• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
17. அறிவுரை கூறும் ருத்ரதேவ்...
ஏற்பாளா...‌ கவி பிரியா...



தன்னுடைய டிரைவரை வைத்து ருத்ரதாவின் காரை இடிக்க சொல்லியவள்... இடித்த பிறகு அவருக்கு நெஞ்சுவலி வந்தது போல் நடிக்க அதை ருத்ரா சரி செய்து விட்டு.. அவரின் நலனை விசாரிக்க டிரைவரோ தன்னுடைய நிலைமையை எடுத்து சொல்லி அவனிடம் மன்னிப்பு கேட்டார்.


டிரைவர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதும் பதறிய ருத்ரா... அச்சச்சோ அண்ணா என்ன பேசுகிறீர்கள்... முதலில் உங்கள் உடம்பை பாருங்கள் என்று சொல்லி விட்டு, இப்போது தான் தன் அருகில் இருக்கும் அந்த பெண்ணை பார்த்தவன்... தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் தங்களிடம் வேலை பார்க்கும் மனிதர்களும் மனிதர்கள் தான், எனக்கு உங்கள் மீது கோபம் வருகிறது ... அதே சமயம் நீங்கள் அவருக்கு இப்படி ஆனதும் பதறினீர்கள்..

அதனால் உங்களை வருத்தமாக பேசவும் மனதிற்கு வரவில்லை. அதனால் தயவு செய்து நம்மிடம் வேலை பார்ப்பவர்களின் நலனில் என்றும் எப்போதும் கவனமாக இருங்கள். இந்த அறிவுரையை எதற்கு என்று அலட்சியப்படுத்தாமல் கேட்டுக் கொண்டால் உங்களுக்கு நல்லது. உங்கள் சந்ததியினருக்கும் நல்லது. விருப்பம் இருந்தால் பின்பற்றி பழகுங்கள் என்று சொல்லி விட்டு, அவளின் பதிலை எதிர்பார்க்காமல் தன்
காரில் ஏறி சென்று விட்டான் ருத்ர தேவ்.

ருத்ரா பேசி விட்டு சென்றதில் இருந்து இந்த நிமிடம் வரை உண்மையாலுமே டிரைவருக்கு நெஞ்சுவலி வந்தது போல் ஆகிற்று... இதுவரை தன்னுடைய முதலாளி கூட தன்னுடைய மகளை ஒரு வார்த்தை கடிந்து பேசியது கிடையாது... அது மட்டுமா கவிப்பிரியாவும் யாரிடமும் எதற்காகவும் தலை குனிந்து நிற்கவும் மாட்டாள்... மிகவும் பிடிவாத காரி... அப்படிப்பட்ட தன்னுடைய எஜமானின் மகளை திட்டி விட்டு சென்றதை நினைத்து உண்மையாலுமே நெஞ்சில் ஒரு பகுதியில் வலி எடுப்பது போல் தான் உணர்ந்தார் டிரைவர்.

ருத்ரா தன் காரில் சென்ற சில நிமிடங்கள் அமைதியாக போன அந்தக் காரையே பார்த்துக் கொண்டு நின்றவள்... இதழில் அழகான இளம் புன்னகையோடு தன் காரில் வந்து ஏறினாள்.

அவளின் இதழ் புன்னகையில் முற்றிலுமாக பயந்து நெஞ்சுவலி வந்தது போலவே உணர்ந்தார் டிரைவர்.

இப்போது தான் தன்னுடைய டிரைவரின் பதட்டத்தை கண்டவள்.. ஐயோ அண்ணா கூல்... எதற்கு இப்படி பயப்படுகிறீர்கள்.. நான் என்ன சிங்கமா புலியா என்று அவள் கேட்டதிலேயே... அவருக்கு அந்த ஏசி காரிலும் வியர்த்து கொட்டியது.

ஒன்றுமில்லை அம்மா இப்பொழுது நான் எங்கு செல்லட்டும் என்று கேட்டுக்கொண்டே தன் முகத்தில் வடிந்த வியர்வைகளை தன் கர்ச்சிப்பால் துடைத்துக் கொண்டார்.

சும்மா அப்படியே போங்க உங்கள் கண்ணுக்கு இப்பொழுது சிறிது நேரத்துக்கு முன்னாடி சென்ற கார் தெரிந்தால் அது போகும் வழியில் போங்க... இல்லை அதை தொடர முடியவில்லை என்றால் பத்து நிமிடம் சிறிது தூரம் சென்று விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து விடலாம் என்று சொன்னாள்.

இவ்வளவு நேரமும் இருந்த பயமும் பதட்டமும் தன் முதலாளியின் மகளின் முகத்தில் தோன்றிய சிரிப்பில் இருந்தும் .. அவள் பேசிய தன்மையில் இருந்தும்.. அவளின் என்ன ஓட்டத்தை புரிந்து கொண்டவர்... இப்போது தானும் மனதிற்குள் சிரித்துக் கொண்டு வண்டியை வேகமாக ஓட்டினார்... ஒரு உண்மையான ஊழியனாக...

கவிப்பிரியா பொதுவாக எந்த வேலையாட்களையும் அதிகாரம் செய்ய மாட்டாள்... அதே சமயம் அவர்களை கண்டு கொள்ளவும் மாட்டாள்.... அவளைப் பொறுத்தவரை ஊதியத்திற்கு வேலை செய்யும் வேலை ஆட்கள் அவ்வளவு தானே தவிர, அவர்களை காயப்படுத்தியதும் இல்லை.. அதே சமயம் அவர்களை பெரிதாக நினைத்ததும் இல்லை..

இதுவரை யார் பேச்சையும் கேட்காமல் இருந்தவள் முதன் முறையாக ருத்ரா பேசி விட்டு சென்றதில் இருந்து ... அவன் ஒருவனின் பேச்சை மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல தோன்றியது அவளுக்கு....

ஆனால் இன்னும் சற்று நேரத்தில் இருவரும் சண்டை போட்டுக் கொள்ளப் போவது தெரியாமல்...

எப்பவுமே தன் தங்கை வண்டி ஓட்ட அவளுக்கு பின்னே அமர்ந்து வருவது உதயாவுக்கு மிகவும் பிடிக்கும்.

அதே நேரம் உதயா இறங்க வேண்டிய இடம் அவள் வேலை பார்க்கும் இடத்திற்கு முன்னாடியே இருக்க... தன் தங்கையோடு பேசிக்கொண்டு சென்று கொண்டு இருந்தார்கள்.

சனாதனும் காரில் அமைதியாக போய் கொண்டு இருந்தான்... அவன் மனதில் நேற்று சஞ்சனாவுடன் பேசியது நினைவு வந்தது....

ஹலோ என்ன சார் நான் சொல்ல சொல்ல அமைதியாக இருக்கிறீர்கள்... நான் என்ன செய்யட்டும் சீக்கிரம் சொல்லுங்கள்.. என் வீட்டிற்கு என் அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி என்று அனைவரும் வந்து இருக்கிறார்கள்... டைம் வேஸ்ட் பண்ணாமல் சொல்லுங்கள் சார் என்று கத்தியவளிடம்...

போ.. போய் சொப்பு சாமான் வைத்து விளையாடு.... நீ எல்லாம் அதற்கு தான் ஆவாய் என்று கிண்டலாக சொன்னான் சனாதன்....

ஓஓஓ... ஓஹோ... அதாவது அண்ணனுக்கு கால் பண்ணி பேசினால் அவரிடம் இருந்து போனை வாங்கி இடையில் குறுக்குசால்‌ ஓட்டுவது தான் உங்கள் நாகரிகமோ... நல்ல அண்ணன் நல்ல தம்பி என்று அவளும் பதிலுக்கு கிண்டலாகவே பேசினாள்...

ஏய் நீ ஓவராக பேசுகிறாய் முதலில் மரியாதையா பேச கற்றுக்கொள் என்று இவன் ஏதோ மரியாதைக்கு phd படித்தவன் போல் பேச...

ஐய.. சாரே.. மரியாதை பற்றி நீங்கள் பேசுவது தான் சாரே மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கு... உங்களிடம் இப்படி ஒரு மரியாதை ஆச்சரியமாகவும் இருக்கு என்று கிண்டல் அடித்தவளிடம்...

ஏய் என்ன டி இப்ப உனக்கு ப்ராப்ளம் என்று கேட்டான் சனாதன்.

சனாதன் டி என்று சொல்லி பேசியதும்.. கோபம் வந்தவளாக .. ஏய் என்ன ரொம்ப ஓவரா பேசிக்கிட்டே போற..

முதலில் நீ தான் ஏய்.. ஏய்... என்று வார்த்தைக்கு வார்த்தை சொன்னாய் நான் என்ன உன் வீட்டு வேலைக்காரியா.. சரி அது போகட்டும் என்று விட்டால் இப்பொழுது என்னமோ உரிமையாக டி போட்டு பேசுகிறாய்..

நான் என்ன உன் மாமன் மகளா இல்லை பொண்டாட்டியா.. எனக்கு முதலில் பாடம் எடுப்பதை விட்டு விட்டு நீ முதலில் மற்றவர்களிடம் மரியாதையாக பேசி பழகு என்று சொல்லியவள் ஆத்திரத்தோடு போனை வைக்க போனாள் சஞ்சனா.

ஆனால் அவளின் மனம் அறிந்த சனாதன்.. அவள் போனை கட் செய்வதற்குள் ஆமா டி என் பொண்டாட்டி என்று சொல்லி இருந்தான்.

சனாதன் பேசியதை கேட்டவள் சில நிமிடங்கள் அமைதியாக இருந்து விட்டு, சரி டா புருஷா நாளைக்கு காலையில் ஆபீஸில் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு போனை வைத்தாள் சஞ்சனாவும்...

நேற்றைய உரையாடல்களை நினைத்து பார்த்துக் கொண்டு வண்டி ஓட்டிக் கொண்டு வந்தவன்... சிக்னல் விழ காரை நிறுத்தி விட்டு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.

அப்போது அவன் காரின் அருகில் சஞ்சனா தன் அண்ணா உதயாவோடு வந்து நின்றாள்.

சஞ்சனா ஹெல்மெட் அணிந்து இருந்தாள். ஆயினும் ஏனோ சனாதனனுக்கு தன் காரின் அருகில் இருக்கும் பெண் சஞ்சனா தான் என்று சொல்லாமல் சொல்லியது அவனுடைய மனது அவனுக்கு..

குட்டிச்சாத்தான் எப்படி நினைத்த உடனே வந்து அருகில் இருக்கிறாய் என்று நினைத்துக் கொண்டே.. அவளுக்கு பின்னாடி அமர்ந்து இருக்கும் ஆணைப் பார்த்தான்..

இருவரின் முக ஜாடையும் ஒத்துப்போக அவளுடைய அண்ணன் என்று தெரிந்து கொண்டான்.

அவர்கள் இருவரும் ஏதோ முக்கியமான விஷயம் பேசிக்கொண்டு இருப்பது போல் தோன்ற அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் தன்னுடைய காரின் கண்ணாடியை சற்று கீழே இறக்க நினைத்த சமயம்... சிக்னலில் கிரீன் சிக்னல் விழ, முன்னாடி நின்று கொண்டு இருந்த வாகனங்கள், பின்னாடி நின்று கொண்டு இருந்த வாகனங்கள் தங்கள் பணிகளுக்குச் செல்லும் அவசரத்தில் ஹாரன்களை ஒலிக்க விட...

சஞ்சனாவும் தன்னுடைய இரும்பு புரவியை லாவகமாக ஓட்டிக்கொண்டு முன்னேறி சென்றாள்.

இதுவரை டிராபிக் அதிகமாக நெருக்கடியாக இல்லாமல் ... அழகான அமைதியான சாலைகளில் சீறிப்பாய்ந்து கொண்டு இருந்தவன்....

முதன் முதலில் நம்ம சென்னை டிராபிகில் மாட்டிக் கொண்டு மெதுவாக தன் காரை ஓட்டி கொண்டு இருந்தவனின் கைகள் தனக்கு பிடித்த கே டி எம் பைக்கை புக் செய்தது.

தனக்கு முன்பு அந்த குட்டி சாத்தான் ஆபீஸ்க்கு போவதா இவ்வளவு பெரிய கார் வைத்து இருந்து என்ன பிரயோஜனம் என்று தான் சிறுபிள்ளைத்தனமாக யோசிக்கின்றோம் என்பதையும் மறந்து கோபப்பட்டுக் கொண்டு இருந்தான் சனாதன். தன் உழைப்பில் வாங்கிய தன்னுடைய ஃபெராரிக்காரை ஆசையாக தடவிப் பார்த்துக்கொண்டு சென்றான்.

அப்போது அங்கு ஒரு பெரிய கட்டிடத்தின் முன் பைக்கை உதயா நிறுத்த சொல்ல... சஞ்சனாவும் நிறுத்த...

வண்டியில் இருந்து இறங்கியதும் தன் கையில் இருந்த ஃபைலை தன் தங்கையிடம் கொடுத்தான் உதயா.

சஞ்சனாவும் தன் தலை கவசத்தை கழட்டி விட்டு தன் அண்ணன் கையில் இருந்த ஃபைலை வாங்கி... தன் இஷ்ட தெய்வம் தாயுமானவரை வணங்கி விட்டு ஓம் நமசிவாய வாழ்க என்று சொல்லி விட்டு உதயா கையில் ஃபைலை கொடுத்து விட்டு ஆல் தி பெஸ்ட் அண்ணா என்று சொன்னாள் சஞ்சனா..

இதை அனைத்தையும் ஒரு ஒரமாக நின்று பார்த்துக் கொண்டு இருந்த சனாதன்.... மனதிற்குள் சிறு மகிழ்ச்சி பரவியது... ஏன் என்றால் தன் அம்மாவும் இப்படி தான் எந்த ஒரு சிறு பொருள் வாங்கினாலும் இறைவனிடம் வேண்டி கொண்டு தான் அந்த பொருளை உபயோகமே படுத்துவார்... இப்போது தன் தாயாரின் நினைவு வரவும் தன் தாய்க்கு கால் பண்ணியவன்...

இரண்டாவது போன் ரிங்கிலே எடுத்தவர்... என்ன மா இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க... எப்படி இருக்க?... என்று கேட்டார் ரூபவதி.

ஹாய் ரூபி பதட்டப்படாதே ஐ அம் ரியலி வெரி ஹாப்பி... அது தான் உடனே உனக்கு கால் பண்ணினேன் என்று தன் அம்மாவிடம் ஜாலியாக பேசினான் சனாதன்.

தன் மகனின் உற்சாகத்தில் தானும் சிறு பிள்ளை போல் மகிழ்ந்து... சொல் டா தங்கம் யார் அந்த லக்கி பர்சன் என்று கேட்டாள்...

அதே சமயம் இங்கே சஞ்சனா உதயா அண்ணா ஆல் தி பெஸ்ட் என்று மேலே சென்ற அவனைப் பார்த்து ஒரு முறை கத்தி விட்டு சென்றாள்.

இவனும் அதைத் தொடர்ந்து உதயா அண்ணா மா என்று சொன்னான்.

என்ன தனா எங்க அம்மா வீட்டு குலசாமி பெயரை சொல்லி அண்ணா என்று சொல்கிறாய்... யாருப்பா அது என்று கேட்டார்..
அது ஒன்னும் இல்லை மாம்... இங்கு ஒரு அண்ணன்.. இல்லை.. மாமா... அய்யய்யோ இல்லை மச்சான் என்று குழம்பியவனை.. கண்டு அருகில் உறங்கிக் கொண்டு இருந்த தன் கணவனை எழுப்பி... இங்கு பாருங்கள் உங்கள் பையன் உளறிகிட்டு இருக்கான் என்று சொல்ல .. இப்பொழுது சனாதன் அச்சோ மாட்டி விடுறீயே மாம் என்று ஃபோனை கட் செய்தான்.
அது சரி இவன் சஞ்சனா கிட்ட தன் மனதை சொல்லுவான்.

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top