- Thread Author
- #1
26.
கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த ஐந்து பேரிடமும் முதலில் கமிஷனர் .. மன்னிக்கவும் உங்களை வரச் சொல்லி விட்டு வேறு ஒரு கேஸ் விஷயமாக பேசிக் கொண்டு இருந்ததில் சிறிது கால தாமதம் ஆகிவிட்டது என்று சொல்லி விட்டு...
நீங்கள் யாரும் தப்பாக நினைத்துக் கொள்ளவில்லை என்றால் பக்கத்தில் தான் ஹாஸ்பிடல் இருக்கு. அங்கு போய் பேசலாமா நேரத்தை வீணடிக்க வேண்டாம். நான் எனது வாகனத்தில் வந்து விடுகிறேன் நீங்கள் அனைவரும் என்னை பின்பற்றி வந்து விடுகிறீர்களா என்று கேட்டார்.
சரி இப்பவே மணி 7:00 மணி ஆகிவிட்டது.. நீங்கள் முன்னே செல்லுங்கள் நாங்கள் பின்னே வருகிறோம் என்று அனைவருக்கும் பொதுவாக வெங்கடாசலம் சொன்னார்.
அதன்படி கமிஷனர் செல்ல இவர்களும் அவரவர் காரில் அவரை பின்பற்றி சென்றனர்.
என்ன தனா ஹாஸ்பிடல் எல்லாம் கூப்பிடுகிறார்கள்... அப்படி என்ன தான் பிரச்சினை யாருக்கு என்ன ஆகி இருக்கும் என்று கேட்டான் மிதுன்.
அவங்க டிரைவருக்கு எதுவும் அடிபட்டு இருப்பதாகத்தான் மயக்கம் தெளிந்து சொல்லும் போது அந்த பெண் என்னிடம் சத்தம் போட்டாள் மிதுன் என்று ருத்ரா சொன்னான்.
அவர்கள் டிரைவருக்கு அடிபட்டு இருப்பது மட்டும் பிரச்சனையாக இருக்காது... இதில் வேறு ஏதோ பிரச்சினை இருக்கிறது சரி அங்கு போனால் என்ன ஏதுன்னு தெரியப்போகிறது என்று சொல்லி கொண்டே அவர்கள் கமிஷனர் வாகனத்தை பின் தொடர்ந்தார்கள்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கமிஷனர் வாகனம் அந்த மிகப்பெரிய மருத்துவமனைக்குள் நுழைய... அவருக்கு பின்னே சென்ற கவிப்பிரியாவின் காருக்கு பின்னே... இவர்களும் சென்றார்கள்.
அவரும் தன் வாகனத்தில் இருந்து இறங்கி, அனைவரையும் அழைத்துக் கொண்டு ஐஸ் யூ வார்டுக்கு முன்னால் போய் நின்றார்.
மிதுன்..
கமிஷனரை பார்த்து சார் நாம் இங்கு எதற்கு வந்து இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டான்.
சாரி மிதுன் ... இந்த கேஸ் விஷயமாக உங்களுக்கும் உங்க தம்பி ருத்ராவுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் அவர் இந்த பெண்ணை காப்பாற்ற போய் இதில் மாட்டிக் கொண்டார் தயவு செய்து என்னை தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இங்கு இருப்பவர்களின் நிலைமை என்ன என்று தெரியவில்லை அவர்கள் உங்கள் தம்பிக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒரு வாக்குமூலம் கொடுத்து விட்டால் போதும் நீங்கள் சென்று விடலாம் என்று கமிஷனர் சொன்னார்.
இங்க பாருங்க சார்.. இங்கே அட்மிட் செய்து இருக்கும் நபர்கள் யார் அவர்களுக்கும் இந்த பெண்ணிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டான் சனாதன்.
சார் இந்த பொண்ணு அடித்து போட்ட நான்கு பேரை தான் உள்ளே அட்மிட் செய்து இருக்கிறோம்.. நாங்கள் இங்கு அழைத்து வந்த போது இருவரின் நிலைமை மிக மோசமாகத்தான் இருந்தது. நீங்கள் தகவல் சொல்லியதால் தான் அவ்வளவு சீக்கிரம் விரைந்து சென்று அங்கு இருந்தவர்களை காப்பாற்ற முடிந்தது. அதனால் தான் நீங்களும் இங்க இருக்கீங்க என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே ஐ சி யு வில் இருந்து டாக்டர் வெளியில் வந்தார்.
மூன்று ஆண்மகன்களுக்குமே கவி பிரியாவை பார்த்து... இப்போது மலைப்பாக இருந்தது.. இவ்வளவு நேரமும் ஏதோ ஜோக் அடித்துக் கொண்டு ஜாலியாக சிறுபிள்ளை போல் சிரித்து பேசிக் கொண்டு இருந்தவள்... நான்கு பேர் சாகும் வரை அடித்து இருக்கிறாளா... என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது டாக்டர் வந்து அவரும் அதே தான் சொன்னார்.
இருவரின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது இருவருக்குமே தேவையான அளவு ரத்தம் செலுத்தியும் கூட அவர்களுக்கு இன்டெர்னல் பிளட் கசிவு இருந்து கொண்டே இருப்பதால் அவர்கள் பிழைப்பது மிகவும் கடினம்... மற்ற இருவருக்கும் உயிர் சேதம் இல்லை ஆனால் அவர்கள் எழுந்து நடமாட கண்டிப்பாக இன்னும் ஒரு வருடங்கள் கூட ஆகலாம் குறைந்தபட்சம் என்று சொல்லி விட்டு கவி பிரியாவை பார்த்து...
பாப்பா உன் கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள டா... அங்க பாரு அந்த கமிஷனர் ஏதோ தான் இது போல் என் ஹாஸ்பிடலுக்கு ஆட்கள் வந்தால் போதும் என்று நான் நினைப்பது போலவும், நான் தான் உன்னை தூண்டி விடுவது போலவும் என்னை பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்று டாக்டர் பேசுவதை புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றனர் அண்ணன் தம்பி மூவரும்..
ஐயோ அங்கிள் சும்மா இருங்க... கமிஷனர் சார் அப்புறம் நம்ம ரெண்டு பேரையும் தூக்கி லாக்கப்பில் வைத்து விடப்போறாரு... என்று அவர் காதில் ரகசியம் பேசுவது போல் அனைவருக்கும் கேட்பது போலவே பேசினாள்...
அனைவரும் முகங்களிலும் சிரிப்பு இருந்தாலும் கமிஷனர் முகத்தில் மட்டும் சிரிப்பிற்கு பதிலாக வருத்தமே இருந்தது.
சாரி மிதுன், சனாதன், ருத்ரா... இந்த பிசாசு நீங்க காப்பாத்தாம இருந்து இருக்கலாம், அதற்குப் பிறகு எனக்கு நீங்கள் போன் பண்ணி தகவல் சொல்லாமலாவது இருந்து இருக்கலாம். உங்களுக்கும் பாருங்கள் எங்களால் மிகவும் தொந்தரவாக இருக்கிறது மன்னித்து கொள்ளுங்கள் உங்களுக்கு இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் இருக்கிறது அப்படித்தானே சரி உள்ளே வாருங்கள் என்று உள்ளே அழைத்துச் சென்று அங்கு ஐ சிவில் இருக்கும் நால்வரையும் காட்டினார் கமிஷனர்.
உள்ளே சென்று பார்க்க அடிபட்டு கிடந்த நால்வரையும் பார்க்க சட்டென்று ருத்ரவால் கூட இனம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு காயங்களோடு படுத்து கிடந்தனர்.
இந்த நான்கு பொறுக்கிகளும் குறிப்பிட்ட பாரின் சொல்லி, அந்த பாரில் வரும் ஆண் பெண் அனைவரிடமும் தொல்லை கொடுத்து கொண்டு இருந்து இருக்கிறார்கள். அந்த பார் அரசாங்க விதிகளின் சட்டதிட்டபடி தான் வைத்து நடத்தப்படுகிறது. அதுவும் இதோ இங்க நிக்கிறாளே புதுமைப்பெண் இந்த பெண் தான் எடுத்துக் நடத்தி கொண்டு இருக்கிறாள் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?.. என்ன சொல்ல எல்லாம் என் தலைவலி என்று புலம்பி விட்டு சாரி சாரி..
அங்கு இவர்கள் நான்கு பேரும் வந்து அடிக்கடி அங்கு வரும் இளம் பெண் ஆண்களிடம் தகராறு செய்வதாக என்னிடம் வந்து பலமுறை கம்ப்ளைன்ட் செய்து இருக்கிறாள்.
நானும் அரெஸ்ட் செய்து பலமுறை தண்டனை வாங்கி கொடுத்து இருக்கிறேன்.
ஆனால் நேற்று இவளிடமே ஏதோ வம்பு செய்து நன்றாக வாங்கி கட்டிக் கொண்டு உள்ளார்கள்.
அதற்கு பலனாக தான் இவளை இன்று சாயந்திரம் இவளை கடத்தி சென்று என்ன செய்ய நினைத்தார்களோ.. இந்த நாலு கேடுகெட்ட ஜென்மமும் இப்போ இப்படி படுத்து கிடக்கிறது என்று புலம்பினார்.
அவரின் புலம்பல்களை கேட்கும் போது இவர் கமிஷனரா இல்லை வேறு யாரோ என்பது போல்... அண்ணன் தம்பி மூவருக்கும் தோன்ற சனாதன் வாய்விட்டு கேட்டான் சார் இந்த பொண்ணுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று..
அது வா... இந்த அடாவடியின் ஒரே ஒரு பாவப்பட்ட தாய் மாமன் நான் என்று சொன்னார்.
மூவருக்குமே ஐயோ பாவம் என்று இருந்தது. அதே நேரம் மூவருக்கும் கவிப்பிரியாவை பார்க்கும் போது ஆச்சரியமாகவும் இருந்தது.
அந்த நேரத்தில் நான்கு பேரில் ஒருவன் கண்விழித்தான்.
உடனடியாக கமிஷனர் அவன் அருகில் சென்று... ஏய் உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா.. ஏன் டா இப்படி என்று சலித்துக் கொண்டவர்.. ருத்ராவை பார்த்து இங்கே முன்னே வாருங்கள் என்று கண்களால் ஜாடை காட்டினார்.
ருத்ராவும் முன்னே வந்து அவன் அருகில் நிற்க.. இவர் யார் என்று தெரியுமா என்று கேட்டார்..
அவனும் உடல் முழுவதும் கட்டுவதற்கு போடப்பட்டு இருக்க வலியில் முகத்தை சுருக்கி ருத்ராவை ஒரு முறை பார்த்து விட்டு இல்லை என்று தலையாட்டினான்.
அதை வீடியோவாகவும்... லெட்டர் பேடில் கையெழுத்தும் வாங்கிக் கொண்ட பின்.. இனி இந்த கஸங விஷயமா உங்களை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்.
நீங்கள் இந்த வால் பிள்ளையை காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி அதே சமயம் உங்களுக்கு தேவையில்லாத தொந்தரவை இழுத்து விட்டதற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நான் உங்களிடம் சாரி கேட்டுக் கொள்கிறேன் என்று வெங்கடாசலமும் சொன்னார்.
இதுவரை கமிஷனர் பேசும் போது அமைதியாக நின்று கேட்டுக் கொண்டு இருந்தவன் .. வெங்கடாசலம் பேச ஆரம்பிக்கும் திரும்பி நின்று கொண்டான் ருத்ர தேவ்.
இப்போது வெங்கடாசலம் ருத்ரதேவின் சிறு பிள்ளைத்தனமான கோபத்தில் வாய்விட்டு சிரித்தார்.
பிறகு கமிஷனர் அவர்கள் அருகில் வந்து டேய் சும்மா இரு டா என்று தன் தங்கையின் கணவனும், தன் நண்பனுமாகிய மச்சானை திட்டி விட்டு... தொந்தரவுக்கு மன்னிக்கவும் நீங்கள் கிளம்புங்கள் என்று அண்ணன் தம்பி மூவரையும் பார்த்து கூறினார்.
அப்போது வெங்கடாச்சலம் ஒரு நிமிஷம் இருடா என்று கமிஷனரை அடக்கி விட்டு.. நீங்கள் மூவரும் தவறாக நினைத்துக் கொள்ளவில்லை என்றால் ஒரு நாள் உங்கள் குடும்பத்தோடு எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று கேட்டார்.
கண்டிப்பாக வருகிறோம் சார்... இப்போது நாங்கள் கிளம்புகிறோம் வீட்டில் அத்தை என்ன ஆயிற்று என்று தெரியாமல் கவலைப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். அதனால் நாங்கள் கிளம்புகிறோம்.. நீங்கள் உங்க குடும்பத்தோடு ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்லி விட்டு...
கமிஷனரிடமும் சொல்லி கொண்டு விடை பெற்று சென்றார்கள்.
அப்போது கவிப்பிரியா வேகமாக சனாதனிடம் வந்து... சார் தப்பாக நினைத்துக் கொள்ளவில்லை என்றால் உங்கள் தம்பி கிட்ட நான் ஒரே ஒரு விஷயம் பேசணும் பேசிக்கொள்ளவா என்று கேட்டாள்.
மிதுனை ஒரு பார்வை பார்த்து விட்டு... நாங்கள் இருவரும் இங்கு இருக்கலாமா இல்லை செல்லட்டுமா என்று கேட்டான் சனாதன்.
அச்சச்சோ அந்த அளவுக்கு எல்லாம் இங்கே ஒரு சீனும் இல்லை.. தாராளமாக நீங்கள் இருவரும் நிற்கலாம்... ஆனால் யாரும் என்னை பார்த்து சிரிக்க கூடாது.. கோபப்படக் கூடாது ஓகே என்று சொல்லி விட்டு...
ருத்ரனை பார்த்து..
ஹலோ ஹீரோ சார்... ஏதோ ஒரு பதட்டத்தில் எங்க டிரைவருக்கு அங்கு நடந்து சண்டையில் தெரியாமல் அடிபட்டு விட்டதா.. அவருக்கு உதவி செய்ய வேண்டுமே என்று வேகத்தில் வந்து கொண்டு இருந்த என்னை நீங்கள் காருக்குள் தூக்கி போடவும் மயக்கம் வந்து மயங்கி விழுகவும் எப்பொழுது எழுந்தேன் தெரியாமல்... கண் எதிரே நீங்க இருக்கவும் உங்களை திட்டி விட்டேன்.
அதுவும் அறிவு கெட்ட முண்டம் என்று சொன்னது மிகவும் தவறு. அப்படி நான் அறிவு கெட்ட முண்டம் என்று சொல்லி இருக்கவே கூடாது. எவ்வளவு பெரிய பிசினஸ்மேன் நீங்க உங்களை போய் அறிவு கெட்ட முண்டம் என்று சொல்லிவிட்டேன்... என்று மறுபடியும் மன்னிப்பு கேட்பதாக நினைத்து திரும்பத் திரும்ப அறிவு கெட்ட முண்டம் என்று சொன்னதை நினைவு படுத்திக் கொண்டே இருக்க...
பொறுமை இழந்த ருத்ரதேவ் வில் யூ ஸ்டாப் இட் நவ்... இடியட் என்று சொல்லி விட்டு வேகமாக தன் காருக்கு சென்று விட்டான்.
மிதுன் ருத்ரனை சமாதானப்படுத்துவதற்கு ருத்ரா பின்னே செல்ல...
சனாதன் கவி பிரியாவை பார்த்துக் கொண்டு கைகட்டி நின்றான்...
இணைந்திருங்கள்...
சொல்லவா... வேண்டாமா...