Member
- Joined
- Mar 17, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
கருடப்பார்வை நாளிதழ் அலுவலகத்தில் , நிறுவனரிடம் பேசி விட்டு, பூங்குன்றனும், மாதவியும், இராணி பாளையம் தொகுதி மக்களிடம் கருத்து கணிப்பு கேட்க, தங்களின் தனித் தனி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்கள்.
இராணி பாளையம்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில்,
மக்களிடம் , பூங்குன்றனும் மாதவியும், வரும் சட்ட மன்ற தேர்தலில், இந்த தொகுதி பற்றி மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தினார்கள்.
சில இளைஞர்கள், இந்த முறை நாங்கள் புதியவர்கள். நாங்கள் ஜனநாயக கடமையை முதல் முறையாக நிறைவேற்ற போகிறோம்.
அதனால் இந்த தொகுதி தன்னிலை பெற, யார் பாடுபடுவார்களோ, அவர்களுக்கே எங்கள் வாக்கை செலுத்துவோம் என்று உறுதியாக சொன்னார்கள். அந்த இளைஞர்களின் அனுமதியோடு அவர்களை போட்டோ எடுத்தான் பூங்குன்றன்.
இராணி பாளையம் தொகுதி இளைஞர்கள் சொன்ன கருத்தை , நிறுவனருக்கு அனுப்பி வைத்தான் பூங்குன்றன்.
அவரும் இந்த கருத்தை பரீசீலனை செய்து விட்டு, இந்த கருத்தை முன் வைத்து கருத்து கணிப்பு நடத்துங்கள் என்று பதில் அனுப்பினார்.
பூங்குன்றனும் , மாதவியிடம்,
" நிறுவனர் அனுமதி கொடுத்து விட்டார். அதனால் நாம் இனி கருத்து கணிப்பு நடத்தும் போது, இந்த இளைஞர்களின் கருத்தை முன் வைத்து கருத்து கணிப்பு நடத்துவோம்" என்றான். மாதவியும்" ம்ம் " என்றாள்.
அந்த தொகுதியில் எந்த நாளிதழிலிருந்து கருத்து கணிப்பு நடத்தினாலும், உங்கள் தொகுதியில் வெற்றி பெற முடியாதவர்கள் ஆளும் கட்சியாக வந்தது என்ன வெற்றி? என்று இந்த மக்களை பெருமையாக சொல்வது போல் கருத்து கணிப்பு முடிவுகள் வரும்.
ஆனால் கருடப்பார்வை நாளிதழ் நடத்தும் கருத்து கணிப்பில், பூங்குன்றன் ஆலோசனை படி, அந்த கருத்தை சொல்லாமல், இந்த தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கும் வகையில் கருத்து கணிப்பு நடத்தினான்.
அதிகம் இளைஞர்கள் இருக்கும் இடத்தில், பூங்குன்றன் முதலில் இந்த தொகுதி இளைஞர்கள் சொன்ன கருத்தை சொன்ன போது, அவர்களும்,
நாங்களும் புதிய வாக்காளர்கள் தான்.
நாங்களும் எங்கள் தொகுதி தன்னிலை பெற பாடுபடுவர்களுக்கே எங்கள் ஓட்டு என்று உறுதியாக சொன்னார்கள்.
முதல் நாள் கருத்து கணிப்பு நடத்திய பிறகு, அதை நிறுவனருக்கு அனுப்பி விட்டு, பூங்குன்றன்," நான் என் மனைவியை பார்க்க போகிறேன், நீங்கள் உங்கள் உறவினர் வீட்டுக்கு தனியாக போய் விடுவீர்களா?, அல்லது துணைக்கு வர வேண்டுமா?"என்று மாதவியிடம் கேட்டான்.
மாதவி ' நாம் லாட்ஜில் தான் ரூம் எடுத்து தங்கி இருக்கோம், இவர் நம் கூட வந்தால், ஏன் லாட்ஜில் என்று கேள்வி கேட்பார், அதனால் நாம் தனியாக செல்வோம்' என்று மனதில் நினைத்து கொண்டு,
" இல்லை சீனியர், நான் தனியாக போய் விடுவேன். நீங்கள் உங்கள் மனைவியை பார்க்க செல்லுங்கள் "என்று சொல்லி விட்டு, மாதவி தன் இரு சக்கர வாகனத்தில் சென்றாள்.
பூங்குன்றனும், மனைவிக்கு குளிர்ச்சி தரும் பழங்கள் வாங்கி கொண்டு,
குழலி சித்தி வீட்டுக்கு வந்தான். வீட்டுக்குள் போகும் போது, அந்த பாட்டி சொன்னது போல, தலையில் கோமியத்தை தெளித்து கொண்டு வீட்டுக்குள் போனான்.
பூங்குன்றனைப் பார்த்த குழலி சித்தி " வாங்க மருமகனே" என்று சொல்லி விட்டு " சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா? என்று கேட்க,
பூங்குன்றன் " குழலியை முதலில் பார்த்து விட்டு வருகிறேன்" என்று குழலியை பார்க்க சென்றான்.
குழலிக்கு தான் வாங்கி வந்த பழங்களில் , ஒன்றை எடுத்து சாப்பிட கொடுத்தான்.
பிறகு,
" தான் முதல் முறையாக நடத்திய கருத்து கணிப்பு பற்றி" சொன்னான்.
அவளும் " ஓ அப்படியா.!" என்று கேட்டு விட்டு, " இந்த தொகுதியில் தானா?" என்று கேட்க, " ஆம் " என்றான் பூங்குன்றன்.
குழலி சித்தி, மருமகனை சாப்பிட கூப்பிட, பூங்குன்றன் கை கால்களை கழுவி விட்டு சாப்பிட வந்தான். " குழலி சாப்பிட்டாளா?, மாமா, எங்கே அத்தை?" என்று கேட்க, " குழலி சாப்பிட்டு விட்டாள்.
உங்கள் மாமாவுக்கு ஏதோ முக்கிய வேலை என்று அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. அதான் போய் இருக்கிறார்.இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார் " என்றார்.
மறுநாள் விடியற்காலையிலேயே பூங்குன்றன் எழுந்து, "குழலியை பாத்ரூம் போக கூட்டிட்டு போக வேண்டுமா"என்று கேட்க, குழலி" வேண்டாம், நான் தனியாக போய் கொள்ளுவேன், ஏதும் பிரச்சினை இல்லை " என்று சொன்னாள்.
பூங்குன்றன் " ம்ம்"என்று சொல்லி விட்டு, அவன் குளிக்க சென்றான்.
அப்போது அவன் வாட்சப்பிற்கு இனிய காலை வணக்கம் சீனியர் என்றும், அதன் அருகில் சிகப்பு கலர் இதய இமோஜியும் இருந்தது.
பூங்குன்றன் குளித்து விட்டு, தன் துணிகளை துவைத்து விட்டு, மாடியில் போய் காயப் போட்டு விட்டு கீழே வந்தான். குழலி சித்தி" நான் துவைப்பேன்ல, நீங்கள் ஏன் துவைத்தீர்கள், நான் துவைப்பேன் ல" என்று சொல்ல,
பூங்குன்றன்" அதனாலென்ன அத்தை "என்று சிரித்துக் கொண்டே குழலி அறைக்கு சென்றான். பூங்குன்றன் ஆடைகளை மாற்றி, வேலைக்கு செல்ல தயாரானான்.
அப்போது குழலி சித்தி, காஃபி கொண்டு வந்து மருமகனிடம் கொடுத்து விட்டு, குழலியிடம்" உன் கணவர், குளித்து விட்டு அவர் துணிகளை அவரே துவைத்து காயப் போட்டு விட்டார் " என்று சற்று வருத்தமாக சொன்னார்.
குழலி சித்தி வருத்தப்படுவதைப் பார்த்து விட்டு" இல்லை, சித்தி அவர் எங்க வீட்டிலுமே அவர் துணிகளை அவரே துவைத்து விடுவார் " என்று சொன்னாள்.
பூங்குன்றன் வேலைக்கு போக தயாராகி விட்டு, காஃபியை சூடு ஆறிப்போகும் முன் குடித்தான்.
குழலி மெதுவாக பூங்குன்றனிடம் " உங்களுக்கு யாரோ ஒருவர் இனிய காலை வணக்கம் சீனியர் என்று அனுப்பி உள்ளார்" என்று சொல்லி விட்டு " அது யாரு?இந்த முறை
சிகப்பு கலர் இதய இமோஜி அனுப்பி உள்ளார்?" என்று சந்தேகமாக கேட்க,
பூங்குன்றன் ' மாதவி தானா? அவள் நேற்றே சொன்னாரே, அப்ப நான் சிகப்பு கலர் இதய இமோஜி அனுப்பி இருந்தால் உங்கள் மனைவி உங்களை அடிப்பாரோ? 'என்று சொன்னதை நினைத்து பார்த்து சிரிக்க,
குழலி " நான் அது யாருன்னு கேட்கிறேன், நீங்கள் சிரிக்கீங்க?" என்று லேசான கோபத்துடன் பேச,
பூங்குன்றன் உடனே " அது என் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண், மாதவி" என்றான்.
குழலி " எது, நீங்கள் புத்திசாலி என்று பாராட்டினீர்களே .! , அந்த பெண்ணா?"என்று கேட்க,
பூங்குன்றன், வேகமாக " ம்ம் அவர் தான். அவர் மூன்று நாட்கள் விடுப்பு எடுத்து இந்த தொகுதியை பற்றி ஆராய்ந்ததை பெருமையாக "சொல்ல, குழலிக்கு அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல், " அப்ப அன்னைக்கு இந்த நம்பர் யார் என்று கேட்கும் போது, தெரியாது என்று சொன்னீங்களே?"
என்று கேட்க,
பூங்குன்றன் " நீ கேட்ட அன்னைக்கு தெரியாது. நேற்று தான் அலுவலகத்தில் நிறுவனர் அறையில் வைத்து சொன்னாள், நானும் நீ கேட்டதை சொன்னவுடன், அப்ப நான் சிகப்பு கலர் இதய இமோஜி அனுப்பாமல் விட்டேனே, அதைப் பார்த்து உங்கள் மனைவி உங்களை அடிப்பாரே? , என்று சிரித்தார் " என்று சிரித்துக் கொண்டே சொல்ல,
குழலி" நான் சொன்னதை எல்லாம் நீங்கள் அவளிடம் சொல்ல வேண்டுமா?" என்று கேட்க,
பூங்குன்றன்" நான் சொல்ல வில்லை.
நான் சொல்ல வாயெடுத்த போது, அவள் கண்டு பிடித்து விட்டார், புத்திசாலி பெண் அல்லவா, அதான் "என்று சொல்லி முடிக்கும் போது குழலிக்கு கோபம் அதிகம் வந்து கத்த ஆரம்பிக்கும் போது" குழலி குழலி " என்று சித்தியின் குரல் கேட்டு" என்ன சித்தி?" என்றாள்.
" உன் கணவருக்கு மதியம் சாப்பாடு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்க,
பூங்குன்றன்" மதியம் எனக்கு வேண்டாம் அத்தை " என்று சொல்லி விட்டு, குழலியிடம்" நானும், மாதவியும், இன்று ஒரு முக்கியமான இடத்திற்கு கருத்து கணிப்பு நடத்த செல்கிறோம், அங்கே சாப்பிடுவோம்" என்று சொல்ல,
இதைக் கேட்ட குழலி சித்தி " மருமகனே, குழலிக்கு அம்மம் போட்டு இருப்பதால், நீங்கள் வெளியே எங்காவது சாப்பிட்டால் இலையில் சாப்பிடக்கூடாது"என்று சொல்ல,
பூங்குன்றன் " ம்ம், சரிங்க அத்தை"என்று சொல்லி விட்டு, குழலியைப் பார்க்க,
குழலி " யார் கூட கருத்து கணிப்பு நடத்த போறீங்க?" என்று கேட்க,
பூங்குன்றன் " அதான் மாதவி என்று சொன்னேனே" என்று சொல்ல,
அதைக் கேட்டு குழலி எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தாள்.
பூங்குன்றன் சாப்பிட செல்ல, அப்போது அவன் வாட்சப்பிற்கு
கிளம்பியாச்சா சீனியர் என்று மெசேஜ் வந்தது. குழலி அதைப் பார்த்து விட்டு, கோபமானாள் .
பூங்குன்றன் சாப்பிட்டு விட்டு வந்து, "கருத்து கணிப்பு நடத்த செல்கிறேன்" என்று குழலியிடம் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான்.
மாதவி இன்று கருத்து கணிப்பு நடத்த போகும் இடத்தை, வாட்சப்பில் அனுப்பி இருந்தாள்.
பூங்குன்றனும் மாதவி சொன்ன இடத்திற்கு சென்றான்.
அங்கே மாதவி இருந்தாள். இருவரும் அங்கே இருந்த மக்களிடம் கருத்து கணிப்பு கேட்க ஆரம்பித்தார்கள்.
குழலி, அம்மம் போட்டு இருப்பதால் வெளியே எங்கும் போக முடியாமல் இருக்க, 'பொழுது போக என்ன செய்யலாம் என்று யோசித்த போது,
ஆளுமை திறனை வளர்ப்பது எப்படி என்ற புத்தகம் நினைவுக்கு வந்தது'.
புத்தகத்தை எடுத்து படித்தாள்.
அதில் ஒரு இடத்தில், தவறு என்பது ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டால்,
அங்கே கண்டிப்புடன் நடந்து கொண்டால், அங்கே அடுத்த தவறு நடக்காது என்றும்
ஆனால் இது எல்லாமே நிர்வாகம் சார்ந்த இடங்களில் மட்டும் தான்.
குடும்பத்தில் அல்ல, குடும்பத்தில் ஒரு தவறு என்று ஆரம்பத்தில் தெரிந்தால் பொறுமையாக தான் கையாள வேண்டும் என்று அந்த நூலை எழுதிய ஆசிரியர் குறிப்பிட்டதை குழலி படிக்க தவறினாள்.
குழலி இதைப் படித்ததும், மாதவி அனுப்பிய வாட்சப் மெசேஜ் நினைவுக்கு வந்தது.
' முதலிலேயே இதை தடுக்க வேண்டும், என்று யோசித்தவளுக்கு, அப்பாவும் அண்ணனும் சொன்னது நினைவுக்கு வந்தது
. அவனைப் பற்றி உனக்கு தெரியாது என்று சொன்னது.
இருப்பினும் தன் கணவர் அப்படி கிடையாது என்று உள் மனது சொல்லியது.
தொடரும்,