Member
- Joined
- Mar 17, 2025
- Messages
- 74
- Thread Author
- #1
பூங்குன்றனும் குழலியும், சிரித்த முகத்துடன் " வந்து விட்டோம்" என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் சென்றார்கள்.
வீட்டுக்குள் வந்ததும்,குழலி " தங்கைகளை காணவில்லையே?" என்று கேட்க,
குழலி சித்தி " இரண்டு பேரும் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார்கள்.
நாங்க இங்க புதிய வீடு வாங்கி வந்ததால், அவர்கள் இங்கே இருந்து பழைய வீடு இருக்கும் இடத்தில் உள்ள பள்ளிக்கு செல்ல கஷ்டமாக இருந்ததால், அங்கே உள்ள ஹாஸ்டலில் சேர்த்து விட்டோம்" என்றார்.
புது பொண்ணு மாப்பிள்ளைக்கு விருந்து தடபுடலாக தயார் ஆனது.
விருந்து தயார் ஆகும் வரை, இராணி பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலுக்கு, பூங்குன்றனையும் குழலியையும் அழைத்து கொண்டு போனார் குழலி சித்தப்பா.
அந்த கோவில் அம்மன் மகிமை பற்றி பெருமையாக சொன்னார். " இங்கே வேண்டிய வரம் கிடைக்கும், மருமகனே" என்று சொல்ல,
பூங்குன்றன் " ம்ம், மாமா" என்று சொல்லி கொண்டே சாமி கும்பிட்டான்.
அங்கே அம்மன் கோயில் பிரசாதம் மற்றும் விபூதி குங்குமம் வாங்கி கொண்டு, கோயில் பிரகாரத்தை சுற்றி விட்டு வந்து ஒரு இடத்தில் மூவரும் அமர்ந்தார்கள்.
சில நிமிடங்கள் கழித்து, குழலி சித்தப்பா, குழலியிடம் " வீட்டுக்கு போகலாமா?, உங்க சித்தி இந்நேரம் சமையல் முடித்து இருப்பாள்" என்று சொல்ல,
" சரி சித்தப்பா, போகலாம் " என்றாள்.
வீட்டுக்கு வந்ததும், பூங்குன்றன், குழலி விருந்து சாப்பாடை ஒரு பிடி பிடித்து விட, சாப்பிட்ட மயக்கம் இருவருக்கும் வர, அவர்களை ஓய்வெடுக்க சொன்னார் குழலி சித்தப்பா.
மறுநாள் விடியற்காலையில், சூடான வடை மற்றும் காஃபியுடன்,
, பூங்குன்றன் , குழலி தூங்கும் அறைக்கு வெளியே இருந்து " குழலி குழலி" என்று அழைக்க, குழலி சித்தியின் குரல் கேட்டு, தூக்கத்தில் இருந்து எழுந்து சோம்பல் முறித்து விட்டு," இதோ வருகிறேன் சித்தி" என்று சொல்லி கொண்டே கதவை திறந்தாள்.
" சூடா வடை காஃபி இருக்கு, மருமகனை எழுப்பி கூட்டிட்டு வா" என்று சொல்லி விட்டு, அங்கிருந்து சென்றார்.
பூங்குன்றனும் எழுந்து, முகம் கழுவி,
பிரஸ் செய்து விட்டு குளிக்க சென்றான். குழலியும் அதேபோல் செய்தாள்.
இருவரும் குளித்து விட்டு வர, குழலி சித்தி, காஃபியை சூடு பண்ணி கொண்டு வந்தார்.
பூங்குன்றன், குழலி காஃபி குடித்து கொண்டே வடையை சாப்பிட்டு விட்டு,
" வடை நல்லா இருக்கு அத்தை" என்று சொல்லி விட்டு, " மாமாவை காணோமே?" என்று கேட்க,
குழலி சித்தி " அவர் காலையிலேயே மட்டன் எடுக்க சென்று விட்டார்" என்று சொல்லி முடிக்கும் போது, குழலி சித்தப்பா மட்டன் மற்றும் பிரியாணி செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வந்தார்.
அவருக்கும் ஒரு டம்ளரில் காஃபி ஊற்றி கொடுத்தார் குழலி சித்தி.
மதிய விருந்து நல்ல படியாக முடிந்தது. மாலை வேளையில் " நாங்க கிளம்புகிறோம்" என்று பூங்குன்றன் சொல்ல,
குழலி சித்தி " காலையில் போங்க" என்று சொல்லும் போது, வீட்டுக்கு செல்ல தயாராக இருந்த குழலியும் தன் கணவனிடம் " ஆமங்க, காலையில் போகலாம், எனக்கு உடம்புக்கு என்னவோ போல் தெரிகிறது" என்று சொல்லி விட்டு சோர்வாக உட்கார்ந்தாள் .
அப்போது மகளுக்கு காய்ச்சலாக இருக்குமோ ? குழலி உடலை தொட்டுப் பார்த்த போது தான், குழலி உடலில் அங்கங்கே சின்ன சின்ன பொக்கலம் இருந்ததை கண்டு, குழப்பம் ஆனார்.
குழலி சித்தி முகம் குழப்பம் ஆனதை அடுத்து பூங்குன்றன் " என்னாச்சு அத்தை.!" என்று கேட்க,
குழலி சித்தி " இருங்க இதோ வருகிறேன்" என்று சொல்லி விட்டு வெளியே போய் சில நிமிடங்கள் கழித்து ஒரு பாட்டியுடன் வந்தார்.
அந்த பாட்டியும் குழலி உடலை பார்த்து விட்டு " அம்மன் உங்கள் வீட்டில் குடியேறி இருக்கிறாள்" என்று சொல்லி விட்டு " வீட்டு வாசலில் வேப்பிலை கட்டுங்கள், தலைவாசல் அருகே கோமியம் வைத்து கொள்ளுங்கள். வெளியே இருந்து யார் வீட்டுக்குள் வந்தாலும், வரும் போது கோமியத்தை தலையில் தெளித்து கொண்டு வீட்டுக்குள் விடுங்கள் "என்று சொல்லி விட்டு
அங்கிருந்து சென்றார்.
குழலிக்கு படுக்கை அறை சுற்றி வேப்பிலை போட்டு வைத்தார் குழலி சித்தி.
குழலிக்கு இளநீர் வாங்கி வந்தார் குழலி சித்தப்பா.
மறுநாள் காலையில், குழலி , பூங்குன்றனிடம் " நீங்கள் வேலைக்கு போங்க, சித்தி என்னைப் பார்த்துப் பாங்க" என்று மனமில்லாமல் சொல்ல, பூங்குன்றன்" நான் வேலைக்கு செல்ல வில்லை. இங்கேயே இருக்கிறேன் " என்று சொல்ல, குழலி
" உங்களுக்கு ஏதோ முக்கிய பொறுப்பு ஒன்றை உங்கள் ஓனர் கொடுத்தார் என்று சொன்னீங்களே.!, அந்த பொறுப்பை நீங்கள் நிறைவேற்ற வேண்டாமா?" என்று சொல்ல,
குழலி சித்தியும்" நாங்க தான் இருக்கோம்ல மருமகனே, நீங்கள் வேலைக்கு போங்க. அதான் குழலி ஏதோ முக்கிய பொறுப்பு என்று சொல்கிறாளே " என்று சொல்ல,
அதைக் கேட்டு பூங்குன்றன் அரை மனதாக தலையாட்டினான்.
பிறகு குழலி சித்தி சித்தப்பாவிடம் " நான் வேலைக்கு போய் விட்டு, தினமும் இரவு இங்கே வந்து விடுவேன்" என்று சொல்லி விட்டு வேலைக்கு சென்றான்.
குழலியை பார்க்க, குழலி அப்பா, அம்மா, அண்ணன் என்று மூவரும் வந்தார்கள். குழலிக்கு குளிர்ச்சி தரும் பழங்கள் வாங்கி வந்தார்கள்.
குழலியை பார்த்ததும், குழலி அம்மாவுக்கு கண் கலங்கியது. குழலி சித்தி தான்" அக்கா, அவள் உடம்பில் அம்மன் குடியேறி இருக்கிறாள்.அதற்காக அழுகலாமா?" என்று அக்காவுக்கு ஆறுதல் கூறினார்.
குழலியிடம் , சுந்தரம் " நானும் அண்ணனும் கிளம்புகிறோம் , அம்மா உன் கூட துணைக்கு இருப்பாள்" என்று சொல்ல,
குழலி " பரவாயில்லைப்பா, அம்மாவையும் கூட்டிட்டு போங்க, சித்தி, சித்தப்பா என்னை நல்லா பார்த்துக்கிறாங்க, போதாக்குறைக்கு என் கணவரும் இரவு வந்து விடுவார் "என்று சொன்னதும், சுதந்திரத்திற்கு முகம் ஒரு மாதிரி ஆனது. " அதான் உன் மகள் சொல்லிட்டாளே, என் கணவர் வருவார்..." என்று இழுத்து சொல்லி விட்டு, " வா கிளம்பலாம்" என்று மனைவியை சொல்ல, குழலி அம்மாவுக்கு சுந்தரம் கூட கிளம்பினார்.
கருடப்பார்வை நாளிதழ் அலுவலகம்.
நிறுவனர் அறை -
நிறுவனர்,பூங்குன்றன் மற்றும் மாதவி மட்டும் இருந்தார்கள்.
மாதவியிடம் " ஏதோ ஒரு தகவல் சொல்கிறேன் என்று சொன்னாயே, என்ன தகவல்?" என்று நிறுவனர் கேட்க,
மாதவி " நான் இரண்டு நாட்கள் விடுப்பில் சென்றது, நம் நாளிதழ் முதல் முறையாக நடத்தும் சட்ட மன்ற தேர்தல் கருத்து கணிப்பு சம்பந்தமாக தான்" என்றாள்.
இதை சொன்னதும், மாதவியின் முகத்தை, பூங்குன்றனும், நிறுவனரும் பார்த்தார்கள்.
மாதவி " இராணி பாளையம், சட்ட மன்ற தொகுதியில், மக்கள் பிரச்சினை என்ன, அதற்கு ஆள்பவர்களின் நிலை என்ன, என்பதை அறியத் தான் மூன்று நாட்கள் விடுப்பு எடுத்து சென்றேன்" என்றாள்.
" அப்படி என்ன தெரிந்து கொண்டாய்?" என்று நிறுவனர்
கேட்க,
மாதவி,தான் மூன்று நாட்கள் இதற்காக கஷ்டப்பட்டதை சொல்ல ஆரம்பித்தாள்.
தொடரும்,