனால் அதே சமயம் அவள் என்னுடைய முதல் எதிரி என்று சொன்னாள்.

சனாதன் பேசும் அவளை வித்தியாசமாக பார்த்தான்...

அவனின் பார்வை என் பொருள் புரிந்து... அவனை பார்த்து சிரித்துக் கொண்டு ஆமாம் நான் எவ்வளவு பெரிய பணக்காரி ... எவ்வளவு பெரிய அழகி... அவள் அந்த காலேஜ் விட்டு போகும் வரை என் பின்னாடி ஒருத்தர் கூட எனக்கு கட்டுப்பட்டு இல்லை.

என் வகுப்பு தோழிகள் கூட என்னிடம் மட்டும் இல்லாமல் எந்த நேரமும் அவளை பற்றியே தான் பேசுவார்கள்.. அது தான் எனக்கு அவளை பிடிக்கவே பிடிக்காது. அவளும் அவளுடைய தோழிகள் இரண்டு பேரையும் பார்த்தால் எனக்கு கோபம் தான் வரும் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது ஏனோ சனாதனக்கு...

தன்னுடைய ரவுடி பேபியின் முகம் மனக்கண்ணில் வந்த போனது...

அப்போது சரியாக கவிப்பிரியாவும்.. எப்ப சைத்தானை நினைத்தாலும் உடனே வந்து நிற்கும் என்று சொல்வார்கள்... அதோ அங்கே பாருங்கள் நமக்கு எதிர் புறத்தில் பைக்கில் இருக்கிறாள் பாருங்கள் அவள் தான் என்று சொன்னாள்.

சனாதனும் பார்க்க அங்க சரனோடு பைக்கில் அமர்ந்து இருந்தாள் சஞ்சனா.

காலையில் தான் நினைத்தது போலவே இவளும் நினைக்க அப்போது போலவே இப்போவும் இவள் வந்து நிற்கிறாள் இவள் உண்மையான சைத்தான் தான் என்றும் மனதிற்குள் சொல்லி சிரித்துக் கொண்டவன்... காலையில் பார்த்த பொழுது அவளுடைய அண்ணவாக தோன்றியது. இவனைப் பார்த்தால் பார்த்த முகமாக இருக்கிறது, ஆனால் வேற யாரோ மாதிரி இருக்கிறதே... என்று தன்னுடைய எண்ணக் குதிரை சென்று கொண்டு இருக்க...

கவி பிரியாவே அதற்கான விளக்கத்தை கொடுத்தாள். இந்த வால் இல்லாத குரங்கு எப்போது வந்தது என்று தெரியவில்லையே என்று, சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சிக்னல் விழ அவர்களை கடந்து இவர்கள் சென்றனர்.

அது யாரு வால் இல்லாத குரங்கு அப்படி என்று கேட்டான், சஞ்சனாவையே சனாதன் தெரியாதது போல்.

அந்த பைக்கை ஓட்டி செல்லுது பாருங்க அது தான் நான் சொன்ன என்னுடைய சீனியர் சஞ்சனா. அவள் பின்னே அமர்ந்து போவது அவளுடைய அண்ணன் சரண். அதாவது புவனா என்று ஒரு குரங்கு இருக்கு அவளோட ஃப்ரெண்ட். அதோட அண்ணன் இது என்று சொன்னாள் கவிப்பிரியா.

அந்த மூணு குரங்குகளுக்கும் ஒன்னும் ப்ளட் ரிலேஷன்ஷிப் எதுவுமே கிடையாது. ஆனால் பார்த்தீங்கன்னா அண்ணே, தங்கச்சி குடும்பம்னு ஒண்ணா சொல்லிக்கிட்டு கன்றாவிய சுத்துங்க... என்று இந்த காலகட்டத்திலும் பொறாமையால் ஒரு அழகான குடும்பத்தை தவறாக சித்தரித்தாள்.

ருத்ராவை போல் எங்கே தானும் கத்தி விடுவோமோ என்று தன்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டு அமர்ந்து வந்தவன்... ஷோரூம் வருவதற்காக அமைதியாக அமர்ந்து இருந்தான். அவனின் பொறுமையை சோதிக்காமல் சீக்கிரமாக அந்த ஷோரூம் முன்னாடி வந்து வண்டியை நிப்பாட்ட...

சனாதனும் தன் முகத்தில் எந்த ஒரு முக மாறுதல்களையும் காட்டாமல்.. இருவருக்கும் பொதுவான நன்றி சொல்லி விட்டு இறங்கினான்.

ஹலோ மாம்ஸ் நான் வேணும் என்றால் உங்களுடன் வரவா... அப்பா காரை எடுத்துக் கொண்டு போவார். நாம் இருவரும் ஒன்றாக போகலாம் என்று கேட்டாள் கவிப்பிரியா.

இல்லை இரவு 8 மணிக்கு மேல் ஆகிவிட்டது... எனக்கு சிறு வேலையும் இருக்கிறது. அதனால் நீங்கள் கிளம்புங்கள் என்று பொறுமையை இழுத்து வைத்து சொன்னாலும் பட்டென்று சொல்லி விட்டான் சனாதன்.

ஆனால் அவளோ அதை எல்லாம் லட்சியமே செய்யாமல் .. ஓகே மாம்ஸ் டேக் கேர் என்று சொல்லி விட்டு தன் காரை வேகமாக எடுத்துச் சென்றாள்.

கவிப்பிரியாவின் கையில் கார் வேகம் எடுத்து செல்வதை பார்த்தவனுக்கு நன்றாகவே புரிந்தது அவளின் கோபம். அவள் நினைத்ததை சாதிக்கவில்லை என்றால் கோபம் வருகிறது என்று அவளை நினைத்துக் கொண்டு... அ ஷோரூம் சென்று ஆர்டர் செய்த வண்டியை வாங்கிக்கொண்டு வெளியே வந்தான்.

தன்னுடைய பைக்கில் ஏறியவன் நேரே வீட்டிற்கு செல்ல மனம் வராமல் ஏனோ... சஞ்சனாவின் பைக் சென்ற திசையை நோக்கி சனாதன் மனம் சென்றது. அவள் எங்கு செல்கிறாள் என்று தெரியாது ஆனால் அவள் சென்ற பாதையில் சென்று கொண்டு இருந்தான்.

ஏதோ ஒரு நம்பிக்கை அவள் சென்ற திசையில் சென்று கொண்டு இருக்க... அங்கு இருந்த ஒரு ஹோட்டல் முன்னாடி அவளுடைய வண்டியும்... அவர்களின் காரும் நிற்க.. சனாதனும் தன்னுடைய பைக்கை அங்கு நிறுத்தி விட்டு அந்த ஹோட்டலின் உள்ளே சென்றான்.

லீனா, புவனா, ரிஷ்வந்த், மிதுனா நால்வரும் ஒரு டேபிளிலும்...

உதயா, சரண், சஞ்சனா, லட்சுமி மா நால்வரும் ஒரு டேபிளிலும்.... அருகருகே அமர்ந்து இருந்தனர்.

லீனா தனக்கு வந்த அன்றே வேலை கிடைத்ததற்காக ... அனைவரும் அவளிடம் ட்ரீட் கேட்க..

அதற்காகத் தான் அனைவரையும் ஹோட்டலுக்கு அழைத்து வந்து இருந்தாள் லீனா.

உள்ளே வந்த சனாதன் அவர்களின் டேபிளை பார்த்ததுமே ஆஹா வீட்டில் அனைவரும் வந்து இருப்பார்கள் போலவே... அச்சச்சோ இங்க நான் மட்டும் தனியாக வந்து இருப்பதை பார்த்தால்... என்ன நினைப்பார்கள் என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே சஞ்சனா... சனாதனை பார்த்து விட்டாள்.

அவள் பார்த்ததை இவன் பார்க்காமல் திரும்பி வெளியே செல்ல போக...

தன் அண்ணன்களிடம் இண்ட்ரடியூஸ் பண்ணி வைப்பதற்காக சட்டென்று மிஸ்டர் தனா என்று கூப்பிட்டு விட்டாள் சஞ்சனா.

அவனும் சட்டென்று நின்று திரும்பி பார்க்க... அவனின் அருகில் வந்து நின்றாள் சஞ்சனா.

அவளின் அருகாமையில் இதயம் பாலமாக துடிக்க... எங்கே தன் பதட்டத்தை உணர்ந்து கொள்வாளோ என்று பயந்து, ம்ம்... சஞ்சனா... என்ன என்று கேட்டான்.

அவளும் தன் அண்ணன் அருகில் இருப்பதால் மிகவும் நல்ல பிள்ளையாக.. சாரி ... நான் என் அண்ணனுக்கு உங்களை இன்ட்ரொடியூஸ் பண்ணி வைப்பதற்காக தான் அழைத்தேன். தவறாக நினைக்கவில்லை என்றால் உங்களுக்கு வேறு ஏதேனும் முக்கியமான வேலை இல்லாமல் இருந்தால், எங்களுடன் டின்னர் ஜாயின் பண்ணிக் கொள்கிறீர்களா என்று கேட்டாள்.

மறுப்பு சொல்வது சிறுபிள்ளைத்தனமாக தோன்றும் என்பதால் வா சஞ்சனா என்று சொல்லி விட்டு அவளோடு இணைந்து நடந்தான் சனாதன்.

அதற்குள் சரண் எக்ஸ்ட்ரா சேர் ஒன்றை எடுத்து தங்கள் அண்ணன் உதயாவிற்கு அருகில் போட்டு வைத்தான்.

சனாதனை பார்த்து விட்டு ரிஷ்வந்த், புவனா, மிதுனா மூவரும் எழுந்து வர...

அவர்களைப் பார்த்து ஹேய் காய்ஸ் சில்
.. இது ஒன்றும் ஆஃபீஸ் கிடையாது. அதே சமயம் நான் உங்கள் எதிர்பார விருந்தாளி எதற்கு எழுந்து வருகிறீர்கள்.. நீங்கள் அப்படியே அமர்ந்து உங்களுடைய உணவுகளை சாப்பிடுங்கள் என்று சொன்னான்.

அதே சமயம் தனக்கு அருகில் உதயாவும் சரணும் நின்று கொண்டு இருப்பதை பார்த்து விட்டு... அச்சோ ப்ளீஸ் முதலில் அனைவரும் அமர்ந்து சாப்பிடுங்கள். கோவிலில் எப்படி சாமிக்கு முன்பு அனைவரும் சமமோ, அதே போல் தான் உணவு உண்ணும் இடத்தில் அன்னபூரணிக்கு முன்பு அனைவரும் சமம். முதலில் அமர்ந்து சாப்பிடும் வேலையை பாருங்கள், சாப்பிடும் போது எதற்காகவும் யாருக்காகவும் எழுந்து கொள்ளாதீர்கள் என்று சொல்லி விட்டு உதயாவின் அருகில் இருந்த சேரில் அமர்ந்தான் சனாதன்.

அப்போது லட்சுமி அம்மா... அருமையான பிள்ளையாக இருக்கிறாய் பா... நீ தான் அலுவலகத்தில் இந்த மூன்று வாலுகளையும் சமாளிக்கும் புண்ணியவனா என்று கேட்டார் லட்சுமி அம்மா...

இவ்வளவு நேரம் தான்
அண்ணனுக்காக அமைதியாக இருந்த சஞ்சனா....
லட்சுமி அம்மா....ஆஆஆஆ...

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top