- Thread Author
- #1
25. கமிஷனர் அலுவலகத்தில்..
அண்ணன் தம்பி மூவரோடு கவிப்பிரியாவின் தந்தையின் அறிமுகம்...
கமிஷனர் அலுவலகத்தில் இருந்து... கமிஷனர் சனாதனுக்கு போன் செய்து தங்கள் தம்பி ருத்ர தேவனை கூட்டிக்கொண்டு கொஞ்சம் கமிஷனர் ஆபீஸ் வரை வர முடியுமா என்று கேட்டார்.
கண்டிப்பா வர்றோம் சார்... அதே சமயம் எதுவும் பிரச்சனை இல்லையே என்று கேட்டான் சனாதன்.
பிரச்சனை என்று எதுவும் இல்லை சனாதன் கவலைப்பட வேண்டாம். ஆனால்... தங்கள் தம்பி காப்பாற்றிய பெண்ணையும் அவர்கள் குடும்பத்தாரையும் வர சொல்லி இருக்கிறேன். அனைவரிடமும் ஒரு வாக்குமூலம் மட்டும் வாங்கிக் கொள்கிறோம். ஏனென்றால் இந்த பிரச்சினையில் இன்று அவர் ஏதோ சொல்ல வர...
கமிஷனர் சாரை தடுத்து கொள்ள வேண்டாம் எதுவாக இருந்தாலும் நான் என் அண்ணன் என் தம்பி மூவரும் இன்னும் சிறிது நேரத்தில் கமிஷனர் அலுவலகத்தில் இருப்போம் எங்களுடைய முழு ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும் என்று சனாதன் சொல்லி விட்டு... ஓகே நாங்கள் கிளம்பி வருகிறோம் சார் என்று போனை கட் செய்தான்.
கமிஷனர் வர சொல்லிய விபரத்தை மிதுனிடம் சொல்லவும்...
சரி டா... நான் கிளம்பி வருகிறேன் நீ போய் ருத்ராவிடமும் விஷயத்தை சொல்லி அவனையும் கிளம்ப சொல் என்று சொல்லி விட்டு தான் கிளம்புவதற்காக சென்றான் மிதுன்.
சனாதன் ருத்ராவிற்கு ஃபோன் செய்து கமிஷனர் சொன்ன விஷயங்களை சொல்லிவிட்டு கிளம்ப சொல்லியவன் தன் அறைக்கு சென்று தானும் கிளம்பி வெளியே வந்தான் சரியாக ருத்ரனும் கிளம்பி வர மிதுன் ருத்ரன் சனாதன் மூன்று பேரும்..
சரோஜா அத்தையிடம் போயிட்டு வருகிறோம் என்று சொல்லி விட்டு கிளம்பி வாசலுக்கு வரும் பொழுது சரியாக கர்ணா, லிபின் இருவரும் வந்தனர்.
மூன்று பேரும் எங்கோ வெளியே கிளம்பி செல்ல தயாராக வருவதை பார்த்து விட்டு, அதே சமயம் போகும் போது எங்கே போகிறீர்கள் என்று கேட்கக்கூடாது என்பதற்காக... இருவரும் அவர்கள் மூவரையும் பார்த்து பை பை ப்ரோஸ் என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்றனர்.
அதே போல் மூன்று பேருமே தன் தம்பிகளிடம் சிரித்த முகத்துடன் விடை பெற்றனர்.
மூன்று பேருமே ஒரே காரில் சென்றுவிடலாம் என்று சொல்லி மிதுன் தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு வந்தான்.
காரில் ஏறி அமர்ந்து சிறிது தூரம் செல்லும் வரை மூவருமே எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாகவே வந்தனர்.
ருத்ராவிற்கு தான் மனதில் ஏதோ குற்ற உணர்ச்சியாக இருக்க, தன் அண்ணன் மிதுனை பார்த்து..
அண்ணா சாரி தெரியாம இந்த பிரச்சனையை இழுத்து விட்டு விட்டேன் என்று சொல்லி மன்னிப்பு கேட்டான் ருத்ரா.
அவ்வளவு நேரமும் அமைதியாக வந்த மிதுன்.. அட கடவுளே ரெண்டு பேரும் ஏன் டா இப்படி இருக்கிறீர்கள், என்ன டா ஆச்சு உங்களுக்கு?.. இவன் என்னமோ பெரிய குற்றம் செய்தது போல் வந்து அண்ணா.. மிதுன் என்று இரண்டு விதமாக கூப்பிட்டு என்னை குழப்பி அடிக்கிறான்... இப்ப நீயும் அதையே தான் செய்கிறாய் அண்ணா என்று பேசுகிறாய், என்ன ஆயிற்று... எனக்கு ஒன்றும் அப்படி வயது ஆகவில்லை.. ஜஸ்ட் 29 வயது தான் ஆகிறது.
அதே போல் தனா என்னை விட இரண்டு வயதும்... ருத்ரா... நீ என்னை விட மூன்று வயது தான் சிறியவர்கள். இவ்வளவு நாளும் பெயர் சொல்லி தானே பேசினீர்கள். அப்புறம் இன்று மட்டும் என்ன திடீரென்று அண்ணா என்று மரியாதை எல்லாம் தூள் பறக்கிறது என்று கேட்டான் மிதுன்.
அப்படி எல்லாம் எதுவும் இல்லை மிதுன். அங்க நம்ம வீட்டில் இருக்கும் போது நம் அனைவருக்கும் பெரியவர்கள் அப்பாவும் அம்மாவும் இருந்தாங்க... நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஜாலியாக தொழில், விளையாட்டு அப்படி என்று சுதந்திரமாக இருந்தோம். ஆனால் இங்கு அப்படி இல்லை, இங்கு நாம் செய்யும் சிறு தவறும் நம் குடும்பத்திற்கு அவமதிப்பை உண்டாக்கும். அதிலும் நாங்கள் ஏதேனும் தவறு செய்தால் முதலில் உன்னை தான் அனைவரும் கேள்வி கேட்பார்கள் வீட்டிற்கு மூத்தவனாக இருந்து இவர்களை எல்லாம் நீ என்னை கவனித்துக் கொண்டாய் என்று..
அதனால் தான் நான் சற்று முன் குழம்பிப் போனேன். வேறு ஒன்றும் இல்லை என்று சனாதன் தன் அண்ணனுக்கு விளக்கம் கொடுத்தான்.
ருத்ராவும் அதே தான் அண்ணா அதனால் தான் நானும் உங்களிடம் மரியாதையாக பேசினேன் என்று சொன்னான்.
ஓகே இது எல்லாமே தாய்க்குலத்தின் அட்வைஸ் தானே.. எனக்கும் சொல்லி தான் அனுப்பி வைத்தார்கள். சரி அது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், அதே சமயம் நீ இப்போது எந்த தவறும் செய்யவில்லை ருத்ரா.. அதனால் தேவை இல்லாமல் யாரிடமும் நீ சாரி கேட்கக் கூடாது.
நீ எதுவும் கில்ட்டியாக ஃபீல் பண்ணாமல் அமைதியாக வா. போலீஸ் ஸ்டேஷன் போகும் அனைவரும் குற்றவாளிகளும் இல்லை. வெளியில் இருக்கும் அனைவரும் நல்லவர்களும் இல்லை. இது வழக்கமான டயலாக்காக இருந்தாலும் அது தான் இயல்பு பயப்படாமல் வா.. போவோம்.
இங்கு என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு, பிறகு அப்பா அம்மாவிற்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்திக் கொள்ளலாம்.. என்று சொன்னவன் தனாவிடம் திரும்பி விநாயகம் அங்கிள் எதுவும் அப்பாவிடம் என்ன விஷயம் என்று முழுவதாக தெரிவதற்கு முன் சொல்லி விடப் போகிறார் என்று கேட்டான் மிதுன்.
அப்படி எல்லாம் எதுவும் பயப்பட தேவையே இல்லை மிதுன். இந்நேரம் எந்த பிரச்சனையும் இருந்திருந்தால், கமிஷனர் சாரே விநாயகம் அங்கிளுக்கு போன் செய்து சொல்லி இருப்பார். அங்கிளும் இந்நேரம் நமக்கு கால் செய்து இருப்பார். இதுவரை அப்படி எதுவும் இல்லை எனும் போதே அங்கிளுக்கு எந்த விஷயம் இன்னும் முழுதாக தெரியவில்லை. அதே நேரம் அங்கிள் அப்பாவிடமும் சொல்லி இருக்க மாட்டார்.
அப்படி சொல்லி இருந்தால் இந்நேரம் நமக்கு போன் வந்து இருக்கும்.. என்று தனா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கமிஷனர் அலுவலகத்திற்கு மிதுன் கார் வந்து நின்றது.
காரில் இருந்து மூவரும் இறங்க, சரியாக கவிப்பிரியாவும், அவளுடைய அப்பா வெங்கடாசலமும் தங்களது காரில் இருந்து இறங்கினர்.
கவிப்பிரியாவின் கண்கள் ருத்ரதேவை வீட்டு நகரவே இல்லை.
ஆனால் அவனோ அப்படி அங்கு ஒருத்தி இருப்பதே தெரியாதது போல்... தன் அண்ணன்களை பார்த்து உள்ளே போகலாம் வாருங்கள் என்று அழைத்துச் சென்றான்.
அவர்கள் மூவரும் உள்ளே செல்வதை பார்த்து விட்டு, வெங்கடாசலம் என்ன பாப்பா அந்த தம்பி ரொம்ப கோவமா இருக்கு போல... பாவம் பார்ப்பதற்கு மூன்று பேரும் நல்ல அமுல் பேபி கணக்கா இருக்காங்க.. வெளிநாட்டிலே இருந்தவர்களா??? பாவம் நல்ல திட்டி விட்டியோ என்று கேட்டுக்கொண்டே அவரும் தன் மகளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
கவிப்பிரியாவோ முன்னே செல்லும் அவன் பின் உருவத்தை பார்த்துக் கொண்டே.. ஆமாம்பா கொஞ்சமே கொஞ்சம் திட்டிட்டேன் தான். அதுவும் அறிவு கெட்ட முண்டம் என்று திட்டி விட்டேன் என்று பாவமாக சொல்லும் தன் மகளை பார்த்து...
பாப்பா நீ எதுவும் அப்பாவை வைத்து காமெடி எதுவும் பண்ண வில்லையே என்று கேட்டார் வெங்கடாசலம்.
ஐயோ அப்பா சும்மா இருங்கள் நீங்கள் வேறு நேரம் காலம் தெரியாமல்.... இன்று இருவரும் அவர்களுக்கு பின்னே பேசிக்கொண்டே செல்வது...
அவங்களுக்கு முன்னே சென்ற அண்ணன் தம்பி மூன்று பேரின் காதிலும் விழுந்தது.
மிதுன் ,சனாதன் இருவரும் சிரித்துக் கொண்டாலும் ருத்ரன் மட்டும் தன் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாமல் சென்றான்.
சரியாக கமிஷனர் ரூம் முன்னாடி போய் ஐந்து பேரும் நிற்க..
கான்ஸ்டபிள் வந்து விசாரித்து விட்டு, சிறிது நேரம் இருங்கள்.. நான் போய் உள்ளே சென்று பர்மிஷன் கேட்டு விட்டு வருகிறேன் என்று கமிஷனரை பார்க்க சென்றார்.
மிதுன், சனாதன் இருவரும் வெங்கடாசலத்தை பார்த்து சினேகமாக புன்னகைத்தனர்.
அவர்கள் இருவரின் புன்னகையை பார்த்தது வெங்கடாசலமும் அவர்களிடம் நெருங்கி.. சாரி யங் மேன்ஸ்... பாப்பா தேவை இல்லாமல் உங்கள் தம்பியிடம் அதிகமாக பேசிவிட்டது போல், அது தான் அவர் கோபமாகவே இருக்கிறார் என்று சொல்லி சாரி கேட்டார் வெங்கடாசலம்.
அப்போது ருத்ரனே சார் எனக்கு எந்த விதமான கோபமும் இல்லை. அதே சமயம் நாம் ஒருவரிடம் கோபப்படுகிறோம் என்றால் அவர்கள் நமக்கு இதயத்தில் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.. இல்லை என்றால் முதுகில் குத்தும் எதிராளியாக இருக்க வேண்டும். இதில் எந்தவித இடத்திலுமே உங்கள் மகளோ, நீங்களோ இல்லை.
இங்கு நாம் சந்தித்து நிற்பது.. அன்றாடம் வாழ்வில் நடக்கும் ஒரு இயல்பான சந்திப்பு போல் இன்று நடந்து முடிந்தது. அவ்வளவு தானே தான் இன்றோடு நாம் கடந்து சென்று விடுவோம். இதில் யாரும் யாரிடமும் மன்னிப்போ நன்றியோ எதுவும் சொல்ல அவசியம் இல்லை என்று தன் முகத்திலும்.. எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாமல் அமைதியாக சொல்லி விட்டு கமிஷனரின் அழைப்புக்காக அமைதியாக நின்றான் ருத்ர தேவ்.
அவன் பேசி முடித்த பிறகு.. யப்பா... சாமி என்ன அனல் அடிக்குது ஏன் பா என்ற தன் தந்தையிடம் கலாய்த்தாள் கவி பிரியா.
வெங்கடாசலமோ... பாப்பா கொஞ்சம் சும்மா இரு டா.. ஏற்கனவே பார்ட்டி செம கொதி நிலை இருக்கும் போல.. நீ வேற கிளப்பி விடாதே மா.. நான் விசாரித்தவரையில் அவர்கள் குடும்பம் நம் குடும்பம் போல் மிகவும் பாரம்பரியமான குடும்பம். நீ எதையாவது விளையாட்டாக பேச போய், அது தவறாக முடிந்தது... பிறகு தேவையில்லாத மன கஷ்டம் தான், அதனால் கொஞ்சம் அமைதியா இரு டா என்று தன் மகளுக்கு நல்லதையும் அதே சமயம் மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் எடுத்துச் சொன்னார் அழகான ஒரு தந்தையாக.
அவர் பேசிய விதத்திலேயே சனாதன் அவரிடம் சென்று..
சாரி அங்கிள் அவன் நல்லது என்று செய்ய போய்... தங்கள் மகள் கொஞ்சம் வாய் துடுக்காக பேசிவிட்டார். அதனால் தான் அவன் கோபமாக இருக்கிறான். மற்றபடி மிகவும் நல்லவன். அவனுக்கு சரியாக கோபப்பட கூட தெரியாது... இப்பவும் உங்களிடம் அவன் கோபமாக பேசுகிறேன் என்று கோபப்படுகிறேனே தவிர, ஆனால் அவனுக்கு கோபத்தை முழுமையாக உங்களிடம் காட்ட கூட தெரியாது. நீங்களே பார்த்து இருப்பீர்கள் உங்கள் அனுபவத்தில்... இப்படி யாராவது கோவப்பட்டு உங்களிடம் பேசி இருப்பார்களா?.. என்று சூழ்நிலையை இயல்பாக்க இயல்பாக பேசினான் சனாதன்.
இருக்கட்டும் பா... என் பாப்பாவும் கொஞ்சம்... இல்லை.. இல்லை... கொஞ்சம் அதிகம் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டேன் என்ன செய்ய.. என்று வெங்கடாசலமும் சனாதன் பேசிக்கொண்டு இருக்க..
கான்ஸ்டபிள் வந்து உள்ளே கமிஷனர் வர சொன்னார் என்று சொல்லி விட்டு சென்றார்.
உள்ளே வந்த ஐவரையும் பார்த்து விட்டு...
ஓஓ... வெங்கடாசலம் சார் நீங்களும் வந்து விட்டீர்களா?..
சாரி எல்லோரும் மன்னித்து விடுங்கள். உங்களை வர சொல்லி விட்டு தாமதப்படுத்தியதற்கு. அதே சமயம் பக்கத்தில் தான் மருத்துவமனை இருக்கிறது அங்கு போய் பேசலாம் வருகிறீர்களா என்று கேட்டார் கமிஷனர்.
மருத்துவமனைக்கா.....
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...