• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 17, 2025
Messages
74
பூங்குன்றன், நிறைய புதிய கடை திறப்பு விழாவிற்கு வேண்டிய விளம்பரங்களை தயார் செய்து , அதை நிறுவனருக்கு மெயிலில் அனுப்பி விட்டு , அவனும் விடியற்காலையில் தான்,வேறு ஒரு இடத்தில் போய் தூங்க ஆரம்பித்தான்.

காலையில் எழுந்ததும், அங்கே உள்ள பாத்ரூம் சென்று பிரஷ் அப் ஆகி பூங்குன்றன் வந்தான்.

நிறுவனர் அறைக்கு சென்றான்.
அவரும் அதிகாலையிலேயே வீட்டுக்கு போய், குளித்து விட்டு வந்திருந்தார். " உங்களுக்கு மெயிலில் புதிய கடை விளம்பரம் பற்றிய விவரங்களை அனுப்பி விட்டேன் " என்றான்.

நிறுவனரும் " ம்ம், நான் செக் செய்கிறேன். அப்படியே உங்களுக்கு ஒரு சின்ன வேலை "என்றார்.

பூங்குன்றன் " சொல்லுங்க சார் " என்றான்.

" ஒன்றுமில்லை, இன்று இராணி பாளையத்தில் பத்திரிகை நிர்வாகம் சார்ந்த மீட்டிங் ஒன்று நடக்கிறது. அதில் அனைத்து பத்திரிகை அலுவலகத்தில் இருந்து கண்டிப்பாக ஒருவர் கலந்து கொள்ள வேண்டும். என்னால் கலந்து கொள்ள முடியாது.
என் சார்பாக நீங்கள் போய் கலந்து கொள்ளுங்கள் " என்றார் நிறுவனர்.

பூங்குன்றன் ' மனைவி, தனக்கு இன்று முதல் தண்ணீர் ஊற்ற போவதை சொன்னதை நினைத்து பார்த்து விட்டு ' ,

"எத்தனை மணிக்கு, மீட்டிங்?" என்று கேட்க,

நிறுவனர் " மதியம் இரண்டு மணிக்கு தான்" என்றார். பூங்குன்றன் " மனைவிக்கு அம்மம் இறங்கி விட்டதால், முதல் தண்ணீர் ஊற்ற போவதை சொன்னான்" நிறுவனர் "
ஓ அப்படியா.! " என்று சொல்லி விட்டு,
அப்ப நீங்க அங்க போங்க, நான் மாதவியை அந்த மீட்டிங்கில் கலந்து கொள்ள சொல்கிறேன் " என்று சொல்லி விட்டு, " அப்ப நீங்க வேறு ஒரு சின்ன உதவி செய்ய வேண்டும் "என்று நிறுவனர் கேட்க,

பூங்குன்றன் " ம்ம், சொல்லுங்க சார் "
என்றான்.

நிறுவனர் " நான் முக்கிய உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு வெளியூர் செல்கிறேன். அதனால் காலையில் ஒன்பது மணிக்கு , நம் அலுவலகத்திற்கு, நமது நாளிதழில் புதிய கம்பெனி விளம்பரம் செய்ய,
அதன் நிர்வாகி , இங்கே இன்று வந்தாலும் வரலாம், இல்லை நாளைக்கு கூட வரலாம். அதனால் நீங்கள் அவர் வரும் வரை இருந்து விட்டு, பிறகு உங்கள் மனைவியை பார்க்க செல்லுங்கள் " என்று சொல்லி விட்டு,

" காலையில் ஒன்பது மணியிலிருந்து பத்து மணி வரை பாருங்கள். அவர் வரவில்லை என்றால் எனக்கு போன் செய்ய வேண்டாம், நீங்கள் கிளம்பி போங்க " என்று சொல்ல,

பூங்குன்றன் " ம்ம் சரி சார் " என்று சொல்லி விட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்து, அலுவலகத்துக்கு வெளியே இருக்கும் டீ கடையை நோக்கி சென்றான்.

அங்கே ஒரு காஃபி சொல்லி விட்டு,
மனைவிக்கு போன் செய்தான்.
அழைப்பை ஏற்ற குழலி" எப்ப வேலை முடிந்தது, இரவு நீங்க எனக்கு ஒரு போன் கூட போடவில்லையே " என்று கேட்க,

பூங்குன்றன் , குழலியிடமிருந்து வந்த மூன்று அழைப்பில் பேசியதை மறந்து விட்டு, வேறு யாரும் போன் செய்யாததால், " நான் இரவு முழுவதும் போனைத் தொடவே இல்லை " என்று சொல்ல ,

அதைக் கேட்டு குழலி,' எப்போதும் பொய் சொல்ல மாட்டார், அதுவும் என்னிடம் பேசியதை கூட மறைத்து, போனை தொடவில்லை என்று பொய் சொல்கிறாரே' என்று மனதில் நினைத்து கொண்டு,
"சரி கிளம்பிட்டீங்களா?" என்று கேட்க,

பூங்குன்றன் " இல்லை அலுவலகத்தில் தான் இருக்கிறேன்.
இங்கே இருந்து ஒரு பத்து மணிக்கு கிளம்பி அங்கே வந்து விடுவேன் " என்றான். குழலியும்" சரி மெதுவா பார்த்து வாங்க " என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தாள்.

பூங்குன்றன்,
கருடப்பார்வை நாளிதழ் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு வரைக்கும் காத்திருந்தான். நிறுவனர் சொன்ன கம்பெனியில் இருந்து யாரும் வரவில்லை. மேலும் ஒரு பத்து நிமிடம் காத்திருந்து விட்டு, யாரும் வராததால், பூங்குன்றன் இராணி பாளையம் செல்ல தயாரானான்.

இராணி பாளையம் குழலி சித்தி வீடு,
குழலிக்கு முதல் தண்ணீர் ஊற்ற, குடத்தில் தண்ணீர் பிடித்து வெயிலில் வைத்து விட்டார் குழலி சித்தி.
அப்படியே அந்த தண்ணீரில் வேப்பிலை, மஞ்சள் தூள் கலந்து வைத்தாள்.

குழலி அம்மா, அப்பா, அங்கே மகளுக்கு அம்மா இறங்கிய பின், முதல் தண்ணீர் ஊற்றுவதற்காக காலையில வந்தார்கள். வளவன் மட்டும் பிறகு வருவான் என்று சுந்தரம் குழலியிடம் சொன்னார்.

குழலிக்கு அம்மம் இறங்கியதால்,
அம்மனை நல்ல படியாக வழியனுப்பி வைக்க வேண்டும் என்று குழலி சித்தி,
அம்மனுக்கு உகந்த கூழ், பாணக்கரம்
மஞ்சப்பால், எல்லாம் தயார் செய்து வைத்தார். குழலி சித்தப்பாவுக்கு அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுவதால், அவரால் அன்று வீட்டில் இருக்க முடியாத சூழ்நிலை.

பூங்குன்றன், இருசக்கர வாகனத்தில் இராணி பாளையம் நோக்கி வரும் போது, இராணி பாளையம் ஊர் எல்லை அருகே, ஒரு வேன் விபத்துக்குள்ளானது. வேன் டயர் வெடித்து, வேன் தாறுமாறாக ஓடியதில் ஒரு மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டிருந்தது.

பூங்குன்றன், அதைப் பார்த்ததும், உடனே தன் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி போய், வேனில் உள்ளவர்களை காப்பாற்ற சென்றான்.

வேனில் பருத்தி ஆலைக்கு வேலைக்கு போய் வந்த பெண்கள் மற்றும் டிரைவர் சேர்த்து மொத்தம் 10 பேர், பயங்கர அடிபட்டு இரத்த வெள்ளத்தில் இருந்தார்கள்.

அதைப் பார்த்த பூங்குன்றன் உடனே ஆம்புலன்சுக்கு போன் செய்து விட்டு, அவசர உதவி காவல் துறைக்கும் போன் செய்து தகவல் சொன்னான்.

அதற்குள் சாலையில் சென்ற மற்ற வாகனத்தில் உள்ளவர்களும், விபத்தில் சிக்கியவர்களை பூங்குன்றனோடு சேர்ந்து காப்பாற்ற உதவி செய்தார்கள்.

இரண்டு ஆம்புலன்ஸ் வந்தது.,
இரத்த வெள்ளத்தில் இருந்தவர்களை பூங்குன்றன் மற்றவர்களோடு சேர்ந்து ஆம்புலன்சில் ஏற்றினான்.

கடைசியில் டிரைவரை ஆம்புலன்சில்
ஏற்றும் போது "டிரைவர் இறந்து விட்டார்"என்று ஆம்புலன்சில் வந்த நர்ஸ் சொன்னார்.

அதைக் கேட்டு பூங்குன்றன் மனம் பதறியது." அய்யோ, கொஞ்சம் முன்னாடி நீங்கள் வந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாமோ?"என்று வருத்தத்துடன் கேட்க,

அதற்கு நர்ஸ், " நாங்களும் எங்களுக்கு தகவல் கிடைத்ததும் வேகமாக தான் வந்தோம்" என்று சொல்லி விட்டு, டிரைவர் சடலத்தை, வேறு ஒரு ஆம்புலன்சில் ஏற்றி விடுங்கள், நாங்க அடிபட்ட மற்றவர்களுக்கு முதல் உதவி செய்ய சீக்கிரமாக மருத்துவமனை கொண்டு செல்ல வேண்டும் " என்று டிரைவர் சடலத்தை கீழே இறக்கி வைத்து விட்டு, ஆம்புலன்சில் அடிபட்ட மற்றவர்களுடன் மருத்துவமனை நோக்கி சென்றார்கள்.

காவல் துறை ஜீப் ஒன்று அங்கே வந்தது. அதில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர்,
பூங்குன்றனிடம் தகவல் கேட்டு விட்டு, சடலத்தை ஏற்றும் ஆம்புலன்ஸ் வந்ததும் அதில் டிரைவர் சடலத்தை ஏற்றி விட்டு, அங்கிருந்து காவல் துறை ஜீப் சென்றது.

இதெல்லாம் நடந்து முடிய இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டதால், பூங்குன்றன் மனைவியை பார்க்க செல்ல தடையாகி விட்டது. 'மேலும், டிரைவர் சடலத்தை தொட்டதால், குளிக்காமல் குழலியை பார்க்க வீட்டுக்கு செல்ல முடியாது என்று நினைத்து பார்த்து விட்டு, எங்கே குளிக்கலாம்?'என்று யோசித்து பார்த்த போது அவன் நினைவுக்கு வந்தது ஒரு லாட்ஜ் தான்.

உடனே அந்த லாட்ஜுக்கு சென்று,
அங்கே உள்ள ரிசப்ஷனிஸ்டிடம் தன் நிலையை சொல்ல,

அதற்கு அவர் " சார், இங்கே அனைத்து ரூம்களும் ஃபுல்லாகி விட்டது.எந்த அறையும் காலியாக இல்லை. மேலும் உங்கள் சூழ்நிலை புரிந்து உங்களை பாத்ரூமில் குளிக்க நான் அனுமதிக்க முடியாததற்கு மன்னிக்கவும் " என்றார்.

பூங்குன்றன், மிகுந்த ஏமாற்றத்துடன்" பரவாயில்லை " என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பும் போது,

" சீனியர், சீனியர் " என்ற குரல் கேட்டு திரும்ப, அங்கே மாதவி நிற்க,

மாதவி, பூங்குன்றன் அருகில் வந்து" என்ன சீனியர், இந்த பக்கம்?" என்று கேட்க, அதற்கு பூங்குன்றன்," வழியில் நடந்த விபத்து மற்றும் டிரைவர் சடலத்தை தொட்டதால் குளிக்காமல் வீட்டுக்கு போக முடியாது" என்றதையும் சொல்லி விட்டு " அதான் இங்கே குளிச்சிட்டு போகலாம் என்று வந்தேன்" என்று சொல்லி விட்டு, " ஆமா நீங்க எங்க இங்கே?" என்று கேட்க,

அதற்கு மாதவி " நான் இங்கே ரூம் எடுத்து இருக்கிறேன். நீங்கள் முதலில் என் ரூமுக்கு வந்து குளிங்க"என்று சொல்லி விட்டு, ரிசப்ஷனிஸ்டிடம் மாதவி சொல்ல,
ரிசப்னிஷ்ட் " நீங்கள் ரூம் எடுத்து இருப்பதால், இவர் உங்கள் விருந்தினர் என்ற அடிப்படையில், இவர் இங்கு குளிக்க பிரச்சினை இல்லை" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

பூங்குன்றன் மாதவியுடன்,
சென்றதை, அங்கே தன் வெளிநாட்டு நண்பனை பார்க்க வந்த வளவன் பார்த்து விட்டு மனதில் ஒரு சந்தேகம் வர, எதற்கும் ஒரு போட்டோ எடுப்போம் என்று மொபைலில் ஒரு போட்டோ எடுத்தான்.

பூங்குன்றன் குளிக்க சென்றதும், மாதவி வெளியே வந்து அருகில் உள்ள ஜவுளிக்கடையில் ,
பூங்குன்றன் சட்டை, விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றியதால் ஏற்பட்ட இரத்த கறையுடன் இருந்ததால், பூங்குன்றனுக்கு மாற்று சட்டைக்கா ஒரு சட்டை எடுக்க சென்றாள்.


பூங்குன்றன் குளித்து விட்டு வரும் முன் மாதவி சட்டை வாங்கி வந்து விட்டாள்.

பூங்குன்றனிடம் " இந்தாங்க சீனியர்" என்று புதுச்சட்டையை கொடுக்க,

"எதற்கு இதெல்லாம்?" என்று சொல்லி விட்டு, " எனக்கு மற்றவர்கள் உடை வாங்கி கொடுப்பது பிடிக்காது" என்று சொல்ல,


மாதவி" நான் உங்களை என் அண்ணனாக நினைத்து வாங்கி வந்தேன் " என்று சொல்ல,

பூங்குன்றன் அந்த பாச வார்த்தையை கேட்டு உணர்ச்சி மிகுதியாக, " மன்னிக்கவும், என் கொள்கையை உங்களிடம் இப்படி காட்டியிருக்ககூடாது " என்று சொல்லி விட்டு, " ஆமாம் நீங்கள் எங்க இஙக?, நிறுவனர் உங்களை மீட்டிங் போக சொன்னேன் என்று சொன்னாரே.!" என்று ஆச்சரியமாக கேட்க,

மாதவி" மீட்டிங் டைம் மாறி விட்டது.அது மாலையில் தான் " என்று சொல்லி விட்டு," அப்படியே நான் உங்களிடம் இன்னொன்னும் சொல்ல வேண்டும்.!" என்று சொல்ல,

பூங்குன்றன், மாதவி எடுத்த, அவனுக்கு பிடிக்காத கலர் சட்டையை,
மரியாதை நிமித்தமாக போட்டுக் கொண்டு விட்டு,

" என்ன இன்னொரு விஷயம்?" என்று கேட்க,

மாதவி " எனக்கு இந்த ஊரில் எந்த உறவும் இல்லை. நானும் என் கணவரும் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு பூர்வீகம் பக்கத்தில் உள்ள கேரளா தான். என் கணவர் அரபு நாட்டில் வேலை செய்கிறார். நான் தனியாக தான் இருக்கிறேன். அதனால் தான் நான் இங்கே கருத்து கணிப்பு நடத்த வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே இங்கே ரூம் எடுத்து விட்டேன்.மேலும் என்னைப் பற்றி எல்லா தகவல்களையும் என் கணவருக்கு வாட்சப்பில் அப்டேட்ஸ் செய்து விடுவேன் " என்று சொல்லி விட்டு,

"இப்போதைக்கு நான் ஒரு அநாதை "என்று சொல்லி விட்டு லேசாக கண் கலங்கினாள்.

அதைக்
கேட்ட பூங்குன்றன் , மாதவியின் அருகில் வராமல்" நீங்கள் ஏன் அநாதை, உங்களுக்கு இந்த அண்ணன் இருக்கிறேன் " என்று ஆறுதல் சொன்னான்.

தொடரும்,
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top