• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
15.. உதயாவின் சாதுரியமும்... மெய்யழகியின் புலம்பலும்..


மீனாட்சி வருத்தத்தில் கீழே செல்ல... சஞ்சனா, புவனா,ரிஸ்வந்த் நாங்கள் மூவரும் சென்று சித்து மா வை பார்த்துக் கொள்கிறோம். மேலே இருக்க இரண்டு குட்டி சாத்தான்களையும் உதயா அண்ணாவிடம் இருந்து காப்பாற்று என்று சொல்லி மிதுனாவை மேலே அனுப்பி வைத்தார்கள்.


அதே போல கீழே சென்று பார்க்க மீனாட்சி மிகவும் அமைதியாக ஊருக்கு செல்வதற்கு தயாராக தங்கள் உடைகளை பெட்டியில் அடுக்கி கொண்டு இருந்தாள்.

என்ன சித்து ஏன் இப்படி துணி எல்லாம் எடுத்து வச்சிகிட்டு இருக்க.. என்ன மறுபடியும் இங்கே வர ஐடியா உனக்கு இல்லையா என்று இயல்பாக கேட்பது போல் கேட்டு அவளின் கவனத்தை திசை திருப்பினாள் சஞ்சனா.

ஐயோ செல்லம் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை... இங்க பாரு நான் எடுத்து வைப்பது எல்லாம் போன முறை வந்த போது இங்கு அணிந்து இருந்தது.

இப்படி சேலைகள் யூஸ் பண்ணாம வச்சு இருந்தா வீணா போய்டும்.. அது தான் அது மட்டும் எடுத்துக் கொண்டு போகிறேன். அடுத்த முறை வரும் போது இப்ப கொண்டு வந்த துணிகளை கொண்டு போய் விடுவேன் என்று சொல்லி கொண்டே துணிகளை எடுத்து வைத்து விட்டு.. சரி என்ன மூன்று பேரும் ஆபிஸ் கிளம்பி போகலையா..

சரி முதலில் சாப்பிட்டீர்களா என்று கேட்டார் மீனாட்சி.

அவரும் இயல்பு நிலைக்கு தன்னை திருப்பி கொள்வதற்காக முயற்சி செய்வதை இவர்களும் சரி என்று அவளின் போக்கிற்கே பேசிக் கொண்டு சாப்பிடுவதற்கு சென்றார்கள்.

அப்போது புவனாவை ஓரம் கட்டிய ரிஷ்வந்த் ஏய் இங்க என்ன டி நடக்கிறது... எனக்கு ஒன்னும் புரியல... என்று புலம்பினான்.

அது ஒன்னும் இல்ல டா.. ஏற்கனவே நான் உன்னிடம் சொல்லி இருப்பேன் மிதுன கருத்தரித்தது வந்து ஜெயா மா வந்து ஹெல்ப் பண்ணி தான்... மீனாட்சி சித்திக்கு கரு தங்குச்சி அப்படின்னு உன்னிடம் முன்னாடியே சொல்லி இருக்கேனா... அதே சமயம் மீனாட்சி சித்தியின் கர்ப்பப்பை ரொம்பவும் வீக்காக இருந்தது... அதனால் அவர்களை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி இருந்தாங்க.

அதனால் அப்பா, பெரியப்பா, சித்தப்பா என மாத்தி மாத்தி... யாராவது ஒருவர் வீட்டிலே இருப்பார்களாம். அதே போல் அம்மாக்களும் அதே போல் தான் அவருக்கு அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்வார்களாம்.

ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு என் அம்மாவும் ஜெயா மாவும் கருத்தரிக்கவும்... அவர்களும் மசக்கையின் காரணமாக அதிகமாக தனித்தனியாகவே வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்து இருக்கிறார்கள்.

அப்படி ஒரு சமயத்தில் தான் வீட்டில் என்னுடைய அப்பாவும் பெரியப்பாவும் அம்மா, பெரியம்மா இருவரையும் செக்கப்பிற்கு கூட்டி செல்வதற்காக சங்கர் அப்பாவை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு தான் சென்று இருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே.. பெரியப்பா கம்பெனிகள் ஏதோ சின்னதா ஒரு ஃபயர் ஆக்சிடென்ட் ஆக..

அந்த இடத்திற்கு ஷங்கர் அப்பா போயிட்டாங்க.. சரியாக அப்பா சென்ற இரண்டு நிமிடத்தில் அம்மாவிற்கு வயிற்றில் ஏதோ வலி வந்து இருக்கிறது.

அப்ப உதயா அண்ணா தான் சின்ன வாட்டர் ஹீட்டர்ல.. சுடு தண்ணி வச்சு அதில் சீரகத்தை போட்டு... அம்மாவிற்கு ஆற்றி பக்குவமாக கொடுத்து இருக்கிறார். அதோடு அம்மாவிடம் கேட்டு விளக்கெண்ணெய் எது என்று கேட்டு எடுத்து உள்ளங்கையில் சிறிது தண்ணீர் வைத்து அதில் சிறிது விளக்கெண்ணெய் ஊற்றி கலந்து சித்தி உச்சியில் தொட்டு வச்சுட்டு வயிற்றிற்கும் வச்சு தேய்த்து விட்டு பத்திரமாக பார்த்துக் கொண்டு இருந்து இருக்கிறார்.

அப்போது லீலா அக்கா இரண்டு வயது பாப்பாவாம். சித்தியின் வலி பதட்டத்தில் ஹீட்டர் ஸ்வீட்ச்சியை ஆஃப் பண்ணாமல் விட்டு இருந்திருக்கிறார்...

அது அப்படியே சின்ன சிவப்பு நிற பந்து போல் இருக்கவும்.. சிரித்துக்கொண்டு வேகமாக எடுப்பதற்கு லீலா அக்கா போயிருக்கிறாள்..

அதைப் பார்த்த உதயா அண்ணா வேகமாக ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு பாப்பாவிடம் இருந்து அதை தள்ளுவதாக நினைத்து அதில் கை வைத்து விட்டார்.

அந்த நேரத்திலும் வேகமாக தண்ணீரில் கையை வைத்து விட்டு தூள் உப்பிலும் கை வைத்து தன்னுடைய வலியையும் பொறுத்துக் கொண்டு பாப்பாவையும் சித்தியையும் பத்திரமாக பார்த்துக் கொண்டு இருந்து இருக்கிறார்.

அன்று இருந்து இன்று வரை... உதயா அண்ணாவை யாருக்காகவும் எதற்காகவும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவே மாட்டார் மீனாட்சி சித்தி. அதற்காக எங்களையும் யாரையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார் இருந்தாலும் எங்கள் அனைவரையும் விட அவருக்கு ஒரு படி மேலாகத்தான் உதயா அண்ணாவை நேசிப்பார். அது அவருடைய சூழ்நிலையில் தன்னைக் காக்க வந்த அவர்களின் குலசாமியென்றே நினைத்திருக்கிறார் இன்று வரை... நாங்கள் வளர்ந்த பிறகு எங்களிடம் அம்மா அப்பா எல்லோரும் இந்த விஷயங்களை எல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.

அதனால் நாங்கள் அவர்கள் மனது புண்படும்படி எப்பவும் பேச மாட்டோம். ஆனால் இன்று லீலா அக்காவும், சரண் அண்ணாவும் ஏதோ சொதப்பி வைத்து இருக்கிறார்கள். அது தான் அவர்கள் மனது கஷ்டப்படவும் உதயா அண்ணாவிடம் ஆறுதல் தேடி போயிருக்கிறார்கள்...

இப்பவும் உதயா அண்ணா அவர்கள் இருவரையும் தண்டிக்க எல்லாம் செய்ய மாட்டார்.. அறிவுரை கூறி அனுப்பி விடுவார் என்று சொல்லி கொண்டே சாப்பிட அழைத்துச் சென்றாள்.

அதே போல் இப்படி ஒரு பிரச்சினை நடந்ததா என்று ரிஷ்வந்த் குழம்பி போவது போல் அனைவரும் ஒன்றாக தரையில் அமர்ந்து இலை போட்டு சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்.

இவர்கள் இருவரையும் பார்த்து விட்டு உதயா ஏன் இருவரும் எங்கே சென்றீர்கள்... சீக்கிரம் வாருங்கள் உங்களுக்கு ஆபீஸ்க்கு நேரம் ஆகவில்லையா என்று கேட்டுக்கொண்டே அவர்களுக்கும் இலை போட சொன்னான்.

அதே போல் கவிதா இருவருக்கும் இலையை வைக்க.. அவர்களுக்கும் காலை உணவை பரிமாற சாப்பிட்டு முடித்ததும்... அனைவரிடமும் சொல்லிக் கொண்டு, ரிஷ்வந்த், மிதுனா இருவரும் காரில் அவர்கள் அலுவலகம் நோக்கி சென்றார்கள்.

வீட்டில் இருந்த பெரியவர்களும் அவர்களிடம் சாய்ந்தரம் ஊருக்கு செல்வதை பற்றி சொல்லி விட்டு அவர்களும் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டார்கள்.

சஞ்சனா அனைவரிடமும் சொல்லி விட்டு, லீலா சரண் இருவரையும் பார்த்து... வெளியில் எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் ஆட்டோ, இல்லனா கேப் புக் பண்ணிக்கோங்க என்று சொல்லிக்கொண்டே சில போன் நம்பர்களை அவர்கள் வசம் கொடுத்து விட்டு... அனைவரிடமும் சொல்லிக்கொண்டு அவளும் தன்னுடைய இரும்பு புரவியில் கிளம்பினாள்.

அப்போது உதயா நீ போகும் வழியில் தான் நான் போக வேண்டிய இடம் இருக்கிறது என்னை இறக்கி விட்டு செல் பாப்பா என்று சொல்லவும்.. வாங்க அண்ணா என்று உதயவை அழைத்துக் கொண்டு போனாள்.

அதே போல் புவனாவும் அனைவரிடமும் சொல்லி விட்டு, தான் செல்ல வேண்டிய அலுவலகத்திற்கு சென்றாள்....

பஞ்ச பாண்டவர்கள் இல்லத்தில்....

சட்னியை தாளித்துக் கொட்டி விட்டு திரும்பி பார்க்க மெய்யழகிக்கு இரவில் இந்த மூஞ்சியை பார்த்து தானே பயந்தோம் ... அடக்கடவுளே எந்த மாமா இப்படி என்னை பயமுறுத்தி இருக்கிறீர்கள் என்று... கேட்டுக்கொண்டே அந்த முகமூடியை கழட்டினாள் மெய்யழகி.

அட பரவாயில்லையே உனக்கு இரவில் தான் கண்ணு தெரியாது போல... பகலில் நன்றாகவே கண் தெரிகிறதே என்று சிரித்துக் கொண்டே கர்ணா ... ஓகே உனக்கு தான் கண்ணு நல்லா தெரியுதுன்னு தெரிஞ்சு போய்விட்டதே... அப்புறம் இது எதற்கு எனக்கு என்று சொல்லி கையில் இருந்த முகமூடியை மெய்யழகிக்கு மாட்டி விட்டான்.

என்ன மாமா இப்படி ... எனக்கு எதற்கு இதை மாட்டி விட்டாய் என்று கேட்டுக் கொண்டே அதை கழட்ட பார்க்க, அது நன்றாக அவளுடைய முடியில் சிக்கிக் கொண்டது.

வலி எடுக்கவும்.. ஐயோ மாமா எனக்கு வலிக்குது உதவி செய்யுங்கள் என்று அவள் கத்திக் கொண்டு இருக்க அவன்.. அவன் எங்கே இங்கே நின்று இருந்தான், எப்போது அவள் தலையில் மாஸ்க்கை மாற்றினானோ அப்பவே அவன் சிட்டாக பறந்து விட்டான்.

முடியில் மாட்டிக் கொண்ட மாஸ்கை கழட்ட முடியாமல் .. அழகியும் மெதுவாக முயற்சி செய்து பார்த்தாள். ஆனால் மேலும் சிக்கல் அதிகமாகி வலி ஏற்பட்டதே தவிர... மாஸ்க்கை கழட்ட முடியவில்லை.. சரி என்று இவ்வளவு நாட்களும் இந்த இடத்தில் புழங்கியதை வைத்து மெதுவாக தட்டு தடுமாறி வெளியில் வந்தாள்.

அவள் மெதுவாக வெளியில் வர அங்கு இருந்த டீ பாய் மீது மோத போகும் சமயம்... சரியாக கர்ணா வந்து அவளை தடுத்து நிறுத்தினான்.

அட மெய்... என்ன ஆச்சு ஏன் மாஸ்கை கழட்டாமல் ஏதோ வித்தை எல்லாம் காட்டுகிறாய்... இந்த மாஸ்க் அணிந்தாலும் கண்கள் தெரியுமே என்று அவளை திருப்பி பார்க்க..

அவள் அந்த மாஸ்கை கழட்டுகிறேன் என்ற பெயரில்... ஏதேதோ செய்து வைத்து இருக்க கண்கள் இருந்த பகுதி தலைக்கு மேலே போய் விட்டது.

ஐயோ கர்ணா மாமா.. என்னால் இந்த தொல்லையை கழட்ட முடியவில்லை.. கழட்ட தெரியாமல் கழட்டி என் முடிகளும் சிக்கிக் கொண்டு வலி உயிர் போகிறது என்று வலியில் சினுங்கினாள்.

அட லூசு மெய்.. எவ்வளவு ஈஸியான மாஸ்க் இது . அதை இப்போ இப்படி பண்ணி வைத்திருக்கிறாயே என்று அவள் கை பிடித்து அங்கு இருந்த சோபாவில் அமர வைத்து விட்டு ... மிகவும் பக்குவமாக அந்த மாஸ்கை கழட்டி விட்டான் கர்ணா.

ஆனால் கழட்டிய பிறகு மெய் முகத்தை பார்க்க... கர்ணாவிற்கு ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும் ஒரு பக்கம் சிரிப்பை அடக்க முடியாமல் தன் வயிறை பிடித்துக் கொண்டு சிரித்தான்.

அவளோ ஏன் மாமா இப்படி சிரிக்கிறீர்கள் என்ற ரீதியில் அவனைப் பார்த்துக் கொண்டு இருக்க...

அப்போது அங்கு வந்த லிபின் அவளைப் பார்த்து விட்டு அவனும் சிரிக்கத் தொடங்கினான்.

இருவரும் தன்னைப் பார்த்து சிரிப்பதால் கண்டிப்பாக அந்த மாஸ்க்கு தான் முகத்தில் ஏதோ கோடு போட்டு விட்டது போல் என்று பயந்தவள்.. ஐயகோ போச்சா என்னுடைய முகம்.. இன்னைக்கு என்று நம்ம ஆபீஸ்ல ஒருத்தர் எனக்கு ப்ரொபோஸ் பண்றேன்னு சொல்லி இருந்தாரே... போச்சு எல்லாம் போச்சு என் முகம் இப்படி இருக்க என்னை யார் நேசிப்பார்கள் என்று அவள் என்னை ஏது என்று தெரியாமல் புல்ம்பி தள்ளினாள்.
அவளின் புலம்பலை கேட்ட லிபின் ஏய் இப்ப நீ என்ன சொன்ன என்று கேட்க...
கர்ணாவோ கொலைகாண்டில் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான்...
இணைந்திருங்கள்.


சொல்லவா ... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top