• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
24. கவிப்பிரியாவின் கோபமும்...

ருத்ரதேவனின் கோபம்....

கவிப்பிரியாவை காருக்குள் இழுத்து வேகமாக போட்டவன்... ஏனோ அங்கு இருப்பது சரி என்று படாததால் வேகமாக காரை ஓட்டிக் கொண்டு அந்த இடத்தை விட்டு சற்று தூரம் வந்ததும் தான்.. தன் அருகில் கலைந்த ஓவியமாக மயக்கத்தில் படுத்து இருப்பவளை பார்த்தான்.

ஏனோ அவளைப் பார்த்த கணத்தில் இருந்து வித்தியாசமான சந்தர்ப்பங்களில் பார்த்து இருந்தாலும்
அவளின் அந்த முகம் தன்னுடைய ஆழ்மனம் வரை சென்று ஆழப்பதிந்ததை உணர்ந்தான்.

ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் அவளை அப்படி ரசிப்பது தவறு என்று பட அவளின் மயக்கம் தெளிவிப்பதற்காக தன் காரில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான் ருத்ரதேவ்.

ஆனால் அவளோ... அடித்த சரக்கு போதையா?.. இல்லை ஓடி வந்ததாலா... ?.. இல்லை தலையில் அடிபட்டதாலோ மயக்கம் தெளியாமல்.. அப்படியே கிடந்தாள்.

அவளிடம் அசைவு என்பதே இல்லாமல் இருக்கவும். அப்போது தான் உயிர் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக அவரின் முகத்தை தாண்டி கீழே பார்த்தான்.

அப்போது தான் அவள் உடை முழுவதும் ரத்தங்களால் இருந்தது தெரிய வந்தது. இவ்வளவு நேரம் இருந்த பதட்டத்தில் அந்த இரத்த வாடை கூட அவனுக்கு தெரியவில்லை. ஆனால் அதைப் பார்த்து மாத்திரத்தில் அவனுக்கு குடலைப் புரட்டிக் கொண்டு வந்தது... ஆனாலும் அவளுக்கு தான் எதுவும் அடிபட்டு இருக்கிறதா என்று அவளை ஆராய்ந்து பார்த்தான்.

ஆனால் அவள் உடம்பில் சிறு காயம் கூட இல்லை... ஆனால் அவள் உடை முழுவதும் ரத்தத்தால் நனைந்து இருந்தது.

என்ன இது என்ன நடந்து இருக்கும் என்று ஒன்றும் புரியாமல்... இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தன் அண்ணன் சனாதனுக்கு கால் செய்தான்.

காலையில் இருந்து கவிப்பிரியாவை பார்த்தது சொல்லாமல்.. இப்பொழுது தான் வீட்டிற்கு வரும் வழியில் ஒரு பெண் ஆபத்து என்று ஓடி வந்தது போல் இருக்கவும். அவளை காரில் ஏற்றுக் கொண்டு வந்தேன் அண்ணா. ஆனால் அவள் மயங்கி கிடக்கிறாள் உடல் முழுவதும் இரத்தமாக இருக்கிறது என்றும் சொன்னான்.

தன் தம்பி ருத்ரதேவ் பேசும் வார்த்தையில் தடுமாற்றம் இருப்பதிலேயே ஏதோ ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்பதை உணர்ந்தவன்...

தன் தம்பி சொன்ன லொகேஷனுக்கு விநாயகம் அங்கிள் மூலம் தெரிந்த போலீஸ்காரர் உதவியோடு அந்த இடத்திற்கு போலீஸ்காரர்கள் மற்றும் ஆம்புலன்ஸையும் அனுப்பி வைத்தான். அதற்குப் பிறகு தான் தன் தம்பி இருக்கும் இடத்திற்கு வேகமாக விரைந்து வந்தான் சனாதன்.

அவன் வருவதற்குள் மயக்கம் தெளிந்த கவி பிரியா தனக்கு முன்பு பதட்டத்தோடு காருக்கு வெளியே நின்று கொண்டு இருந்தவனை பார்த்து நொடியில் ஆத்திரத்துடன் வெளியே வந்தவள்... ஏய் அறிவு கெட்ட முண்டமே...
என்ன டா பண்ணி தொலச்சி இருக்க...

அடக்கடவுளே அங்கே இந்நேரம் டிரைவர் அண்ணாவுக்கு என்ன ஆயிருக்கும் என்று தெரியவில்லையே என்று புலம்பி தள்ளினாள். உனக்கு என்ன டா மனதில் பெரிய ஹீரோ என்று நினைப்பா... கார் சாவியை கொடு முதலில் என்று அவனிடம் கார் சாவியை பிடுங்கிக் கொண்டு காரில் அமர்ந்து காரை இயக்குவதற்கு முன்பு.. அங்கு சனாதன் அவர்களுக்கு நடுவில் வந்து...

அந்த பெண்ணிடம் மிஸ் கவிப்பிரியா என்று கேட்டான்.

எஸ் ஐ மிஸ் கவிப்பிரியா தான்.. சார் நீங்க யாருன்னு எனக்கு தெரியல, ஆனா இப்ப நான் உங்க கூட பேசுற நிலைமையில் இல்ல. என்னுடைய டிரைவர் அங்க அடிபட்டு கிடக்கிறார்... அவரை நான் ஹாஸ்பிடலில் சேர்க்க வேண்டும் என்று பதட்டப்பட்டாள்.

மிஸ் கவிப்பிரியா.. நீங்கள் பதட்டப்படுவதை முதலில் நிறுத்துங்கள். உங்கள் டிரைவரை மிகவும் பாதுகாப்போடு ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தாயிற்று. அவரை இந்நேரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துக் கொண்டு இருப்பார்கள்.

நீங்கள் மயக்கமாக இருந்த பொழுது சூழ்நிலையை விளக்கி என் தம்பி எனக்கு போன் செய்து இருந்தான். நானும் அப்பவே ஸ்பாட்டுக்கு இங்குள்ள போலீஸ் உதவியோடு ஆட்களை அனுப்பி வைத்து விட்டேன். கவலைப்படாதீர்கள் என்று சொன்னான் சனாதன்.

ருத்ரா இவர்களை அவர்கள் வீட்டில் இறக்கி விட்டு விட்டு வீட்டிற்கு வந்து சேர்.. மற்ற விஷயங்களை நேரில் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டு, சனாதன் கவிப்பிரியாவிடம் லேசான ஒரு புன்னகை வெளியிட்டு சென்று விட்டான்.

அவள் கண் விழித்ததும் தன்னை அறிவு கெட்ட முண்டம் என்று திட்டியது மனதிற்குள் வந்து வந்து போக... எதுவும் பேசாமல் அவள் கையில் இருந்த சாவியை வெடிக்கென்று புடுங்கி கொண்டு டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு காரை ஸ்டார்ட் செய்தான்.

அவனுடைய கோபம் அவளுக்கு புரிந்தது... இருந்தாலும் இவ்வளவு பெரிய ஆண்மகன் சிறுபிள்ளை போல் கோபம் கொள்வதை நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொண்டாலும் அவனை வெறுப்பேற்றாமல்.. அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

ஸ்டார்ட் செய்தவன் திடீரென்று காரை நிப்பாட்டி விட்டு, பின் பக்கமாக திரும்பி பெரிய வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து... அவளிடம் கொடுத்து எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்து இருந்தான்.

அவளும் அதை வாங்கிக் கொண்டு கீழே இறங்கி தன் மேல் இருந்த ரத்த திட்டுகளை துடைத்துக் கொண்டு உள்ளே வந்து அமர்ந்தாள். எதுவும் பேசாமல் ருத்ரா அமைதியாக வண்டியை இயக்கினான்.

அவன் அமைதியாக வண்டியை ஓட்டிக் கொண்டு தங்கள் வீடு வரைக்கும் எதுவும் பேசாமல் வந்தவன்... ஏன் அவள் புறம் திரும்பி கூட பார்க்கவில்லை ஆனால் இப்போது அவள் வீடு எங்கே இருக்கு என்று கேட்பதற்காக அவளை திரும்பிப் பார்த்தான்...

அவளும் அவனுடைய எண்ணம் புரிந்து ... இங்கு இருந்து ஐந்தாவது பங்களா எங்களுடையது என்று சொன்னாள்.

அவன் வேறு எதுவும் பேசாமல் நேராக சாலையைப் பார்த்து ஓட்டினான்..

இவ்வளவு நேரமும் மெதுவாக வந்தவன், அவள் தன்னுடைய வீட்டின் அடையாளத்தை கூறியதும்.. இரண்டு நிமிடத்தில் அவர்கள் வீட்டின் முன்பு காரை நிறுத்தி இருந்தான் ருத்ர தேவ்.

ஒரு நிமிடம் முழுவதுமாக அமைதியாக அமர்ந்து விட்டு.. சாரி அண்ட் தேங்க்ஸ் என்று சொல்லி விட்டு இறங்கி விட்டாள் கவிப்பிரியா.

அவன் அவள் இறங்கிய அடுத்த நொடி... காரை ரிவர்சில் எடுத்து வேகமாக சென்று விட்டான். இனி ஒரு முறை உன்னை நான் பார்க்க கூடாது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

வாழ்நாள் முழுவதும் அவளுடன் தான் சம்சார சண்டை போட போகிறான் என்று தெரியாமல்.. ஆனால் அதற்கு நாட்கள் இன்னும் நிறைய இருக்கிறது. அது பொறுமையாக பார்ப்போம்.

தன்னை இறக்கி விட்டு வேகமாக செல்பவனை பார்த்தவள்... அய்யய்யோ ரொம்ப கோபமா போகிறார் போலவே ... இருந்தாலும் நீ அவரை அறிவு கெட்ட முண்டம் என்று சொல்லி இருக்கக் கூடாது. பாவம் நீ ஓடி வந்ததை பார்த்து ஏதோ என்று பயந்து தானே.. அதுவும் உன்னை காப்பாற்றுவதற்கு தானே அவர் அப்படி செய்தார். ஆனால் எடுத்ததுமே என்ன எது என்று யோசிக்காமல் திட்டி விட்டாயே என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவள்.. என்னமோ பெயர் சொன்னாரே அவருடைய அண்ணன் ... என்ன பெயர் என்று யோசித்துப் பார்த்தாள்...

ம்ம்.... ம்ம்... ஹான்.. ருத்ரா என்று சொன்னார் ருத்ரா அப்படின்னா என்ன பெயராக இருக்கும்... முழுமையான பெயர் ருத்ரன் மட்டுமா இல்ல வேற ஏதேனும் பெயர் சேர்ந்திருக்குமா? எப்படி இருந்தாலும் ருது அழகாக இருக்கிறாய்... என்று சொல்லி விட்டு தன் வீட்டிற்குள் சென்றாள்.

தன்னுடைய வீட்டு வாயில் வரை கோபமாக வந்தவன்... உள்ளே செல்வதற்கு வாட்ச்மேன் கேட்டை ஓபன் செய்த அடுத்த நொடி வண்டியின் வேகத்தையும் குறைத்து தன்னுடைய கோபத்தையும் குறைத்துக் கொண்டு அமைதியாக வண்டியை உள்ளே செலுத்தினான்.

எவ்வளவு கோபம் வருதோ அதே நேரம் குடும்பம் என்று வந்து விட்டால் அப்படியே அமைதியாக ஆகிடுவான். அதுவும் இன்று காலையில் பார்த்த பெண்ணுக்கு இவ்வளவு நேரமும் கோபப்பட்டதே தப்பு என்று தனக்குள் தனக்கே சொல்லி கொண்டே காரை ஷெட்டில் நிறுத்தி விட்டு... இனி அவளை பற்றி நினைக்க கூடாது என்று மனதிற்குள் ஒரு முறை தீர்க்கமாக முடிவு எடுத்து விட்டு வீட்டுக்குள் சென்றான் ருத்ர தேவ்.

உள்ளே வழக்கமான புன்னகை முகத்தோடு செல்ல சரோஜா அத்தை சூடாக கருப்பட்டி காபி போட்டு கொண்டு வந்து கொடுத்தார்....

அதை வாங்கி பொறுமையாக ரசித்து குடித்தவன்... என்ன அத்தை வீடு ரொம்ப அமைதியாக இருக்கிறது இன்னும் மற்றவர்கள் எல்லாம் யாரும் வரவில்லையா என்று கேட்டான்.

மிதுன் எப்பவோ வந்துடுச்சு... இப்ப சிறிது நேரத்திற்கு முன்பு தான் சனாதன் வந்து, உனக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கா கருப்பட்டி காபி போட்டு தர சொல்லி விட்டு மேலே அண்ணன் அறைக்கு தான் சென்று இருக்கிறான்.

மற்றும் மூவரும் இன்னும் வரவில்லை என்று சொல்லி விட்டு... என்ன கண்ணு ஏதாவது பிரச்சனையா என்று கேட்டார்.

ஆமாம் அத்தை என்று இது வரை நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி விட்டு, அது விஷயமாக தான் அண்ணாவிடம் எதுவும் பேசிக் கொண்டு இருப்பார். சரிங்க அத்தை நான் போய் பிரஸ்ஷப் ஆயிட்டு வருகிறேன் என்று சொல்லி, தன் அறைக்கு சென்றான் ருத்ர தேவ்.

அப்பா அய்யனாரப்பா பிள்ளைகள் இப்பொழுது தான்... முதன் முதலில் சொந்த மண்ணுக்கு வந்து இருக்கிறார்கள். பெரிய பிரச்சினைகளை ஏதும் பிள்ளைகளுக்கு இழுத்து விட்டு விடாதே அவர்களுக்கு பக்க பலமாக இருந்து அவர்களை காக்கணும் அய்யனாரப்பா... என்று தங்கள் குலசாமி அய்யனாரிடம் வேண்டி விட்டு... தன் வேலைகளை பார்க்க சென்றார் சரோஜா.

மேலே சனாதன் நடந்த அனைத்து விஷயங்களையும் தன் அண்ணன் மிதுனிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்.

அனைத்து விஷயங்களையும் கேட்டு விட்டு.. கமிஷனர் என்ன சொன்னாருடா... ருத்ராவுக்கு ஏதும் பிரச்சினை வருமா என்று கேட்டான் மிதுன்.

இல்ல மிதுன் ஸ்பாட்ல தம்பி அங்க இல்ல, வீட்டுக்கு வர வழியில அந்த பெண்ணை காப்பாற்றி இருக்கிறான். அப்படி மட்டும் தான் சொல்லி இருக்கிறேன். அதே சமயம் அந்த பெண்ணையும் விசாரிப்பார்கள். அந்த பெண் என்ன சொல்கிறாள் என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்த அந்த பெண் நல்ல பெண் போல் தான் தோன்றுகிறது.

சரி அங்கு ஸ்பாட்ல என்ன நடந்தது என்று உனக்கு ஏதும் தெரியுமா என்று கேட்டான் மிதுன் சனாதனிடம்.

இல்லை அண்ணா எனக்கு தெரிந்த ரத்த காயங்களோடு அந்தப் பெண் வந்தால் என்று சொல்லவும் போலீசுக்கும் ஆம்புலன்ஸ்க்கும் மட்டும் சொல்லி அனுப்பி வைத்தேன் மற்றபடி இன்னும் எனக்கும் வேறு எந்த விவரங்களும் தெரியாது என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.

அதே சமயம் கமிஷனர்...

சனாதனுக்கு போன் செய்து தங்கள் தம்பியோடு கமிஷனர் அலுவலகம் வருமாறு கூப்பிட்டார்.

கமிஷனர் சொன்ன விஷயத்தை மிதுனிடம் சொல்லி விட்டு கீழே சென்று ருத்ரதேவனோடு..

அண்ணன் தம்பி மூவருமாக கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர்.
அங்கு....
இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top