• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
21. லீனாவின் பதிலும்,
சனாதனனின் பனிஷ்மென்ட்!


நீங்கள் வெளியூரில் இருந்து இங்கு வந்து இருப்பதாக சொன்னீர்கள். அப்படி இருக்க நீங்கள் எப்போது இங்க ஜாயின் பண்ண வசதியாக இருக்கும் என்று கேட்டான் லிபின்.

சார் என்னோட சர்டிபிகேட் எல்லாம் கொரியரில் அனுப்ப சொன்னா அப்பா அனுப்பி வைத்து விடுவார்கள்... மற்றபடி நான் நாளைக்கு வந்து ஜாயின் பண்ணனும் என்றாலும் நான் பண்ணுகிறேன் என்று சொன்னாள் லீனா.

ஓகே நாளைக்கு வந்து ஜாயின் பண்ணிக்கோங்க... என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது மெய்யழகி கொண்டு வந்து அனைவருக்கும் காபியை கொடுத்தாள்.

மறுப்பு ஏதும் சொல்லாமல் லீனாவும் எடுத்துக் குடித்து விட்டு.. அவர்களிடம் இருந்து விடை பெற்றாள்.

மெய் நாளைக்கு இந்த பெண் வந்தால் அவளுக்கான போஸ்டிங் லெட்டரை.. அவர்களுக்கு என்ன சம்பளம் என்ன என்று எல்லா டீடெயில்ஸ்யும் கன்ஃபர்மேஷன் லெட்டரில் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி விட்டு...

நீ போய் வேலையை பாரு என்று சொல்லி அனுப்பி வைத்தான் கர்ணா.

அப்போது லிபின் ஏய் கர்ணா நாங்கள் அனைவரும் அழகி என்று தானே சொல்கிறோம்.... ஆனால் நீ மட்டும் என்ன அழகியை மெய் என்று கூப்பிடுகிறாய் என்று கேட்டான்.

உண்மையில் லிபின் சொல்லும் போது தான் அதை உணர்ந்த கர்ணா... என்னமோ தெரியவில்லை லிபின்.. இதோ அவளைப் பற்றி தான் நாம் பேசிக் கொண்டு இருக்கிறோம், ஆனால் நான் சொன்ன உடனே அவள் வேலையை பார்க்க அவள் வெளியே சென்று விட்டாள் பார். நின்று நாம் என்ன பேசிக் கொள்கிறோம் என்று கேட்டு இருக்கலாம், அப்படி கேட்டு இருந்தாலும் ஏன் நீ இங்க நிற்கிறாய் என்று நாம் கேட்கப் போவதில்லை..

இருந்தும் அவ வெளியே செல்கிறா பார்த்தியா... அது தான் அவளை அழகி என்பதை விட மெய் என்று கூறுவது மிகவும் பிடித்து இருக்கிறது என்று சொன்னான் கர்ணா.

அதுவும் சரி தான் கர்ணா... நீ சொல்லும் போது எனக்கும் அப்படித் தான் தோணுது. ஆனாலும் நான் அழகி என்றே கூப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டு... சரி வா நம்ம டிசைனிங் டீம் ஆட்களை போய் பார்ப்போம் என்று கிளம்பினான் லிபின்.

எங்கே லிபின் தன்னைப் போலவே மெய் என்று கூப்பிட்டு விடுவானோ என்று ஒரு நிமிடம் எதற்காக பயப்படுகிறோம் என்று தெரியாமலேயே பயந்தவன்... அவன் அழகி என்று தான் கூப்பிடுவேன் என்று சொன்னதிலேயே நிம்மதி மூச்சு விட்டு சென்றான்.

கர்ணாவின் மெய் பொய்யாகுமா? மெய்யாகுமா ??.. பொறுத்து இருந்து பார்ப்போம்...

சனாதன் அலுவலக அறையில்...

இவள் என்ன மதியம் உணவிற்கு அனைவரும் சென்று விட்டார்கள். இவள் மட்டும் இன்னும் சிஸ்டம்லயே உட்கார்ந்து இருக்கிறாள் என்று சொல்லி கொண்டே அவளின் அறை வரைக்கும் வந்தவன்..

ஏனோ உள்ளே சென்றாலும் தன்னுடன் இயல்பாக பேசுவாளா??. இல்லை வம்பு இழுப்பாளா?? என்று யோசித்துக் கொண்டு ஒரு நொடி தயங்கி நின்றான்.

சரி எதற்கும் உள்ளே சென்று போய் பார்ப்போம் என்று கதவை பிடித்து உள்ளே தள்ள... அதே நேரம் சஞ்சனாவும் கதவை திறக்க... இருவருமே நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

சஞ்சனா கீழே கிடக்க அவள் மேலே சனாதன் விழுந்து இருந்தான்.

ஓரே நொடி தனது விழிகளுக்குள் அவளின் முகத்தை படம் பிடித்துக் கொண்டவன்.. ஐ அம் சாரி என்று சொல்லி விட்டு அவளிடம் இருந்து விலகி எழுந்து நின்றான்.

சஞ்சனாவும் இது எதிர்பார்க்காமல் நடந்த ஒரு விபத்து என்று தெரிந்ததால்.. மேற்கொண்டு அது பற்றி எதுவும் பேசாமல்.. வாங்க சார் என்ன விஷயம் என்று அங்கு எதுவும் நடக்காதது போல் இயல்பாக பேசினாள்.

காலையில் நான் வந்த பொழுது உங்கள் அறையில் நீங்கள் இல்லை. அதனால் தான் நான் வந்து என் வேலையை பார்த்தேன். மன்னிக்கவும் வேலை மும்மரத்தில் நீங்கள் மறுபடியும் வந்ததை கவனிக்காமல் விட்டு விட்டேன் என்று இயல்பாக மிகவும் அமைதியாக பணிவோடு பேசினாள்.

அவள் பேச பேச அவள் மனதிற்குள் என்ன நினைக்கிறாள் என்று ஏனோ தனக்குள்ளாகவே கற்பனை பண்ணி பார்த்தவன்... இவள் பேசுவதற்கு நேர் எதிர் மாறாக எதிர் கவுண்டர் கொடுத்துக் கொண்டே இருந்தது அவன் மனது..

ஆனால் அவளோ மிகவும் அமைதியாக எதிரில் அவன் பதிலுக்காக காத்திருப்பது போல் அவன் எதிரில் நின்று கொண்டு இருந்தாள்.

அதற்கு மேல் அவனால் மனம் சொல்லுற மாதிரி அவளை நினைக்கவும் முடியாமல் ... அவள் எதிரில் அமைதியாக நிற்பதை பார்த்து பேசாமல் இருக்கவும் கூடாது என்பதற்காக...

ம்ம்... ஆமாம் நான் அக்கௌன்ட் செக்ஷனுக்கு போயிட்டு வந்து பார்க்கும் போது... நீ என் அறையில் இருந்து வெளியில் சென்றாய் பார்த்தேன்.

சரி வேலையை பார்க்கட்டும் மதிய நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் விட்டு விட்டேன். ஆமாம் அனைவரும் சாப்பிட சென்று விட்டார்கள் நீ ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்கிறாய் என்று கேட்டான்.

அப்படி எல்லாம் எதுவும் இல்லை எஸ் டி சார், இதோ கிளம்பிவிட்டேன் என்று தன்னுடைய லஞ்ச் பேக்கை எடுத்துக்கொண்டு ரெடியாக நின்றாள் சஞ்சனா.

ஓஓ.. ஓகே.. போய் சாப்பிட்டு வந்து வேலையை பாருங்கள் என்று சொல்லி விட்டு அவனும் அமைதியாக வெளியில் சென்று விட்டான் சனாதன்.

வேகமாக வெளியில் சென்ற சனாதன் தன் அறைக்கு சென்று... எம்மாடி... யம்மா.. என்னம்மா நடிக்கிறா.

ஏதோ அடக்க ஒடுக்கமான நல்ல பொண்ணு மாதிரி.. என்ன ஒரு சீனு... இப்படி ஒரு ஆஸ்கார் அவார்டு நடிகையை நான் எங்கேயும் பார்த்ததே இல்லை. நேற்று போனில் பேசியது என்ன .. இன்று நேரில் பேசியது எப்படி... அது மட்டுமா காலையில் அறை வாசலில் நின்று கொண்டு எப்படி எல்லாம் பேசினாள் ... நான் அனுமதி தரும் வரை அவளுக்கு நிற்க பொறுமை இல்லாமல் உள்ளே வந்து என்ன பேச்சு பேசி விட்டு சென்றாள்.

இப்போ அப்படியே எப்படி எல்லாம் பம்மிக் கொண்டு பேசுகிறாள். எல்லாம் சுத்த நடிப்பு என்று மறுபடியும் சஞ்சனாவை.. நெருப்பில்லாமல் வாணலி இல்லாமல் .. எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொண்டு இருந்தான்.

சரியாக அவனுக்கு சாப்பாடு வீட்டில் இருந்து வேலை ஆள் ஒருவனிடம் சரோஜா கொடுத்து விட... சாப்பாட்டை எடுத்து வையுங்கள் இதோ வந்து விடுகிறேன் என்று வெளியில் வந்து பார்த்தான்.

ஸ்டாஃப் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் டைனிங் ஹாலில்... பலர் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்று கொண்டு இருக்க இவள் மட்டும் தனியாக அமர்ந்து ஒரு இடத்தில்....

தன் தோழிகளோடு வீடியோ கான்பரென்சில் இணைந்து... பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் சஞ்சனா.

அவள் சாப்பிடுகிறாள் என்பதை பார்த்து விட்டு, சரி சென்று நாமும் சாப்பிடுவோம் என்று திரும்ப நினைக்கையில்...

சற்று முன் நடந்த நிகழ்ச்சிகளை தன் தோழர்களிடம் சொல்லி கொண்டு இருந்தாள் சஞ்சனா.

காலையில் நான் வரும் போது என்னை அவன் சிக்னலில் வைத்து பார்த்து விட்டான். அப்பவே அவன் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே...

அட காலக்கிரகமே ஆபிஸ் போவதற்கு முன்னேயே இவளை பார்த்து விட்டாச்சா என்று பாவமாக இருந்தது அவன் முகம்... நானும் சரி பொழச்சு போகட்டும் பிள்ளை என்று அமைதியாக சிறிது நேரம் சென்று ஆபீஸ் வந்தா...

தல என்னை பார்ப்பதற்கு பயந்து கொண்டு... உள்ளுக்குள்ள இருக்கிற பர்சனல் ரூம்ல போய் உட்கார்ந்து விட்டு, நான் வெளியில் வந்ததும் வந்து மறுபடியும் என்னை சிசிடிவியில் பார்த்து விட்டு, நான் ஒழுங்காக வேலை செய்யவும் இப்போது தான் வந்து என்னை விசாரிப்பது போல் விசாரித்து விட்டு, சாப்பிட சொல்லி விட்டு சென்று இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டு இருந்தாள் சஞ்சனா.

அது மட்டும் இல்லாமல் அவனிடம் நான் ஏதாவது துடுக்கத்தனமாக பேசுவேன் என்று எண்ணி என்னிடம் பேச பயந்தவன்.. நான் மிகவும் அமைதியாக பேச பேச அவன் மூஞ்சியை பார்க்கணுமே இஞ்சி தின்ன குரங்கு மாதிரி... எனக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்றே தெரியாமல் யோசித்து ஏதேதோ உளறி விட்டு சென்றான் என்று சொல்லி கிண்டல் அடித்தாள்.

என்ன நான் பேசாமல் பேசிக்கொண்டே இருக்கிறேன்.. நீங்கள் மூவரும் அமைதியாகவே இருக்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே.. தனக்கு அருகில் ஸ்டாண்ட் போல் நிற்க வைத்து இருந்த தன்னுடைய மொபைல் போனை பார்த்தால்... அங்கே அந்த இரண்டு தடிமாடுகளும் போனை கட் செய்து விட்டது அப்போது தான் தெரிந்தது.

எங்கே போச்சுங்க இந்த மூணு தடிமாடுகளும்.. மிதுனா, ரிஷ்வந்த், புவனா மூன்று பேரையும் திட்டிக்கொண்டே சாப்பிட்டு முடித்து .. திரும்பும் போது தான் கவனித்தாள் பின்னாடி எல்லையில் இருக்கும் அய்யனார் கணக்காக கோபத்தில் நின்று இருந்தான் சனாதன்.

இவ்வளவு நேரம் துடுக்காக பேசிக்கொண்டு இருந்தவள், அப்படியே அது இவள் தானா என்று அனைவரும் ஆச்சர்யப்படுவது போல் மிகவும் அமைதியாக .. தன்னுடைய டிபன் பாக்ஸ் அனைத்தையும் தன்னுடைய லஞ்ச் பேக்கில் எடுத்து வைத்து விட்டு.. சனாதன் நிற்பதையே தெரியாது போல்.. அவனை கண்டுகொள்ளாமல் எழுந்து சென்றாள்.

அவள் தன்னைக் கடந்து செல்ல.. ஒரே நிமிடத்தில் அவளை அப்படியே தன் கைகளில் தூக்கியவன்..
சற்றும் யோசிக்காமல் அப்படியே கீழே போட்டு விட்டு சென்றான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை தூக்கி கீழே போட்டு விட்டு செல்ல... சஞ்சனாவிற்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கே முழுதாக இரண்டு நிமிடங்கள் ஆனது.

பிறகு தன்னை சுதாரித்து எழுந்தவள்.. அவன் தூக்கி கீழே போட்டதில் .. சஞ்சனா கையில் இருந்த லஞ்ச் பேக் கீழே விழுந்து சிதறி கிடக்க அதில் இருந்த வாட்டர் பாட்டில் தண்ணீரும் சிதறி கிடந்தது.

அதை கவனிக்காமல் எழுந்தவள் மறுபடியும் வழுக்கி விழுந்தாள் சஞ்சனா.

இவன் சாப்பிடுவதற்கு தாமதமாக வந்ததால் அங்கு யாரும் இல்லாமல்... விழுந்த சஞ்சனாவை தூக்கி விடுவதற்கு கூட ஆள் இல்லாமல் போனது.

ஆனாலும் அந்த வேலையிலும் சஞ்சனா நல்ல வேலை யாரும் இல்லை..‌ இல்லை என்றால் கீழே விழுந்தது அனைவரும் பார்த்தால் கிண்டல் செய்து இருப்பார்கள் என்று நினைத்தவள்.. தன்னை தூக்கி கீழே போட்டவனை நினைத்து இப்போது கோபத்தில்... வேகமாக எழுந்தால் ஆனால் இந்த முறை நிதானத்தோடு எழுந்து..

கீழ விழுந்ததில் இடுப்பில் வலி கொடுக்க.. முன்னும் பின்னுமாக சிறிதாக இடுப்பை அசைத்து பெரிதாக வலி ஒன்றும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவள்...

சனாதன் அறைக்கு வேகமாக சென்றாள்...

அங்கே அவன் நிதானமாக இலையில்.. சரோஜா அத்தையின் கைவண்ணத்தில் அழகான மதிய உணவை இளம் வாழை இலையில் பரிமாற... அழகாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்...

வேகமாக உள்ளே வந்தவள் அவன் சாப்பிடுவதை பார்த்து விட்டு...
என்ன செய்யப் போகிறாளோ....???

மாலையில் வீடு திரும்பும் பொழுது...
கவிப்பிரியா ருத்ரன் சந்திப்பு....

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top