- Thread Author
- #1
16. பஞ்சபாண்டவர்கள் இல்லத்தில்...
மெய்யழகி.. மாஸ்க் தன் முகத்தில் .மாட்டிக் கொண்டு அவதிப்பட்டதில் அவளுடைய கண்களின் இட்ட மைகள் எல்லாம் களைந்து .. அவள் முகம் எங்கும் பரவி இருக்க அதை பார்த்து தான் அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தனர்.
ஒருவருக்கு இருவராக சிரிக்கும் போதே தெரிந்து கொண்டால் தன் முகங்களில் ஏதோ வித்யாசமாக இருக்கிறது அதனால் தான் என்று நொந்து கொண்டவள்..
அடக்கடவுளே அக்கவுண்ட் செக்சன்ல இன்னைக்கு அந்த ராம் என்கிட்ட வந்து ப்ரபோஸ் பண்ணுவான் என்று பக்கத்து சீட்டு மஞ்சுளா சொன்னா... இப்போ என் முகத்தில் என்ன ஆச்சு.. ?.. ஏன் இப்படி இருவரும் சிரிக்கிறீர்கள் என்று பாவமாக கேட்டவளை பார்த்து...
லிபின் ஏய்... என்ன சொன்ன... இப்ப என்ன சொன்ன சொல்லு நீ இப்ப என்ன சொன்ன என்று மூன்று முறை திருப்பி திருப்பி கேட்டான்.
அவன் கேட்ட விதத்தில் அய்யோ மாமா நீங்கள் என்ன கோர்ட்டு டவாலியா ?.. ஒரே விஷயத்தை மூன்று முறை கேட்கிறீர்கள் என்று சிரித்துக் கொண்டே.. அது ... வா... என்று மறுபடியும் ஆபீஸ் விஷயத்தை சொல்ல வர...
சரியாக அனைவரும் சாப்பிடுவதற்கு கீழே வந்தனர்.
அதுவும் மிதுன், சனாதன், ருத்ரா மூவரும் கீழே இருந்த மூவருக்கும் குட் மார்னிங் சொல்லிக் கொண்டே வர...
அந்த பேச்சை விடுத்து.. மூவருக்கும் குட் மார்னிங் சொல்லினர்.
இப்போது மாடியில் இருந்து வந்த மூன்று பேரும் அவள் முகத்தில் தீட்டி இருந்த மையை பார்த்து விட்டு...
ஏய் பாப்பா என்ன பண்ணி வச்சிருக்க உன் மூஞ்சில என்று ருத்ரா கேட்டான்.
ஐயோ அது... வா.. மாமா என்று மறுபடியும் அதே புராணத்தை பாட ஆரம்பிக்க போக... கடுப்பான கர்ணா
ஏய்.. மெய் இப்படியே முகம் புல்லா வைகை தீட்டி வைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் இப்படியே இருப்பாய் நேரம் ஆகவில்லையா?.. முதலில் உள்ளே போய்.. உன் முகத்தை அலம்பிட்டு வா.. ஏதோ சின்ன பிள்ளை மாதிரி கெக்க பிக்க என்று சிரிச்சுக்கிட்டு.. உள்ள போய் முதலில் முகம் அலம்பிட்டு வா என்று திட்டி உள்ளே அனுப்பிவிட்டான்.
மெய்யழகியும் அவன் தன்னை திட்டுகிறான் என்று கூட உணராமல், சரிங்க மாமா என்று துள்ளலோடு தன் அறைக்கு சென்றாள் முகத்தை கழுவுவதற்காக..
மெய் உள்ளே சென்றதும், தன் அண்ணன்களோடு சாப்பிட சென்றான் கர்ணா. அவள் உள்ளே சென்று விட்டாளே தவிர தனக்கு அருகில் தன்னுடைய இரட்டை இருப்பதை மறந்து போனான்.
அனைவரும் சாப்பிட அமர்ந்த பிறகு.. ஆமாம் அழகிக்கு என்ன ஆச்சு ஏன் அப்படி முகம் இருந்தது என்று ருத்ரா விட்ட பேச்சை தொடர்ந்தான்.
இப்போது லிபின் எனக்கு எந்த தடையும் இல்லை என்பது போல்.. அங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி சிரித்துக் கொண்டே சாப்பிட்டான்.
ஆனால் அருகில் அமர்ந்து இருக்கும் தன் இரட்டை தன்னை மிகவும் பாசமாக பார்ப்பதை மட்டும் கவனிக்க மறந்து விட்டான்.
லிபின் பேசியதில் அனைவரும் சிரித்தாலும், ஏய் வாலு சும்மா இரு டா என்று திட்டிய சனாதன்... அழகி விளையாட்டாக சொன்னாளா சீரியஸாக சொன்னாளா என்று தீவிரமாக கேட்டான்.
எனக்கு தெரிந்து காமெடி ஆகத்தான் தோன்றுகிறது வரட்டும் அவளிடமே கேட்போம் என்று சொன்னான் லிபின்.
கர்ணா அவளின் வருகைக்காகவே ஒரு தோசையை சிறிது சிறிதாக பிய்த்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
இந்த கலவரங்கள் எதுவும் அறியாத சரோஜமா தோட்டத்திற்கு சென்று வழக்கம் போல் காலை வேலைகளை முடித்து விட்டு உள்ளே வந்தவர்...
என்னப்பா எல்லோரும் சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டுக்கொண்டே.. எங்கே மெய்யழகியை காணோம் அவள் இவ்வளவு சீக்கிரம் கிளம்பி விட்டாளா என்ன... அடக்கடவுளே அப்ப சாப்பிடாம போயிட்டாளா என்று கேட்டுக்கொண்டே அமர்ந்தார்.
அது... வா ... அத்தை என்று லிபின் ஆரம்பிக்கவும்...
என்னது மறுபடியும்... மா... என்று கர்ணா மனதிற்குள் கடுப்பாகி... மெய் கண்ணுக்கு விட்ட மை கலைந்து விட்டது. அதற்காக முகத்தை கழுவி விட்டு வருகிறேன் என்று போனாள் அத்தை என்று சொன்னான் கர்ணா. தன் தம்பி எங்கே மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்து விடுவானோ என்று பயம் ஒரு பக்கம்...
என்ன சொல்ற கர்ணா... அவள் கண்களுக்கு எல்லாம் எப்போதும் மை தீட்ட மாட்டாளே... அவளுக்கு இயற்கையாகவே சிவந்த உதடுகள், அடர்த்தியான புருவங்கள், உகந்த நிறம் அதனால் எந்த மேக்கப்பும் போட மாட்டாள்... அப்படியே இருக்க கண்ணுக்கு மை போட்டிருக்காளா ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு தனக்கும் இலை போட்டு இட்லிகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டே பேசினார்.
மற்றவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு கை கழுவி விட்டு... சரோஜா அத்தை சாப்பிடுவதற்காக அனைவரும் அவர் அருகில் வந்து அமர்ந்த பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது மெய்யழகி தனது முகத்தை நன்றாக கழுவி விட்டு... எப்பவும் தான் வைக்கும் அழகான சிறு சிவப்பு நிற பொட்டை வைத்து அது மேல் சிறிய கீற்றாக திருநீறும் இட்டு.. தான் ஏற்கனவே உடுத்தி இருந்த ஆடையில் முகம் கழுவும் போது ஏற்பட்ட இடைஞ்சல்களால் இப்போது கருப்பு கலரில் மஞ்சள், சிவப்பு நிற பூக்கள் போட்டது போல் இருந்த புடவையை அணிந்து வெளியில் வந்தாள்.
பச்சை புடவையில் பார்த்து ஏற்கனவே மயங்கி இருந்த கர்ணா... அவளின் எடுப்பான நிறத்திற்கு இந்த கருப்பு நிற சேலை அவளை மேலும் அழகாக காட்ட... அவளையே விழிகள் அசையாது பார்த்துக் கொண்டு இருந்தான்.
சரோஜாவின் அருகில் வந்து அமர்ந்தவள்... சரோ மா தோட்ட வேலை எல்லாம் முடிந்து விட்டதா என்று கேட்டுக் கொண்டே, தனக்கும் இலையை வைத்து தனக்கு பிடித்த இட்லியும் தக்காளி சட்னியும் வைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.
மெய்யழகி வந்ததும் மற்றவர்கள், மெய்யழகி, சரோ இருவரிடமும் சொல்லி விட்டு வேலைக்கு செல்வதற்கு கிளம்பினர்.
அப்போது சரோ சாப்பிட்டுக் கொண்டே.. ஏன் அழகி நீ கண்களுக்கு மை இட்டியா என்ன... உன் கண்களில் மை களைந்து விட்டது அதனால் முகம் கழுவு சென்று இருக்கிறாய் என்று கடைக்குட்டி சொன்னான் என்று கேட்டார்.
அச்சச்சோ ஆமா சரோ மா... இன்று அலுவலகத்தில் ஒரு பெண் என்னிடம் நீ கண்களுக்கு மை தீட்டி வரவேண்டும் என்று சொன்னார். நான் முடியாது எனக்கு பிடிக்காது என்று தான் சொன்னேன்.
ஆனால் அதற்கு அந்தப் பெண் என்னை பட்டிக்காடு என்று கிண்டல் செய்தாள்... அது தான் நான் ஒன்றும் பட்டிக்காடு இல்லை என்பதற்காகவே கண்ணுக்கு மை தீட்டினேன்... ஆனால் பாருங்கள் அந்த பெண் சொல்லியது போல் நான் ஒரு சரியான பட்டிக்காடு தான்... இந்த லட்சணத்தில் அக்கௌன்ட் செக்ஷனில் ஏதோ ராம் என்று ஒரு பையன் இருக்கிறானாம்? அவன் என்னை விரும்புகிறானாம் இது எல்லாம் எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை சரோ மா என்று புலம்பினாள்.
முகத்தில் ஒரு மாஸ்க்கு மாட்டி அதை கழட்டுவதற்கு உள்ளவே முகம் ஃபுல்லா ஈஷி வைத்துக் கொண்டேன். அந்தப் பெண் சொன்னது போல் நான் ஒரு சரியான பட்டிகாடு தான். நமக்கும் இந்த மேக்கப் போட்டுக் கொள்வதற்கும் செட்டாகாது என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டாள்.
என் உண்மையான நிலைமை என்ன என்று தெரிந்தால் எவனாவது என் பக்கத்தில் வருவான்... ஏன் சரோமா என்று கிண்டலாக பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து கை கழுவ சென்றாள்..
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று சனாதன், கர்ணா இருவரும் கேட்டு விட்டே சென்றனர். இருவரின் மனநிலையும் அவளை பற்றி வெவ்வேறு விதமாக யோசித்துக் கொண்டு இருந்தது.
இப்போது அனைவரும் இந்த வீட்டில் இருந்தும் சரோஜாவிடம் சொல்லிக் கொண்டு ஒவ்வொருவராக தங்களது காரில் வேகமாக சென்றனர். மெய்யழகி அவளும் தன்னுடைய ஸ்கூட்டியில் கிளம்பி விட்டாள்.
தன்னுடைய மொபைல் போனை வீட்டில் வைத்து விட்டு அதை எடுப்பதற்காக திரும்பி வந்து கொண்டு இருந்தான் ருத்ர தேவ்.
அவன் வீட்டுக்கு அருகில் வர சரியாக எதிர்ப்புறம் இருந்து கவி பிரியா அவளுடைய காரில் வந்து கொண்டு இருந்தாள்.
ஏற்கனவே அந்த வாட்ச்மேன் உடல்நிலை சரியில்லாததால் இரண்டு நாள் விடுப்பில் சென்று இருக்கிறார் என்ற தகவலை கேட்டதிலிருந்து கோபத்தில் இருந்தவள் இப்பொழுது எதிரில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று வருவதை பார்த்து விட்டு அடக்கடவுளே இந்த வீட்டில் இன்னும் எத்தனை பேர் தான் இருக்கிறார்கள் எத்தனை கார் தான் இருக்கிறது என்று கோபமாக தனக்குள் புலம்பி கொண்டு அந்த காரை பார்க்க..
சரியாக அந்த நிமிடம் கேட்டில் இருக்கும் வாட்ச்மேன்.. ஓடி வந்து தன்னுடைய முதலாளியின் செல்போனை சரோஜா கொடுத்து விட்டு சென்றிருந்ததால் அதைக் கொண்டு வந்து கொடுத்தார்.
ருத்ராவும் தன்னுடைய போனை வாங்கிக் கொண்டு அந்த வாட்ச்மேன் இடம் நன்றி சொல்லி விட்டு, காரை யூட்டன் எடுக்கும் சமயம்..
தன் டிரைவரிடம் சொல்லி சரியாக வேண்டும் என்று இடிப்பது போல் போக சொன்னாள்.
முதலாளி சொல்வதைக் கேட்டு பழக்கப்பட்ட அந்த டிரைவரும்... அதேபோல் அவனின் வண்டி மீது லேசாக இடிக்க..
சட்டென்று கோபமாக இறங்கியவன்...
இங்கே என்ன டிராபிக் ஜாம் ஆகி இருக்கா இந்த ஆளில்லா காட்டில் எதற்கு இப்படி வந்து இடிக்கிறீர்கள் கண்ணு தெரியவில்லையா என்று வேகமாக இறங்கி வர...
அதற்கு முன் கவிப்பிரியா வேகமாக காரில் இருந்து இறங்கி தன் டிரைவரை அண்ணாவை பார்த்து .. ஐயோ அண்ணா என்ன ஆச்சு ஏன் உங்களுக்கு என்ன பண்ணுது என்று பதட்டத்தோடு வினாவ அப்பொழுது தான் அவன் காரின் உள்ளே பார்த்தான் அந்த டிரைவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு திணறிக் கொண்டு இருந்தார்.
உடனடியாக அவளை பிடித்து தள்ளி விட்டு கார் டோரை ஓப்பன் பண்ணி, அவருடைய டிரைவர் ஷர்டை கழட்டி.. அவரது நெஞ்சை நீவி விட்டுக் கொண்டே.. அண்ணா.. அண்ணா... உங்களிடம் எதுவும் மாத்திரைகள் இருக்கிறதா..?.. இதற்கு முன் இந்த மாதிரி வந்து இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டே அவருக்கு அங்கு அருகில் இருந்த தண்ணீரை எடுத்து புகட்டினான்.
தண்ணீரை குடித்து விட்டு சிறிது வெளியில் வந்து முகத்தை அலம்பி விட்டு, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை தம்பி... இரண்டு நாட்களாக என் பொண்ணுக்கு உடல்நிலை சரியில்லை அவளுக்காக மருத்துவமனை அலைந்து கொண்டு இருந்தது சரியாக சாப்பிடவில்லை... அது தான் ஒரு மாதிரியாகிவிட்டது வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லி விட்டு, ரொம்ப நன்றிங்க தம்பி என்று சொல்லி விட்டு, தம்பி என்னுடைய கவனக்குறைவால் தான் உங்கள் வண்டியில் இடித்து விட்டேன் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று
பணிவோடு மன்னிப்பும் கேட்டார்.
ருத்ரதேவ் என்ன சொல்வான்...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...