• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 17, 2025
Messages
74
பூங்குன்றன், குழலியிடம் " இதில் எந்த விளக்கம் புரிய வில்லை?" என்று கேட்க,

குழலி " இல்லை இதில், இரண்டு பேர் ஆளுமை பற்றி உள்ளது. அதான் இதில் யாருடைய ஆளுமை சரியென்று சொல்ல, அதான் புரியவில்லை என்றேன்" என்றாள்.

பூங்குன்றன்" உனக்கு தெரிந்த கருத்தை சொல் " என்று சொல்ல,

குழலி" அந்த ஓனர் ஆளுமை திறன் சரியாக உள்ளதால், மாப்பிள்ளையிடமுள்ள முக்கிய பொறுப்பை பிடுங்கி, கூட வேலை செய்பவர்களின் திறமைக்கு ஊக்கம் தரும் ஒருவருக்கு அந்த பொறுப்பை தருகிறார் " என்று சொல்லி விட்டு,
" ஆனால் இந்த கதையில் இரண்டு பேரிடமும் ஆளுமை திறன் உள்ளதே.!" என்று சொல்லி முடிப்பதற்குள்,

பூங்குன்றன்" சபாஷ் " என்றான்.

குழலி, கணவரின் பாராட்டைக் கேட்டு விட்டு" என்னங்க சபாஷ், என்று சொல்றீங்க " என்று கேட்க,

பூங்குன்றன் அந்த கதையில் கேட்ட கேள்விக்கு வேறு ஒரு பக்கத்தில் பதில் வைத்து இருந்தார் ஆசிரியர் .

குழலி அதை கவனிக்காமல், அவள் மனதில் தோன்றிய பதிலை சொல்ல,
பூங்குன்றனும் அதே நேரத்தில், அந்தகேள்விக்கு பதிலுள்ள பக்கத்தில் சென்று பார்க்கவும், உடனே சபாஷ் என்று சொன்னான்.

பிறகு மனைவியிடம் அந்த பதிலுள்ள பக்கத்தை காட்டி " பதில் இங்கே இருக்கிறது" என்று காட்ட,

குழலியும் அந்த பதிலை பார்த்து விட்டு, " அட ஆமாம்...! , நான் சொன்ன பதில் தான் இங்கே இருக்கிறது" என்று சொல்லி முடிக்க,

பூங்குன்றன் " ம்ம், நீ சொன்ன பதில் சரிதான். நான் தான் உன்னிடம் சொன்னேன் அல்லவா, உனக்கு பாயிண்டை பிடித்து பேசும் திறமை உள்ளது" என்று மனைவியை பாராட்டினான்.

மேலும் " இதேபோல் நிறைய கதைகளுடன் கேள்வியும் பதிலும் இந்த புத்தகத்தில் உள்ளது, நீ படி" என்றான் ‌.

அதற்கு குழலி" ம்ம், ஆனால் கதையை மட்டும் படித்து விட்டு அதில் உள்ள கேள்விக்கு நானே விடை தெரிந்த பிறகு சொல்கிறேன். நீங்கள் இப்போது போல் என்னிடம் கேள்வி கேளுங்கள். நான் சொன்ன பதிலும் இதிலுள்ள பதிலும் சரியாக இருக்கிறதா என்று நீங்கள் பாருங்கள்.அதுவரை நான் விடையை பார்க்க மாட்டேன்" என்று சொல்லும் போது,

"குழலி... குழலி " என்று ஒரு குரல் கேட்க,

அது யார் என்று குழலி வெளியே போய் பார்க்க, அங்கே குழலியின் சித்தியும் சித்தப்பாவும் இருந்தார்கள்.

இருவரையும் பார்த்து விட்டு ஆச்சரியமாக " சித்தி.. சித்தப்பா...!,
வாங்க வாங்க" என்று சொல்லி விட்டு,

தன் கணவரிடம் " என்னங்க, எங்க சித்தி சித்தப்பா வந்திருக்காங்க" என்று சொல்லிக்கொண்டே வாசலுக்கு ஓடினாள்.

பூங்குன்றனும் எழுந்து வாசலுக்கு வர,
அதற்குள் குழலியின் சித்தி சித்தப்பா வீட்டுக்குள் வந்து விட்டார்கள்.

அவர்களை " வாங்க மாமா, வாங்க அத்தை" என்று பூங்குன்றன் வரவேற்றான்.

அவர்களும், சிரித்து கொண்டே " வந்தோம் மருமகனே" என்றார்கள்.

குழலி, பூங்குன்றனிடம் " பால் வாங்கி வாங்க" என்று சொல்லி விட்டு சித்தி சித்தப்பாவிடம் " தங்கச்சி எல்லாம் எப்படி இருக்காங்க?" என்று கேட்டாங்க.

" நல்ல இருக்காங்க" என்றார் சித்தப்பா.

அதற்குள் பூங்குன்றன் பால் வாங்கி வந்து குழலியிடம் கொடுத்து விட்டு,
" அவர்கள் சாப்பிட டிபன் செய்து விடுவாயா அல்லது ஹோட்டலில் வாங்கி வரவா?" என்று கேட்க,

" முதல் முறையாக எங்கள் சித்தி சித்தப்பா வந்து இருக்காங்க, அதனால் ஹோட்டலில் வேண்டாம்.நான் சீக்கிரம் சாப்பாடு தயார் செய்து விடுவேன். நீங்கள் அதுவரை அவர்களிடம் பேசி கொண்டு இருங்க..." என்று சொல்லி விட்டு, " உங்களுக்கு வேலைக்கு செல்ல நேரம் ஆகிவிட்டதா?" என்று கேட்டுக் கொண்டே காஃபி போட்டாள்.

" நான் பால் வாங்க போகும் போதே, வேலைக்கு கொஞ்சம் தாமதமாக வருவேன் என்று போன் செய்து விட்டேன்" என்றான் பூங்குன்றன்.

காஃபி போட்டு எடுத்து வந்து சித்தி சித்தப்பாவிற்கு கொடுத்தாள்.

பூங்குன்றன் இரண்டு தட்டில் ஸ்நாக்ஸ் வைத்து எடுத்து வந்து சின்ன மாமனார் மாமியாருக்கு கொடுத்தான்.

குழலி சித்தி காஃபி குடித்து கொண்டே " மருமகன் வேலைக்கு போகும் முன்னே வர வேண்டும் என்று வந்தோம். நல்ல வேளை மருமகனைப் பார்த்து விட்டோம்" என்று சொல்லி விட்டு மீதமுள்ள காஃபியை குடித்தார்.

பூங்குன்றன் " நீங்கள் வருவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை.
நாங்கள் தனியாக வந்த பிறகு முதன்முறையாக வந்த உறவு நீங்கள் தான்" என்று பாசமாக சொன்னான்.

குழலி சித்தி" நாங்க உங்களை விருந்துக்கு அழைக்க வந்தோம்" என்று சொல்லி விட்டு," மருமகனை சுருள் வைத்து தான், விருந்துக்கு அழைக்க வேண்டும், ஆனால் மருமகனுக்கு சுருள் வைப்பது பிடிக்காது அதான்..." என்று இழுத்தார்.

பூங்குன்றன், சிரித்து கொண்டே" விருந்துக்கு கண்டிப்பாக வருகிறோம். ஆனால் நீங்கள் சொன்னது போல எனக்கு சுருள் வைத்து அழைப்பது பிடிக்காது " என்றான்.

குழலி"எங்கள் திருமணம் முடிந்த பிறகு, எங்களை விருந்துக்கு என்று அழைப்பது நீங்கள் தான்" என்று உணர்ச்சி மிகுதியாக சொன்னாள்.

குழலி சித்தப்பா" மருமகனும் மகளும் நாளைக்கே நம்ம வீட்டுக்கு வந்திடுங்க " என்று சொல்லி விட்டு,"அட்ரஸ் இதான் " என்று ஒரு விலாசத்தை கொடுத்தார்.

குழலி" என்ன சித்தப்பா, நம்ம வீட்டு அட்ரஸ் எனக்கு தெரியாதா?" என்று கேட்க,

குழலி சித்தி, " உன் கிட்ட சொல்ல மறந்துட்டேன். நாங்க இப்போ புதுசா ஒரு கட்டின வீடு இராணி பாளையத்தில் வாங்கி இருக்கிறோம். அங்கே தான் நாங்க இருக்கிறோம் " என்றார்.

குழலி" ஓ அப்படியா...! , அப்ப பழைய வீடு?" என்று கேட்க,

குழலி சித்தப்பா" அதை வாடகைக்கு விட்டு விட்டோம் " என்று சொல்லி விட்டு சேரில் இருந்து எழுந்து" நாங்க போய்ட்டு வருகிறோம் " என்று சொல்ல,

குழலி" அதுக்குள்ளவா, இப்ப தான் வந்தீங்க," என்று சொல்ல,

குழலி சித்தி " இல்லை எங்களுக்கு வேறு ஒரு அவசர வேலை இருக்கிறது" என்று சொல்லி அவரும் கிளம்ப தயாரானார்.

குழலி "நான் உங்களுக்கு சாப்பாடு தயார் செய்து விட்டேன் " என்று சொல்லி விட்டு, அவசரமாக செய்த உணவை எடுத்து வந்து இருவரையும் சாப்பிட சொன்னாள்.

குழலி சித்தி " மருமகனுக்கும் சாப்பாடு வை" என்று சொல்ல,

" நாங்க இப்போ தான் சாப்பிட்டோம் அத்தை" என்று பூங்குன்றன் சொன்னான்.

இருவரும் சாப்பிட்டு விட்டு" நாங்க போய்ட்டு வருகிறோம், நீங்கள் மறக்காமல் நாளைக்கு எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்திடுங்க " என்று சொல்லி விட்டு கிளம்ப தயாராக,
" நாங்க கண்டிப்பாக நாளைக்கு உங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வருவோம்" என்று பூங்குன்றன் சொன்னான்.

குழலி சித்தி சித்தப்பா சென்றதும்,
பூங்குன்றனும், குழலியிடம் "நான் வேலைக்கு கிளம்புகிறேன்"என்று சொல்லி விட்டு வேலைக்கு கிளம்பினான்.

குழலி, வீட்டை சுத்தம் செய்து விட்டு, கழுவ வேண்டிய சில பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு, அழுக்காக இருந்த அவள் துணியை மட்டும் துவைத்தாள். ஏனெனில் பூங்குன்றன் தினமும் குளிக்கும் போது, அவனுடைய துணிகளை அவனே துவைத்து விடுவான். குழலி எத்தனை முறையோ தடுத்தும், அவன் கேட்காமல், தினமும் துவைத்து விடுவான். ஆனால் காயப் போடுவது குழலி தான்.

இப்போதும் அவளின் துணிகளையும் கணவனின் துணிகளையும் காயப் போட்டு விட்டு வந்தாள்.

நேரம் போகாமல் இருக்க, ' என்ன செய்யலாம் ' என்று குழலி யோசித்து விட்டு, ஆளுமை திறனை வளர்ப்பது எப்படி என்ற புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.

பூங்குன்றன் கருடப்பார்வை நாளிதழ் அலுவலகம் சென்றதும், பூங்குன்றனை ஒருவர் " நீங்கள் வந்ததும், நிறுவனர் அறைக்கு போய் நிறுவனரைப் பார்க்க வேண்டும், என்று நிறுவனர் சொன்னதாக " சொன்னார்.

பூங்குன்றனும், உடனே நிறுவனர் அறைக்கு சென்றான். நிறுவனர் பூங்குன்றனைப் பார்த்ததும்" உட்காருங்க " என்றார்.

" மாதவி பொண்ணு, ஏதோ சொந்த வேலைக்காக, மூன்று நாட்கள் விடுப்பு எடுத்திருக்கிறார். அதனால் கருத்து கணிப்பு எடுப்பதை அவர் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்ல தான் உங்களை அழைத்தேன் " என்றார்.

பூங்குன்றனும்" நல்லதா போச்சு " என்றான். நிறுவனர்" என்ன நல்லதா போச்சு...!" என்று ஆச்சரியமாக கேட்க,

பூங்குன்றன், "தன் சின்ன மாமியார் விருந்துக்கு அழைத்ததை" சொன்னான்.

நிறுவனர், சிரித்து கொண்டே" ஆமாம் ஆமாம் ரொம்ப நல்லதா போச்சு தான் " என்றார்.

பூங்குன்றன்" நானும் நாளையும் நாளை மறுநாளும் விடுப்பு எடுத்துக் கொண்டு, விருந்துக்கு போய் வருகிறேன் " என்று சொல்ல,

நிறுவனர், ஒரு நிமிடம் யோசித்து விட்டு" ம்ம்.நீங்களும் திருமணம் முடிந்த பிறகு எங்கேயும் போக வில்லை தான். சரி போய் வாருங்கள் "என்று சொல்லி விட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

பூங்குன்றன், நிறுவனர் அறையை விட்டு வெளியே வந்ததும் குழலிக்கு போன் செய்ய, அழைப்பை ஏற்ற குழலி" என்ன அய்யா, இந்நேரம் போன் செய்து இருக்கீங்க?" என்று கேட்க, " ஒன்னும் இல்லை மூக்கி, நாளைக்கு என் சின்ன மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போக லீவு கிடைத்தது, அதான் போன் செய்தேன் " என்றான்.

குழலி" நிஜமாகவா...!" என்று ஆச்சரியமாக கேட்டு விட்டு" நான் கூட நீங்கள் வரமாட்டீங்க என்று நினைத்தேன் " என்று சொல்ல,

பூங்குன்றன் " முதல் முறையாக வீடு தேடி வந்து நம்மை அழைத்து இருக்காங்க, பிறகு போகாமல் இருந்தால், அவர்கள் என்ன நினைப்பார்கள்"என்று சொல்லி விட்டு, " நீ இப்ப என்ன செய்ற?" என்று கேட்க,

குழலி " நான் ஆளுமை திறனை வளர்ப்பது எப்படி புத்தகம் படித்து கொண்டு இருக்கிறேன்" என்றாள்.

பூங்குன்றன் " படி படி, எனக்கு வேலை இருக்கிறது, பிறகு கூப்பிடுகிறேன்" என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான்.

குழலியும், பூங்குன்றனிடம் போனில் பேசி முடித்ததும், மீண்டும் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தாள்.

மறுநாள் காலையிலேயே, இராணி பாளையத்தில் உள்ள குழலி சித்தி வீட்டுக்கு விருந்துக்கு செல்ல குழலி தயாரானாள். கணவனுக்கும் தனக்கும், இரண்டு நாட்களுக்கு வேண்டிய துணிகளை எடுத்து ஒரு பேக்கில் வைத்தாள். கூடவே ஆளுமை திறனை வளர்ப்பது எப்படி என்ற புத்தகத்தையும் சேர்த்து எடுத்து வைத்தாள்.

பூங்குன்றனும் விருந்துக்கு போக கிளம்பி வந்ததும், இருவரும் இருசக்கர வாகனத்தில், 1 மணி 30 நிமிட பயணத்தில், இராணி பாளையத்தில் உள்ள குழலி சித்தி வீட்டுக்கு செ
ன்றார்கள்.

மருமகனும் மகளும், வந்ததை அறிந்த குழலி சித்தி , சித்தப்பா சிரித்த முகத்துடன் " வாங்க வாங்க"என்று வரவேற்றார்கள்.

தொடரும்,
 
Member
Joined
Jun 3, 2025
Messages
92

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top