• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 1, 2025
Messages
23
🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶

தூரம் 21 (இறுதி அத்தியாயம்)

நீண்ட நாள் பிரிவின் பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். இதுநாள் வரை சேர்த்து வைத்திருந்த வலிகள் இருவரையும் கவ்விச் சிறைபிடித்தன.

ஆழ்ந்த மௌனம் அங்கே ஆட்சி செய்ய, வாய்கள் மூடிக் கொண்டன. உணர்வுகள் பேசிக் கொண்டன. இரு இருதயங்களும் ஒன்றோடு ஒன்று உறவாடித் தம் ஏக்கங்களைத் தீர்த்து முற்றுப்புள்ளி வைக்கும் தீர்மானத்தில் இறங்கின.

"அம்மு" அன்பு சொட்டச் சொட்ட அவளை அழைத்தவன், ஆதுரமாக தன் இனியவளின் சிகையைக் கோதிக் கொடுத்தான்.

அவன் கையைக் கீழிறக்கவும், "இன்னும்" என்றவாறு அவனது கரத்தினைப் பற்றிப் பிடித்து தன் தலையில் வைத்துக் கொண்டாள்.

"சரிடா" என்றவாறு அவள் சிகையை வருடி விட, அவன் நெஞ்சில் தலை சாய்த்தாள்.

"முகத்த காட்டேன்" என்றவாறு அவள் முகம் பார்க்க எத்தனிக்க, "ஹூம் முடியாது" என்று அவனுள் புதைந்து கொண்டாள்.

"என்னம்மு?" அவளின் அடம்பிடிக்கும் செய்கையில் சிரித்துக் கொண்டு கேட்டான்.

"சும்மா இருங்க. எத்தன மாசம் கழிச்சு வந்திருக்கீங்க. உங்கள எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா. நீங்க சட்டு சட்டுனு விலகுறீங்க"

"நீ என்னை விடவே மாட்ட போலிருக்கே. பிரிஞ்சு இருந்த அத்தனை நாளையும் ஈடுகட்டுற மாதிரி என்னோட ஒட்டிக்கிட்டே இருக்கப் போறியா?" என்று வினவ,

"ஆமா. உங்கள எங்கயும் விட மாட்டேன். இப்படியே இருப்பேன்" அவனை இன்னுமின்னும் இறுக்கமாக அணைத்தாள்.

"பசிக்காதா? தூக்கம் வராதா? சாப்பாடு யார் தருவா?" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள, "உங்களுக்கு என்னை விட சாப்பாடு தான் முக்கியம்ல?" முறைத்துப் பார்த்தாள், பெண்.

"அது அத்தியாவசியத் தேவ டி. நான் என்ன பண்ணுறது?" என்று கேட்க, "போங்க போங்க. நான் கோவம்" முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சென்றவளின் கையைப் பிடித்து இழுக்க, மன்னவனின் திண்ணென்ற மார்பில் மோதி நின்றாள், மலர்க் கொடியாள்.

"எங்க டி போற? என்ன விட்டுப் போகப் போறியா?" ஆழ்ந்த குரலில் கேட்டான்.

"நீங்க தான் போறீங்க. தூரமா தூரமா போறீங்க" என்று சொல்ல, "ஷ்ஷ்" அவள் இதழில் விரல் வைத்து பேச விடாமல் செய்தான்.

"என்ன?" அவள் தன் வில்லை ஒத்த ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க, "அந்த வார்த்தய சொல்லாத. இனி அது நமக்கு வேண்டவே வேண்டாம். அந்த தூரத்த தகர்த்து எறிஞ்சுட்டு தான் உன்னத் தேடி ஓடோடி வந்திருக்கேன்" என்றவன் உணர்ச்சிகளின் குவியலாகத் தான் நின்றான்.

"ம்ம்ம்" என்றவள் அந்த வார்த்தைகளின் தாக்கத்தை அனுபவித்தவளாய் நிற்க, "எங்க? உன் பாணியில அத சொல்லு பாக்கலாம்" என்று கேட்டாள்.

"தூரம் வேண்டாம் தங்கமே!" என்றாள், அவன் விழிகளோடு தன் விழிகளை ஊடுறுவ விட்டவாறு.

"இது மாஸ்" அவளின் நெற்றி முட்டிச் சிரித்தான், ஆடவன்.

"எப்படிங்க இங்க வந்தீங்க? உங்கள விட்டாங்களா?" என்று வினவ, "எங்க விட்டாங்க? கொஞ்சம் கஷ்டமா இருந்தது. நான் போய் ரெண்டு வருஷம் இல்ல, ஒரு வருஷம் கூட ஆகலயே. அதுக்குள்ள போகனும்னு கேட்கவும், ஏன் எதுக்குன்னு ஆர்ப்பாட்டம். அப்படி அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அங்க இங்க ஓடியாடி பேசினேன். அதுல தான் உன்னோட சரியா பேசவும் கிடைக்கல.

அவங்க கான்ட்ராக் போட்டு தானே வேலைக்கு சேத்தாங்க. அது எப்படி போகலாம்னு கேள்வி கேக்குறாங்க. கடன் குடுக்க வெச்ச காச செட்டில் பண்ணேன், இன்னும் பணமும் சேத்து" என்று கூறிவனைப் பார்த்து,

"ஏன் வந்தீங்க? எவ்ளோ கஷ்டம் பாத்தீங்களா?" என்று வினவினாள்.

"உனக்கு எவ்ளோ கஷ்டம். எப்படில்லாம் வேதனப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகுறன்னு தெரிஞ்சும் எப்படிம்மு நான் நிம்மதியா இருக்கலாம்? காசு எப்ப வேணா சம்பாதிச்சுக்கலாம்.

ஆனா உனக்கு தேவைப்படுற நேரம் கூட இருக்கனும். இல்லன்னா நான் என்ன புருஷன்? வாய் திறந்து சொல்லாட்டியும் நீ என்னை எவ்ளோ தேடுற, எனக்காக எவ்ளோ ஏங்குறன்னு‌ எனக்குத் தெரியும்" என்றவனின் பார்வை அவள் வயிற்றில் படிந்தது‌.

வலது காலை மடக்கி முட்டி போட்டு அமர்ந்தவன் அவளது வயிற்றையே பார்த்தான். தனக்கும் தன் அன்புப் பெண்ணிற்கும் காதலின் அடையாளமாக உருவான உயிர் அவளின் மணி வயிற்றில் வளர்கிறது.

"அம்மு! நம்ம பாப்பா" என்று அவன் சொல்ல, "ஆமாப்பா. நம்ம பாப்பா தான். பேசுங்க" என்றவள் அவனது கையை எடுத்து வயிற்றில் வைக்க, அவனுக்கோ கரம் நடுங்கியது.

"அம்மு...!!" என்றவன் அவளது வயிற்றில் கன்னம் வைத்தான்.

அவனுடல் சிலிர்த்து அடங்கியது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வொன்று அவனை ஆட்கொண்டது. இந்த இன்பமும், உணர்ச்சியும் இதுவரையில் அவன்‌ அனுபவித்திராதவை. அத்தனையும் புதிதாக இருந்தன.

"பாப்பா! நான் அப்பா வந்திருக்கேன் டா. உங்கம்மாவ இவ்வளோ நாள் பாத்துக்கிட்டீங்க தானே? இனிமே நான் உங்களையும், உங்க அம்மாவயும் நல்லபடியா பாத்துக்கிறேன்.

இனி உங்கள விட்டு எங்கயும் போக மாட்டேன். உங்க கூடவே இருந்து உன்னோட வளர்ச்சிய பார்த்ததுட்டு, என் அம்முக்குட்டிய கவலப்பட விடாம சந்தோஷமா வெச்சுட்டு இருப்பேன். நான் சத்தியம் பண்ணுறேன் பாப்பா" என்று அவன் கூற, அனுபமாவுக்கோ இதை விட வேறு என்ன வேண்டும் என்று தோன்றியது.

கட்டிலில் அமர்ந்து கொண்டவனின் தோளில் தலை சாய்த்து, "இனிமே போக மாட்டீங்களா?" என்று கேட்டாள்.

"இல்லடாம்மா" நெற்றி முதல் கன்னம் வரை தீண்டிய முடிக்கற்றையைக் காதோரம் சொருகி விட்டான், வேங்கை.

"அப்பாவோட கடன்..?" என அவள் இழுக்க, "எல்லாமே குடுத்துட்டேன். அப்பா அவர் ப்ரெண்ட் கரன் அங்கிளுக்கு கடன் குடுத்து, அவர் கம்பனி லாஸ் ஆகிடுச்சாம். இப்போ அவர் பையன் அந்த பிசினஸ எடுத்து நல்லபடியா நடத்திட்டு வர்றார். அவர் எடுத்த கடன அவர் பையன் ஒரு வாரத்துக்கு முன்னால திருப்பி குடுத்துட்டார். கடவுள் நமக்கு கஷ்டத்த தந்தாலும் கை விட மாட்டார்ல அம்மு?

என் கடன் சுமயும் தீர்ந்துடுச்சு. கையில கொஞ்சம் காசு இருக்கு. அத வெச்சு நான் வீட்டுல மெக்கானிக் ஷாப் ஒன்னு வைக்க போறேன். இனி இந்தக் கதிர் இங்க தான். ஹேப்பியா?" என்று கேட்டான்.

"டபுள் ஹேப்பி மாம்ஸ்" அவனது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு தலை சாய்த்தாள்.

அவளது கன்னங்களைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு, "இப்படியே சந்தோஷமா இரும்மு. உன்ன இதே சிரிப்போட நான் பாக்கனும்" என்று கூற,

"கண்டிப்பாங்க. நீங்க கூட இருந்தா நான் சிரிச்சிட்டே இருப்பேன். நீங்க தான் என் பலம், என் சந்தோஷம் எல்லாமே" என்றுரைக்க, "என் பட்டு" என அவளை அணைத்தான்.

"அம்மு! எங்கயாச்சும் போகலாமா?" என்று கேட்க, "பைக்ல ஒரு ரைட் போயிட்டு வரலாம்" என தலையசைத்தாள்.

"உனக்காக நெறய வாங்கிட்டு வந்திருக்கேன். சாக்லேட், வாட்ச், ட்ரெஸ், ஷூ, பர்பியூம் எல்லாமே இருக்கு. காட்டவா?" என்று ஆவலுடன் பையை எடுக்க,

"இப்போதைக்கு எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க மட்டும் போதும்‌. எனக்கு உங்க கூட இருக்கனும்" என்று சொன்னாள்.

"தங்கள் கட்டளையே சாசனம் தேவி" இடை வரை குனிந்தவன், பைக்கில் ஏற, அவளோடு பயணத்தைத் துவங்கினான்.

அனுபமாவின் உள்ளம் தன்னவனுடனான நெருக்கத்தில் வலிகள் மறந்தது. சோகம் மறந்தது. வெறுமை துறந்தது.

அவனைக் கண்ணாடி வழியே ரசித்துக் கொண்டு செல்ல, "என்னம்மா?" எனக் கேட்டான்.

"சந்தோஷமா இருக்குங்க. சொல்ல வார்த்தயே இல்ல. இன்னும் கூட நீங்க என் பக்கத்துல இருக்கிறத நம்ப முடியல. எனக்கு தலை கால் புரியல" என்று புன்னகை பொதிந்த வதனத்தோடு கூறினாள்.

அவளின் சந்தோஷத்தைக் காணக் காணத் திகட்டவில்லை, அவனுக்கு. அங்கு சென்ற பின் இதனைக் காணவில்லையே. ஏதோ புதிதாகப் பிறந்து வந்தது போல் தோன்றியது.

வண்டியை வீதி ஓரமாக நிறுத்தி சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்தவன், "பசிக்குது டா. ஊட்டி விடேன்" என்று சொல்ல, அவளுள் தாய்மையும் சுரக்கலானது.

அவளின் குழந்தை அல்லவா அவன்? 'ஊட்டி விடுங்கம்மா' என்று தாயிடம் கேட்கும் பிள்ளையாகத் தெரிந்தான், அவன்.

உணவுப் பொட்டலத்தைப் பிரித்து ஊட்டி விட, அவனும் பதிலுக்கு ஊட்டினான். இருவருக்குமே கண்களில் கண்ணீர் படர்ந்தது. தூரத்தில் இருந்த போது இந்தத் தருணங்களை எண்ணி எவ்வளவு ஏங்கினார்கள்? அது இன்று நடப்பது அத்தனை ஆனந்தமாக இருந்தது, உணர்ச்சிபூர்வமாகவும் கூட.

"சீக்கிரம் ஊட்டுங்க. ஆஆ" என வாயைத் திறந்தவளைப் பார்த்து, "இந்தாடா என் ராசாத்தி" என்று அன்போடு ஊட்டி விட்டான், கணவன்.

அவளின் விழிகள் அவ்வன்பில் இன்னும் கலங்கிப் போக, அவனையே கண்ணிமைக்காது நோக்கினாள், மங்கை.

"அழக் கூடாது. என் செல்ல அம்முல்ல? அழாத சரியா?" என்றவன் அவளின் கண்கள் இரண்டிலும் முத்தமிட்டான்.

அவளின் சோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருந்தது, அம்முத்தம். இந்தப் பூ விழிகள் இரண்டும் இனி நீர் சிந்தவே கூடாது எனக் கூறின, அவனின் ஈர இதழ்கள்.

"லவ் யூ அம்மு. இனி நமக்கு மிஸ் யூ வேண்டாம். தூரமும் வேண்டாம். தவிப்பும் வேண்டாம். உன் பக்கத்துல நான். என் பக்கத்துல நீ. இப்படியே நாம இருந்துடலாம் பொண்டாட்டி" என அவளது பிறை நெற்றியில் அழுத்தமாக இதழ் ஒற்ற,

"எனக்கும் நீங்க மட்டும் போதும். ஐ லவ் யூ தங்கம்" என்றவாறு அவனது கையோடு தன் கையை இறுக்கமாக கோர்த்துக் கொண்டாள், கதிரின் காதல் மனைவி.

தூரம் முற்றுப் பெற்றது....!!

ஷம்லா பஸ்லி
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top