- Thread Author
- #1
20. அலுவலகத்தில் சஞ்சனாவின் வேலையும்...
கர்ணா அலுவலகத்தில் லீனாவின் வேலை...
சனாதன் அலுவலக அறையில்...
நான் நெடுமரமா.. நான் நெடுமரம் என்றால் ... நீ... நானே உன்னை நிமிர்ந்து உன் முகத்தை பார்த்து பேசுகிறேன். என் முகத்திற்கு நேராக இருக்கிறாய் நீ மட்டும் என்ன டி நெட்ட கொக்கு...
ஆண்களில் நான் உயரம் என்றால்... பெண்களில் நீ உயரத்திற்கு உயரமடி நெட்ட கொக்கு என்னை சொல்கிறாய்... அப்புறம் என்ன சிடு மூஞ்சி சித்தப்பாவா...
ஆமா மகாராணி பெரிய மோனாலிசா ஓவியம்... மூஞ்சியும் மொகரையும் பாரு... யப்ப பாரு யார் கூடயாவது வம்பு இழுத்துக்கிட்டு.. யார் கூடவாவது போட்டி போட்டுக்கிட்டே இருக்கிற சண்டி ராணி நீ... என்னை சிடு மூஞ்சி சித்தப்பா சொல்றியா... என்று இவ்வளவு நேரமும் அங்கு நடந்த உரையாடல்களை கேட்டுக் கொண்டு இருந்த சனாதன் எண்ணெய் இல்லாமலேயே சஞ்சனாவை போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு இருந்தான்.
சரியாக அந்த நேரம் ... தன் அறையில் இருந்து சிசிடிவி கேமரா மூலமாக அவளின் வருகையை பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவளும் சரியாக தன்னுடைய புல்லட்டில் செம்ம கெத்தாக மெயின் கேட்டில் உள்ளே வந்தாள்.
அவளும் தன் இரும்பு புரவியை நிறுத்தி விட்டு, தன்னுடைய ஹெல்மெட்டை வண்டியில் வைத்து லாக் செய்து விட்டு,
ஏற்கனவே இந்த பிரான்சுக்கு ஒன்று இரண்டு முறை வந்து இருந்ததால்.. ஈசியாக ரிசப்ஷனில் சொல்லி விட்டு சனாதன் அறைக்கு முன்பு போய் நின்றாள் சஞ்சனா.
இதுவரை இயல்பாகவும் கேஷுவலாகவும் நடந்து வந்தவள்... அவன் அறை வாயிலில் ஒரு நொடி நின்றவள்... இந்த எரும மாடு எப்படியும் சிசிடிவி கேமராவில் நம்மை பார்த்துக் கொண்டு தான் இருக்கும்.. சரி எதற்கும் கதவை தட்டிவிட்டே செல்வோம்... இல்லை அதற்கும் அந்த சுடுதண்ணீர்... தன்னை தான் குறை சொல்வான் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு... வேகமாக கதவை தட்டி விட்டு, அவன் பர்மிஷன் தருவதற்காக எல்லாம் என்னால் வெயிட் பண்ண முடியாது என்று உள்ளே சென்றாள்.
உள்ளே சென்று பார்க்க அங்கே யாருமே இல்லை. அட கடவுளே இந்த சுடு தண்ணீர் எங்க போச்சு.. நமக்கு முன்னாடியே வந்தானே... இன்னும் ஆபீஸ்க்கு வராமல் எங்கே கடலை போடுகிறான்... வந்த இரண்டு மூன்று நாட்களுக்குள் யார் இவனுக்கு மாட்டி இருப்பார்கள் என்று குழம்பிக் கொண்டே.. சரி அவன் இல்லை என்றால் என்ன... நம்ம போய் நம்ம வேலையை பார்ப்போம் என்று சொல்லி கொண்டே.... ரிசப்ஷன் சென்று கேட்டு விட்டு தன்னுடைய அறை எது என்று தெரிந்து கொண்டு அந்த அறைக்கு சென்றாள் சஞ்சனா.
அங்கே ஏற்கனவே வேலை செய்து கொண்டு இருந்த டிசைனர்ஸ் எல்லாம் அவள் உள்ளே சென்றதும் வெல்கம் சஞ்சனா என்று அவளுக்கு வெல்கம் சொல்லி வரவேற்றனர்.
ஹாய் பிரண்ட்ஸ்.. ஃபர்ஸ்ட் நான் சாரி சொல்லிக் கொள்கிறேன் முதல் நாளே கொஞ்சம் லேட் ஆயிடுச்சு... என்று சொல்லிக்கொண்டு .. அங்கு இருப்பவர்கள் அனைவரிடமும் தன் பெயர் சஞ்சனா.. என்னை பற்றி உங்களுக்கு ஏற்கனவே விநாயகம் அங்கிள் மூலம் தெரிந்து இருக்கும். ஆனால் எனக்கு உங்கள் யாரையும் தெரியாது.
நான் இங்கு வந்து நேரில் பார்த்துக் கொள்கிறேன் என்று ஏற்கனவே அங்கிள் கிட்ட சொல்லி விட்டேன். கோவிச்சுக்காம இப்போ உங்களுடைய பெயர்களை மட்டும் ஒரு முறை சொல்லுங்கள் என்று சொன்னாள்.
ஒவ்வொருவரும் தங்களுடைய பெயர்களை சொல்ல அவரவருக்கு ஏற்றார் போல் நிக் நேம் வைத்து அதை சொல்லிக் கொண்டே வந்தவள்.. மன்னிச்சுக்கோங்க நிக் நேம் இருந்தா சீக்கிரமா நமக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரும். அதே சமயம் வேலை செய்யும் போது ஜாலியாவும் இருக்கும் என்று சொல்லிக்கொண்டே... அதே போல் தனக்கு நீங்கள் எந்த பெயர் வைத்தாலும் ஓகே என்று சொல்லி விட்டு, இப்பொழுது நாம் டிசைனிங் ஸ்டார்ட் பண்ணலாம் என்று வேலையில் தன்னை புகுத்திக் கொண்டாள்.
மணி 12 கடந்து இருக்க... அப்போது அங்கு வந்த பியூன்.. அங்கு இருந்தவர்களுக்கு எல்லாம் குடிப்பதற்கு வெயிலுக்கு இதமாக தர்பூசணி சாறு கொடுத்து விட்டு சென்றான்.
அனைவரும் ஜூஸ் குடித்துக் கொண்டு இருக்க... 12 மணிக்கு ஜூஸ் குடிக்கிறீங்க.. லஞ்ச் எப்ப சாப்பிட போவீங்க என்று கேட்டாள் சஞ்சனா.
ரெண்டு மணிக்கு போவோம் என்று ஒரு பெண் கூறினாள்.
ம்ம் ஓகே.. என்று சொல்லி விட்டு அமைதியாக தன் வேலையிலே கவனமாக இருந்து மதியத்திற்குள்... முதல் டிசைனிங் வந்து திருமணம் சார்ந்த உடைகளை செய்து கொண்டு இருந்தார்கள்.
அதில் மெஹந்தி பங்க்ஷனில் போட்டுக் கொள்வதற்கான உடையை தான் டிசைன் பண்ணி கொண்டு இருந்தாள்.
அவருடைய டீம் மெம்பர்ஸ் அனைவரும் சேர்ந்து தங்களுக்கு தெரிந்த கற்பனையில் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தகுந்தாற் போல் மாடல்களை வரைந்து கொடுக்க... ஒவ்வொரு டிசைன்களையும் கரெக்ஷன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
மதியம் இரண்டு மணியை நெருங்க.. அனைவருமே தங்கள் வேலைகளை அப்படியே வைத்து விட்டு லஞ்சுக்கு செல்வதற்காக எழுந்து சென்றார்கள்
அவளிடமும் சொல்ல அவள் தனக்கு தோன்றிய கற்பனைகளை அப்படியே சிஸ்டமில் வரைந்து கொண்டு இருந்தாள்.
காலையில் தனது அறைக்கு சஞ்சனா வரும் பொழுது.. அவளைத் தவிர்ப்பதற்காக தான் அறைக்குள் இருக்கும் மற்றொரு பர்சனல் அறைக்குள் சென்று கொண்டான் சனாதன்.
காலையில் இருந்து அவள் பேசியது நினைத்து கோபத்திலா இல்லை, வெறுப்பினாலா என்று தெரியாமல் உள்ளே சென்றவன்.. அவள் அறையை விட்டு வெளியே சென்றதும் தான் வந்தான் வெளியில். ஆனால் வந்தது முதல் அவளுடைய வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு ஏனோ அவள் மீது ஒரு மரியாதை வந்தது.
ஆனால் இந்த மரியாதை இந்த இதமான சூழ்நிலை இன்று முதல் நாள் அப்படியே இருக்குமா?.. என்று அவனுக்கு மட்டும் இல்லை யாருக்கும் தெரியாது.
கவிப்பிரியா....
பாரில்....
உள்ளே சென்றவள்... தன்னுடைய பர்சனல் அறைக்குள் சென்று அங்கு இருந்த பீன் பேக்கில் கோபமாக போய் விழுக... அது அப்படியே அவளை தனக்குள் வாங்கிக் கொண்டது.
அரை மணி நேரம் அதிலேயே கண்மூடி அமர்ந்து இருந்தவள்... பிறகு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கண்களை திறக்க அவள் எண்ணங்களில் காலையில் எவ்வளவு பிரச்சனைகள் நடந்து இருந்தாலும் தான் பார்த்த அவன் யார்... அவன் கடைசியாக தன்னை பார்த்த பார்வையில் இருந்தது என்ன?..
ஏனோ அவன் தன்னை தவறாக நினைப்பது.. மனதிற்குள் ஏதோ ஒன்று செய்ய... சிறிதும் நிதானம் இல்லாமல் வேகமாக தன்னுடைய கபோடை திறந்தவள் அதில் இருந்து ரெட் ஒயின் எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.
இவள் ருத்ரனை நினைத்து போதையில் மிதக்க...
ருத்ரனோ தன் அலுவலகத்தில் புவனாவோடு இணைந்து தங்களுடைய ப்ராஜெக்ட்டுக்காக வேலை செய்து கொண்டு இருந்தான்.
கர்ணா அலுவலகத்தில்...
இன்டர்வியூக்கு வந்த ஆட்கள் அனைவரையும் ஏதோ ஒரு காரணத்தினால் விருப்பம் இல்லாமல் போக அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு, நாளைக்கு மறுபடியும் இன்டர்வியூக்கு கால் ரெபர் பண்ணுங்க என்று சொல்லி அழகியை அவளுடைய வேலையை பார்க்க சொல்ல ... சரியாக அந்த நேரம் மே ஐ கம் இன் சார் என்று கேட்டுக் கொண்டு ஒரு பெண் உள்ளே வந்தாள்.
வந்த பெண்ணை பார்த்து வாங்க... என்று அழைத்து என்ன விஷயம் என்று கேட்டான் கர்ணா.
சார் தப்பா எடுத்துக் கொள்ளாதீர்கள்... என் பெயர் லீனா. எனது சொந்த ஊர் திருச்சி. திடீரென்று ஒரு பர்சனல் பிராப்ளம் அது தான் சென்னைக்கு வந்தோம். வந்த இடத்தில் இங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை அதற்காக வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரங்களை பார்த்துக் கொண்டு இருக்கும் போது தான் இன்று இங்கு இன்டர்வியூ நடப்பது தெரிய வந்தது. அதுவும் லாஸ்ட் மினிட்ல தான் தெரிய வந்தது அது தான் அவசரமாக வந்தேன்.
சரி சார் என்னோட சர்டிபிகேட் எல்லாமே திருச்சியில் தான் இருக்கிறது. ஆனால் என்னுடைய அனைத்து ப்ரொபைல் டேட்டா டீடெயில்ஸ் அனைத்தையும் ஈமெயில் அனுப்பி உள்ளேன் இந்த கம்பெனியின் இமெயில் ஐடிக்கு என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள் லீனா.
இந்த வேலை உங்களுக்கு அவ்வளவு முக்கியமான வேலையா உங்களுடைய குடும்ப நிலவரம் என்ன மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவரா என்று கேட்டான் லிபின்.
அச்சச்சோ அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது சார். எங்க வீட்டில் எல்லோருமே வெல் செட்டில்டு பெர்சன்ஸ் தான். இன்ஃபெக்ட் எனக்கு வேலைக்கு போவதில் சுத்தமாக விருப்பமே கிடையாது.
ஆனால் என் பெரிய அண்ணா உதயா... முடிவாக சொல்லிவிட்டார் அடுத்த வருடம் தான்... வீட்டில் திருமணத்திற்கு பார்க்கவே ஆரம்பிப்பார்கள், அப்படி இருக்கும் போது இன்னும் இரண்டு வருடங்கள் திருமணம் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. அதனால் கண்டிப்பாக நீ வேலைக்கு செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
எங்கள் வீட்டில் எங்கள் அண்ணா சொல்வதை அனைவருமே கேட்போம்... என் அப்பாவே அவர் சொன்னா சரின்னு சொல்லிட்டு போயிடுவாங்க.
அண்ணா என்னை வேலைக்கு போக சொல்வதில் எனக்கு ஏதேனும் நன்மை இருக்கும் அதனால் தான் நான் வேலை கேட்டு வந்தேன்.
ஆனால் அதற்காக என்னுடைய வேலையை ஏனோ தானா என்று எல்லாம் நான் பார்க்க மாட்டேன். ஏனென்றால் நான் செய்யும் வேலையில் திறம்பட செய்து நல்ல பெயர் எடுத்தால் மட்டும் தான் என் உதயா அண்ணா முன் நான் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.
அவள் வார்த்தைக்கு வார்த்தை அண்ணா அண்ணா என்று பேசிக்கொண்டு இருக்க ....
ஏனோ இவர்களுக்கு அவளை மிகவும் பிடித்து இருந்தது. சரி கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள். உங்களுடைய ப்ரொபைலை ஓபன் பண்ணி நீங்கள் அனுப்பி இருக்கும் உங்கள் பர்சனல் டேட்டாவை பார்த்து விட்டு சொல்கிறோம் என்று சொல்லி விட்டு...
அழகி... நான்கு பேருக்கும் ஒரு காஃபி சொல்றியா என்று கேட்டான் லிபின்.
இதோ இப்பவே நானே போய் கலந்து எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு, அங்கு இருந்த ஒரு சிறிய அரைக்கும் சென்று... காபி மேக்கரில் காபியை கலந்து கொண்டு வந்தாள்.
லீனாவின் ப்ரொஃபைல் அனைத்தையும் பார்க்க இருவருக்குமே திருப்தியாக இருக்க... ஓகே உங்களுடைய ப்ரொபைல் எங்களுக்கு பிடித்து இருக்கிறது. நீங்கள் இங்கேயே எங்களுடைய பி.ஏ. வா.. ஜாயின் பண்ணிக் கொள்ளலாம்.
அதே சமயம் நீங்கள் வெளியூரில் இருந்து இங்கு வந்து இருப்பதாக சொன்னீர்கள். அப்படி இருக்க நீங்கள் எப்போது இங்க ஜாயின் பண்ண வசதியாக இருக்கும் என்று கேட்டான்.
என்ன சொல்லப் போகிறாள்... லீனா...
ஈவினிங் வேலை முடித்து கிளம்பும் ருத்ரன்.. பாரில் இருந்து போதையில் வரும் கவிப்பிரியா....
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...