- Thread Author
- #1
2. மாயமான மாயாவி யார்?
தங்களுடைய ஆபீஸ் வரவும் சரியாக இருக்கவும்.. காரில் இருந்து முதலில் இறங்கிய புவனா... மற்றும் மூவரையும் பார்த்து யாரும் காரில் இருந்து இறங்க கூடாது.. டைரி மில்க் மேல் சத்தியமாக சொல்கிறேன் என்று சொன்னாள்.
அடியே ஏன் டா இப்படி என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்டார்கள்.
அவர்களின் முக பாவனைகள் எல்லாம் கவனத்தில் கொள்ளாமல், நான் சொல்லும் வரை காரில் இருந்து இறங்கக்கூடாது. அப்படி இறங்கினீர்கள் என்றால் இன்று முதல் உங்கள் யாருக்கும் டைரி மில்க் கிடையாது என்று சொல்லி விட்டு, அதே சமயம் இன்று நம்ம பார்க்கிங்கில் இன்று முதலில் யார் வருகிறார்களோ.. அது முதலில் பெண் என்றால் அது தான் ரிஷிக்கு ஜோடி. குழந்தைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.. அது மட்டும் இல்லை இது தான் மீதி இருக்கும் உங்கள் இருவருக்கும்.. முதலில் பெண் வந்தால் ரிஷி அடுத்த வரும் ஆண்களில் முதலில் யார் வருகிறார்களோ அது சஞ்சனாவிற்கு அடுத்தது மிதுனாவிற்கு.. அது மட்டுமில்லாமல் உடனடியாக அவர்களுக்கு ப்ரொபோஸ் பண்ணனும் என்று சொன்னாள் புவனா.
ஓகேடி இந்த பந்தயத்துக்கு நாங்கள் மூவரும் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் ஒரு கண்டிஷன் என்று சஞ்சனா சொன்னாள்...
அப்படி என்னடி உன்னுடைய கண்டிஷன் என்று கேட்டாள் புவனா.
எங்களுக்கு உள்ள அதே விதிமுறை தான் உனக்கும். எங்கள் மூவருக்கும் முடிந்த பிறகு நான்காவது யார் வருகிறார்கள் அவர்கள் தான் உனக்கு.. நீயும் உடனடியாக அவரிடம் ப்ரபோஸ் பண்ணனும் என்று சொன்னாள் சஞ்சனா.
அடச்ச அவ்வளவு தானே.. ஓகே எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, நீங்க எல்லாரும் பேரோட இருக்கும் போது நான் மட்டும் தனியா சிங்கிளா இருக்க முடியாது இல்லையா சோ நான் இந்த கண்டிஷனுக்கு ஒத்துக்கொள்கிறேன் என்று பெரிய மனது பண்ணி ஒத்துக் கொண்டாள் புவனா... நடக்கப்போவது அறியாமல்.
இப்போது நால்வருமே காருக்குள் அமர்ந்து நகத்தை கடித்த படி அமர்ந்து இருந்தனர். வெறும் மூன்று நிமிடங்கள் தான் ஆனது ... ஆனால் அதற்குள் ஒவ்வொருவருக்கும் 300 யுகங்களானது போல் இருந்தது. சரியாக மூன்று நிமிடங்கள் முடிந்த பிறகு அந்த பார்க்கின் ஏரியாவிற்கு வந்த முதல் நபர்....
ஆபீஸ் கிளீன் பண்ற நம்ம சின்னத்தாயி அக்கா... ரெண்டு குழந்தைக்கு அம்மா.
அவரைப் பார்த்தும் யாருக்கு மகிழ்ச்சியாக இருந்ததோ தெரியாது.. ஆனால் கண்டிப்பாக... ரிஷ்வந்துக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஹப்பா டா தப்பிச்சேன் டா சாமி என்று விட்டு சட்டென்று கீழே இறங்கி..
ஹாய் அக்கா என்ன பண்றீங்க என்று தனக்கு முன்பு புன்னகை முகத்தோடு வரும் ரிஷ்வந்தை பார்த்து விட்டு,
என்ன தம்பி இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா வந்துட்டிங்க.. அதுவும் தனியா வரீங்க ... ஓஓஓ. அதனால தான் சீக்கிரம் வந்துட்டீங்களா என்று அவரும் தன் பங்குக்கு பின்னாடி அவர்கள் மூன்று பேரும் இருக்கிறார்கள் என்பது அறியாமல் கிண்டல் செய்தார் சின்னத்தாயி.
ஐயோ அக்கா கொஞ்சம் சத்தத்தை குறைத்து பேசுங்க பின்னாடி தான் மூணு பேரும் இருக்காங்க... அது மட்டும் இல்லாமல் இன்று ஒரு சின்ன பந்தயம்.. என்று சொல்லி விட்டு என்ன பந்தயம் என்று சொல்லாமல் சினிமாவில் ஹீரோஸ் செய்வது போல் கால்களை மடக்கி முட்டி போட்டு கொண்டு சின்னதாயி அக்கா ஐ லவ் யூ என்று சொன்னான்.
ஐயோ தம்பி என்ன பண்றீங்க முதலில் எந்திரிங்க... என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல அடியாத்தி காலையிலேயே படபடப்பாக வருகிறதே எனக்கு என்று தன் புடவை முந்தானையை எடுத்து தன் முகம் முழுவதும் துடைத்துக் கொண்டார்.
அங்கு நடந்த சம்பாசனைகள் அனைத்தையும் காருக்குள் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த மூன்று பெண்களும்... அடப்பாவி யஷ்வந்த் தப்பிச்சிட்டியேடா சாமி என்று கோரசாக கத்தினார்கள்.
ஐயோ அக்கா ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறீர்கள் வாருங்கள் உங்களிடம் என்ன விஷயம் என்று சொல்கிறேன் என்று தோளில் கையை போட்டு அழைத்துச் சென்றான். தன் தோழிகளுக்கு டாட்டா காட்டி கொண்டு...
இப்ப அடுத்து யார் வருகிறார்களோ அவர்கள் தான் மிதுனாவிற்கு என்று சொன்னாள் புவனா.
மிதுனாவின் இதயம் மிகவும் படபடப்பாக இருந்தது... அடச்சே இன்னைக்கு போய் நம்ம எல்லோரும் சீக்கிரமாக கிளம்பி வர வேண்டும்... உனக்கு இப்படி ஒரு யோசனை வரவேண்டும் அடுத்து யார் வர போகிறார்கள் என்று தெரியவில்லையே என்று படபடப்பாக அமர்ந்து இருந்தாள் மிதுனா.
அடுத்த ஐந்து நிமிடங்களில் கழித்து அக்கவுண்ட்ஸ் மேனேஜர் சபாபதி விளங்காத மண்டையன் உள்ளே வர...
காருக்குள் அமர்ந்து இருந்த படியே மிதுனா நோ என்று கத்தினாள். ஏய்... ஏய் ... ப்ளீஸ் பா எனக்கு இவன் வேணாம்பா.. அடுத்து யார் வராங்களோ கண்டிப்பாக அவங்க கிட்ட நான் போய் ப்ரொபோஸ் பண்றேன் பா... இந்த ஆள் சரியான ஜொள்ளு பார்ட்டி என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள் மிதுனா.
சரி சரி ரொம்ப கெஞ்சாத பொழச்சு போ என்ன இருந்தாலும் நீ எங்கள் தோழி... உன்னை இப்படி ஒரு பாலும் கிணற்றில் தள்ளி விடமாட்டோம் என்று சஞ்சனா புவனா இருவரும் சொல்லவும் அப்பாடா என்று மனதில் கை வைத்து அமர்ந்தாள்.
அடுத்த ஒரு நிமிடத்தில்...
அங்கு பிளாக் கலர் ஒரு லக்சரி கார் சீறி கொண்டு வந்து நின்றது.
மூன்று பெண்களுமே ஆஹா யாரு டா வரப்போகிறது... புதிய எம்டியோட காரா... இல்லை வேற எதாவது இன்வெஸ்ட்டர் காரா... என்று புவனா கேட்டாள்.
காரில் இருந்து முதலில் இறங்க போவது அந்த புது எம்டியா இல்ல டிரைவரா உனக்கு யார் என்று தெரியவில்லை இரு பார்ப்போம் என்று கூறிக்கொண்டு மூவருமே நுனி சீட்டில் அமர்ந்து இருக்க...
கிரே கலர் பேண்ட் லைட் ரோஸ் கலரில் லெனின் ஷர்ட்... கிரே கலர் கோட் என்று டை, ஒரு கையில் ஸ்மார்ட் வாட்ச், கழுத்தில் அழகாக எம் டி (MD) என்ற எழுத்தோடு ஒரு பிளாட்டினம் செயின் என்று அம்சமாக சும்மா நச்சென்று ஒருவன் இறங்கி நின்றான்.
கீழே குனிந்து தன் டிரைவரிடம் எதுவோ பேசி விட்டு திரும்ப...
அங்கே படபடக்கும் இமைகளை அமைதியாக்க நினைத்தும் அமைதியாக்க முடியாமல் .. சாரி சார் உங்களை பார்த்தால் எங்க ஆபீஸ்க்கு வந்த புதிய எம்டி மாதிரியும் இருக்கு.. இல்ல இன்வெஸ்டர்ஸா என்று தெரியவில்லை. தயவு செய்து கெஞ்சி கேட்கிறேன் தப்பா எடுத்துக்காதீங்க இது சின்ன பிள்ளைத்தனமாக கூட இருக்கலாம்.. ஆனால் எனக்கு வேற வழி இல்ல என் பிரெண்ட்ஸ் கிட்ட அப்புறம் நான் தான் மாட்டிகிட்டு முழிக்கணும் ப்ளீஸ் சார் ஒரே ஒரு நிமிஷம் தப்பா எடுத்துக்காதீங்க உங்க கிட்ட நான் ப்ரொபோஸ் மட்டும் பண்ணிக்கிறேன் என்று கடகடவென்று கண்களை மூடி சொல்லி விட்டு...
ரிஸ்வந்த் சொன்னது போலவே இவளும் ஐ லவ் யூ என்று சொன்னாள்.
அடுத்த நொடி அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்து இருந்தான்.
இது ஒன்னும் காலேஜ் கிடையாது.. அண்ட் அதே சமயம் இங்கே விளையாடுறதுக்காக நான் இங்கே வரல... லுக் நான் என் கேபினுக்கு போறதுக்கு உள்ள நீ உன்னோட வீணா போன ப்ரண்ட்ஸ் எல்லோரும் உங்க சீட்ல இருக்கணும்... இல்லை இதற்கு கண்டிப்பாக பனிஷ்மென்ட் உண்டு.
11 மணிக்கு உங்க மூன்று பேருக்கும் அப்பாயிண்ட்மெண்ட்.... நான் என் கேபின் போறதுக்குள் நீங்க வரல அப்படி என்றால் மட்டும் தான் 11 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட்.
இல்லை என்றால் உங்கள் வேலைகளை நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம் என்று சொன்னவன் அடுத்த நிமிடம் மாயமாக மறைந்து இருந்தான்.
அவன் பேச பேச காருக்குள் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த சஞ்சனா புவனா இருவருமே...
இவன் தான் எம்டி யா இவ்வளவு டெரரா இருக்கான் என்று சொல்லி கொண்டே பிரீசிங் மோடில் இருந்த மிதுனாவை இழுத்துக் கொண்டு லிப்டிற்கு சென்றார்கள்.
ஐயோ நமக்கு முன்னாடியே லிப்ட் ஏறிட்டான் போலவே... என்று சொல்லி கொண்டே புவனா மிதுனா வாங்கிய அறையில் பயந்து கொண்டே பேசினாள்.
மிதுனவோ அந்த ஷாக்கிங் இல் இருந்து வெளியில் வரவே இல்லை... ஆனால் சஞ்சனா அவள் என்ன நிலையில் இருக்கிறாள் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக பயந்து கொண்டு மட்டும் இல்லை.
ஸ்டாப் தனியாக லிப்ட்... முதலாளிக்கு தனியாக லிப்ட் என்று எல்லாம் எதுவும் இந்த ஆபீஸில் இதுவரை இருந்தது இல்லை.
அதனால் அவன் வெளியில் சென்று அடுத்த நிமிடம் நாமளும் வெளியே சென்று விடுவோம். ஆனாலும் அவனுக்கு பின்னாடி தானே செல்லுவோம் என்று பயந்து கொண்டு இருந்தார்கள் மீதுனா புவனா இருவரும்...
ஏய் ரொம்ப பயப்பட வேண்டாம்..
எப்படியும் அவனை வெல்கம் பண்ண எல்லோரும் வெளியில் தான் நிற்பார்கள். அந்த கேப்பில் நாம் உள்ளே சென்று அவனுக்கு முன் நின்று விடுவோம்.
அப்படியே இல்லை என்றாலும் ஒன்னும் பயப்பட வேண்டாம் .. பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே லிப்ட் நின்று விட வெளியில் மெதுவாக எட்டி பார்க்க அங்கே ஒரு ஈ காக்கா கூட இல்லை...
ஆமாம் அனைவரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தனர். அவன் வந்ததற்கான அறிகுறியே தெரியவில்லை.
என்னடி இது வேற எங்கேயாவது போயிட்டானா அப்படி இங்க ஒரு ஆள் வந்த மாதிரியான அறிகுறியே தெரியலையே என்று மூவரும் பேசிக்கொண்டே தங்களுடைய கேபினில் போய் அமர,