• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 17, 2025
Messages
74
பூங்குன்றன், மாதவிக்கு மேலும் சில ஆறதலான வார்த்தைகள் சொல்லி விட்டு " உன் அண்ணி வீட்டுக்கு வந்ததும், உங்களை,இல்லை இல்லை
உன்னை வீட்டுக்கு அழைத்து போகிறேன் " என்று சொன்னதும்,

மாதவி கண்களில் வழிந்த நீரை துடைத்து விட்டு" ஆமாம் ஆமாம் நானும் வீட்டுக்கு வருவேன். எங்கள் அண்ணி உங்களை எப்படி அடிப்பார்?, என்று பார்ப்பதற்கு " என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

இதற்கிடையில் வளவன் தன் வெளிநாட்டு நண்பனை பார்த்து விட்டு, தங்கச்சியை பார்க்க, சித்தி வீட்டுக்கு சென்றான்.

அங்கே குழலிக்கு முதல் தண்ணீர் ஊற்றி விட்டு அம்மனை நல்ல படியாக வழி அனுப்பி வைத்து விட்டு வீட்டுக்குள் இருந்தாள்.

குழலியிடம்" அப்போதே முடிந்ததா?" என்று கேட்க, குழலி " வா அண்ணே" என்றாள்.

அப்போது அங்கே குழலி சித்தி வந்து " வா வளவா, சரியான நேரத்திற்கு தான் வந்திருக்க, வா எல்லோரும் சாப்பிடுவோம்" என்று சாப்பிட கூப்பிட, குழலியை தவிர மற்ற அனைவரும் சாப்பிட்டு முடிக்க,

தங்கைக்கு அம்மம் போட்டு இருந்ததால், தங்கை முதலில் சாப்பிட்டு இருப்பாள் என்று தங்கையிடம் சாப்பிட்டியா என்று வளவன் கேட்க வில்லை.

சுந்தரம், குழலி அம்மா மற்றும் குழலி சித்திக்கு, குழலி இன்னும் சாப்பிட வில்லை என்று தெரியும். மேலும் தன் கணவருடன் சேர்ந்து சாப்பிட காத்திருக்கிறாள் என்று தெரியும்.

இருப்பினும் பெற்ற வயிறு கேட்காமல், குழலி அம்மா, குழலியை சாப்பிட கூப்பிட, அப்போது தான் வளவன் அதை கவனித்தான்.

உடனே தங்கையிடம் " நீ இன்னும் சாப்பிட வில்லையா?" என்று கேட்க, குழலி சித்தி " மருமகன் வரட்டும் என்று காத்திருக்கா," என்று சொல்ல,

அதைக் கேட்ட வளவன்" விளங்கிடும் "என்று சொல்லி விட்டு, " அவன் அப்போதே ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பான்" என்று சொல்ல,

குழலி " ஆமாம் நீ பார்த்த" என்று சொல்லி விட்டு " நானே, அவர் காலையிலேயே அலுவலகத்தில் இருந்து கிளம்பி விட்டேன் என்று சொன்னார். இன்னும் வரவில்லையே என்று கவலையுடன் இருக்கிறேன்" என்று சொல்ல,

உடனே வளவன் " என்னது அப்போதே அலுவலகத்தில் இருந்து கிளம்பி விட்டாரா?, அவர் அலுவலகம் லாட்ஜா?" என்று கேட்க,

உடனே குழலி" இல்லை பத்திரிகை அலுவலகத்தை தான் சொன்னேன்.
நேற்றும் வீட்டுக்கு வரவில்லை " என்று கவலையுடன் சொல்ல,

வளவன் " நான் நினைத்தது சரியா போச்சு " என்று சொல்ல,

குழலி " நீ நினைச்சது என்னது சரியா போச்சு?" என்று கேட்க,

" அவனை ஒரு பெண்ணுடன் லாட்ஜில் பார்க்கும் போதே நினைச்சேன் " என்று சொல்ல,

குழலி, வளவன் சொன்னதைக் கேட்டு நம்பாமல் இருந்தாள்.

குழலி சித்தி " எதுவும் சரியாக தெரியாமல் பேசாதே " என்று சொல்ல,

உடனே" நீங்கள் நம்ப மாட்டீர்கள், அதான் அவர்கள் இருவரையும் ஒரு போட்டோ எடுத்தேன் " என்று அங்கே குழலி சித்தியிடம் காட்ட,

அவரும் பார்த்து விட்டு" அட ஆமாம்.இது மருமகன் தான்.ஆனால்
கூட இருக்கும் பெண் யார்?" என்று யோசிக்கும் போது,

குழலி , சித்தி சொன்னதை கேட்டு விட்டு, சித்தியிடம் இருந்து போனை வாங்கி பார்த்தவளுக்கு அதிர்ச்சி ஆனது.

உடனே அவளின் சிந்தனை,
இனிய காலை சீனியர் என்றும் சிகப்பு கலர் இதய இமோஜியும், நேற்று இரவு போன் செய்த போது, அவள் பேசிய நமக்கு இடைஞ்சல் கொடுக்கனும்னு தான் போன் செய்து இருப்பாங்களோ,
என்றதும், காலையில் கணவர் இரவு முழுவதும் போனைத் தொடவே இல்லை என்று சொன்ன பொய்யும், காலையில் போன் செய்த பிறகு இப்போது வரை போன் செய்யாததை வைத்து, பூங்குன்றனை தப்பாக நினைக்க ஆரம்பித்து அழுக ஆரம்பித்தாள்.

அப்போது குழலி சித்தி" எதுவும் முழுமையாக தெரியாமல் சந்தேகம் வேண்டாம் "என்று மகளிடம் சொல்ல,

உடனே குழலி" சந்தேகம் இல்லாமல் இல்லை. அண்ணன் சொல்றது போல் இது உண்மை தான். நேற்று அலுவலகத்தில் முக்கியமான வேலை என்று பொய் சொல்லி விட்டு, அவளுடன் லாட்ஜில் தான் இருந்திருக்கிறார் " என்று சொல்லி விட்டு, " நேற்று இரவு உங்கள் ஃபோனில் இருந்து போன் செய்த போது, அந்த பெண் தான், நாம் சந்தோஷமாக இருப்பதை தடுக்க தான் போன் செய்து இருப்பாங்க என்று , சொன்னதை நான் என் காதாரா கேட்டேன் என்று சொல்லி முடிக்கும் போது,

வாசலில் "குழலி குழலி" என்று பூங்குன்றன் அழைத்து கொண்டே உள்ளே வந்தான்.

உள்ளே வந்ததும், மாமனார் மாமியார் மற்றும் மச்சினனை பார்த்து விட்டு, குழலியை பார்க்க, அவள் அழுதது தெரிந்தது.

தன் பெற்றோரை பார்த்து தான் அழுது இருப்பாள் என்று நினைத்து கொண்டே, குழலி அருகே போய், கண்ணீரை துடைத்து கொண்டே " அழுவாதே" என்று சொல்ல,

குழலி சத்தமாக " கையை எடுங்க"
என்று சொன்னதைக் கேட்டு பூங்குன்றன் பயந்து போனான்.

" நேற்று இரவு உங்கள் கூட அந்த மாதவி இருந்தாளா? " என்று குழலி கோபமாக கேட்க, பூங்குன்றன் " ம்ம்" என்றான்.

மீண்டும் குழலி கோபமாக " இப்ப நீங்க லாட்ஜில் அவள் கூட இருந்து விட்டு தான் வாரீங்களா?" என்று கேட்க,

பூங்குன்றன் "ம்ம்" என்று சொல்லி விட்டு, " நான் சொல்வதைக் கேளு" என்று பூங்குன்றன் பேச வர,

குழலி சத்தமாக " சித்தி, இவரை வெளியே போக சொல்லுங்க" என்று கத்த,

குழலி சித்தி " மருமகன் என்ன சொல்ல வருகிறார் ' என்று கேட்போம் என்று சொல்லி முடிக்கும் முன்,

குழலி" சித்தி, அவரை இந்த வீட்டை விட்டு போக சொல்றீங்களா, இல்லை நான் போகவா?" என்று கோபத்தில் கத்தினாள்.

இதைக் கேட்ட பூங்குன்றன்" நானே
இந்த வீட்டை விட்டு போகிறேன்.
உனக்கு உண்மை தெரிந்து நீயாக என்னை தேடி வரும் வரை நான் உன் முன்னால் வரமாட்டேன். உன் நிழலாக நான் இருப்பேன் " என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான்.

பூங்குன்றன் கடைசியில் சொன்ன உன் நிழலாக நான் இருப்பேன் என்ற வார்த்தையை யாரும் கவனிக்கவில்லை.

இந்த பிரச்சினைக்கு பிறகு
குழலிக்கு மூன்று தண்ணீர் ஊற்றியதும், குழலி சித்தி வீட்டில் இருந்து குழலி பிறந்த வீட்டுக்கு பெற்றோருடன் சென்றாள் .


மூன்று மாதங்களுக்குப் பிறகு,
தமிழக சட்டமன்ற தேர்தலில்,
முடிவுகள் வெளியானது. தென் மண்டலத்தில்
கருடப்பார்வை நாளிதழ் கணித்த வேட்பாளர்களே வெற்றி பெற்றார்கள்.

அதிலும் குறிப்பாக இராணி பாளையம் தொகுதி முதல் முறையாக ஆளும் கட்சி வேட்பாளாரே வெற்றி பெற்றார்.

கருடப் பார்வை நாளிதழின் மிக சரியான கருத்து கணிப்பால், மக்கள் மத்தியிலும் பத்திரிகை துறையிலும் மிக பிரபலமானது.

கருடப் பார்வை நாளிதழ் நிறுவனர்,
அலுவலகத்தில் ஒரு மீட்டிங்கில் வைத்து, " இந்த வெற்றிக்கு காரணம்,
பூங்குன்றனின் கணிப்பும், மாதவியின் உழைப்பும் தான் முக்கிய காரணம்" என்று சொல்லி விட்டு அவர்களை பாராட்டினார்.

பூங்குன்றன் புகழ், குழலிக்கு தெரியவர, அக்கம் பக்கம் உள்ளவர்கள், குழலியிடம் இதைப் பற்றி நக்கலாக "நல்ல பிரபலமானவனை விட்டு வந்திட்டியே ,நீ
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போய் இருந்தால், நீயும் அவரின் மனைவி என்று பிரபலமாக ஆகியிருப்ப" என்று வெறுப்பேற்றினார்கள்.

குழலி மனதில் அது கவலயாக ஆனது.
'மேலும் நானும் பிரபலமாகி, இதேபோல் அவரிடம், உன் மனைவி மிகவும் பிரபலமாகி விட்டாள், நீ அவளிடம் உண்மையாக இருந்திருந்தால் நீயும் பிரபலமாகி இருக்கலாம் என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள், பூங்குன்றனை வெறுப்பேற்ற வேண்டும்' என்று நினைத்தாள்.

இதற்கிடையில் வளவன் அலுவலகத்தில் பதிவு உயர்வு கிடைத்து , விருதுநகர் கம்பெனிக்கு மாற்றல் ஆனது. கம்பெனியில் வளவனுக்கு அங்கே ஒரு வீடும் கொடுத்தார்கள்.

அங்கே குழலி வீட்டினர் குடி போனார்கள்.

விருதுநகர் -
ஒரு கடைவீதியில் வைத்து ஒரு லோக்கல் கேபிள் டிவி நடத்திய,
ஆளும் அரசின் குறைகளை தைரியமாக சொல்ல முன் வருவார்கள் யார்? அது நீங்களா?
என்று ஒரு நிகழ்ச்சி நடந்தது.

அதில் யாரும் கலந்து கொள்ள வில்லை.

குழலி மட்டும் அம்மாவுடன் கடை வீதிக்கு வந்தவள், இதைப் பார்த்து விட்டு, தைரியமாக முன் வந்து ஆளும் கட்சியின் குறைகளை தைரியமாக சொன்னாள்.

அவள் பேசியது வைரலானது.

இதை ' வாக்காளர் முன்னேற்ற கழகத்தின் ' தலைவர் ஆதித்யனும் பார்த்து விட்டு, ' நம் கட்சிக்கு இவர் கண்டிப்பாக வேண்டும் ' என்று நினைத்து கொண்டு, தன் உறுப்பினர்களுடன் குழலி வீட்டுக்கு சென்று, குழலியை தங்கள் கட்சிக்கு வர சொல்லி கேட்க,

சுந்தரமும், வளவனும் " எங்கள் வீட்டு பெண்ணை வெளியே அனுப்ப கூட யோசிக்கும் நாங்கள், உங்கள் கட்சியில் சேர அனுமதிக்க மாட்டோம்"
என்று சொல்லி முடிக்கும் போது,

" நான் உங்கள் கட்சிக்கு, வருகிறேன்"
என்று குழலி சொல்ல, இதைக் கேட்டு
சுந்தரமும், வளவனும்" உனக்கு வெளி உலகம் பற்றி என்ன தெரியும்? " என்று கேட்க,

குழலி, ஆளுமை திறனை வளர்ப்பது எப்படி என்ற புத்தகத்தில் படித்த ஒரு கதையில்,' நம் ஆளுமை திறனை தடுக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு முதலிலேயே பேச தடை போட்டால் நாம் வெற்றி பெறலாம் என்ற கதை நினைவுக்கு வந்தது'.
உடனே, " நான் சமாளித்து கொள்கிறேன்" என்று சொல்லி விட்டு,

ஆதித்யனிடம் " நான் உங்கள் கட்சிக்கு வருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. எனக்கு பிடிக்காத எந்த விசயத்தை நீங்கள் செய்தாலும் அதை நான் தட்டிக் கேட்பேன்" என்று ஆளுமையுடன் பதில் சொன்னாள்.

ஆதித்யனும், குழலியின் ஆளுமை திறனை பார்த்து விட்டு " கண்டிப்பாக நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கலாம்.
மேலும் இந்த கட்சியின் பெயரே வாக்காளர்கள் முன்னேற்றக் கழகம் தான். அதாவது ஓட்டு போட்ட வாக்காளரும் முன்னேற வேண்டும் என்பது தான் என் கொள்கை" என்றார்.

குழலிக்கு அந்த கட்சியில் அடிப்படை உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

மூன்று நாட்கள் கழித்து, குழலி வாட்சப்புக்கு, ஒரு புதிய நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது.

அதில் வணக்கம் தோழி.
நானும் உங்கள் கட்சி உறுப்பினர் தான் என்று, வாக்காளர் முன்னேற்ற கழகத்தின் பெயர் போட்டு, அதில் அவர் பெயர் பூமிகா என்றும் மற்றும் அவர் போட்டோ இருந்ததை அனுப்பி வைத்து இருந்தார்.

குழலியும் அதைப் பார்த்து விட்டு,
பதில் சொல்ல ஆரம்பித்தாள்.

பூமிகா தினமும் அனுப்பும் தன்னம்பிக்கை ஊட்டும் மெசேஜ் பார்த்து விட்டு, குழலிக்கு பூமிகாவிடம் பேச ஆசைப் பட்டு, ஒரு நாள் அந்த நம்பருக்கு போன் செய்தாள்.

பூமிகா, குழலியின் அழைப்பை நிரகாரித்தாள். மீண்டும் மீண்டும் குழலி அழைப்பு விடுக்க, பூமிகா அதேபோல் நிரகாரித்து விட்டு, குழலிக்கு பூமிகா ஒரு மெசேஜ் அனுப்பினாள்.

அதில் தான் ஒரு வாய் பேச முடியாதவர் என்றும், நான் நினைக்கும் கருத்துக்களை உங்கள் மூலம் பேச வைக்கலாம் என்று நினைத்து தான் நான் உங்களிடம் நட்பு வைக்க ஆரம்பித்தேன்.

மேலும் நான் உங்கள் கட்சி உறுப்பினர் கிடையாது. லோக்கல் கேபிளில் உங்களின் பேச்சைக் கேட்டு, உங்கள் இரசிகை ஆனேன்.

குழலி இந்த மெசேஜை படித்து விட்டு, ஓ, நீங்கள் வாய் பேச முடியாதவர் என்று எனக்கு தெரியாது. அது தெரியாமல் நான் உங்களுக்கு போன் செய்ததற்கு மன்னிக்கவும் என்று பதில் அனுப்பினாள்.

பூமிகாவும் பரவாயில்லை என்று சொல்லி மெசேஜ் அனுப்பி வைத்தார்.

பிறகு குழலி தன் இல்லற வாழ்க்கையில் நடந்ததை பூமிகாவுக்கு சொல்ல,

பூமிகா, கண்டிப்பாக நீங்கள் பிரபலமாவீர்கள் என்று பதில் மெசேஜ் அனுப்பி வைத்தார்.

இப்படியே இவர்கள் இருவரின் நட்பு நீடித்தது.

பூமிகா, அரசியலில் ஒரு பெண் சாதிக்க வேண்டும் என்றால் நிறைய ஆண்களின், பல வகையான இடைஞ்சல்கள் இருக்கும், அதைக் கண்டு பயப்படமால் எதிர் கொள்ள வேண்டும் என்றும், எப்படி பட்ட ஆண்களிடம் எப்படி பதிலடி கொடுத்து அவனை இனி நம் வழிக்கு வராமல் இருக்க செய்யலாம் என்று,
தினமும் குழலி அரசியலில் சாதிக்க வேண்டிய அறிவுரைகளை மெசேஜ் வாயிலாக அனுப்பி வைத்தாள்.

அவளின் அறிவுரைப்படியே குழலி நடந்த கொண்டாள்.

மேலும் உள்ளாட்சி தேர்தலில் பூமிகா கொடுத்த குறிப்புகளை வைத்து குழலி பரப்பரை செய்ததால்,
வாக்காளர் முன்னேற்ற கழகம், உள்ளாட்சி தேர்தலில் நிறைய இடங்களில் வெற்றி பெற்றது.

அதனால் தான் குழலிக்கு அந்த கட்சியில் கொள்கை பரப்பு செயலாளரா
க பதவி உயர்வு கிடைத்தது.

பதவி உயர்வு கிடைத்து வீட்டுக்கு வந்தவளுக்கு பெற்றோர் பூங்குன்றனைப் பற்றி பேசியதும் கோபத்தில் தன் அறைக்குள் சென்றாள்.


இனி நிகழ் காலம்.

தொடரும்,
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top