Member
- Joined
- Mar 17, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
பூங்குன்றனும் மாதவியும்,
மிகுந்த பொறுப்புடன் கருத்து கணிப்பு நடத்தினார்கள்.
இந்த கருத்து கணிப்பு முடிவால், நம் பத்திரிக்கைக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் மற்றும் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக வேண்டும் என்று கடுமையாக உழைத்தார்கள்.
இராணி பாளையம் தொகுதியில்,
ஒரு வாரத்திற்கும் மேல், பல பகுதிகளில் கருத்து கணிப்பு நடத்தி விட்டார்கள்.
குழலி சித்தி வீட்டுக்கு பூங்குன்றன் தினமும், இரவு 11 மணிக்கு மேல் தான் வருவான். " எனக்காக நீங்க இரவு சாப்பாடு தயார் செய்ய வேண்டாம் அத்தை, நான் வீட்டுக்கு வர இரவாகிவிடும்" என்று பூங்குன்றன் சொன்னதால், குழலி சித்தி, பூங்குன்றனுக்கு இரவு சாப்பாடு செய்யாமல், மருமகனுக்காக, காஃபி மட்டும் போட்டு பிளாஷ்க்கில் ஊற்றி குழலி அறையில் வைத்து விடுவார்.
மருமகன் வந்து கதவை தட்ட வேண்டாம் என்று கதவை பூட்டாமல் சும்மா மட்டும் சாத்தியிருப்பார்.
தினமும் தாமதமாக வந்து மனைவியிடம் கொஞ்ச நேரம் பேசிய பின், தூங்க செல்வான்.
சில நேரங்களில் மாதவி ஏதாவது, கருத்து கணிப்பு பற்றி இரவ நேரத்தில் சந்தேகம் கேட்டால், மொபைலில் டைப்பிங் மெசேஜ் செய்து அனுப்புவான்.
தினமும் காலையில், பூங்குன்றன் மொபைலை செக் செய்வதை தலையாய கடமையாக செய்தாள் குழலி.
பூங்குன்றனுக்கும் இது தெரியும் .
குழலியிடம் இதைப் பற்றி கேட்காமல் இருப்பதற்கு சில காரணங்களை தனக்கு தானே வகுத்துக் கொண்டான்.
1. இது நம்ம வீடு இல்லை
2. குழலிக்கு அம்மம் போட்டு இருக்கும் போது, இதைப் பற்றி பேசி விவாதம் செய்ய வேண்டாம்.
3. நம் மீது தவறில்லை. பிறகு ஏன் கவலைப் பட வேண்டும்,
என்ற காரணங்கள் தான்.
இராணி பாளையம் தொகுதியில் இன்னும் மூன்று நாட்களில் கருத்து கணிப்பு கேட்பது முடிந்து விடும் என்ற நிலையில்,
ஒரு நாள் இரவு 8 மணிக்கு, நிறுவனர்,
பூங்குன்றனுக்கு போன் செய்தார்.
பூங்குன்றனும் அழைப்பை ஏற்று " சொல்லுங்க சார்" என்றதும்,
நிறுவனர் " பூங்குன்றன், நீங்கள் இன்று ஒரு நாள் இரவு மட்டும் அலுவலகம் வாருங்கள். நிறைய புதிய கடைகள் திறப்பு விழா நடத்துபவர்கள், கடை திறப்பு விழாவிற்கு உங்கள் விளம்பர யுக்தி வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார்கள்" என்றார்.
பூங்குன்றன் "அதானால் என்ன, நான் கண்டிப்பாக வருகிறேன், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்,
நம் வாடிக்கையாளரை விட்டு விடக் கூடாது, அதனால் நான் உடனே வருகிறேன்" என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான்.
உடனே மனைவிக்கு போன் செய்தான்.
அழைப்பை ஏற்ற குழலி " சொல்லுங்க" என்றதும்,
மறுமுனையில் உள்ள பூங்குன்றன் " நிறுவனர் சொன்ன அனைத்து தகவல்களையும் சொல்ல" அதற்கு குழலி " ம்ம் போய் வாருங்கள், விடிய விடிய பார்க்க வேண்டாம். உடம்பு கெட்டு விடும். அதனால் சீக்கிரம் முடித்து விட்டு தூங்குங்க" என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டிக்க போகும் போது " என்னங்க.." என்றதும்,
பூங்குன்றனும், குழலி ஏதோ சொல்ல வருகிறாள் என்று அழைப்பை துண்டிக்க போனவன் " என்ன குழலி"என்று கேட்க,
குழலி " இப்போ அம்மம் குறைந்து உடம்பு பரவாயில்லை. அதனால் நாளைக்கு எனக்கு முதல் தண்ணீர் ஊற்றலாம் என்று எங்கள் சித்தி சொன்னாங்க, நாளைக்கு உங்களுக்கு நேரம் இருந்தால் மதியம் போல வீட்டுக்கு வாங்க " என்று அன்பும்,பாசமும், ஏக்கமும் நிறைந்து சொன்னாள்.
பூங்குன்றன் " ஓ அப்படியா.! , நான் நாளைக்கு கண்டிப்பாக மதியம் வீட்டுக்கு வருவேன் " என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான்.
பூங்குன்றன், மாதவியிடம் " நீங்கள் உங்கள் உறவினர் வீட்டுக்கு செல்லுங்கள், நான் நமது பத்திரிகை அலுவலகத்திற்கு செல்கிறேன், என்று சொல்லி விட்டு, நிறுவனர் சொன்னதை சொல்ல" ,
அதைக் கேட்ட மாதவி " நானும் உங்கள் விளம்பர யுக்தி பற்றி கேள்வி பட்டுள்ளேன், அதனால் நானும் உங்கள் கூட வருகிறேன், அப்படியே நானும் கொஞ்சம் விளம்பர யுக்தியை உங்களிடம் இருந்து கற்றுக் கொள்வேன்" என்று சொல்ல,
பூங்குன்றன் " இதற்கு நிறுவனர் சம்மதம் சொல்ல மாட்டார். ஏனெனில் இதுவரை நம் பத்திரிகை அலுவலகத்தில் பெண்களுக்கு இரவில் வேலை எதுவும் கொடுக்க மாட்டார்" என்று சொல்லி விட்டு தன் இரு சக்கர வாகனத்தில் அலுவலகம் செல்ல தயாரானான்.
அப்போது, மாதவி "நான் நிறுவனரிடம் பேசிக் கொள்கிறேன், நான் உங்களுடன் வருகிறேன்" என்று அவளும் தன் இரு சக்கர வாகனத்தில் செல்ல தயாரானாள்.
இருவரும் கருடப் பார்வை நாளிதழ் அலுவலகம் வந்தார்கள்.
அலுவலகத்தில் நிறுவனர் பூங்குன்றனை எதிர் பார்த்து காத்திருந்தார். இருவரையும் பார்த்ததும்,பூங்குன்றனிடம்," நான் உங்களை மட்டும் தானே வரச் சொன்னேன்.மாதவியும் ஏன் கூட வந்தார்? , நீங்கள் தான் அழைத்து வந்தீர்களா? " என்று கேட்க,
பூங்குன்றன் " நானும் சொல்லி விட்டேன் சார். அவர் தான் உங்களிடம் பேசிக் கொள்கிறேன்,என்று சொல்லி
என் கூடவே வந்தார் " என்று சொல்லவும்,
மாதவியும் " நானாக தான் வந்தேன்,
அவர் வரச் சொல்ல வில்லை " என்று மாதவி விளக்கம் கொடுத்தாள்.
நிறுவனர் " சரி உங்கள் விருப்பம்.ஆனால் இதுவரை என் அலுவலகத்தில் பெண்களுக்கு இரவில் வேலை கொடுத்தது இல்லை " என்று சொல்லி விட்டு, பூங்குன்றனிடம் " சரி நீங்க போய் உங்க வேலையை பாருங்க. நான் என் அறையில் இருக்கிறேன்" என்று சொல்ல,
பூங்குன்றன் " ஏன் சார் நீங்க வீட்டுக்கு போகலையா?" என்று கேட்க,
நிறுவனர் " இல்லை, எனக்கும் ஒரு முக்கிய மான வேலை இருக்கிறது. உங்களைப் போல் நானும் கடினமாக உழைத்தால் தான் என் பத்திரிகை பிரபலமாகும்" என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றார்.
பூங்குன்றன், புதிய கடை திறப்பு விழாவிற்கு, அவர்கள் விரும்பும் படி விளம்பரம் செய்வதில் ஆர்வமாக இருந்தான்.
மொபைல் போன் சார்ஜ் இல்லை என்று மொபைலை சார்ஜ் போட்டு விட்டு, விளம்பரம் எழுதும் வேலையை பார்க்க சென்றான்.
மாதவி கொஞ்ச நேரம் பூங்குன்றன் விளம்பர யுக்தியை பார்த்து விட்டு,
பூங்குன்றன் மொபைல் போன் சார்ஜ் போட்ட இடத்தில் ஓய்வெடுக்க சென்றாள்.
இரவு ஒரு மணிக்கு, குழலிக்கு சரியாக தூக்கம் வராமல் இருக்க, தன் கணவருடன் பேசலாம் என்று அழைப்பு விடுத்தாள். குழலி போனில் அழைப்பு விடுக்கும் பேலன்ஸ் தேதி முடிந்ததால், உங்களால் அழைப்பு செய்ய இயலாது, நீங்கள் உடனே ரீசார்ஜ் செய்யுங்கள் என்று பதில் வந்தது.
குழலி உடனே ' இப்போது பார்த்தா, ரீசார்ஜ் முடிய வேண்டும், 'என்று நினைத்து கொண்டு மீண்டும் தூங்க முயற்சித்தாள். ஆனால் தூக்கம் வரவில்லை. ' என்ன செய்யலாம் ' என்று யோசித்த போது, கணவன் இல்லாததால், துணைக்கு சித்தி படுத்து இருந்தார். அவர் போனும் அவர் தலைமாட்டில் தான் இருந்தது. அதை எடுத்து கணவருக்கு போன் செய்யலாம் என்று நினைத்து,
சித்தி போனை எடுத்து பூங்குன்றனுக்கு அழைப்பு விடுத்தாள்.ஆனால் குழலி சித்தி மொபைலில் இரண்டு நம்பர் உண்டு.
ஒன்று தான் பூங்குன்றனுக்கு தெரியும்.
பூங்குன்றனுக்கு அழைப்பு வந்தது.பூங்குன்றன் தன் போன் ரிங் அடிக்கும் சத்தம் கேட்டு வந்து, அழைப்பை பார்த்தான்.
நம்பர் புதியதாக இருந்ததால் அழைப்பை ஏற்காமல் அப்படியே விட்டு விட்டான்.
மீண்டும் வேலையை பார்க்க சென்றான். அப்போதும் குழலியிடமிருந்து போன் வர, பூங்குன்றன், அழைப்பை பார்த்து விட்டு, 'மீண்டும் அதே நம்பரில் இருந்து வந்திருக்கிறதே, யாராக இருக்கும்?' என்று நினைத்து கொண்டே அழைப்பை ஏற்று " ஹலோ யாருங்க" என்று சொல்ல,
சிக்னல் சரியாக கிடைக்காததால்,
குழலி பேசியது பூங்குன்றனுக்கும்,
பூங்குன்றன் பேசியது குழலிக்கும் சரியாக கேட்க வில்லை.
பூங்குன்றன் சில நொடிகள் " ஹலோ... " என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து விட்டு மீண்டும் வேலையை பார்க்க சென்றான்.
குழலியும்' சிக்னல் பிரச்சினை, அதனால் சரியாக கேட்க வில்லை போல் 'என்று நினைத்து கொண்டு, மீண்டும் ஒரு அழைப்பு விடுத்தாள்.
இந்த முறை அழைப்பு வந்ததும்,
பூங்குன்றன், அதே நம்பர் என்றதும் அழைப்பை ஏற்று "ஹலோ யாரு பேசுறீங்க?" என்று கேட்க,
மீண்டும் சிக்னல் பிரச்சினையால் இருவருக்கும் பேசுவது கேட்க வில்லை.
ஒன்னும் கேட்க வில்லை என்ற எரிச்சலிலும் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் போனை வைத்து விட்டு சென்றான்.
இதையெல்லாம் அரைத்தூக்கத்தில் கவனித்து கொண்டு இருந்தாள் மாதவி.
மீண்டும் 10 நிமிடங்கள் கழித்து குழலி
பூங்குன்றனுக்கு போன் செய்தாள்.
இப்போதும், பூங்குன்றன் தன் போன் அழைப்பு சத்தம் கேட்டு வந்து அழைப்பை பார்த்தான். அதே நம்பர் தான்'.இருப்பினும் யாராவது முக்கியமான ஆளாக இருக்கும், அதான் நம்மிடம் ஏதோ பேச விரும்புகிறார் ' என்று நினைத்து கொண்டு அழைப்பை ஏற்று " ஹலோ
சொல்லுங்க" என்றதும், அப்போது பார்த்து குழலி அழைப்பு விடுத்து விட்டு தாகமாக இருந்தது என்று தண்ணீர் குடிக்க, பூங்குன்றன் ஹலோ சொன்னது தெளிவாக கேட்டது. அதேபோல் பூங்குன்றனுக்கும் மற்ற தடவை போல சிக்னல் இல்லாமல் எதுவும் கேட்காமல் இருந்த நிலையில் இந்த முறை, எதிர் முனையில் இருந்து டேபிள் பேன் ஓடும் சத்தம் கேட்டது.
ஆனால் அழைப்பு விடுத்தவர் பேசாததால், " ஹலோ... ஹலோ..." என்று சொல்ல, குழலி தண்ணீர் குடித்து விட்டு பேசலாம் என்று போனில் பேச ஆரம்பிக்கும் போது,
மாதவி " போனில் யாரு சீனியர்?" என்று கேட்டது குழலிக்கு கேட்டது.
பூங்குன்றன், மாதவியிடம் " யார் என்று தெரியவில்லை" என்று சொல்ல, மாதவி பொதுவாக, அவள் தூக்கத்தையும், சீனியர் வேலை செய்வதையும் நினைத்து " நமக்கு இடைஞ்சல் கொடுக்கனும்னு, போன் செய்து இருப்பாங்களோ" என்று சிரித்துக் கொண்டே கேட்க,
பூங்குன்றனும் லேசாக சிரித்து கொண்டே " தெரியவில்லையே" என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான்.
மாதவியிடம் " நீங்கள் தூங்குங்க,
என் போன் சார்ஜ் ஏறி விட்டது. அதனால் நான் போனை எடுத்து கொண்டு போகிறேன். இனி போன் வந்தாலும் உங்கள் தூக்கத்தை கெடுக்காது என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான்.
அங்கே குழலி மாதவி சொன்ன,
'நமக்கு இடைஞ்சல் கொடுக்கனும் தான் போன் செய்து இருப்பாங்களோ என்ற வார்த்தை ' தான் மீண்டும் மீண்டும் கேட்டது. 'மேலும் தங்கள் அலுவலகத்தில் பெண்களுக்கு இரவில் வேலை எதுவும் நிறுவனர் கொடுக்க மாட்டார் ' என்று பூங்குன்றன் சொன்னதும் நினைவுக்கு வந்தது.
'அப்போ நம் கணவர் நம்மிடம், அலுவலகத்தில் வேலை என்று சொல்லி விட்டு, இங்கே வராமல் இருக்க பொய் சொல்லி விட்டு, மாதவிவியுடன்...' என்று நினைக்கும் போதே, கண் கலங்கினாள்.
நம் கணவர் அப்படி கிடையாது என்று மனசு ஒரு பக்கம் சொல்லும் போது, மீண்டும் அண்ணனும் அப்பாவும் சொன்னது நினைவுக்கு வந்தது '.
இந்த முறை , அப்பாவும் அண்ணனும் சொன்னது தான் சரி என்பது போல மனசு சொல்லுச்சு.
அதையே நினைத்து நினைத்
து, பார்த்து விட்டு, எதற்கும் கணவரிடம் நாளைக்கு கேட்கலாம் என்று முடிவெடுத்து விட்டு, விடியற்காலையில் தான் தூங்க ஆரம்பித்தாள்.
தொடரும்,