- Thread Author
- #1
22. சஞ்சனாவின் தடுமாற்றமும்...
மிதுன் அலுவலகத்தில்...
ரிஷ்வந்த், மிதுனா இருவரும் மதிய உணவு இடைவேளையில்... புவனா சஞ்சனா இருவரோடும் வீடியோ காலில் கனெக்ட் செய்து பேசிக் கொண்டே சாப்பிட... அப்போது சஞ்சனா... இன்று காலை சிக்னலில் சனாதனை பார்த்ததில் இருந்து இப்ப சாப்பிட வருவதற்கு முன்பு வரை நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி கடைசியாக அவனை குழப்பி உன்னை சொல்லி கொண்டு சாப்பிட்டேன் நான் திடீரென்று எல்லோரும் அமைதியாகி விட்டார்களே என்று பார்க்க செல்போன் திரையில் அனைவரும் தங்களது தொடர்பை கட் செய்து இருந்தனர்.
என்ன ஆச்சு பேசிக்கொண்டு இருக்கும் போது கட் செய்து விட்டு போய் விட்டார்கள் என்று ... கேட்டுக்கொண்டேன் தான் சாப்பிட்ட பாத்திரங்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி எடுத்து தன்னுடைய லஞ்ச் பேக்கில் வைத்தவள் தனக்கு பின்னே கோபமே உருவாக நின்று கொண்டு இருந்த சனாதன் பார்த்து மனதிற்குள் ஜர்க் ஆனாலும்...
அவனை கண்டும் காணாதது போல் கடந்து செல்ல நினைக்கையில்.. அவள் சற்றும் எதிர்பாராமல்... வினாடிக்குள் வேகமாக அவளை தூக்கியவன் தூக்கிய வேகத்தில் அதே போல் தொப்பென்று கீழே போட்டு விட்டு சென்றான் சனாதன்.
நல்ல வேலையாக அப்பொழுது அனைவரும் சாப்பிட்டு சென்று இருக்க.. சஞ்சனாவை அவன் தூக்கி போட்டதை யாரும் பார்க்கவில்லை. சுதாரித்து எழுந்தவள் மறுபடியும் விழுந்து எழுந்து சென்று பார்க்க அங்க...
சனாதன் அறையில் தலைவாழை இலை போட்டு.. நடப்பது, பறப்பது, தண்ணீரில் மிதப்பது என்று அனைத்து வகையான அசைவ உணவுகளும் பரிமாறப்பட்டு ... சாப்பிட்டுக் கொண்டு இருந்தான் சனாதன்.
கோபமாக எழுந்து சென்றவள்... அவன் சாப்பிடுவதை பார்த்து விட்டு சிறிது நேரம் கோபத்தை கட்டுப்படுத்தி நின்று கொண்டு இருந்தாள்.
ஆனால் தனக்கு எதிரே அப்படி ஒருத்தி கோபமாக நின்று கொண்டு இருக்கிறாள் என்ற சிந்தனையே இல்லாமல்... உணவுகளை ருசித்து ரசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தான் சனாதன்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவள் அவன் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் அங்கு இருந்த சால்ட் அண்ட் பேப்பர் பாட்டிலை எடுத்து அப்படியே எல்லா உணவுகளிலும் கொட்டி விட்டாள் சஞ்சனா.
சனாதன் அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு, வேறு எதுவும் சொல்லாமல் ... ஆனால் உணவுகளை சாப்பிட ஆரம்பித்தான் மறுபடியும்.. அதே போல் ரசித்து ருசித்து சாப்பிட்டான்.
சஞ்சனாவிற்கு தான் என்ன இவன் சோற்றை கண்டு பல நாட்கள் ஆனது போல் இப்படி தின்று கொண்டு இருக்கிறான். ஒரு வேளை இவன் இருந்த நாட்டில் இப்படி உணவுகள் கிடைக்காமல் இருந்திருக்குமோ... அது தான் காணாததை கண்டது போல் தின்கிறானா என்று புலம்பிக்கொண்டே, அவன் ரசித்து சாப்பிடும் விதத்தை பார்த்துக் கொண்டு, மண்டை குழம்பி போய் நின்றாள்.
அவன் நிதானமாக சாப்பிட்டு முடித்து விட்டு... தனக்கு எதிரில் இருந்த பெல்லை அழுத்தியவுடன் சாப்பாடு கொண்டு வந்த நபர் வெளியே நின்று கொண்டு இருந்தவர்... உள்ளே வந்து மேஜை மேல் மீதம் இருந்த அனைத்து சாப்பாடு பொருள்களையும் சரியாக எடுத்து.. வைத்து விட்டு கூடையில் அடுக்கி வைத்து விட்டு.. சரி தம்பி நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என்று சொன்னார்.
அண்ணா இதில் இருக்கும் மீதமான உணவுகள் அனைத்தையும் யாரையும் சாப்பிட வேண்டாம் என்று சொல்லுங்கள்... என்று சொல்லி விட்டு அவரைப் போக சொன்னான்.
அவர் கிளம்பியதும் நொடியில்.. சஞ்சனாவின் அருகில் வந்தவன் அவளை அப்படியே சுவற்றோடு சாய்த்து வைத்து, தன் வாயில் இருந்த அனைத்து உப்பு, மிளகு தூள் காரங்கள் அனைத்தையும் அவளுக்கு கிடத்திவிட்டான் சனாதன்.
முதலில் அதிர்ந்தாலும் சுதாரித்து அவனை தள்ள நினைக்கையில் அவளால் அவனை ஒரு இஞ்ச் கூட அசைக்க முடியவில்லை.
நேரமாக ஆக சஞ்சனாவின் உதடுகளில் இருந்து தொண்டை வரை உப்பும் மிளகும் கரிக்க ஆரம்பித்தது... அவனை தள்ளி விடும் போராட்டங்கள் அனைத்தும்... ஒன்றுமில்லாமல் போக பிறகு அவனே நிதானமாக அவளை விட்டு விட்டான்.
தன்னிடம் இருந்து சனாதன் விலகிய பிறகு.. தன் உதடுகளை நன்றாக அழுத்தி துடைத்தவள்... கோபமாக அவனைப் பார்க்க...
அப்போது தான் அவன் சாப்பிட்டு முடித்து கைகளை கழுவிக் கொண்டு இருந்தான். அவன் சாப்பிட்ட இலைகளை எடுத்துப் போட்டு விட்டு, மீதம் இருந்த உணவுகள் அனைத்தையும் அதது அடுக்குகளில் வைத்து அடுக்கி.. தான் கொண்டு வந்த கூடையில் வைத்துக் கொண்டு இருந்தார் வேலையாள்.
பிறகு நான் கிளம்புகிறேன் தம்பி என்று சொல்லிக் கொண்டு சனாதனிடமிருந்து விடைபெற்றவர்... சஞ்சனாவின் அருகில் வந்து பாப்பா நீ யாரு கண்ணு இங்க தான் வேலை பாக்குறியா? அப்படியே இருந்தாலும் இப்படியா எங்க தம்பி சாப்பிடும் போது வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருப்ப... தம்பி அமைதியாக இருக்க சொன்னதால் மட்டும் தான் இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தேன். ஆனால் இனிமேல் இப்படி சாப்பிடும் போது பார்க்காத கண்ணு... உனக்கு வேணும் என்றால் நீயும் எடுத்து போட்டு சாப்பிடணும் கண்ணு.. யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்ன என்று சொல்லியவர்...
சனாதனை பார்த்து போய்ட்டு வரேன் தம்பி என்று சொல்லி விட்டு சென்றார்.
அவர் சென்ற பிறகு தான்... அட கருமமே அப்ப இதுவரை இங்கு நடந்தது கனவா... அசிங்கப்பட்டியே சஞ்சனா என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டாலும்.. வெளியே எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றாள்.
தன்னுடைய வேலை ஆள் சென்றதற்கு பிறகு..
சஞ்சனா அருகில் வந்த சனாதன்... ஏய் பொண்டாட்டி.. என்ன ஆச்சு உப்பு மிளகு தூள் ரொம்ப காரமா இருந்ததா என்று கேட்டான்.
சனாதன் கேட்ட கேள்வியில் மறுபடியும் குழம்பியவள் தன் கண்களை நன்றாக துடைத்துக் கொண்டு, அவனை பார்க்க அவனும் தன்னுடைய சேரில் அமர்ந்து வேலையை பார்த்துக் கொண்டு இருந்தான்.
அடச்சே சரி தான் போடா டுமாங்கோலி.. வந்துட்டான் பெரிய இவனாட்டம் என்று எதற்கு வந்தோம் என்ன நடந்தது என்று எதுவும் புரியாமல் மண்டை காய்ந்து போக... சனாதன் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக தன் அறைக்குச் சென்றாள் சஞ்சனா.
உள்ளே வந்த சஞ்சனாவிடம் என்ன ஆச்சு சஞ்சனா... காலையில் சார் பார்க்கவில்லை என்று போய் பார்த்து விட்டு வருகிறாயா என்று இயல்பாக கேட்க... சஞ்சனாவும் ஆமாம் என்று சொல்லி விட்டு அமைதியாக தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
ஆனால் காலையில் எவ்வளவு ஈடுபாடுடன் வேலை பார்த்தாளோ.. அதே அளவிற்கு இப்பொழுது அவளால் வேலையில் தன் கவனத்தை ஈடுபடுத்த முடியவில்லை. சிறிது நேரம் மனது முழுக்க குழப்பத்திலேயே இருக்க கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்து தன் அண்ணன், அப்பா இருவரையும் தன் மனதிற்குள் கொண்டு வந்து அவர்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாள். மனம் ஒரு நிலைக்கு வர... தெளிவான முகத்தோடு தன் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
மிதுன் அலுவலகத்தில்..
ஏன் டி சஞ்சனா பேசிக் கொண்டு இருக்கும் போதே, பின்னாடி எஸ் டி சார் பார்த்து விட்டு நாம் அனைவரும் போனை கட் செய்து விட்டோம். ஆனால் கண்டிப்பாக அவள் சாப்பிடும் மும்மரத்தில் நம்மை கவனிக்காமல் என்னென்ன உளறிக்கொண்டு, என்னன்ன சொல்லி ... எப்படி எல்லாம் அவரிடம் வாங்கி கட்டிக்கொண்டு இருக்கப் போகிறாளோ தெரியவில்லை என்று ரிஷ்வந்த் புலம்பி தள்ளினான்.
அடேய் சும்மா இரு டா நீ வேற... நானே ஈவினிங் வீட்டிற்கு சென்றால் அந்த பத்ரகாளி என்ன ஆட்டம் ஆடுவாளோ என்று பயமாக இருக்கிறது.. இதில் நீ வேறு இப்பவே பீதியை கிளப்புகிறாய் என்று அவனை போட்டு அடித்துக் கொண்டு இருந்தாள் மிதுனா.
அப்போது எதற்காகவோ வெளியில் செல்ல கிளம்பி வந்த மிதுன்... அவர்கள் இருவரும் அடித்து விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து விட்டு, கோபமாக அவர்களை நோக்கி வந்தான்.
மிதுன் வருவதை பார்த்து விட்டு ரிஷ்வந்த் அடியே போதும் நிறுத்து டி.. எம் டி சார் வர்றார் என்று சொன்னான்.
ஆனால் அவளோ அவன் தன்னிடம் இருந்து தப்பிப்பதற்காக அப்படி சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டவள்.. அடேய் மண்டையா அந்த சீன் எல்லாம் இங்கு இல்லை... ஒழுங்காக அடி வாங்கு என்று அடித்துக் கொண்டே இருந்தாள் அவன் முதுகில்.
மிதுனோ அவள் அப்படி சொல்லவும்...
அப்ப இங்கு வேறு எதற்கு மா சீன் என்று கேட்டான்...
மிதுனாவோ .. டேய் என்ன டா இவ்வளவு அடி வாங்கியும் நீ ... எம்டி சார் மாதிரி மிமிக்ரி பண்ற என்று கேட்டாள்.
மிதுனா கேட்ட கேள்வியில் அரண்டு போன ரிஷ்வந்த்... ஐயோ சாமி இந்த பஞ்சாயத்துக்கு நான் வரவில்லை. நான் என் வேலையை பார்க்க போகிறேன் என்று சொல்லி விட்டு, சாரி சார் என்ற அடுத்த நொடி தன் கேபினை நோக்கி ஓடிவிட்டான் ரிஷ்வந்த்.
அப்போது தான் தனக்குப் பின்புறத்தில் எம்டி நிற்பதை உணர்ந்தவள்...
போச்சு.. போச்சு... எல்லாம் போச்சு காலையில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. இப்போது நல்ல வகையாக மாட்டிக் கொண்டேனா என்று புலம்பிக்கொண்டே திரும்பிப் பார்க்க...
அவனோ முகத்தை மிகவும் கடுமையாக வைத்துக் கொண்டு நின்றான்.
சார் சார் நான் ரொம்ப சின்ன பொண்ணு... தெரியாம பேசிட்டேன் சார். இப்ப நீங்க கண்ணை மூடி திறந்து பாருங்களேன்... நீங்கள் கண்ணை மூடும் போது நான் இருப்பேன். திறக்கும் போது நான் இருக்க மாட்டேன் சார் என்று தன் இரு கைகளையும் காதுகளில் வைத்துக் கொண்டு சாரி கேட்பது போல் சொல்லிக் கொண்டு நின்று இருந்தாள் மிதுனா.
மிதுனாவின் நடவடிக்கைகளில் சிரிப்பு வந்தாலும் அதை தன் உதடுகளுக்குள்ளாகவே அடக்கிக் கொண்டவன்.. அவளை ஒரு முறை கோபமாக பார்த்து விட்டு சென்றான்.
இவளும் வேகமாக தன்னுடைய லஞ்ச் பேக் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு வேகமாக ஓடினாள் தன் கேபினுக்கு.
வேகமாக வந்தவளை பார்த்து ரிஷ்வந்த் அடக்க முடியாமல் சிரிக்க...
ஏய் கரப்பான் பூச்சி மறுபடியும் என்னிடம் அடி வாங்காமல் ஒழுங்காக வேலையை பாரு... இல்லை... என்று எதுவும் சொல்ல வந்தவள் எதற்கும் தன் பின்னால் யாரும் இருக்கிறார்களா என்று ஒரு முறை பார்த்து விட்டு யாரும் இல்லை என்றவுடன், ரிஷ்வந்தை பார்த்து கரப்பான் பூச்சி இன்று உனக்கு நேரம் நல்லா இருக்கு... அதனால் நீ இன்று தப்பித்தாய் என்று சொல்லி விட்டு தன் வேலையில் கவனத்தை செலுத்தினாள்.
எப்படியோ முதல் நாள் வேலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக முடிய...
அனைவரும் தங்கள் வாகனங்களில் அவரவர் இல்லத்திற்கு சென்றனர்.
ருத்ர தேவ் வேலைகளை முடித்து விட்டு சிட்டியில் இருந்து தங்கள் வீட்டை நோக்கி செல்லும் பாதையில் சென்று கொண்டு இருக்க... ஒரு பெண்ணை சிலர் துரத்திக் கொண்டு இருந்தனர்.
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...